Home இஸ்லாம் கட்டுரைகள் சமூகப் பொறுப்பு
சமூகப் பொறுப்பு PDF Print E-mail
Tuesday, 23 October 2018 06:53
Share

சமூகப் பொறுப்பு

அல்லாஹு தாலா அருள்மறையின் பல்வேறு இடங்களிலும் மறுமையே நிலையானது, இன்னும் நிரந்தரமானது என்பதை உணர்த்திக்கொண்டே இருக்கிறான்.

وَالْاٰخِرَةُ خَيْرٌ وَّ اَبْقٰىؕ

ஆனால் மறுமை (வாழ்க்கை)யோ சிறந்ததாகும்; என்றும் நிலைத்திருப்பதும் ஆகும். (87:17)

மறுமை என்பது நம்முடைய ஈமானின் ஒரு பகுதி. அதனை நோக்கியே நம்முடைய பயணம் அமைய வேண்டும். ஒரு சில நேரங்களில் நம்மில் பலரும் அதனை மறந்து நம்மை அறியாமல், இந்த உலக வாழ்விற்காக, அல்லாஹு தாலாவும் அவனது தூதர் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களும் வகுத்து தந்த இஸ்லாம் என்னும் கோட்பாடுகளை எல்லாம் மறந்து, செயல்படுகின்றோம்.

 

وَمَا كَانَ لِنَفْسٍ اَنْ تَمُوْتَ اِلَّا بِاِذْنِ اللّٰهِ كِتٰبًا مُّؤَجَّلًا ؕ وَ مَنْ يُّرِدْ ثَوَابَ الدُّنْيَا نُؤْتِهٖ مِنْهَا ‌ۚ وَمَنْ يُّرِدْ ثَوَابَ الْاٰخِرَةِ نُؤْتِهٖ مِنْهَا ‌ؕ وَسَنَجْزِى الشّٰكِرِيْنَ

யாதொரு ஆத்மாவும் அல்லாஹ்வின் அனுமதியின்றி இறப்பதில்லை. இது தவணை நிர்ணயிக்கப்பட்ட விதியாகும். எவர் (தன் செயலுக்கு) இந்த உலகத்தின் நன்மையை (மட்டும்) விரும்புகின்றாரோ அவருக்கு அதனை (மட்டும்) அளிப்போம். எவர் மறுமையின் நன்மையை(யும்) விரும்புகின்றாரோ அவருக்கு அதனை(யும்) வழங்குவோம். மேலும், நன்றி செலுத்துபவர்களுக்கு நாம் அதிசீக்கிரத்தில் நற்பயனை வழங்குவோம். (3:145)


இந்த உலகில் வாழும் நமக்கு இங்கிருந்து எதையும் எடுத்து செல்லும் உரிமை இல்லை என்பதை மறந்து, இந்த உலக வாழ்க்கைக்காக அயராது உழைத்து வாழ்வை முடித்து கொள்ள கூடாது.

இந்த உலகில் வாழ்ந்த எத்தனையோ ஆளுமைகளை நாம் கண் முன்னே காண்கின்றோம். எவ்வளவு தான் சொத்து சேர்த்து வைத்தாலும், வாழும் பொழுது எத்தனை பெரிய வசதி உடைய வீடுகளில் குடிகொண்டிருந்தாலும், பலத்த பாதுகாப்புடன், வாகன வசதிகளுடன் இருந்தாலும், அதனை சுகங்களையும் அனுபவித்த அந்த உடல் வைக்கப்படுவது அந்த ஆறு அடி குழிக்குள் தான் என்பதை நாம் எந்த நிலையிலும் நினைவில் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வையும் இரசூலையும் ஈமான் கொண்டு, இஸ்லாத்தை மார்க்கமாக ஏற்ற ஒருவர் எதனை பெரிய சாதனைகளை செய்தாலும், இந்த உலகில் சமூகத்திற்காக எத்தனை உழைத்தாலும், அவரது உழைப்பிற்கான கூலியை இறைவனிடத்திலேயே எதிர்பார்த்திருக்க வேண்டும் .

இவ்வுலக வாழ்வு ஓர் அலங்காரம் :

زُيِّنَ لِلَّذِيْنَ كَفَرُوا الْحَيٰوةُ الدُّنْيَا وَيَسْخَرُوْنَ مِنَ الَّذِيْنَ اٰمَنُوْا ‌ ۘ وَالَّذِيْنَ اتَّقَوْا فَوْقَهُمْ يَوْمَ الْقِيٰمَةِ ؕ وَاللّٰهُ يَرْزُقُ مَنْ يَّشَآءُ بِغَيْرِ حِسَابٍ

நிராகரிப்பவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையே அலங்காரமாக(த் தோன்றும்படி) செய்யப்பட்டிருக்கின்றது. ஆதலால், அவர்கள் (ஏழைகளாக இருக்கும்) நம்பிக்கையாளர்களைப் பரிகசிக்கிறார்கள். ஆனால் (நம்பிக்கையாளர்களான) இறையச்சம் உள்ளவர்களோ மறுமையில் அவர்களைவிட (எவ்வளவோ) மேலாக இருப்பார்கள். மேலும், அல்லாஹ் விரும்புகின்ற (இ)வர்களுக்குக் கணக்கின்றியே வழங்குவான். (2:212)

எனவே இந்த உலக வாழ்வு இறைமறுப்பாளர்களுக்கு தான் அழகாக்கப்பட்டிருக்கின்றது. அதனை பார்த்து நாம் ஏமார்ந்து விட கூடாது. எப்போதும் இறை நினைவுகளிலும் நல்லெண்ணம் கொண்டு நல்லமல்களில் ஈடுபாடுடன் செயல்பட்டு, அதற்கான பலனை மறுமையில் எதிர்நோக்கியவர்களாக, நம்முடைய எண்ணத்தை அமைத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வுலக வாழ்வுக்கும் மறுமை வாழ்வுக்கும் உதாரணம் :

اِنَّمَا مَثَلُ الْحَيٰوةِ الدُّنْيَا كَمَآءٍ اَنْزَلْنٰهُ مِنَ السَّمَآءِ فَاخْتَلَطَ بِهٖ نَبَاتُ الْاَرْضِ مِمَّا يَاْكُلُ النَّاسُ وَالْاَنْعَامُؕ حَتّٰۤى اِذَاۤ اَخَذَتِ الْاَرْضُ زُخْرُفَهَا وَازَّيَّنَتْ وَظَنَّ اَهْلُهَاۤ اَنَّهُمْ قٰدِرُوْنَ عَلَيْهَاۤ ۙ اَتٰٮهَاۤ اَمْرُنَا لَيْلًا اَوْ نَهَارًا فَجَعَلْنٰهَا حَصِيْدًا كَاَنْ لَّمْ تَغْنَ بِالْاَمْسِ‌ ؕ كَذٰلِكَ نُـفَصِّلُ الْاٰيٰتِ لِقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ

இவ்வுலக வாழ்க்கையின் உதாரணம்: மேகத்திலிருந்து நாம் பொழியச் செய்யும் நீரை ஒத்திருக்கிறது. அது கால்நடைகளும் மனிதர்களும் புசிக்கக்கூடிய புற்பூண்டு ஆகியவைகளுடன் கலந்து (அடர்ந்த பயிராக வளர்ந்து, பூத்துக் காய்த்துக் கதிர் வாங்கி) பூமியை அலங்காரப்படுத்திக் கொண்டிருக்கும் தறுவாயில், அதன் சொந்தக்காரர்கள் (நாம் செய்த வேளாண்மை அறுவடைக்கு வந்து விட்டது; நாளைக்கு) அதனை நிச்சயமாக நாம் அறுவடை செய்துவிடுவோம் என்று எண்ணிக் கொண்டிருந்தனர். அச்சமயம், இரவிலோ பகலிலோ நம்முடைய கட்டளை(யினால் ஒரு ஆபத்து) வந்து அதனால் அவை நேற்றைய தினம் அவ்விடத்தில் இருக்கவே யில்லையென்று எண்ணக் கூடியவாறு அவைகளை நாம் அழித்து விட்டோம். (இந்த உதாரணத்தைச்) சிந்தித்து உணரக்கூடிய மக்களுக்கு நாம் நம்முடைய வசனங்களை இவ்வாறு தெளிவாக விவரிக்கிறோம். (10:24)

இப்படி, இந்த சமூகத்திற்காக ஈமானுடன் நாம் செய்யும் நன்மைகளுக்கும், பிறர் செய்யும் நன்மைகளுக்கும் பல வித்தியாசம் உண்டு. அதானால் தான் இறைவன் நம்மைலிருந்தே நமக்கு இரசூல்மார்களை அனுப்பினான். புதிதாக மலக்குமார்களை அனுப்பவில்லை.

இப்படி, இந்த சமூகத்திற்காக உழைத்து பாடுபட்ட வலிமார்கள், வரலாறுகளிலும் அழியா புகழ் பெற்று மக்களின் மனதில் நிலைத்து நிற்க்கின்றனர், அதே போன்று மறுமையிலும் அவர்களுக்குரிய கூலி இறைவனிடமிருந்து சிறிதும் குறையாமல் கொடுக்கப்படும் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

வரலாறு சொல்லும் உண்மை :

வரலாறுகளை புரட்டி பார்த்தால் தெரியும், எதனை எதனை பேரறிஞர்கள் இவ்வுலகில் தோன்றி பல அழியா சேவைகளை நமக்காக செய்துவிட்டு சென்றிருக்கிறார்கள், அதற்கான அழியா சான்றுகளும் இங்கே நம் கண் முன்னே நிலைத்திருக்கிறது.

ஆனால், அதனை பின்தொடர்ந்து செல்ல நம்முடைய மனங்கள் ஏனோ மறுக்கின்றது... அவற்றை தகர்த்து இந்த நம்முடைய சமூகத்திற்காக சாதி மத பேதமின்றி வலிமார்கள் செய்ததை போன்று நாமும் பல பங்களிப்பை தர வேண்டும். ஆனால் அதற்கான கூலியை இறைவனிடத்தில் தான் எதிர்நோக்க வேண்டும். நம் சமூகத்தை ஓர் எழுச்சிமிக்க சமூகமாக உருவாக்க வேண்டும்.


அப்படிப்பட்ட பொறுப்புணர்ச்சியோடு தான் நம்முடைய நபிமார்களும் வாழ்ந்துள்ளனர். அதனால் தான் நபித்துவம் கிடைக்கும் முன்பே அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களை அந்த சமூக மக்கள் அல் அமீன் (நம்பிக்கையாளர்) என்று பிரியத்துடன் அழைத்தனர்.


எனவே இந்த சமூக பொறுப்புணர்ச்சியுடன் செயல்படுவது நம்முடைய மறுமையின் வெற்றிக்கான முக்கிய பங்கு எனலாம்.

நபிகளாரின் சமுதாய பொறுப்புணர்ச்சி :

அண்ணல் பெருமான் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள், சிறு வயதிலேயே பொது கூட்டங்களில் பங்கேற்கும் ஆர்வம் உடையவர்களாக இருந்தார்கள்.

كان للنبي - صلى الله عليه وسلم – حضورٌ في الندوات والاجتماعات التي يعقدها قومه لبحث القضايا المهمة، ومن ذلك دخوله فيما سمي بـ (حلف الفضول)، وهو عقدٌ تمّ بين مجموعةٍ من قبائل مكّة كان منها بنو هاشم وبنو عبد المطلب وبنو أسد وغيرها، واتّفقوا على حماية المظلوم ونصرته، ومواجهة الظالم مهما كانت مكانته وسلطته، وقد مدح صلى الله عليه وسلم هذا الحلف وقال عنه:"شهدت في دار عبد الله بن جدعان حلفاً ما أحب أن لي به حُمُر النعم، ولو دعيت إليه في الإسلام لأجبت".

இன்னும் போதாவாக நாடாகும் பிரச்னைகளுக்கு தீர்வுகளை கொடுத்தார்கள்.

وعندما بلغ النبي - صلى الله عليه وسلم – خمسة وثلاثين عاماً كان له دورٌ مهم في إعادة بناء الكعبة وتجديدها بعد أن تشقّقت جدرانها بفعل السيول والأمطار، حيث شارك قومه في نقل الأحجار مع عمّه العباس بن عبد المطلب. واختاره قومه ليكون حكماً بينهم بعد أن اختلفوا في وضع الحجر الأسود، فأشار عليهم أن يبسطوا رداء ويضعوا الحجر عليه، ثم تحمله كل قبيلة من زاوية، ويتولى بنفسه إعادة الحجر إلى الكعبة، وبذلك استطاع أن يمنع معركة كادت أن تقع بينهم.

இப்படி அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் முதல் இதுவரை வாழ்ந்து கொண்டிருக்கும் வலிமார்கள் அனைவரும் தன்னுடைய வாழ்வை காட்டிலும் சமுதாயத்திற்கு நனமை பயக்கும் செயல்களை செய்வதில்மிகவும் பொறுப்புணர்ச்சி மிக்கவர்களாகவே உள்ளனர்.

இன்று நாம் ஓதும் குர்ஆனும், கற்கும் ஹதீஸ் கிரந்தங்களும் நமக்கு ஒருசேர புத்தகமாக கிடைத்ததே அதன் இமாம்கள் தங்களது வாழ்நாளை அதனை தொகுக்கும் வேளைகளில் ஈடுபட்டு அதில் வெற்றி கண்டதுதானே காரணம். இப்படி எத்தனை எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம்.

அந்த வழியில் நாமும் நிச்சயம் பல நல்ல சேவைகளை இந்த சமூகத்திற்கு வழங்க வேண்டும்.


source: http://velliarangam.blogspot.com/?m=1