Home இஸ்லாம் ஹதீஸ் அல்லாஹ்வின் கருணைக்கு எல்லையில்லை!
அல்லாஹ்வின் கருணைக்கு எல்லையில்லை! PDF Print E-mail
Friday, 04 May 2018 09:06
Share

 

அல்லாஹ்வின் கருணைக்கு எல்லையில்லை!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்;

"ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறிழைப்பவர்களே! தவறிழைப்பவர்களில் சிறந்தவர் தாம் செய்த தவறுக்காக மனம் வருந்தி மன்னிப்பு தேடிக்கொள்பவரே!"

(அறிவிப்பாளர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்;

"என்னைப் பின்பற்றுவோர் அறியாமையால், மறதியால் அல்லது கட்டாயத்தினால் செய்திடும் தவறுகளை அல்லாஹ் என் பொருட்டால் மன்னித்து விட்டான்." (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: இப்னு மாஜா)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்;

"தான் பாவம் செய்யும் ஒவ்வொரு முறையும் மன்னிப்புக் கோரிடும் மனிதர் நிரந்தர பாவியாக கணிக்கப்பட மாட்டார். அவர் நாளொன்றுக்கு எழுபது முறை அதே பாவத்தில் வீழ்ந்த போதிலும் சரியே!"

(அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்;

"எவன் கைவசம் என் உயிர் உள்ளதோ அவன் மீது ஆணையாக, நீங்கள் பாவம் செய்யக் கூடியவர்கள் இல்லையெனில் அல்லாஹ் உங்களை அழித்து விட்டு, பாவம் செய்து மன்னிப்புக் கோரக்கூடிய வேறொரு சமுதாயத்தை கொண்டு வந்திருப்பான்."

(அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்;

"யார் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறாரோ அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகிறான். யார் அல்லாஹ்வைச் சந்திப்பதை வெறுக்கிறாரோ அவரைச் சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கிறான்."    (அறிவிப்பவர்: உபாதா பின் அஸ்ஸாமித் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் 5207)