Home இஸ்லாம் ஆய்வுக்கட்டுரைகள் அல்லாஹ்வின் அற்புதப் படைப்பு காகம்
அல்லாஹ்வின் அற்புதப் படைப்பு காகம் PDF Print E-mail
Friday, 20 April 2018 07:37
Share

அல்லாஹ்வின் அற்புதப் படைப்பு காகம்

[ காகங்கள் சுற்றுப் புறச் சூழலை சுத்தம் செய்கின்றன. ஒரு காகம் தன் ஆயுளில் சுமார் 30,000 மரங்களை நடுவதாகக் கூறுவர். அல்லாஹ்வின் படைப்பின் பயனை இதன் மூலம் உணர்வதுடன் உயிரினங்கள் மீது அன்பு பிறக்கவும் இது வழி வகுக்கும்.

ஒரு காகம் சிறு காகத்தின் உணவை பரித்தால் ஏனைய காகங்கள் அந்தக்காகத்தை பிடித்து அதன் அனைத்து சிறகுகளையும் கட்டிவிடுமாம், பின் அந்தக் காகம் எப்படி பிறந்த நேரத்தில் இருந்ததோ அதே போன்று சிறகுகள் இல்லாத குஞ்சைப் போன்று மாறுமாம்.

ஒரு பெண் காகத்தை கவாடிச் சென்றால் ஏனைய காகங்கள் தமது அலகுகளால் கொத்தி கொத்தி அதை கொண்டுவிடுமாம். பின்பு அது எமது சமூகத்தையே இழிவு படுத்திவிட்டதே என்று இதை கடலில் அல்லது குப்பை கூலங்களில் வீசுமா என்று பார்த்தால் ஒரு போதும் அவைகள் அப்படிச் செய்யவேமாட்டாதாம். அவைகள் கண்ணியமான முறையில் ஒரு குழியைத் தோண்டி அதை அடக்கம் செய்யுமாம்.  

காகத்தின் நற்குணத்தின் முன் இன்றைய மனிதர்கள் சிலரின் குணத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது மனிதன் ஆறறிவு படைத்தவானா காகம் ஆறறிவு படைத்ததா எனும் சந்தேகமே எழுகிறது!]

அல்லாஹ்வின் அற்புதப் படைப்பு   காகம்

      அஷ்பாக் மஸ்ஹார்       

இவ்வுலகில் இறைவனால் படைக்கப்பட்ட அனைத்திலும் பற்பல வியக்கத்தக்க அம்சங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் இறைவன் ஒருவன் என்பதையும் அவனின் ஆற்றல்களையுமே பிரதி பலிக்கின்றன.

அவ்வாறு இவ்வுலகில் நாம் கண்டு சலித்துப் போன இறைவனின் அற்புதப் படைப்பே காகம். அன்றாடம் நம் கண்களுக்கு பல தடவை தென்படும் காகங்கள் பற்றி துளியும் கூட அலட்டிக் கொள்வது இல்லை என்றிருந்தாலும் இதற்கு இறைவன் எண்ணற்ற ஆற்புதங்களை எற்படுத்தியுள்ளான்.

முதல் மனிதன் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இரு புதல்வர்களுக்கும் ஏற்பட்ட சச்சரவின் விளைவாக ஹாபில் என்பரை காபில் என்பவர் கொன்றுவிடுகிறார். பின்பு தன் செயலுக்காக கைஷேதப்பட்டு தன் சகோதரனின் உடம்பை என்ன செய்வது என்று புரியாமல் தத்தளித்துக் கொண்டு இருந்த வேளை இறைவன் இரு காகங்களை அனுப்பி ஒன்றோடொன்று சண்டை பிடிக்க வைத்து அவற்றில் ஒன்று மற்றதை கொல்ல வைத்து பின்பு பூமியில் அழகிய முறையில் ஒரு குழியை தோண்டி தன் சஹாவை புதைத்துக்காட்டப்பட்டு வைக்கவே அதன் படி காபில் என்ற ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகனும் தன் சகோதரனை இப்புவியில் அடக்கம் செய்தார்.

மனித குலத்துக்கு அடக்கம் செய்யும் முறையை கற்றுக் கொடுக்க இக்காகத்தையே இறைவன் தெரிவு செய்தான் என்பதனூடாக இதன் முக்கியத்துவத்தை நாம் உணரலாம். இவ்வாறானா ஒரு செயற்பாட்டின் மூலம் மரணித்து அழுக்கடையும் பிணங்களால் பரவும் எண்ணற்ற பாரிய நோய்கள் தடுக்கப்படும் மிகச் சிறந்த வழியாகவே இது காணப்படுகின்றது.

காகங்கள் பற்றி சில விஞ்ஞானத் தகவல்கள்

சாதாரணமாக நமக்கு காகம் என்றால் உடனே அது ஓர் கருப்பு நிறம், அது தமக்கே உரிய பானியில் கரையும், அதே போன்று அது புத்தி கூர்மையான ஒரு பறவை என்றுதான் தெரிந்திருக்கின்றோம்.

ஆனாலும் அது மாத்திரமல்ல நாம் காகத்தை பற்றி அறிந்திருக்க வேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன. அதாவது இன்று உலகில் 35 வகையான காகங்கள் உயிர் வாழ்கின்றன. காகங்கள்  இறைச்சியை அதிகம் பிரியம் காட்டக்கூடியவைகள்.

அது மற்றுமின்றி காகங்களை பொருத்தவரையில் அதனுடைய இனத்தில் யாராவது மரணித்து விடும் போது அதை அடக்கம் செய்ய இன்னும் பல தங்களது சுய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள தமக்கே உரிய சில சிறப்பம்சங்களை கொண்டுள்ளன. வீதியோரங்களில் பல பிராணிகள் இறந்து சீரலிவதை நாம் காணலாம். ஆனாலும் இந்த காகங்களைப் பொருத்தவரையில் வீதியொரங்களில் இறந்து கிடப்பது மிகவும் அறிது.

ஏன் என்று ஆராய்ந்தால் இந்தக் காகங்கள் தன் இனத்தில் எதவும் வீதியோரங்களில் சீரழிவதையும் விரும்பமாட்டாதாம்.

அது மட்டுமின்றி இறந்த காகத்தை வேட்டைப் பிராணிகள் கொண்டு செல்லாமல் இருக்கவும், அதிலிருந்து வெளிவரும் வாடை சூழலை மாசுபடுத்தாமல் இருக்கவும், அதன் துர்நாற்றம் மக்களை கஷ்டப்படுத்தாமல் இருக்கவும் இறந்த காகத்தை இன்னொரு காகம் தனது இரு கால்களாலும், அலகாலும் ஒரு குழியை தோண்டி அதில் வைத்து அதன் மீது மண்ணைப் போட்டு நிலத்தை சமப்படுத்தி அந்த மரணித்த காகத்தை கண்ணியப்படுத்துமாம்.

ஆம் இதனை நாம் இன்று காண்கிறோம் தானே. ஒரு காகம் இறந்து விட்டது என்றால் எத்தனையோ காகங்கள் அதனைச் சுற்றி நிற்கும். நாம் அதை நெருங்கினால் அவை எம்மை கொத்த வருமல்லவா?

நவீன ஆய்வாளர்கள் காகத்தைப் பற்றி குறிப்பிடுகையில் பறவைகளில் அதிக புத்திகூர்மையான, அதிக தந்திரமுள்ள பறவை காகம் தான் எனக் கூறகின்றார்கள். ஏனெனில் அவைகள் உண்ணக் கூடிய உணவுகளில் அதிகமான பகுதிகள் தன் அறிவு சார்ந்தவைகளுக்குத் தான் செலவாகுவதோடு அதில் ஒரு சிறு பகுதிதான் அதன் உடல் வளரச்சிக்கு செலவாகின்றது. அத்தோடு பெரும்பாலும் ஏனைய பறவைகளை விட உடல் ரீதியாக பெரிதாகவும் காணப்படுகின்றது.

இவைகள் எல்லாவற்றை விடவும் மிக மிக ஆச்சரியத்துக்குள்ள ஒரு விடயம் என்னவென்றால் மனிதர்கள் ஒரு குற்றத்தை செய்தார்கள் என்றால் அதற்கான தண்டனைகளை கொடுப்பது போல அந்தக் காகங்களுக்கிடையில் நடக்கின்ற ஒவ்வொரு குற்றத்திற்கும் பற்பல தண்டனைகளை வைத்துள்ளதை பார்க்கலாம். அவைகள் அவற்றுக்குள்ளே ஒரு பெரிய அரசாங்கமே நடத்துகின்றதாம்.

அதாவது காகங்களில் ஒரு காகம் ஏதாவது ஒரு குற்றதை செய்தால் ஆரம்பமாக அனைத்துக் காகங்களையும் விவசாய நிலயத்துக்கு அல்லது விசாலமான ஒரு நிலப்பரப்பிற்கு அழைக்கப்பட்டு குற்றம் செய்த காகங்கள் முன் நிறுத்தப்படுமாம். சற்று சிந்தித்துப் பாருங்கள் அவைகளுக்கு மத்தியில் எப்படி இருக்கும் என்பதை அதவும் குற்றவாளிக் காகத்தை எப்படிக் கொண்டு வரப்படும் தெரியுமா? பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அதை கொண்டு வரப்படுமாம்.

ஆச்சரியத்திலும் ஆச்சரியம் என்ன தெரியுமா? அந்தக் குற்றவாளிக் காகம் எப்படி தெரியுமா இருக்கும்? தன் தலையை கீழே தொங்கவிட்டதாகவும் தன் இரு சிறகுகளையும் நிலத்தில் வைத்த வண்ணம் இருக்குமாம். இன்னும் விசாரனையின் போது எதையும் பேசவும் மாட்டாதாம். பின்பு அது செய்த குற்றத்திற்காக தண்டனை வழங்கப்படுமாம்.

சில குற்றங்களும் தண்டனைகளும் :

1) ஒரு காகம் சிறு காகத்தின் உணவை பரித்தால் ஏனைய காகங்கள் அந்தக்காகத்தை பிடித்து அதன் அனைத்து சிறகுகளையும் கழட்டிவிடுமாம், பின் அந்தக் காகம் எப்படி பிறந்த நேரத்தில் இருந்ததோ அதே போன்று சிறகுகள் இல்லாத குஞ்சைப் போன்று மாறுமாம்.

2) இன்னுமொரு பறவையுடைய கூட்டை உடைத்தால் எல்லாக் காகங்களும் சேர்ந்து அந்தக்காகத்தை பிடித்து புதியதொரு கூட்டை கட்டிக் கொடுக்க வைக்குமாம். அதற்கு இந்தக் காகம் மறுத்தால் தனது கூட்டத்திலிருந்து அதை ஒதுக்கி விடுகின்றதாம்.

3) ஒரு பெண் காகத்தை களவாடிச் சென்றால் ஏனைய காகங்கள் தமது அலகுகளால் கொத்தி கொத்தி அதை கொண்டுவிடுமாம். பின்பு அது எமது சமூகத்தையே இழிவு படுத்திவிட்டதே என்று இதை கடலில் அல்லது குப்பை கூலங்களில் வீசுமா என்று பார்த்தால் ஒரு போதும் அவைகள் அப்படிச் செய்யவேமாட்டாதாம். அவைகள் கண்ணியமான முறையில் ஒரு குழியைத் தோண்டி அதை அடக்கம் செய்யுமாம்.

அதே போன்று தான் காகத்தின் சிறகினால் தனது முழு உடம்பையும் மூடிக் கொள்ள முடியுமாம். வானில் பறக்கும் போது அதிக வெப்பத்தை தாங்கிக் கொள்ளும் சக்தியையும் அல்லாஹ் அதற்கு வழங்கியுள்ளான். வானில் மிக தூரத்தில் இருந்து கீழே நிலத்தில் உள்ளவற்றைப்பார்க்கக்கூடிய கூரிய பார்வையும் இந்தக் காகத்திற்கு உள்ளதாம். இப்படி பல அற்புதங்களை கொண்ட ஒரு பிராணியாகத்தான் இந்தக்காகம் இருந்து கொண்டிருக்கின்றது.

அல்லாஹ் குர்ஆனில் நல்லடியார்களின் ஒரு முக்கிய பண்பாக பறைசாட்டுகிறான். ‘இவற்றை நீ வீணாகப் படைக்கவில்லை (என்று கூறுவார்கள்) இறைவா நீ தூய்மையானவன். எம்மை நரக வேதனையில் இருந்து காப்பாற்றுவாயாக (என்று கூறுவார்கள்) (அல்குர்ஆன் : ஆலு இம்ரான் : 111) எனவே இது போன்ற இறைவனின் படைப்புகளின் அற்புதங்களை அறிவதன் மூலம் இறைவனின் வல்லமைகளையும் ஆற்றல்களையும் அறிய முயற்சிப்போமாக.

காகமும் கபரும்

      ரஹமத் ராஜகுமாரன்       

“(நபியே!) ஆதமின் இரு புதல்வர்களின் செய்தியை உண்மையாக அவர்களுக்கு எடுத்துரைப்பீராக! அவ்விருவரும் காணிக்கை நிறைவேற்றிய போது அவ்விருவரில் ஒருவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

‘நிச்சயமாக நான் உன்னைக் கொலை செய்வேன்” என (காணிக்கை ஏற்றுக் கொள்ளப்படாதவன்) கூறினான். அதற்கு (மற்றவர்), ‘பயபக்தியாளர்களிடமிருந்து தான் அல்லாஹ் ஏற்றுக்கொள்வான்’ எனக் கூறினார்.”

“என்னைக் கொலை செய்வதற்காக நீ உன் கையை என் பக்கம் நீட்டினாலும் உன்னைக் கொலை செய்வதற்காக எனது கையை உன்பக்கம் நான் நீட்டுபவன் அல்ல. ‘நிச்சயமாக நான் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வை அஞ்சுகின்றேன். என் பாவத்தையும் உன் பாவத்தையும் நீ சுமந்து அதனால் நரகவாசிகளில் ஒருவனாக நீ ஆகிவிடுவதையே நிச்சயமாக நான் விரும்புகின்றேன். இதுதான் அநியாயக்காரர்களுக்குரிய கூலியாகும்’ (என்றும் கூறினார்)”

பின்னரும் தன் சகோதரனைக் கொலை செய்ய அவனது உள்ளம் அவனைத் தூண்டவே, அவன் அவனைக் கொலை செய்து விட்டான். இதனால் அவன் நஷ்டவாளிகளில் உள்ளவனாக ஆகிவிட்டான். “தனது சகோதரனின் சடலத்தை எவ்வாறு அடக்கம் செய்வது? என்பதை அவனுக்குக் காண்பிப்பதற்காக, பூமியில் தோண்டிக் காட்டும் ஒரு காகத்தை அல்லாஹ் அனுப்பினான்.

(இதைக் கண்ணுற்ற) அவன், ‘எனக்கேற்பட்ட கைசேதமே! நான் இக்காகத்தைப் போலாயினும் இருப்பதற்கு இயலாதவனாகி விட்டேனே! அப்படியிருந்தால் என் சகோதரனுடைய சடலத்தை நான் அடக்கஞ் செய்திருப்பேன்” என்று கூறி, கவலைப்படுவோரில் உள்ளவனாக அவன் ஆகிவிட்டான்.” (அல்-குர்ஆன் 5:27-31)

காகம் ஒற்றுமையின் இலக்கணமாகப் போற்றப்படும் பறவை. மனிதன் முதன் முதலில் ஒற்றுமைக்கு ஊறு விளைத்து சொந்த உடன் பிறப்பாளனை கொலை செய்த சம்பவத்துடன் காகம் சம்பந்தப்படுத்தப்படுகின்றது. காகத்தின் இயல்புகளை எண்ணிப் பார்க்கும் போது இது நம்மை ரொம்பவும் சிந்திக்க வைக்கிறது.

“ஒன்னா இருக்கக் கத்துக்கனும்,

இந்த உண்மையச் சொன்னா ஒத்துக்கனும்,

காக்கா கூட்டத்தப் பாருங்க!

அதற்குக் கத்துக் கொடுத்தது யாருங்க!”

என்று ஒரு தமிழ் பாடல் காகத்தின் ஒற்றுமைக் குணத்தை சிலாகித்துப் பேசுவதைப் பிள்ளைகளுக்குக் கூட நாம் கற்றுக் கொடுக்க வேண்டிய பாடல் மட்டும் அல்ல பாடமும் கூட. .

எந்த ஒரு பொருளையும் அல்லாஹ் காரண-காரியம் இல்லாமல் படைக்கவில்லை என்பதையும் சண்டையிட்ட இரு சகோதர்களின் முடிவு கொலையில் முடிந்ததையும் குர்ஆன் நமக்கு சுட்டிக் காட்டுகிறது .

காகங்கள் சுற்றுப் புறச் சூழலை சுத்தம் செய்கின்றன. ஒரு காகம் தன் ஆயுளில் சுமார் 30,000 மரங்களை நடுவதாகக் கூறுவர். அல்லாஹ்வின் படைப்பின் பயனை இதன் மூலம் உணர்வதுடன் உயிரினங்கள் மீது அன்பு பிறக்கவும் இது வழி வகுக்கும்.

ஆதம் நபிக்கு ஹாபீல்-காபீல் என்று இரு புதல்வர்கள் இருந்தனர். ஹாபீல் நல்லவர். காபீல் கெட்ட குணம் கொண்டவர். அவர்களுக்கிடையே ஒரு பிரச்சினை எழுந்தது. இருவரும் குர்பான் கொடுக்க வேண்டும். யாருடைய குர்பானை அல்லாஹ் அங்கீகரிக்கின்றானோ அவருக்கு சார்பாகப் பிரச்சினையில் தீர்வு அமைய வேண்டும் என்று முடிவானது.

இருவரும் குர்பானை முன்வைத்தனர். அக்காலத்தில் குர்பான் செய்தால் அதை அல்லாஹ் அங்கீகரிக்கும் விதம் வித்தியாசமாக இருந்தது. வானத்தில் இருந்து நெருப்பு வந்து அந்தக் குர்பானை அழித்துவிடும். இதுதான் குர்பான் அங்கீகரிக்கப்பட்டதற்கு அடையாளமாக அமையும். ஹாபீலின் குர்பான் அங்கீகரிக்கப்பட்டது. காபீலின் குர்பான் அங்கீகரிக்கப்படவில்லை.

காபீல் கோபம் கொண்டான். தன் சகோதரன் மீது பொறாமை கொண்டான். எனது குர்பான் ஏற்கப்படவில்லை, இவனது குர்பான் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டதே என்று ஆத்திரம் கொண்டான். உன்னை நான் கொல்வேன் என்று தன் சகோதரனைப் பார்த்து கோபத்தில் குமுறினான்.

காபிலோ நான் என்ன குற்றம் செய்தேன்? உன்னிடம் இறையச்சம் இருந்திருந்தால் உனது குர்பான் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும். உன் உள்ளம் சரியாக இல்லாதது உனது குற்றம்தானே என உணர்த்தினான்.

அப்படியிருந்தும் அவன் சகோதரனைக் கொலை செய்ய முயன்றான். ஹாபில் நல்லவன்; மறுமை நம்பிக்கை உள்ளவன். எனவே, அவன் தன் சகோதரனைப் பார்த்து,

‘நீ என்னைக் கொலை செய்ய முயன்றாலும் உனக்கு எதிராக நான் ஒன்றும் செய்யப் போவதில்லை. நான் அல்லாஹ்வை அஞ்சுகின்றேன். நீ என்னைக் கொன்றால் எனது பாவத்தையும் உனது பாவத்தையும் நீ சுமக்க நேரிடும். உன்னால் எனது உலக வாழ்வைத்தான் அழிக்க முடியும். ஆனால், என்னைக் கொன்றால் உனது மறுமை வாழ்வே அழிந்துவிடும் என்று கூறினான்.

இப்படியெல்லாம் விளக்கப்படுத்திய பின்னரும் அவன் தனது சகோதரனைக் கொலை செய்து விட்டான். இதுதான் உலகில் நடந்த முதல் கொலை. எனவே, உலகில் நடக்கும் எல்லாக் கொலையின் பாவத்திலும் காபீலுக்குப் பங்குள்ளது.

கொலை செய்துவிட்டு தனது தம்பியின் சடலத்தை என்ன செய்வது என்று தெரியாமல் அவன் தவித்த போது ஒரு காகம் வந்து பூமியில் குழி தோண்டியது.

இதைப் பாத்த காபீல், ‘எனக்குப் பிடித்த கேடே! நான் இந்தக் காகத்தைப் போலாவது இருந்திருக்கக் கூடாதா! எனது சகோதரனின் சடலத்தை அடக்கக் கூட எனக்குத் தெரியாமல் போனதே என்று வருந்தினான்.

மனிதனுக்குக் காகம் கப்ர் தோண்டக் கற்றுக் கொடுத்துள்ளது. நாம் காகத்திடம் கற்க வேண்டிய பாடங்கள் நிறையவே இருக்கின்றன என்பதை இச்சம்பவம் உணர்த்துகின்றது.

நீதிக் கதைகளில் பாட்டி சுட்ட வடையை ஒரு காகம் தன் வாயில் சுட்டுக் கொண்டு மரக்கிளையில் அமர , ஒரு நரி காகத்தின் கனகடூரமான குரலை இனிமையாக இருப்பதாக சொல்ல , காகம் மகிழ்ந்து கரையும் போது வாயிலிருந்த வடை கீழே விழ நரி கவ்விக் கொண்டு போவதாக முன்னாள் சொல்லப்பட்ட கதையை நவீன காலத்தில் , நரிக்காக காகம் கரையும் போது வாயிலிருந்த வடையை தன் கால் இடுக்கில் வைத்து விட்டு பின் கரைகிறது. நரி ஏமாந்து போகிறது

இந்த காகம் ஜாடியின் அடியில் உள்ள நீரை கற்களைப் போட்டு ஜாடியின் மேலெழுப்பி தாகம் தீர்த்த காகம் இது. இந்த காகத்தின் மூதாதை காகமாக கபர் தோண்டிய காகமாக இருக்குமோ என்னமோ ?

இந்த சம்பவத்தின் மூலம் பொறாமை கொள்ளக் கூடாது, கோபம் கொள்ளக் கூடாது, அவசரப்படக் கூடாது, முரட்டுத்தனம் கூடாது மற்றும் அடுத்தவருக்குத் தீங்கு செய்யக் கூடாது, எனக்குக் கிடைக்காதது வேறு எவனுக்கும் கிடைக்கக் கூடாது என்ற வக்கிர புத்தியுடன் செயற்படக் கூடாது என்று ஏராளமான நல்ல விஷயங்களை உள்ளடக்கிய ஒரு நிகழ்வாக குர் ஆன் சுட்டிக் காட்டுகிறது .

இதனால் தானோ என்னவோ காகம் உலகின் பல பகுதியில் வாழ்கிறது நம்மில் எத்தனை பேர் தினமும் காகத்தைப் பார்த்து பாடம் படிக்கிறோமோ இல்லையோ கபர் தோண்ட கற்றுக் கொடுத்த ஜீவன் என்ற முறையில் மரணத்தையாவது ஞாபகப் படுத்தினால் அது போதும் .

மரணம் இம்மை வாழ்க்கையின் சொரூபத்தை கண்டிப்பாக கற்றுக் கொடுக்கும்.

மரண சிந்தனை மனிதனை ஞானியாக்கும்

நம்மில் ஞானிகள் வெகு சிலரே!