Home இஸ்லாம் கட்டுரைகள் மனிதருள் சிறந்தவர்
மனிதருள் சிறந்தவர் PDF Print E-mail
Tuesday, 06 March 2018 08:32
Share

love light women muslim men marriage islam islamic Quran verse deen ayah The Light muslim couple surah an-Nur good women are for good men

மனிதருள் சிறந்தவர்

o ''வாங்கிய கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவனே மனிதருள் சிறந்தவன்.'' – (நூல்: முஸ்லிம்)

o ''ஆபாசப் பேச்சுக்கள் எதுவும் பேசாமல் அதுபோன்ற செயல்களில் ஈடுபடாதவனே மனிதருள் சிறந்தவன்.'' (நூல்: புகாரி)

o ''இறைவனிடத்திலும், முதலாளியிடத்திலும் விசுவாசமாக நடப்பவனே சிறந்த தொழிலாளி.'' (நூல்: புகாரி)

o ''இல்லாளிடம் நற்பெயர் வாங்கியவனே நல்ல கணவன்.'' (நூல்: திர்மிதீ)

o ''கணவன் தன்னைப் பார்க்கும்போது மகிழ்வைத்தந்து, அவன் விருப்பத்திற்கு மாற்றமாக நடக்காமல், தன் கற்பைப் பேணிக் கொண்டவளே நல்ல மனைவி.'' (நூல்: நஸயீ)

o ''அண்டை வீட்டினரோடு சுமூக உறவு கொள்ளாமல் ஆயிரம் உபரி வணக்கங்களில் ஈடுபடுபவனைவிட அவனோடு அந்நியோன்யமாகப் பழகும் குறைந்த வணக்கம் புரிபவனே மேலானவன்.'' (நூல்: மிஷ்காத்)

o ''பகையினால் ஒருவர் முகத்தை பிறிதொருவர் பார்க்க விரும்பாத கட்டத்தில் பகையை மறந்து முகமன் கூறி முதலில் பேசத் துவங்குபவரே உங்களில் சிறந்தவர்.'' (நூல்: புகாரி)

o ''பணிவிடை என்று வருகிறபோது, மற்றவரைவிட தன்னை முற்படுத்திக் கொள்பவனே சிறந்த தலைவன்.'' (நூல்: பைஹகீ)