Home இஸ்லாம் கட்டுரைகள் அறிஞர்கள் மூன்று வகை
அறிஞர்கள் மூன்று வகை PDF Print E-mail
Sunday, 24 December 2017 08:38
Share

அறிஞர்கள் மூன்று வகை

    உஸ்தாத் மன்ஸூர்     

அல்லாஹ்வை அறிந்தவர். அவனது கட்டளைகளை அறிந்தவர்.

அல்லாஹ்வை அறிந்தவர். அவனது கட்டளைகளை அறியாதவர்.

அல்லாஹ்வின் கட்டளைகளை அறிந்தவர். அல்லாஹ் பற்றி அறியாதவர்.

அல்லாஹ்வை அறிந்தவர், அவன் கட்டளைகளை அறிந்தவர்:

இவர் அல்லாஹ்வைப் பயப்படுவார். அவனது வரையறைகளையும் அவன் விதித்த கடமைகளையும் அறிவார்.

அல்லாஹ்வை அறிந்தவர், இறை கட்டளைகளை அறியாதவர்:

இவர் அல்லாஹ்வைப் பயப்படுவார். ஆனால் அவனது வரையறைகளையும் அவன் விதித்த கடமைகளையும் அறியாதவராக இருப்பார்.

அல்லாஹ்வின் கட்டளைகளை அறிந்தவர். அல்லாஹ்வை அறியாதவர்:

இவர் அல்லாஹ்வின் வரையறைகளையும், கட்டளைகளையும் அறிந்தவர். ஆனால் அவர் அல்லாஹ்வைப் பயந்து வாழாதவராக இருப்பார். (உம்தத் அல்தப்ஸீர் – தப்ஸீர் இப்னு கதீரின் சுருக்க நூல்: வா:03 பக்:109)