Home இஸ்லாம் தொழுகை பள்ளிவாசல்களில் பணி புரியும் இமாம்கள் எப்படி இருக்கவேண்டும்.?
பள்ளிவாசல்களில் பணி புரியும் இமாம்கள் எப்படி இருக்கவேண்டும்.? PDF Print E-mail
Monday, 23 October 2017 17:37
Share

Image may contain: one or more people and text

பள்ளிவாசல்களில் பணி புரியும் இமாம்கள் எப்படி இருக்கவேண்டும்.?

    அய்யம் பேட்டை PM.ஜியாவுத்தீன் ஹழ்ரத்       

ஒரு இமாம் கவனத்தில் எடுக்க வேண்டிய முக்கியமான ஷர்த்துகள்..!

1. ஆரம்பத்தில் இருந்தே நாம் நம்மை கட்டுப்பாடுகள் நிறைந்தவராக ஆக்கி கொள்ள வேண்டும்.

2. தொழுகைக்கு பள்ளிக்குள் வரும் முதல் நபராக இமாம் இருக்க வேண்டும்.

3. தொழுகைக்கு பின் பள்ளிக்குள்லிருந்து வெளியாகும் கடைசி நபராக இமாம் இருக்க வேண்டும்.   (முன் பின் சுன்னத் தொழுகையை நிறைவேற்றுதல்)

4. பள்ளிக்குள் உலக விஷயங்களை பேசிக்கொண்டிருக்கும் பழக்கம் அறவே ஒழிக்க வேண்டும். குறிப்பாக பாங்கு சொன்ன பிறகு!

5. நிறைவாக தாடிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அது நமக்கு وقارة த்தை தரும்.

 

6. இமாமத் செய்யும் போதாவது தூய வெண்மை ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். சஜ்தா செய்யும்போது உள்ளாடையின் அளவு தெரியாத விதத்தில் ஆடைகள் அமைய வேண்டும். ஜுப்பா, அபா போன்ற ஆடைகள் அணிந்து கொண்டு தொழ வைப்பது இறையச்சத்தை அதிகப்படுத்தும்.

7. எவ்வளவு பழகினாலும் அவர்களின் வாழ்க்கை, குடும்ப விஷயங்களில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு யோசனைகள் சொல்லாமல் விலகி இருக்க வேண்டும்.

8. நம் வயது ஒத்தவர்கள், மற்றும் யாராக இருந்தாலும் பேச்சுவார்த்தை, பழக்க வழக்கங்கள் கண்ணியமாகவும், கண்டிப்பாகவும் இருப்பது மிக நல்லது.

9. முடிந்த வரை நம் குடும்ப விஷயங்கள் பற்றி யாரிடமும் தேவையில்லாமல் பேசாதீர்கள்.

10. ஆரம்ப காலங்களில் இருந்தே ஹக்கை சொல்வதில் தயக்கமின்றி சொல்வது.

 

11. மக்தப் மதரஸாக்களை மிக மிக மிகச் சீராக சிறப்பாக நடத்துவது. மக்தப் மதரஸா பிள்ளைகளை மிக ஒழுக்கம் நிறைந்தவர்களாக, மார்க்கம் தெரிந்தவர்களாக ஆக்கிட முழு முயற்சி எடுக்க வேண்டும்.

12. மாதந்தோறும் குறித்த ஒரு நாளில் பெண்கள் பயான் நடத்துவது.

13. ஜும்ஆ பயான்கள் மிக அருமையான தகவல்களுடன் குறித்த நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டு குறித்த நேரத்திற்குள் முடித்துக் கொள்வது.

14.சேவைகளை முன் வைத்து அல்லாஹ்க்காக பணிகள் செய்வது.

15.ஹாபிழ் அல்லாத இமாம்கள் கிராஅத், مخرج களை சரியானதாக ஆக்கிக் கொள்ளல் மிகவும் அவசியமாகும்.

16..மேலும் இடம், பொருள், ஏவல்களை அனுசரித்து, நேரம், கால, சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப நம்மை நாம் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

17.நம் தேவைகளுக்காக அல்லாஹ்விடம் அழுது மன்றாடி துஆ செய்வது.'


புதிதாக சேரும் இமாம் கட்டாயம்..

இதற்கு முன்பு இருந்த இமாமை சந்தித்து அந்த முஹல்லாவின் சாதக பாதக நிலவரங்களை தெரிந்து கொள்வது அவசியம்.

புதிதாக சேரும் இமாம் கட்டாயம் தங்களின் மனதில் பட்ட (நியாயமான) சம்பளத்தை கேளுங்கள்.
குறைந்த சம்பளம் என்றால் ஏதாவது சொந்த தொழில் செய்வதற்கான அனுமதியை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

லீவு விஷயத்தையும் பேசிவிடுங்கள். நீக்கம் செய்யப்பட்டாலும் நீங்களாக நீங்கினாலும் 3 மாத காலம் சம்பளத்துடன் அவகாசம் கேளுங்கள்.

இதனை எழுத்து பூர்வமாக ஆக்கிக் கொண்டாலும் பிரச்சினை இல்லை.

-நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா அரபுக் கல்லூரியில்,   ஸனது வழங்கும் நிகழ்ச்சியின்போது அய்யம் பேட்டை PM.ஜியாவுத்தீன் ஹழ்ரத் வழங்கிய அறிவுரை.