Home குடும்பம் இல்லறம் கணவன் மனைவி உறவு மதிக்கப்பட வேண்டும்!

இஸ்லாம் கூறும் திருமணம் -Abdul Basith Bukhari

கணவன் மனைவி உறவு மதிக்கப்பட வேண்டும்! PDF Print E-mail
Friday, 20 October 2017 08:49
Share

Related image

கணவன் மனைவி உறவு மதிக்கப்பட வேண்டும்! 

        டாக்டர். ஷர்மிளா         

[ பெண்மையானது நத்தை மாதிரி. தனக்கு பிடிக்காவிட்டால், தனது உடலை கூட்டுக்குள் இழுத்துக்கொள்ளும் நத்தை போல் ஆசையை உள்வாங்கிக் கொண்டு வெளிக்காட்டாமல் இருந்து  விடுவார்கள். ஆண்கள் கட்டாயப்படுத்தினாலும், அது ஒரு உணர்ச்சியற்ற ஜடம் போல் தான் உணர்ச்சிகள் இருக்குமே தவிர, மனப்பூர்வமான ஆசை எதுவும் இருப்பதில்லை.

எனக்கு தெரிந்தவரையில் அறுபது சதவீத குடும்பங்களில் தங்களது பெண்களுக்கு நடைமுறை வாழ்க்கையில் தாங்கள் சந்தித்த வேதனைகள், அதாவது தாம்பத்ய உறவில் உடல்ரீதியாக சமாளித்த போராட்டங்களை சொல்வதில்லை. கூச்சப்பட்டு சொல்ல மறுக்கிறார்கள்.

மெனோபாஸ் நிலைமையை எட்டிய பெண்கள் சிலர் எங்களுக்கு தாழ்வு மனப்பான்மை வருகிறது. ஆனாலும், ஒரு சந்தோஷம். மாதவிடாய் பிரச்சனை இல்லாமல் எல்லா விசேஷங்களுக்கும் செல்லலாம் என்று குதூகலிக்கும் பெண்களும் இருக்கிறார்கள்.

அதேவேளையில், தாம்பத்ய உறவுக்கு தங்களது மனைவிகள் தடை போடுவதாக ஆண்கள் பலர் கேள்வி எழுப்பியிருந்தார்கள். இத்தனை வருடம் அனுபவித்தது போதாதா? குழந்தைகள் வளர்ந்து விட்டனர். இனி கூடவே கூடாது! என்று கூறி விடுகிறார்கள் என்று வேதனைப்படுகிறார்கள்.

பெண்கள் தடை விதிப்பது தவறு என்பது என் வாதம். கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் உடல் ரீதியான ஒரு தொடர்பு இருக்கும்வரை ஒரு நெருக்கம் இருக்கும். அது மறுக்கப்பட்டால் இல்லற சுகம் கிடைக்கும் பெண்களை தேடி வலை வீசுவார்கள். அதனால், குடும்பத்தில் பல பிரச்சனைகள் தலை தூக்கும். இளமைக் காலத்தில், திருமணம் ஆன முதல் பத்து வருடங்களில் தாம்பத்ய உறவு என்பது எதிர்பார்ப்பு கலந்த சந்தோஷத்தை அளித்தாலும், நாற்பத்தைந்து, ஐம்பது வயதை நெருங்கும் ஆண் செக்ஸ் உறவை அதிகம் எதிர்பார்ப்பது தவறே அல்ல.]

குறிப்பறிந்து நடந்து கொள்ளும் ஆண்களை பெண்கள் போற்றுகிறார்கள். அதுதான் இருவருக்கும் இடையில் அதாவது, கணவன், மனைவிக்கு இடையே பரஸ்பர அன்பு, ஒருவரது உடல்நிலையில் ஏற்பட்ட துன்பத்தைப் போட்டோந்து கொண்டு தங்களது ஆசைகளைக் கட்டுப்படுத்தி விட்டு கொடுப்பதால் மனரீதியான பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

தாம்பத்ய உறவில் விட்டுக் கொடுப்பது என்பது நடைமுறை வாழ்க்கையில் சகஜமானது. எனவே, மனைவியின் உடல்நிலையில் ஆண்கள் அக்கறை காட்டாமல் வேறு யார் காட்டுவார்கள்? நீ பாதி நான் பாதி என்று இன்ப, துன்பத்தை பகிர்ந்து கொள்வதில் தவறு ஏதும் இல்லை.

Image result for love heartபடுக்கையறை சுகத்தில் மட்டும் பங்கெடுத்துவிட்டு, அந்த மூன்று நாட்கள் வந்துவிட்டால் அடச்சே! என்று முகம் சுழிக்கும் ஆண்கள் தான் அதிகம் என்று பல குடும்ப பெண்களே கண்ணீர் விடுகின்றனர்.

அதேபோல், தான் உடல் ரீதியாக உறவும். இதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். ராணிக்கு திருமணம் ஆகி மூன்று வருடங்களாகி விட்டன. ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. அவளது கணவர் ஜார்ஜ் பிரபல கம்பெனியில் உதவி மேனேஜராக வேலை பார்த்து வந்தார்.

என் கணவருக்கு வாரத்தில் நான்கு, ஐந்து நாட்களில் தாம்பத்ய உறவு வேண்டும். அவருடைய ஆசையை நான் பூர்த்தி செய்து வந்தேன். எனக்கு ஃபீவர் இருந்த நேரத்தில் கூட என்னை அவருக்கு பலமுறை கொடுத்துள்ளேன்.

ஆனால் அந்த மூன்று நாட்களில் அவரை சமாளிக்க முடியவில்லை. முதல்நாள் ரொம்ப அவஸ்தையாக இருக்கும். நானும் இது ரொம்பவும் தவறு என்று பலமுறை எடுத்து சொல்லியிருக்கிறேன்.

எல்லாம் எனக்கு தெரியும் என்பார். அந்த நாட்களில் நான் உறவு வைத்து கொள்ள மறத்துவிட்டால், வேறு எங்காவது கால் கேர்ள்ஸ் பக்கம் போய்விட்டு எனக்கு ப்ரீயாக எய்ட்ஸ் நோயை கொடுத்துவிடுவாரோ என்று பயம்.

அதனால் பிரசவ வலியைப் பொறுத்துக் கொள்வது போல உறவு வைத்துக் கொள்ள அனுமதிக்கிறேன். என்ன செய்வது டாக்டர்? என்று கேட்டிருந்தார்.

ஆண்களிடம் மற்றொரு தவறான பழக்கமும் இருக்கிறது. கணவன்-மனைவிக்கு இடையில் உள்ள அந்தரங்கமான பிரச்சனைகளை, படுக்கை அறை உறவுகளைப் பற்றி நண்பர்களுடன் டிஸ்கஸ் பண்ணுகிறார்கள்.

ஏற்கனவே குழம்பி போயிருக்கும் நபரை தங்களுக்கு தெரிந்த அரைகுறை தகவல்களை வைத்து உசுப்பி விடுவார்கள். எனக்கு ஒரு டாக்டரே சொன்னார் என்று பொய் சொல்வார்கள். எல்லாம் தெரிந்த மாதிரி அந்த மூன்று நாட்களில் உறவு வைக்கலாம். நானே பண்ணுகிறேன் என்று தங்களது கோஷ்டிக்கு ஆள் சேர்ப்பார்கள்

தனது வாழ்க்கையில் சுக, துக்கத்தில் பங்கு எடுக்கும் மனைவியின் வேதனையை புரிந்து கொள்ளாமல், மனைவியிடம் தங்களது மனதில் எழுந்த சந்தேகங்களை கேட்காமல் நண்பர்கள் சொன்னதை மட்டும் வேதவாக்காக நினைத்துக் கொண்டு மனைவியை கட்டாயப்படுத்துவது நியாயம்தானா? என்று அவர்கள் எண்ணி பார்க்க வேண்டும். ஜார்ஜ் விஷயத்திலும் அப்படியே! ராணியும் தன் கணவனிடம் மிகவும் பணிந்து போனது தவறு. தன் உடல்நிலையை, பின்விளைவுகளை பக்குவமாக எடுத்து சொல்லி இருக்கலாம்.

உங்களது உணர்ச்சிகளை கட்டுபடுத்தாமல், தடுமாறி போய் வேறு எங்கேனும் போய்விடாதீர்கள். எனக்கு எய்ட்ஸை போட்டோசாகத் தராமல் இருந்தால் சரி என்று ஜார்ஜிடம் எடுத்து சொல்லுங்கள் என்று ராணிக்கு அட்வைஸ் பண்ணினேன். பெரும்பாலான பெண்கள் தங்களது உடல்ரீதியான வேதனைகளை தங்களுக்குள்ளே பூட்டி வைப்பது தான் பிரச்சனையே. அதுக்காக ஒரேயடியாக ஆண்களை பயமுறுத்தக்கூடாது. நம்ம மனைவி போட்டோப்பேரான பஸ் எனவே, ஸ்பேர் பஸ்ஸை ஓட்டிக் கொண்டு போகலாம் என்ற மனப்பான்மை வந்துவிடும்.

திருமணத்துக்கு முன்பே, தங்களது பெண்களுக்கும் நடைமுறை வாழ்க்கையில் மூன்று நாட்கள் வேதனை, கணவனது தொல்லை அதை சமாளிப்பது பற்றியும் மனரீதியாக எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை ஒரு தாயார் சொல்லித்தரலாம். ஏனென்றால் வாழ்க்கையில் முழு அத்தியாயங்களை உணர்ந்துகொண்டு வேதனைகளை அனுபவித்த ஒரு பெண்ணால்தான் தன் மகளுக்கு பிரச்சனைகளை எதிர்கொள்வதை சொல்லிதர முடியும்.

Image result for love heartஎனக்கு தெரிந்தவரையில் அறுபது சதவீத குடும்பங்களில் தங்களது பெண்களுக்கு நடைமுறை வாழ்க்கையில் தாங்கள் சந்தித்த வேதனைகள், அதாவது தாம்பத்ய உறவில் உடல்ரீதியாக சமாளித்த போராட்டங்களை சொல்வதில்லை. அதற்கு காரணம், நம் பெண்ணிடம் செக்ஸ் விவகாரங்களை சொல்வதா? என்று கூச்சப்பட்டு சொல்ல மறுக்கிறார்கள்.

தங்களது பெண்கள் தாமாகவே தெரிந்து கொள்வாள் என்று நீச்சல் தெரியாதவரை நடுக்கடலில் தள்ளிவிட்டதுபோல் திருமண வாழ்க்கையில் ஒருத்தன் கையில் பிடிச்சு கொடுத்தாச்சு. அப்பாடா! என்று நிம்மதியுடன் இருந்துவிடுகிறார்கள்

திருமணம் ஆன பெண்ணோ ஒவ்வொரு பிரச்னைகளிலும் போராடி, கண்ணீர் வடித்து, சந்தேகங்களை வெளியில் கேட்பதா வேண்டாமா? என்று தங்களது மனதுக்குள் பூவா, தலையா? போட்டு பார்த்துவிட்டு தனது மனதுக்குள்ளே பூட்டி வைத்துக் கொண்டு கண்ணீர் வடிப்பாள்.

எனவே, ஒரு தாய் தன் மகளை திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும்போது, தாம்பத்ய உறவில் உள்ள வேதனைகளை, துன்பங்களை போக்கும் வழிமுறையையும் சமாளிக்கும் மனப்பக்குவத்தையும் சொல்லித்தர வேண்டும்.

மாதவிடாய் சுழற்சியையும், பல பிரச்சனைகளையும் மாதவிடாய் சமயத்தில் ஆண்களின் தொந்தரவு இருக்கக் கூடாது. அது பற்றிய விழப்புணர்வுதான் நமக்கு முக்கியம். மூன்று நாட்கள் உடல் அவஸ்தையை அனுபவித்தாலும் எப்படியோ கணவனின் தொல்லை விட்டால் சரி! என்று நிம்மதியாக பெருமூச்சுவிடும் குடும்ப பெண்கள் கண்டிப்புடன் அதை செயலில் காட்டுவது நல்லது. மாதவிடாய் சுழற்சியின்போது வாழ்க்கையிலும் சுழன்று பல இன்ப, துன்பங்களைச் சந்தித்துவிட்டு நாற்பத்தைந்து வயதை நெருங்கும் சமயத்தில் மாதவிடாய் சுழற்சி நின்றுவிடும். அதைதான் மெனோபாஸ் என்று சொல்வார்கள்.

அதாவது, பெண்களுக்கு உடல்ரீதியான அவஸ்தையில் இருந்து விடுதலை. ஆனாலும் சிலருக்கு கர்ப்பப்பை கோளாறுகள். யூட்ரஸை அகற்றும் அளவுக்கு கட்டி மற்றும் பல பிரச்சனைகள் வருகின்றன.

குடும்ப பொறுப்பு சுமை அதிகரிக்கும் நாற்பத்தைந்து ஐம்பது வயதில் மொனோபாஸ் கட்டம் வரும். அப்போது, பெண்களின் உடல்நிலை மாறுதலின் போது மனரீதியாக பல மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு.

தங்களிடம் இருந்து ஒரு தகுதி பறிபோய்விடுகிறது என்ற மனப்பான்மை பொதுவாக ஏற்பட்டாலும், மாதவிடாய் சுழற்சி நிற்கும் சமயத்தில் கர்ப்ப பையில் பல கோளாறுகள் ஏற்படுகின்றன.

பெரும்பாலான பெண்கள் மெனோபாஸ் நிலமை ஏற்பட்டதும் சந்தோஷப்படுகிறார்கள். பதிமூன்று வயதில் துவங்கும் மாதவிடாய் பருவம் 35 வருடங்களாக நீடித்த பின்பே நின்றுவிடுகிறது.

எனவே, அந்த சமயங்களில் விரக்தி, வெறுப்பு, எரிச்சல், அதிகமான கோபம், எதற்கெடுத்தாலும் சலிப்பு ஆகிய மாறுதல்கள் உடல் ரீதியாக ஏற்படுகிறது. குடும்ப சுமை அதிகரிக்கும் அந்த வயதில் இனம் புரியாத கோபதாபத்தால் பின்விளைவுகளும் ஏற்படும்.

மெனோபாஸ் நிலைமையை எட்டிய பெண்கள் சிலர் எங்களுக்கு தாழ்வு மனப்பான்மை வருகிறது. ஆனாலும், ஒரு சந்தோஷம். மாதவிடாய் பிரச்சனை இல்லாமல் எல்லா விசேஷங்களுக்கும் செல்லலாம் என்று குதூகலிக்கும் பெண்களும் இருக்கிறார்கள்.

அதேவேளையில், தாம்பத்ய உறவுக்கு தங்களது மனைவிகள் தடை போடுவதாக ஆண்கள் பலர் கேள்வி எழுப்பியிருந்தார்கள். இத்தனை வருடம் அனுபவித்தது போதாதா? குழந்தைகள் வளர்ந்து விட்டனர். இனி கூடவே கூடாது! என்று கூறி விடுகிறார்கள் என்று வேதனைப்படுகிறார்கள்.

பெண்கள் தடை விதிப்பது தவறு என்பது என் வாதம். கணவன் -மனைவி இருவருக்கும் இடையில் உடல் ரீதியான ஒரு தொடர்பு இருக்கும்வரை ஒரு நெருக்கம் இருக்கும். அது மறுக்கப்பட்டால் இல்லற சுகம் கிடைக்கும் பெண்களை தேடி வலை வீசுவார்கள். அதனால், குடும்பத்தில் பல பிரச்சனைகள் தலை தூக்கும். இளமைக் காலத்தில், திருமணம் ஆன முதல் பத்து வருடங்களில் தாம்பத்ய உறவு என்பது எதிர்பார்ப்பு கலந்த சந்தோஷத்தை அளித்தாலும், நாற்பத்தைந்து, ஐம்பது வயதை நெருங்கும் ஆண் செக்ஸ் உறவை அதிகம் எதிர்பார்ப்பது தவறே அல்ல.

அதிகான வேலை பளு, குடும்ப, நிர்வாக பிரச்சனைகள், கவலைகள் தலைதூக்கும் நாற்பத்தைந்து, ஐம்பது வயதில் மன இருக்கம், மன உளைச்சல் ஆகியவற்றை தவிர்க்கும் சிகிச்சையே தாம்பத்ய உறவுதான். அளவுக்கதிகமான டென்ஷனை தன்னுடைய வாழ்க்கை துணைவியான மனைவியிடம் பங்குப் போட்டு கொள்வதில் தவறே இல்லை. ஆனால், குடும்ப பெண்கள் பலர் உடல் ரீதியான பிரச்சனைகளில் அந்த வயதில் தான் அவதிப் படுகின்றனர். எனவே, கணவனின் ஆசைகளை, எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாத நிலைமையிலும் உள்ளனர்.

Image result for love heartநல்ல ஆரோக்கியமாக இருக்கும் பெண்களோ, ச்சே..... அதை பற்றி பேசவே கூடாது! என்று எச்சரிகையை விடுப்பதால் கணவன்மார்கள் கப்சிப்! அப்புறம் தங்களது நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியான உறவுக்கு ரூட் போடுவா£க்ள். அது பலரது குடும்பத்தில் நடந்து வருகிறது.

பெண்களுக்கு அந்த ஏக்கம் இருந்தாலும், சிலரது குடும்பத்தில் கண்டிப்புடன், பள்ளி ஹெட்மாஸ்டர் போல கறாராக அதட்டும் கணவன்மார்களிடம் இருந்து அன்பு, பாசம், அரவணைப்பு எதையும் எதிர்பார்க்க முடியாது. தாம்பத்ய சுகத்தை மட்டும் எப்படி எதிர்பார்க்க முடியும்?

முக்கிய பொறுப்பில் அல்லது உயர் அதிகாரியாக இருக்கும் கணவனோ எந்நேரமும் வேலை, வேலை என்று இயந்திரத்தனமாக இருப்பதால், தன் மனைவிக்கு சுகத்தை கொடுக்காவிட்டாலும் அவளது உடல்நிலையைக் கூட கவனிக்க முடிவதில்லை.

தனது மனைவிக்கென்று வாரத்தில் ஒருநாள் ஒதுக்கி வைத்துவிட்டு, அவளை பார்க், பீச் என்று அழைத்து சென்று சில விஷயங்களை மனம் விட்டு பேசி ஒரு நெருக்கத்தை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இது எத்தனை பேர் குடும்பத்தில் நடக்கிறது? என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா ஜாலிதான் என்று குஷியாகும் ஆண்கள் தான் அதிகம்.

தாம்பத்ய உறவுக்கு மனைவியின் உடல்நிலை எதிராக இருந்தாலும், தொடு உணர்ச்சிகள், அன்பான வருடல், முத்தம் ஸ்பரிசத்தின் மூலம் மன இறுக்கத்தைப் போக்கலாம். அதைவிடுத்து தினமும், சாப்பாடு என்னாச்சு? என் துணிகளை வாஷ் பண்ணியாச்சா? டிபன் ருசியாக இல்லை என்று குடும்ப பிரச்சனைகளிலே மனைவியை விரட்டிக் கொண்டிருப்பதில் ஒரு மகிழ்ச்சியும் இருக்காது.

பொதுவாக, நாற்பது வயதுக்கு மேல் கணவனும் மனைவியும் போட்டோந்துக் கொள்வதில் அனுசரித்து போவதில் ஏகப்பட்ட மனகுறைகள் இருக்கிறது என்பதில் கண்கூடாக பார்த்திருக்கிறோம்.

அதனால் குடும்பத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பதில் பல குழப்பங்கள், சண்டை சச்சரவுகள் ஏற்படுகிறது. யார் பேச்சை கேட்பது? என்று தன்மானத்துடன் பட்டிமன்றம் போட்டு கத்துவார்கள். அதை பார்க்கும் குழந்தைகளின் மனநிலை எப்படி இருக்கும்? நடுத்தர வயதைத் தாண்டிய பெண்களுக்கு தாம்பத்ய உறவில் ஆசை இருக்கும்.

அதைப் பற்றிய ஏக்கங்களையும் சுமந்துக் கொண்டு நடமாடும் நடுத்தர வயதைத் தாண்டிய பெண்களுக்கு தாம்பத்ய உறவில் ஆசை இருக்கும். அதைப் பற்றிய ஏக்கங்களையும் சுமந்துக் கொண்டு பேசுவது. பிறர் முன்னால் இவர் கையாலாகாதவர், அவருக்கு ஒன்றும் தெரியாது என்று பேசும்போது கூனி குறுகிப் போகிறோம். அப்படிப்பட்ட மனைவியிடம் ஆசையுடன் பேசவே முடியாது. இதில் அவளை தொடுவதா? அம்மாடியோவ்..... அவள் பத்ரகாளியாகி விடுவாள் என்று ஓட்டம் பிடிக்கும் ஆண்களும் இருக்கிறார்கள்.

அதாவது, ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி. ஒரு பரஸ்பர அன்புடன் நெருங்கி உறவு வைத்துக் கொள்வதையே விரும்புகிறார்கள். மன இறுக்கம், டென்ஷன், பயம், அவமானத்தால் நெளிதல் ஆகிய உணர்ச்சிகளுடன் தாம்பத்ய உறவில் ஈடுபட்டால் முழு மகிழ்ச்சி எப்படி கிடைக்கும்?

மெனோபாஸ் நிலையை அடையும் பெண்கள் இனியாவது தங்கள் உடலுக்கு ஓய்வு வேண்டும், தாம்பத்ய உறவுக்கு டாட்டா, மாதவிடாய் தொல்லைக்கும் டாட்டா என்று நிம்மதியாக இருந்தாலும் தாம்பத்ய உறவின் ஏக்கங்களை பகிர்ந்து கொள்ள தயக்கம், வெட்கத்தை விட்டு கணவனை தங்களது அன்பு பிடியில் தக்க வைப்பதில் முயற்சி செய்ய வேண்டும்.

அப்போதுதான் உங்களது ஆசைகளை உங்களவர் பூர்த்தி செய்கிறாரோ இல்லையோ? உடல்ரீதியான உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

அன்பு வைப்பவரின் அன்பை நேசி; துன்பம் வரும் போதும் இன்பமாய்த் தெரியும்.

மகிழ்ச்சியாக வாழ நினைக்கும் ஒவ்வொரு கணவன்-மனைவிக்குள்ளும் ஒரு தவிப்பு இருந்து கொண்டிருக்கிறது.

ஆனால்.. ''என்னதான் ஒருவரில் மற்றவர், கரைய நினைத்தாலும்கூட, இரு வெவ்வேறு தனி நபர்களாக அவர்களின் இயல்பு இருந்தால்தான் அவர்களின் அந்த வாழ்க்கை நீடித்த மகிழ்ச்சியுடன் சுவாரஸ்யமானதாகவும் இருக்கும்'' என்கிறார்கள் நிபுணர்கள்.

ஒருவர் மூக்கை மற்றவர் இடிக்காதபடி, ஒருவர் முதுகில் இன்னொருவர் சவாரி செய்யாதபடி... ஆனால், ஒருவர் தேவையை இன்னொருவர் பூர்த்தி செய்யும் வாழ்க்கையே நீடித்த மகிழ்ச்சித் தருவதாக அமையுமாம்!

Image result for love heartஒருவர் மூக்கை மற்றவர் இடிக்காதபடி என்றால்?

''நீ மூச்சுவிட்டால் கூட எனக்குத் தெரியணும்!'' என்பது போல், மனைவியை கணவன் குடைவதும் அல்லது மனைவி கணவனைக் குடைவதும்தான்!

கணவன் மனைவியாக இருந்தாலும் ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் தனித் தனி நபர்கள் என்ற ரீதியில் பல்வேறு விருப்பு, வெறுப்புகள், தேவைகள் போன்றவை இருக்கின்றன. அவை எல்லாவற்றையுமே நூறு சதவிகிதம் கணவன் அல்லது மனைவியிடம் பகிர்ந்து கொள்ளமுடியாமல் போகலாம்.. சொல்லப் போனால் அப்படி பகிர்ந்து கொள்ள அவசியமும் இல்லை'' என்று ஆலோசனை சொல்கிறார்கள் நிபுணர்கள்.

தம்பதியர் ஒருவர் மேல் மற்றவர் அன்பாகவும், மகிழ்ச்சியான இல்லறத்தை விரும்பக்கூடியவர்களாகவும் இருக்கும் பட்சத்தில், வீணான சில அனாவசிய உராய்தல்கள் சின்னச் சின்ன தொந்தரவுகளைத் தரக்கூடாது என்பதற்காகவே நல்ல நோக்கத்துடன் இப்படி பரிந்துரைக்கிறார்கள்.

மயிலாடுதுறையிலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்த பெண் அவர். பட்டிக்காட்டில் பிறந்த பெண் என்று மாமியாருக்கு மருமகளைப் பார்த்தால் ஒரு ஏளனம். நல்லவேளையாக கணவன் அவளைப் புரிந்துகொண்டு அனுசரணையாக இருந்தான். ஆனால், அவன் அலுவலகம் போய்விட்டால் மாமியார், அவளை தன் பேச்சுக்களால் மனம் நோகச்செய்துவிடுவார்.

திருமணமான ஆரம்பத்தில், மாமியாரின் இந்த இம்சையைத் தாங்கமுடியாமல் அன்புக் கணவன் வந்தவுடன் ''இது போல அத்தை பேசினார்!'' என்று சொல்லி அழுதாள். ''உங்க அம்மாவுக்கு நீங்க சொல்லக்கூடாதா?'' என்று சண்டை போட்டாள்.

அப்புறம் தினமும் இதுபோல சண்டை போட வேண்டி வந்தது. அன்பு மனைவி, வயதான அம்மா என்று இரண்டு பக்கமும் பேச முடியாமல் கணவன் திகைத்துப் போய் நிற்பதை அந்தப் பெண் உணர ஆரம்பித்ததுமே, தன் மாமியார் பற்றி கணவரிடம் குறை சொல்வதை நிறுத்திவிட்டாள் அவள்.

''என்ன ஆச்சு?'' என்று கணவன் பிறகு கேட்டபோது கூட ''அதெல்லாம் எப்பவோ சரியாப் போச்சு! இப்பல்லாம் நாங்கரொம்ப ஃப்ரெண்ட்ஸாயிட்டோம் தெரியுமா?'' என்று உண்மையை மறைத்துவிட்டாள். தான் அப்படி விஷயங்களை மறைத்தது தன் கணவனுக்கு எவ்வளவு பெரிய நிம்மதி உணர்வைத் தந்தது என்றும் மெல்ல மெல்ல அவளாலேயே உணர முடிந்தது.

அதன்பின் மாமியாரை எப்படி தன் அன்பாலேயே சமாளிப்பது என்று கற்றுக் கொண்டு விட்டாள் அந்தப் புத்திசாலிப் பெண்!

''என்னளவில் நான் கையாள வேண்டிய ஒரு விஷயத்தைப் பற்றி என்னத்துக்காக அவரிடம் உண்மையைச் சொல்லி அவரை நான் டென்ஷன் படுத்திக்கொண்டிருக்கவேண்டும்?'' என்று கேட்கிறார் அப்பெண்.

இதுபோன்ற விஷயங்கள்தான் என்றில்லை. தோழிகளோடு அமர்ந்து அடிக்கும் கிண்டல்கள் பற்றி... உருப்படாதவன் என்று பெயரெடுத்த தம்பியாக இருந்தாலும் உடன் பிறந்தவனுக்கு சில உதவிகள் செய்து பார்த்து அவனை நல்வழிக்குக் கொண்டு வர முயற்சிப்பது பற்றி... அலுவலகத்தில் உரிமையுடன் சகஜமாக பேசும் நண்பர்கள் பற்றி... என்று இன்னும் கூட சில விஷயங்கள் இருக்கலாம்.

இப்படி தம்பிக்கு உதவ நினைப்பதாலும் அலுவலக நண்பர்கள் பற்றி தேவையில்லாத விஷயங்களை வீட்டில் பேசாமல் இருப்பதாலும் உங்கள் கணவரை நீங்கள் நேசிப்பதில் குறை வைக்கிறீர்கள் என்று அர்த்தமல்ல.. சொல்லப் போனால், கணவருடன் இருக்கும் நேரத்தை இன்னும் நிம்மதியுடன், இன்னும் மகிழ்ச்சியுடன் செலவழிப்பதற்காக வீண் சலசலப்புகளைத் தவிர்க்கவே இந்த வழிமுறைகள்!

''என் கணவர் மற்ற கணவர்கள் போலல்ல.. எல்லாவற்றையும் அழகாகப் புரிந்து கொள்வார். அதனால் நான் எனது பள்ளி நாட்களில் ஏற்பட்ட ஈர்ப்பைக் கூட ஒன்று விடாமல் சொல்லிவிட்டேன். அவரும் அதை ரொம்ப சகஜமாக எடுத்துக் கொண்டுவிட்டார்!'' என்று தன் திருமண ரிசப்ஷன் போது இப்படிச் சொன்னார் ஒரு இளம் பெண்.
அந்தப் பெண்ணின் முதல் குழந்தை பிறந்த நாளை கிராண்டாகக் கொண்டாட ஏற்பாடு செய்தார்கள்.

கணவரின் சார்பில் அவரது பல நண்பர்கள் வர, மனைவி, தன் தோழிகளையும் தன்னோடு படித்தவர்களையும் அழைக்க விருப்பப்பட்டார்.

''இங்க பார்! இது நம்ம குழந்தையோட பர்த்டே.. இங்கே உன்னோட பழைய காதல் கதையெல்லாம் எதுக்குப் புதுப்பிக்கணும்!'' என்று கணவரிடமிருந்து பட்டென்று பதில் வர திகைத்துப் போனார் அந்த இளம்பெண்.

''எவ்வளவு சகஜமாக, பெருந்தன்மையாக எடுத்துக் கொண்டார்'' என்று கடந்த இரண்டு வருடங்களாக தான் நம்பிக் கொண்டிருந்த ஒரு விஷயம் இப்படியொரு சந்தர்ப்பத்தில் எவ்வளவு குரூரமாக வெளிப்படுகிறது என்று திகைப்பாக இருந்தது.

அதெல்லாம் அந்த வயதின் சின்னச் சின்ன ஈர்ப்புகள்! எப்போதோ முடிந்து போய்விட்டவிஷயம்! இப்போதைக்கு அதற்கு அர்த்தமும் இல்லை என்றுதானே அவரை நம்பி நான் இதைச் சொன்னேன். இப்படி நம்மைக் குத்திக் காயப்படுத்தி விட்டாரே என்று வேதனையாகிவிட்டது அந்தப் பெண்ணுக்கு!

எல்லோருமே இப்படிக் குத்திக் கிழிப்பவர்கள் இல்லை என்றாலும், இந்த விஷயம் இத்தனை நாளாக இன்னும் ஞாபகத்தில் இருக்கப் போய்த்தானே அதுபற்றி பேசுகிறாள்? என்று மனதுக்குள் நினைக்க சந்தர்ப்பங்கள் இருக்கிறது என்கிறார்கள் மனவியல் நிபுணர்கள்.

Image result for love heartகவனியுங்கள்... குடும்ப வாழ்க்கையை வீணான சில உராய்தல்கள் இன்றி கொண்டு செல்லத்தான் இவற்றை பயன்படுத்தலாமே தவிர, மற்றபடி உங்கள் வாழ்க்கையில் புதிதாக சில வீணான விரிசல்கள் ஏற்பட இவை வழிவகுக்கக் கூடாது.

மேலே சொன்னவை பெண்களுக்கானது மட்டுமல்ல.. ஆண்களுக்கானதும்தான்!