உனக்கும் எனக்கும் நடுவே... |
![]() |
![]() |
![]() |
Tuesday, 03 October 2017 07:42 | |||
It is between you and me உனக்கும் எனக்கும் நடுவே இதுதான் உனக்கும் எனக்கும் நடுவே உன் வருகையை வர்ணமாக மாற்ற மாதங்களாக காத்திருந்தேன் உன் வருகை நெறுங்கிய பொழுதுகளில் மலராக பூத்திருந்தேன்!!
நானோ தாமதிக்கிறேன் உன் முகம் காண என்னுள்ளே எழும் பதட்டம் உன் இதய துடிப்பிடம் சொல்கிறது இதோ வருகிறேன் என்று உன்னை காண ஓடோடி வருகிறேன் உன் முகம் கண்ட வுடன் மருதாணி வைத்து சிவந்த கைகளாக என் கன்னத்தில் வெக்கம் கம்பலம் விரிக்க!!
அழகிய புன்னகையுடன் நீ என் வெக்கத்தை உள்வாங்கி மழளையாக சிரித்தாய்!! அடக்க முடியாத வெக்கத்துடனும் பேச முடியாத சிரிப்புடனும் உன்னை கண்டவுடன் என் கைகளை அசைத்தேன்!! எம்மை சுற்றி இருப்பவர்கள் எம்மையே நோக்க நாமோ வெக்கத்துடன் தலை குனிந்தோம்..!
கழித்தோம் பொழுதுகளை இனிமையாக கழித்தோம் குழத்தைகளுடன் குழந்தைகளாக மகிழ்ந்தோம் எம்மை சுற்றி பல உறவுகள் இருந்தும் நாம் இருவரும் கை கோர்த்து இருப்பதாக உணர்ந்தோம்..!
உன்னை அனைத்துக் கொண்டே உறங்கிய இரவுகளில் நான் அடைந்த நிம்மதியான உறக்கம் குழந்தையின் தூக்கத்தை வென்று விடும்..!
நாட்கள் உருண்டோடியது பிரிவு மேகம் சூழ்ந்தது காலம் கட்டாயப் படுத்தியது என்னிள் இருந்து விடை பெரும் நேரம் நெறுங்கியது..!
ஒரு நிமிடத்தை கூட வீணாக்காத எம் இதழ்கள் மௌனமாகியது உன் மேல் என் நிழலும் படாமல் தள்ளியே நின்றேன் உன் கைகளுடன் என் கை சேர வில்லை உன்னை கட்டி அனைக்க வில்லை உன் முத்தம் இட வில்லை உன் முகத்தை கூட நிமிர்ந்துபார்க்க நான் சக்தி பெற வில்லை..!
அழுது விடுவனோ என்று உன்னை விட்டு தள்ளியே நின்றேன் உன்னை முதல் முதல் பார்த்து கை காட்டிய என் கைகள் நீ விடைபெரும் நேரத்தில் கை காட்டிய போது உன் கலங்கிய கண்களையும் கவலையான முகத்தையும் பார்த்து தலை ஆட்டி ஊமையாக ஒரு புறம் நின்றேன்..!
முற்றம் நின்ற நான் சத்தம் இன்றி அழுதேன் என் மௌனத்தை சிரிப்பென்று தான் நீ நினைத்தாய் அந் நேரத்தில் என் அமைதியான சிமிட்டல்கள் மாரடைப்பு ஏற்பட்டதிற்கு சமம் அன்பே....!
|