Home குடும்பம் இல்லறம் குழந்தை பெற்றுக்கொள்ள முக்கியமான சில விஷயங்கள்!

இஸ்லாம் கூறும் திருமணம் -Abdul Basith Bukhari

குழந்தை பெற்றுக்கொள்ள முக்கியமான சில விஷயங்கள்! PDF Print E-mail
Monday, 02 October 2017 07:13
Share

குழந்தை பெற்றுக்கொள்ள முக்கியமான சில விஷயங்கள்!

[   படுக்கையறை உறவு என்பது எந்த நிர்ப்பந்தங்கள் இல்லாததாகவும், ஓர் இன்ப விளையாட்டாகவும் இருக்க வேண்டும். உறவுக்குப் பின் உடனே எழுந்து விட வேண்டாம். உறவுக்குப் பின் சிறிதுநேரம் அப்படியே மல்லாந்து கிடப்பது கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது என்று பாலியல் நிபுணர்கள் கூறுகின்றனர். குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்கள் அப்படிப் படுத்திருந்தால் போதும். உயிரணு கருமுட்டையைத் தேடி அடைய அது உதவும்.]

ஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண் கர்ப்பம் தரிப்பது முதல் குழந்தை பெறும் வரை அதை ஆழ்ந்து அனுபவிக்க வேண்டும். அதற்கான 6 படிகள்ஸ

ஆரோக்கியமாக இருங்கள்:

முதலில், கர்ப்பம் தரிக்க விரும்பும் பெண் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். தமது மகப்பேறு மருத்துவரைப் போய் பார்த்து, கர்ப்பம் தரிப்பதற்கு ஏற்றவகையில் தனது உடல்நிலை உள்ளதா என்று அறிந்துகொள்ள வேண்டும். நோய்த் தொற்று ஏதும் இருக்கிறதா, எடை, ரத்த அழுத்தம் சரியான அளவில் உள்ளதா என்று அறிந்துகொள்வது அவசியம்.

சரியான விதத்தில் சாப்பிடுங்கள்:

மகப்பேறுக்குத் தயாராகும் பெண் நாக்குக்குச் சுவையான உணவுகளைக் கொஞ்சம் தள்ளிவைத்து, ஆரோக்கியம் காக்கும், சத்துகள் செறிந்த உணவுகளைச் சாப்பிடுவதில் கவனம் செலுத்த வேண்டும். பிரசவத்துக்கு முன்பும் பின்பும் நிறைய பழங்கள், பச்சைக் காய்கறிகள், முழுத் தானிய உணவுகள், புரதச் சத்து மிக்க உணவுகள் ஆகியவற்றைச் சாப்பிடுவது அவசியம். கால்சியம், இரும்பு சத்துகளும், வைட்டமின்களும் அத்தியாவசியமானவை.

தீய பழக்கங்கள் கூடாது:

புகைத்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்கள் கூடவே கூடாது. அதேநேரம் உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும். அது உங்களின் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதுடன், கர்ப்பம் தரிப்பதால் ஏற்படும் மாற்றங்களில் இருந்தும்உடம்பைக் காக்கும். சுறுசுறுப்பான ஒரு நடை அல்லது சிறுபயிற்சி, மகிழ்ச்சி ஹார்மோன் எனப்படும் எண்டார்பினை வெளியிடச் செய்து உங்களின் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

சரியான நேரம்:

ஒரு சராசரிப் பெண் தனது வாழ்நாளில் 400 கருமுட்டைகளை வெளியிடுகிறார். ஒரு பெண் மகப்பேறுக்கு மிகவும் வாய்ப்பான நாட்களை அறியவேண்டும். பிசுபிசுப்பான திரவ சுரப்பைக் கொண்டும் ஒரு பெண் அதை அறியலாம். பெண்களின் உடல் கருமுட்டையை வெளியிடும் முன் உயிரணுவை வரவேற்கும் விதமாக அதற்கேற்ற சூழலை உருவாக்குகிறது. அவற்றில் ஒன்றுதான், உயிரணு பயணத்துக்கு ஏற்ற வகையிலான திரவ சுரப்பு. அது ஒட்டக்கூடியதாகவோ, பசை போலவோ, கிரீம் போலவோ இருக்கலாம். கர்ப்பம் தரிக்கும் திறன் உச்சத்தில் இருக்கும்போது அது முட்டை வெள்ளை நிறத்தில் இருக்கும்.

பாலியல் அறிவு அவசியம்:

படுக்கையறை உறவு என்பது எந்த நிர்ப்பந்தங்கள் இல்லாததாகவும், ஓர் இன்ப விளையாட்டாகவும் இருக்க வேண்டும். உறவுக்குப் பின் உடனே எழுந்து விட வேண்டாம். உறவுக்குப் பின் சிறிதுநேரம் அப்படியே மல்லாந்து கிடப்பது கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது என்று பாலியல் நிபுணர்கள் கூறுகின்றனர். குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்கள் அப்படிப் படுத்திருந்தால் போதும். உயிரணு கருமுட்டையைத் தேடி அடைய அது உதவும்.

உணர்வு ரீதியாகத் தயாராகுங்கள்:

கர்ப்பம் தரிக்கும் பெண் உடல்ரீதியாக மட்டுமின்றி, உணர்வுரீதியாகவும் அதற்குத் தயாராக வேண்டும். தனது முழுக்கவனத்தையும் மகப்பேறில் செலுத்தியாக வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு குழந்தையைப் பெற்று வளர்ப்பது என்பது கடினமும், பொறுப்பும் சேர்ந்த வேலை என்பதை உணர வேண்டும். குழந்தையைப் பெற்று வளர்ப்பதில் கணவரை விட மனைவிக்குப் பொறுப்புகளும் அதிகம். உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் அவர் சவால்களை எதிர்கொள்ள நேரும் என்பதைப் புரிந்துகொண்டு நடக்க வேண்டும்.

வயிற்றில் வளர்வது ஆணா? பெண்ணா? என்பதை கண்டறிய உதவும் சில இயற்கை வழிகள்!

கர்ப்பமாக இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் தன் வயிற்றில் வளரும் குழந்தை என்னவாக இருக்கும் என்று யோசித்து, என்ன பெயர் வைக்கலாம் அல்லது என்னவெல்லாம் வாங்கலாம் என்று கர்ப்ப காலத்தில் வயிற்றில் வளரும் குழந்தையைப் பற்றியே எப்போதும் சிந்தித்தவாறு இருப்பார்கள்.

ஆனால் இந்தியாவில் பெண் சிசுக் கொலைகள் அதிகம் நடைபெறுவதால், வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினத்தைத் தெரிந்து கொள்வது ஓர் குற்றம் என்று இந்திய அரசு தடை செய்துள்ளது.

என்ன தான் ஒவ்வொரு தாய்க்கும் தன் குழந்தை எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்று இருந்தாலும், என்ன குழந்தையாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஓர் ஆவல் இருக்கும். உங்களுக்கும் அந்த ஆவல் இருந்தால், பழங்காலத்தில் வயிற்றில் வளர்வது என்ன குழந்தை என்பதைக் கண்டறிய பின்பற்றிய வழிகள் என்னவென்று இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்.

ஐரோப்பிய முறை

15 ஆம் நூற்றாண்டில் பின்பற்றப்பட்டு வந்த ஓர் ஐரோப்பிய முறை தான், கர்ப்பிணிகளின் நடையை வைத்து குழந்தையின் பாலினத்தைக் கண்டறிவது. எப்படியெனில், கர்ப்பிணிகள் நடக்க ஆரம்பிக்கும் போது, முதலில் வலது காலை எடுத்து வைத்து நடந்தால் ஆண் குழந்தை எனவும், இடது காலை எடுத்து வைத்து நடந்தால் பெண் குழந்தை வளர்வதாகவும் மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

உப்பு சோதனை

இந்த முறையின் படி, கர்ப்பிணிகள் தூங்கும் போது, அவர்களின் தலையில் சிறிது உப்பைத் தூவி விட வேண்டும். பின் அவர்கள் எழுந்ததும், முதலில் ஆண் சம்பந்தப்பட்ட வார்த்தையை பயன்படுத்தினால் ஆண் குழந்தையும், பெண் சம்பந்தப்பட்ட வார்த்தையைப் பேசினால் வயிற்றில் பெண் குழந்தை இருப்பதாகவும் ஓர் நம்பிக்கை மக்களிடையே உள்ளது.

டேனிஷ் முறை

டேனிஷ் முறையின் படி, மனைவி கர்ப்பமாக இருக்கும் போது, கணவனின் உடல் எடை அதிகரித்தால், மனைவியில் வயிற்றில் வளர்வது பெண் குழந்தை என்று அர்த்தமாம்.

கர்ப்பிணிகளின் ஆசை

கர்ப்பமாக இருக்கும் போது பெண்களுக்கு இனிப்பு பதார்த்தங்களின் மேல் ஆசை எழுந்தால், பெண் குழந்தை எனவும், அதுவே உப்பு அல்லது புளிப்பு பதார்த்தங்களின் மேல் ஆசை எழுந்தால் ஆண் குழந்தை என்ற நம்பிக்கை கிராமப் பகுதியில் இன்றளவும் நம்பப்பட்டு வருகிறது.

வயிற்றின் வடிவம்

கர்ப்பிணிகளின் வயிறு கீழிறங்கி இருந்தால், ஆண் குழந்தை உள்ளதாகவும், அதுவே சற்று பெரியதாக இருந்தால் பெண் குழந்தை வளர்வதாகவும் மக்கள் நம்பி வருகின்றனர். முக்கியமாக இந்த நம்பிக்கையின் படி நிறைய பேருக்கு குழந்தை சரியாக பிறந்ததுள்ளது என்றால் பாருங்கள்.

தங்க மோதிர முறை

இந்த முறையின் படி, கர்ப்பிணிகள் நேராக படுத்துக் கொண்டு, ஒரு நூலில் தங்க மோதிரத்தைக் கட்டி, வயிற்றின் மேலே தூக்கி காண்பிக்கும் போது, மோதிரம் பக்கவாட்டில் நகர்ந்தால் ஆண் குழந்தை, அதுவே வட்ட சுழற்சியில் சுழன்றால் பெண் குழந்தை. வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்கள்.

காலைச் சோர்வு

சில பெண்கள் கர்ப்ப காலத்தில் அதிக அளவில் காலைச் சோர்வை சந்திப்பார்கள். அப்படி காலைச் சோர்வை அதிகம் சந்தித்தால் பெண் குழந்தை என்று அர்த்தமாம். அதுவே காலைச் சோர்வை அதிகம் சந்திக்காமல் இருந்தால் ஆண் குழந்தை வளர்கிறது என்று அர்த்தமாம்.

source:   http://tamilbeauty.in/aan-penn/