Home கட்டுரைகள் சமூக அக்கரை இஸ்லாமிய உலகின் மீதான சிந்தனைத் தாக்குதல்கள்
இஸ்லாமிய உலகின் மீதான சிந்தனைத் தாக்குதல்கள் PDF Print E-mail
Friday, 29 September 2017 07:38
Share

Related image

இஸ்லாமிய உலகின் மீதான சிந்தனைத் தாக்குதல்கள்

உலகில் என்றைக்கும் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையிலான போராட்டம் முடிவுறாமல் தொடர்ந்து வந்துள்ளது. முஸ்தஃபாக்களின் ஓரிறைப் பேரொளியை அபூலஹபுகள் தொடர்ந்து அணைக்க முயற்சித்து வந்துள்ளனர்.

இறைத்தூதர்களின் வரலாறுகள் நமக்கு இதைத்தான் சுட்டிக் காட்டுகின்றன. நம்ரூதை எதிர்த்த இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் போராட்டமும், நானே உயர்ந்த கடவுள் என்ற ஃபிர்அவுனின் முன்னால் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சத்திய முழக்கமும் இதனுடைய சில பதிப்புகளே.

அத்தோடு இறுதி வெற்றி என்றென்றும் சத்தியத்திற்கே என்பது மறுக்க முடியாத ஒன்றாகும். அசத்தியம் ஒவ்வொரு முறையும் தோல்வியையும், அவமானத்தையும் சந்தித்து வந்துள்ளது. சத்தியம் வந்தது, அசத்தியம் அழிந்து விட்டது. அசத்தியம் என்னவோ அழியக் கூடிய ஒன்றுதான் என்று திருமறையும் இதைத் தான் குறிப்பிடுகின்றது.

தன்னுடைய அனைத்துக் கொள்கைகள், விதி முறைகளுக்கு, அச்சாரமாக தவ்ஹீது ஏகத்துவத்தைக் கொண்டு அரபுப் பாலைவனத்தில் இஸ்லாம் துளிர்த்தது. ஒரே இறைவன், ஒரே மார்க்கம், ஒரே குலம், மட்டுமே அதனுடைய அடிப்படைகளாக அமைத்தன.

இஸ்லாத்தினுடைய துவக்கக் காலங்களிலேயெ பாதில் (வழிகேடு) தன் சகல பரிவாரங்களோடு களத்தில் இறங்கியது. கிலாஃபதே ராஷிதா வின் இறுதிக் காலத்தில் முஸ்லிம் சமுதாயத்தில் பிளவுகளும், பிரிவினைகளும், வேறுபாடுகளும் தலைதூக்கின.

ஒரு புறம் ஷியாக்களும், மறுபுறம் கவாரிஜ், அஜாரிகா, அயாழியா, போன்றோர் தோன்றினர். கராமிதா, பாபக் கர்மீ, நாத்திக, ஜன்திகா என்று பல பெயர்களில் பல நேரங்களில் ரவாஃபிழாக்கள் (இஸ்லாத்தின் வட்டத்தை விட்டு வெளியேறியவர்கள்) குழப்பம் விளைவித்தனர். ஹதீஸ்களை இட்டுக்கட்டும் பணி முழுவீச்சோடு நடைபெற்றது. பல்வேறு புதிய நாமகரணங்களோடு பித்அத் துகள் மக்கள் மத்தியில் புழங்க ஆரம்பித்தன. யூதர்களும், கிறித்தவர்களும் இஸ்லாத்திற்கெதிராக எல்லா வழிகளிலும் செயல்படத் துவங்கினர்.

இஸ்லாமியக் கல்விக் கலைகளில் இஸ்ரவேலர்களின் ஆக்கங்கள் இடம் பெற்று உண்மையான இஸ்லாமிய வடிவத்தை உருக்குலைக்க ஆரம்பித்தன. மிகவும் நுண்ணிய வடிவங்களில் அவர்கள் இஸ்லாமியப் பண்பாட்டையும், வரலாற்றையும் சிதைக்க துவங்கினர். இவையெல்லாம் ஒரு புறமிருக்க மறுபுறம் பொருளாதார, இராணுவ பலத்தினாலும் இஸ்லாத்திற்கு எதிராக அவர்கள் போராட்டத்தை நடத்தினர்.

சிலுவைப் போர்களும், தாத்தாரியர்களின் படையெடுப்பும், ஸ்பெயினின் வீழ்ச்சியும் அதற்கான எடுத்துக்காட்டுகளாகும். எண்ணற்ற முஸ்லிம்களைக் கொன்று குவித்ததோடு, அவர்களின் நகரங்களை, வசிப்பிடங்களை, சூறையாடுவதோடு அவர்களின் சந்ததியினரை பூண்டோடு அழிப்பதோடு, முஸ்லிம்களின் வாழ்ந்ததற்கான அடையாளங்களையே இல்லாமல் செய்து விடுவதோடு, இஸ்லாமிய எதிரிகள் நின்று விடவில்லை. மாறாக இஸ்லாமியப் பண்பாட்டினை, சரியாகச் சொல்வதென்றால் மனிதப் பண்பாட்டினை சிதைத்துத் தீக்கிரையாக்கவும் அவர்கள் தயங்கவில்லை. (குஜராத் கோத்ரா ரயில் சம்பவத்திற்குப் பின் உள்ள குஜராத் நிலவரத்தை மனக்கண் முன் கொண்டு வந்து பாருங்கள்)

பக்தாதில் கிறிஸ்தவர்களுடைய சதியின் காரணமாக ஏற்பட்ட மாபெரும் அழிவின் ஒரு பகுதியாக அந்நகரின் பல நூற்றாண்டு காலமாகப் புகழ்பெற்ற அரிய நூல் நிலையம் எரிக்கப்பட்டது. அங்கிருந்த நூற்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 30 இலட்சமாகும். எரிக்கப்பட்ட புத்தகங்களின் சாம்பலினால் கடலே கறுப்பாகிப் போனது! இஸ்லாமியப் பேரரசு ஸ்பெயினில் வீழ்ந்த போது நூற்களை எரித்து வெறியாட்டம் போட்டனர்.

இதற்கு முந்தைய காலங்களில் இதே ஸ்பெயின் தான் கல்விக்கும், கலைகளுக்கும் சிறப்பான மையமாகத் திகழ்ந்தது. ஸ்பெயினில் கல்வி கற்பது பெருமையாகக் கருதப்பட்டது. இன்று ஐரோப்பா பெற்றுள்ள அறிவியல், விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சியெல்லாம் அன்றைய இஸ்லாமிய அறிஞர்களும், உலமாப் பெருமக்களும் இவ்வுலகச் செல்வத்தையும், புகழையும் துச்சமாக மதித்து திண்ணைகளிலும், தூண்களின் நிழல்களிலும் கற்றுக் கொடுத்து அறிவுப் பிரளயத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தனர். வீரியமிக்க சிந்தனைகளாலும், விவேகம் மிக்க கருத்துக்களினாலும் அறிவுலகில் வெற்றிக் கொடிகளை நாட்டிக் கொண்டிருந்தனர். எனவே தான் மற்றெல்லா மார்க்கங்களையும் பின்னுக்குத் தள்ளி இஸ்லாம் அறிவுப் பாதையில் பீடுநடை போட்டுக் கொண்டிருந்தது.

பிந்தைய காலங்களில் நிலைமை அப்படியே தலைகீழாய் மாறியது. சிலுவைப் போர்களில் தொடர்ந்து ஏற்படட தோல்விகள் கிறிஸ்தவர்களின் மனதில் இஸ்லாத்திற்கெதிரான பொறாமைத் தீயை பலமாகப் பற்ற வைத்தன, என்றால் மறுபுறம் நாகரீகத்திலும், கலாச்சாரத்திலும் இஸ்லாமியர்கள் பெற்றிருந்த மேன்மை எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தது.

கனன்று கொண்டிருந்த பொறாமையும், கோபமும் பெருந்தீயாக உருவெடுத்தன. விளைவாக, அவர்களுடைய மேதாவித்தனமான மூளைகள் இஸ்லாத்தை இல்லாமல் செய்ய பயங்கரமான சதித்திட்டம் தீட்டின. மிகப் பெரிய அளவில் அதற்கான முயற்சிகள் அரங்கேறின. இதனை செயல்படுத்த அவர்கள் மூன்று முக்கிய வழிகளில் தங்கள் சிந்தனைகளைச் செலுத்தினர்.

o இஸ்லாமிய அடிப்படைகளை இல்லாமல் செய்வது,

o இஸ்லாமிய கலை மற்றும் பண்பாட்டின் வேர்களை அடியோடு அகற்றுவது

o ஏகத்துவச் சிந்தனையை (தவ்ஹீது) மனங்களிலிருந்து அகற்றி நாத்திகவாத வடிவங்களுக்கு உயர்ந்த இடத்தைப் பெற்றுத் தருவது

எனவே, இதற்காக முஸ்லிம்களின் கல்வி, கலைகளில் தங்கள் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தார்கள். அவர்களின் பெருங்கூட்டத்தினர் இம்முயற்சியில் தங்கள் வாழ்க்கை முழுவதையும் செலவழித்தனர். குர்ஆன், ஹதீஸ், சீறத் (நபிகளாரின் வாழ்க்கை வரலாறு), வரலாறு, குர்ஆன் விரிவுரை, இஸ்லாமிய இலக்கியங்கள் மற்றும் அரபி மொழியியல் ஆகியவற்றைக் கரைத்துக் குடித்தனர்.

மேலை ஏகாதிபத்தியம் அவர்களுக்கான வாய்ப்புக்களை உருவாக்கித் தந்தது. பொருளுதவி செய்தது. ஐரோப்பிய சகோதரத்துவம் இஸ்லாத்திற்கெதிராகப் போராடும் பலத்தையும், உத்வேகத்தையும் தந்தது. தங்கள் பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்களை அவர்களின் பயன்பாட்டிற்காகத் தந்தார்கள்!

இஸ்லாமிய அறிவுக் கருவூலங்களை குறிப்பாக இஸ்லாமிய வரலாறு, இலக்கியம், மொழி, குர்ஆன், ஹதீஸ் போன்றவற்றை இலக்காக்கி உழைக்க ஆரம்பித்தனர். தங்கள் உழைப்பின் விளைவாக அவற்றில் பல்வேறு வகையான சந்தேகங்களை, ஐயப்பாடுகளை பரவலாக்கினர்! அத்தோடு கீழை நாடுகளில் தங்களுக்கு விசுவாசமான மாணவர்களையும் உருவாக்கினர்.

இஸ்லாம் இரு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. 1. திருமறைக் குர்ஆன் 2. குர்ஆனின் செயல்வடிவமாகத் திகழும் இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் வழிமுறை. நபிகளாரின் வழிமுறை என்பதில் நபிகளாரின் முழு வாழ்வும் அடங்கும்.

இவையிரண்டையம் புரிந்து கொள்வதில், செயல்படுத்துவதில், பாதுகாப்பதில் தான் இஸ்லாத்தின் உயிரோட்டமே உள்ளது. நேரிடையாகக் குர்ஆன் தாக்கப்படுவதை முஸ்லிம்கள் ஒரு போதும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். பொறுத்துக் கொள்ளவும் முடியாது. எனவே, எதிரிகள் கீழைத்தேய வாதிகள் சாதுரியமாகவும், தொலைநோக்குடனம் செயல்பட்டார்கள்.

எதை அடிப்டையாகக் கொண்டு குர்ஆன் புரிந்து கொள்ளப்படுகின்றதோ, இறைவேதமாகக் கருதப்படுகின்றதோ அந்த அடிப்படை விசயங்களை நோக்கிக் கல்லெறிய ஆரம்பித்தார்கள். அவைகளில் சந்தேககங்களைக் கிளப்பத் தொடங்கினார்கள். இஸ்லாத்திய, முந்தைய அரபு இலக்கியம் அனைத்தும் (ஜாஹிலிய்யா - இஸ்லாத்திற்கு முரணான இலக்கியங்கள்) இட்டுக்கட்டப்பட்டவை என்று வாதித்தார்கள்.

அப்பாஸிய்யாக்களின் காலத்தில் தான் அவை புனையப்பட்டன என்று சத்தமாகச் சொல்லத் துவங்கினார்கள். அரபுலகில் இருந்து அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்த எதிரொலிகள் கேட்கத் துவங்கின. எகிப்தின் தாஹா ஹுஸைன் - ஃபில் அதபில் ஜாஹிலி எனும் நூலைக் கொண்டு தனது மேற்கத்திய ஆசிரியர்களுக்குப் பல்லக்குத் தூக்கினார்.

அடுத்ததாக இது போன்று ஒரு பெருங் கூட்டத்தினரைத் தயார் செய்து அவர்களின் வாய்களால் தங்கள் உள்ளத்துப் பொறாமைகளை, துவேசங்களைக் கொட்ட ஆரம்பித்தார்கள்.

o குர்ஆன் இறைவனின் வேதமல்ல. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்கள் யூதர்கள், கிறிஸ்தவர்களிடமிருந்து கற்று அவராக உருவாக்கியது தான் குர்ஆன்!

o வஹியை அவர்கள் மறுத்து, முஹம்மது மீது வஹியெல்லாம் இறங்கவில்லை. அதுவொரு மனநோயாகும். அப்போது தன் மனதில் தோன்றியவற்றையெல்லாம் அவர் தொகுத்து தான் குர்ஆனை உருவாக்கினார்.

என்று பலவாறாகக் கூறி குர்ஆன் இறைவனின் வேதவாக்கு, என்கிற அடிப்படை விஷயத்திலேயே சந்தேகங்களை கிளற ஆரம்பித்தார்கள்.

அதுபோன்று முஹம்மது இறைவனின் தூதரெல்லாம் கிடையாது. மாறாக அவர் ஒரு மிகச் சிறந்த அரபுலக தேசியத் தலைவர் என்று கருத்தாக்கத்தையும் உருவாக்கினார்கள். ஒரு நபி எனும் நிலையிலிருந்து ஒரு சமுதாயத்தலைவர் என்ற நிலைக்கு மாற்ற பெருமுயற்சி செய்தனர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை சமுதாய மேம்பாட்டிற்காகப் பாடுபட்ட மாபெரும் மேதை எனும் நிலையில் எழுதினர்.

இதன் காரணமாகத் தான் மஷீல் இஃப்லக் போன்ற யூதர்கள் அரபு தேசியவாதத்தை உருவாக்குவதில் (அரூபா) பெரும் வெற்றி பெற்றனர். நபி யின் வருகையை, நோக்கத்தை இவ்வாறு அவர்கள் கொச்சைப்படுத்தினர். அராபிய இளைஞர்களின் பெரும்பாலானோரை வழிகெடுத்தனர். அவர்களை அரப தேசியவாதத்தில் மூழ்க வைத்து இஸ்லாத்தை விட்டு வெளியேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.

இஸ்லாமிய உலகத்தின் மீது சிந்தனைத் தாக்குதல், சிந்தனை அடிமைத்தனர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இஸ்லாத்திற்கும் இஸ்லாமிய எதிரிகளுக்கும் இடையிலான போர் முடிவிற்கு வந்து விட்டது. இப்போது நாம் தஃவா செய்தால் மட்டும் போதுமானது என்று கூறுபவர்கள் மாபெரும் அறியாமையில் உழன்று கொண்டுள்ளனர்.

கிழக்கு மற்றும் மேலை நாடுகளின் அரசு சார்ந்த, அரசு சாராத, மதச்சார்பற்ற, இராணுவ மற்றும் பொதுவான மக்கள் தொடர்பு சாதனங்கள் அனைத்தும் நேரிடையாகவும், மறைமுகமாகவும் இப்பணியில் ஈடுபட்டுள்ளன. நமது ஒற்றமையைக் குலைக்கவும், ஒழுங்கான அணியைக் கலைக்கவும் அவை பாடுபடுகின்றன. வெளிப்படையாக நம்மைத் தாக்குவதை விட நமது உள்கட்டமைப்பை சிதைப்பதில் அவை மும்முரமாய் உள்ளன. எனவே இவற்றை எதிர்த்துப் போராடுவதென்பது ஏதோ மூளை, சிந்தனைப் பயிற்சி அன்று. மாறாக நம்முடைய இருப்பிற்கான போராட்டமாகும்.

சிந்தனைத் தாக்கம் என்பது ஏதேனும் ஒரு சமூகம் குறிப்பாக முஸ்லிம் சமூகம் மற்றொரு பெரிய சமூகத்தின் சிந்தனை, கொள்கை, செயல்பாடுகளை சிந்திக்காமல் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் அப்படியே ஏற்று பின்பற்றுவதைக் குறிக்கும்.

இத்தகைய சிந்தனைத் தாக்கத்தை நாம் மூன்று வகையாகப் பிரித்து ஆய்வு செய்வோம்.

1) சிந்தனைத் தாக்கத்தை பரவலாக்கும் காரணிகள் : இவற்றை கீழ்க்கண்ட தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தலாம்.

o பொருளாதாரம்

o கல்வி

o உடல்நலம்

o அரசியல்

o செய்தித் தொடர்பு

2) சந்தேகங்களையும் ஐயப்பாடுகளையும் கிளப்பி சிந்தனையைக் குழப்புதல்!

o திருமறைக் குர்ஆனில் சந்தேகங் கொள்ளச் செய்தல்

o நபிவழிமுறையில் ஐயத்தைக் கிளப்புவது, அவதூறுகளைப் பரப்புதல்

o வரலாற்று, சீறா நூல்களின் மீதான நம்பிக்கையை தகர்ப்பது

o சில இஸ்லாமிய பிரிவினரின் அரிதான, புறக்கணிக்கப்பட்ட கருத்துக்களை பரவலாக்குவது

0 இஸ்லாமியச் சிந்தனை, அதன் அடிப்படைகளை வேரோடு களைவதற்கான முயற்சிகள்.

3) பொதுவுடமை, நவீனத்துவம், போன்றவற்றின் இஸ்லாமிய விரோதப் போக்கு. முஸ்லிம் உலகில் அவற்றின் செல்வாக்கு.

o பொருளியல்

முன்பு வேறப்போதும் இல்லாத அளவு இன்று முஸ்லிம் உலகம், கல்வி, கலாச்சார மற்றும் பல்கலை போன்றவற்றில் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக வெகு முன்னேற்றம் அடைந்த துறைகளான நவீக கல்வி, தொழில் நுட்பம் போன்வற்றில் முஸ்லிம் உலக நாடுகள் இவற்றில் வெகுவாக பின்தங்கியுள்ளன. பெரும்பாலான முஸ்லிம் நாடுகள் இத்துறைகளில் இதுவரை தங்கள் முதற் காலடியையே பதிக்கவில்லை! ஒரு சில நாடுகள் ஈடுபடுகின்றன. எனினும் அது மிகக் குறைவான அளவில் தானே ஒழிய நவீன சாவல்களை எதிர்கொள்ளும் அளவுக்கு அல்ல!

அறிவியல் விஞ்ஞானத்திலும், தொழில்நுட்பத்திலும் மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு உலகம் வெகு வேகமாக முன்னேற்றத்தினை கண்டு வருகின்றது!

உற்பத்தி, தொழிற்சாலைகள், வேளாண்மை போன்றவற்றில் புதிதுபுதிதான கண்டுபிடிப்புகள் பின்பற்றப்பட்டு மிகச் சிறப்பான விளைவுகளை ஏற்படுத்தி வரும் இவ்வேளையில், உபரி உற்பத்தி மென்மேலும் பல்கிப் பெருக பல்வேறு திட்டங்கள் துணை செய்து வருகின்ற போது முஸ்லிம் நாடுகள் இவற்றில் மிக மோசமான பின்னடைவுகளைச் சந்தித்து வருகின்றன என்பது மறுக்க முடியாத உண்மையாகும்! கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு வரை அதாவது இன்றைய நவீன யுகத்தின் தொடக்க காலம் வரையிலும் முஸ்லிம்கள் மட்டுமே இத்துறைகளின் வெல்ல முடியாத முன்னோடிகளாகத் திகழ்ந்தார்கள்.

1924 ஆம் ஆண்டில் கிலாபத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு முழு முஸ்லிம் உலகம் ஏகாதிபத்திய அடிமைத்தனத்தின் கீழ் வந்தது. ஏகாதிபத்திய காலனியாதிக்கத்திலிருந்து விடுபடும் போது முஸ்லிம் உலகு சிறுசிறு நாடுகளாக துண்டு துண்டுகளாக சிதறி விட வேண்டும் என்பதும், அவர்களுடைய திட்டமாக இருநதது! அது போன்றே 50-55 சிறிய, பெரிய நாடுகளாக முஸ்லிம் நாடுகள் சிதறிப் போயின!

பொருளாதார செல்வச் செழிப்பில் பல நாடுகள் மேம்பட்டிருப்பினம் பல நாடுகள் பல நாடுகள் வறிய நிலையில் அடிப்படைத் தேவைகள், கல்வி, வருமானம் போன்றவற்றில் தன்னிறைவு பெறாதவைகளாக உள்ளன! எனவே முஸ்லிம் நாடுகளின் வறுமைக் கோட்டின் கீழுள்ளோர் பட்டியலும், சதவிகிதமும் அதிகமாய் உள்ளது.

நோய்களின் தாக்குதலக்ள், உடல் நலக்குறைவுகளும் அதிகமாய் உள்ளன! அறிவியல், தொழில் நுட்பத்தில் பின்தங்கியுள்ளன. அந்நிய கடன்கள் அளவில்லாமல் கொடுக்கப்பட்டு மறைமுகமாகவும், நேரிடையாகவும் வட்டிசார் அமைப்புக்குள் தள்ளப்பட்டன. பல சிறு நாடுகளில் அரசாங்க அளவிலும், உள்நாட்டிலும் ஏற்பட்ட பல்வேறு குழப்பங்களும், நிலையற்ற அரசாங்க அமைப்பிற்கும் மேற்கத்திய நாடுகளே காரணமாய் இருந்தன!

அதன் விளைவாகவும் முன்னேறுதல் மட்டுப்படுத்தப்பட்டது. பொருளாதார வீழ்ச்சியிலிருந்து வெளியேறுவது பாரமாகிப் போனது! கல்லாமையும், வறுமையும் தலைவிரித்தாடுகின்றன! முஸ்லிம் நாடுகளின் வறுமைக் கீழுள்ளோர் எண்ணிக்கை 50 சதவீதத்திலிருந்து 80-85 சதவீதமாகும். இதுவே வளர்ந்த நாடுகளில் 2 சதவீதமாகவும், மூன்றாம் உலக நாடுகளில் 45 சதவீதமாகவும் உள்ளது.

இராணுவ பலத்தை உபயோகிக்காமல் முஸ்லிம்களிடமிருந்து கலாச்சாரத்தை வேரறுப்பதில் இத்தகைய சிந்தனைத் தாக்குதல்கள் வெற்றிகரமாக அமைகின்றன. இவற்றினைப் புரிந்து கொள்ள நாம் மூன்று விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

1) சிலுவைப் போர்களுக்குப் பிறகு முஸ்லிம்களின் ஆதிக்கம் செலுத்த வேண்டும் எனும் பேரார்வம் ஐரோப்பாவில் வேகங் கொண்டது. வாஸ்கோடாகாமா, ஹெகல்சல் போன்றோரின் கடல் பயணங்களுக்குப் பிறகு, கீழை நாடுகளின் குறிப்பாக ஆப்பிரிக்காவில் மிஷனரிகள் தங்கள் வளமையான பொருளாதாரத்தை முஸ்லிம்களுக்கெதிராக செயல்படுத்தத் துவங்கின.

2) முஸ்லிம்களை அரசியல் அதிகார மையத்தை விட்டும் அப்புறப்படுத்த வேண்டும் என்பதே மத்தியக் கிழக்கு நாடுகளை அடிமை கொள்ளுவதற்கு காரணமாக அமைந்தது. இது சிலுவைப் போர்களின் விளைவாகும். பொருளாதார நோக்கம். அதற்கான காரணியாக அமைந்தது. தன்னுடைய பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக காலனிய நாடுகளைச் சுரண்டுவது தான் ஐரோப்பாவின் நோக்கமே தவிர மதரீதியிலான எந்த எண்ணமும் அதனிடம் இருந்ததில்லை என்னு எண்ணுவது தவறாக கருத்தாகும்.

பொருளாதார நிறைவே அதன் அனைத்து செயல்களுக்கும் ஆதாரமாக இருந்த போதிலும் முஸ்லிம் நாடுகள், முஸ்லிமல்லாத அடிமை நாடுகளுக்கிடையே வேறுபாடுகள் நிலவியதை நாம் புரிந்து கொள்ளலாம். முஸ்லிம் நாடுகளில் இஸ்லாமிய கொள்கைகளின் மீதும், பண்பாட்டின் மீதும் அவதூறான பிரச்சாரம் கட்டகவிழ்த்து விடப்பட்டது.

வெல்லப்பட்ட சமூகம் வென்ற சமூகத்தின் கொள்கை, கோட்பாடுகளை ஏற்றுக் கொள்ளும் என்பது உளவியல் உண்மையாக இருந்தாலும், முஸ்லிம்களின் இஸ்லாமியக் கலாச்சாரத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்பதில் தனிக்கவனம் செலுத்தப்பட்டது.

இதில் முதல் கட்டமாக இஸ்லாமியச் சட்டங்கள் அகற்றப்பட்டு மனிதனால் இயற்றப்பட்ட சட்டங்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தப்பட்டன. முஸ்லிம்கள் வெறும் பெயரளவில் முஸ்லிம்களாக இருக்க வேண்டும் என்பதற்காகப் பெரும் முயற்சிகள் செய்யப்பட்டன. வெறும் பொருளாதார நோக்கம் மட்டும் கிடையாது என்பதற்கு இவை சரியான எடுத்துக் காட்டுகளாகும்.

சிந்தனைத் தாக்குதலில் கீழைத்தேசியமும், மிஷினரிகளும் கைகோர்த்துச் செயல்படுகின்றன. மேலை நாகரீக அடிப்படையில் சிந்திக்கும், அதையே சிறந்த பண்பாடாகக் கருதும் அறிவு ஜீவி களை உருவாக்குவது தான் அவர்ளின் தலையாய பணியாக உள்ளது. இவர்களைக் கொண்டு முஸ்லிம் சமுதாயத்தில் இஸ்லாமியப் பண்பாட்டினை வழக்கொழித்து மேற்கத்திய நாகரீகமே சிறப்பானது, உயர்வானது எனம் கருத்துப் போக்கினை பரவலாக்க வேண்டும் என்பதே அவற்றின் நோக்கமாக உள்ளது.

அரபுக்களின் மத்தியில் இஸ்லாமிய, கிழக்குக் கலாச்சாரதi;த கருதக் கூடிய ஒரு தலைமுறையை தோற்றுவித்து இஸ்லாமிய பண்பாட்டின் பிரதிநிதிகள் ஆட்சி அதிகாரத்தில் மையங் கொள்வதை தடுத்த நிறுத்த வேண்டும் என்பதே தங்களது கொள்கை என்பதை அடிக்கடி அவை பிரகடனப்படுத்தவும் செய்கின்றன! இதனை செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின் புஷ் அவர்கள் அறிவித்தபடி, இன்னொரு சிலுவை யுத்தம் ஒன்று தொடங்கப்பட்டு விட்டது என்பதானது, அவர்களின் உள்ளத்தில் மறைத்து வைத்திருக்கும் இஸ்லாத்திற்கெதிரான கொடூரமான நோக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது.

source: www.tamilislam.com