Home குடும்பம் இல்லறம் கணவனை மதிக்காத இன்றைய மனைவிகள்!

இஸ்லாம் கூறும் திருமணம் -Abdul Basith Bukhari

கணவனை மதிக்காத இன்றைய மனைவிகள்! PDF Print E-mail
Thursday, 17 August 2017 07:33
Share

கணவனை மதிக்காத இன்றைய மனைவிகள்!

அன்பு சகோதரிகளே!

இன்று நம்மிடத்திலே உள்ள கெட்ட செயற்பாடுகளில் ஒன்றுதான் கட்டின புரிஷனையே அவர் இல்லாத நேரத்தில் கேவலமா பேசுறது.

சில கணவன்மார் சமூகத்திலே தாழ்ந்த நிலையில் இருந்தாலும் மனைவியை பொறுத்த வரை அவர்தான் நமக்கு எல்லாமே என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

நம்ம பெண்களில் பல பேர் கணவன்மாரை கணக்கெடுப்பதே இல்லை.

சில வீடுகளிலே கணவன் அடிமையை போல இருபான். பொண்டாட்டியின் சத்தம்தான் புருசனின் சத்தத்தை விட அதிகாமா இருக்கும். சில பொண்டாட்டிமார் புரிசண்ட முகத்திலே ஏசுகின்றார்கள்

“ஒன்ன சும்மாவா கலியாணம் முடிச்ச. 8, 10 ஏக்கர் காணியும் இந்தப்பெரிய வீடும் போதாக்குறைக்கு கடையையும் தந்துதான் கலியாணம் முடிச்ச. இது ஒண்டும் இல்லன்டா நீ முடிச்சிருப்பியா” ண்டு கொஞ்சம் கூட பயம் இல்லாமல் கணவனின் முன்னாலே கேட்கின்றார்கள்.

பாவம் அந்த புரிசன்மாரும் “எரும மாட்டுட முதுகில் மழை பெய்தால் போல” அதை கவனிக்காமல் போய்டே இருப்பார்கள். இன்னும் சில பெண்கள், தன்னுடைய கணவன் வெளிநாட்டுக்கு போய் இருந்தால், அவரைப் பற்றி நினைப்பதே இல்லை.

மாதாமாதம் காசி அனுப்பும் போது மட்டும்தான் சந்தோசமாய் பேசுவது. மற்ற நேரங்களில் அவர் 1000 மிஸ் கோள் அடிச்ச பிறகுதான் (skype, viber tango, Line, etc.) எதையாவது ஒன்றை on பண்ணி அவரோடு பேசுவது.

ஃபோன்    வருவது நமது காதுக்கு கேட்டும் கூட டிவி பார்த்திட்டு இருகின்றோம் அல்லது மற்றவர்களின் குறைகளை பேசிட்டு இருக்கின்றோம். “ஏன் லேட்” என்று அவர் கேட்டால்…. நான் புள்ளைய பார்த்திட்டு இருந்தேன், சமைச்சிட்டு இருந்தேன், நெட் கார்டு முடிஞ்சி வாங்க போனேன், என்று சாதாரணமாகவே பொய் சொல்கின்றோம்.

இன்னும் சில பெண்கள், மற்ற பெண்களின் புரிசன்மாரோட ஒப்பிட்டு தன் புரிசனுடன் சண்டை பிடிப்பார்கள். அவரை விட நீங்கள் தாழ்ந்தவர் என்று சொல்லாமல் சொல்வார்கள். நம்மில் இன்னும் சிலர் கட்டின புரிசனையே அநியாயத்துக்கு சந்தேகப்படுகின்றவர்களும் இருக்கின்றோம்.
அன்புள்ள சகோதரிகளே!

நமது கணவர்மார் நம்மை விடவோ அல்லது மற்ற ஆண்களை விடவோ படிப்பிலோ, பணத்திலோ, அழகிலோ, உழைப்பிலோ, ஏன் உருவத்திலோ குறைவானவராக இருந்தாலும் அவர் நமக்கு உயர்வானவர் என்பதை மறந்திடாதீர்கள். ஏன் என்றால் “நமது சுவர்க்கமே நமது கனவனிடத்தில்தான்” என்று நபியவர்கள் சொன்னார்கள். அல்லாஹ் எம்மை பாதுகாக்க வேண்டும் கணவனுடைய மனதை நோகடித்து நம்முடைய இறுதி முடிவை நாம் கேவலமாக ஆக்கி விடக்கூடாது.

கணவர்மார் சில நேரங்களில் சில விடயங்களில் புரியாமல் இருந்தால் அவருக்கு மென்மையாக, அன்பாக புரிய வைப்போம். சத்தம் போட்டு கத்துவதிலும், எரிஞ்சி விழுவதிலும் எந்த பிரயோசனமும் இல்லை. அவர் நிச்சயம் நமது வார்த்தைக்கு மதிப்பு கொடுப்பார். நம்முடைய ஆலோசனையையும் கேட்பார். நம்முடைய ஈமானிய ஒழுக்கமான இனிமையான பேச்சுக்களால் நாம் எதையும் சாதிக்க முடியும்.

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை உள்ள ஒரு பெண் தம்முடைய ஈமானின் தாக்கம் எந்த அளவுக்கு கணவனை மாற்றுகிறது என்பதை கண்ணூடாகக் காணமுடியும்.

உதாரணமாக சுபஹ் தொழாமல் தூங்கும் கணவனை தொழுகைக்காக தண்ணீர் ஊற்றி எழுப்பும் மனைவிக்காக மலக்குமார் துஆ செய்கிறார்கள்.

நாம் இரண்டு மூன்று நாட்கள் தண்ணீர் தெளித்து தொழுகைக்காக கணவனை எழுப்புவோமேயானால் நான்காவது நாள் அவர் நமக்கு முன் எழும்பி நம்மை தண்ணீர் தெளித்து எழுப்புவார் என்பதில் சந்தேகமில்லை.

எனவே எனதருமை சகோதரிகளே!

ஈமான், சாலிஹான அமல் நம்மிடம் இருக்குமேயானால் கெட்டவர்கள், அயோக்கியர்களைக் கூட நலவர்களாக மாற்றலாம்.

ஈமான் உள்ள ஒரு பெண்ணால்
எந்த உள்ளத்தையும் மாற்றிட முடியும்.
இந்த உலகத்தையும் வென்றிட முடியும்.

-உங்கள் சகோதரி ஷாமிலா

அல்லாஹ் அந்த சகோதரிக்கு அருள் புரிவானாக...

சத்திய பாதை இஸ்லாம்