Home இஸ்லாம் ஆய்வுக்கட்டுரைகள் பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் (1)
பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் (1) PDF Print E-mail
Friday, 07 July 2017 11:33
Share

பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் (1)

      அபூ மலிக்          

பாகம் 1: அடிப்படை

      Chapter 01      

முழுக்க முழுக்க மார்க்க விளக்கத்தை மட்டும் சொல்லக் கூடிய ஒரு தொடர் அல்ல இது!

மாறாக, மார்க்க ஆதாரங்களின் வெளிச்சத்திலும், மற்றும் அறிவுசார் ஆய்வுகளின் அடிப்படையிலும்,

நம்மைச் சுற்றியிருக்கும் உலகில் நடக்கும் விடை காணப்படாத பல மர்மங்களினதும்,

மற்றும் அமானுஷ்யமான பல நிகழ்வுகளதும் பின்னணிகளை அலசும் ஒரு தொடராகவே இன் ஷா அல்லாஹ் இது இருக்கும்.

இந்த நெடுந்தொடரில் இரண்டு வகையான தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும்:

முதலாவது வகையான தகவல்கள்:

குர்ஆன், மற்றும் ஹதீஸ் ஆகியவற்றின் அடிப்படையில் முஃமின்கள் நம்ப வேண்டிய பல மறைவான அம்சங்கள் பற்றி இங்கு அலசப்படும்.

இதில் அனேகமானவை ஈமானோடு தொடர்பு பட்டவை. இவற்றை எந்த அடிப்படையில் நம்ப வேண்டுமோ, அந்த அடிப்படையில் மட்டுமே ஒவ்வொரு முஸ்லிமும் நம்ப வேண்டும்.

அதற்கு மாற்றமான வேறு அடிப்படைகளில் இவற்றை நம்பினால், இறைச்செய்திகளை நிராகரித்த குற்றத்தைச் செய்தவர்களாக வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்படலாம்.

எனவே, இந்த வகையான செய்திகள், முறையான மார்க்க ஆதாரங்களின் அடிப்படையில் தெளிவான விளக்கங்களோடு அலசப்படும்.

இவ்வாறான கருத்துக்கள் விடயத்தில் எவருக்காவது என்னோடு மாற்றுக்கருத்து ஏற்பட்டால், இந்தத் தொடர் நிறைவடைந்த பின் இன் ஷா அல்லாஹ் தாராளமாக அது குறித்து எதிர்வாதம் வைக்கலாம்; அல்லது என்னோடு விவாதிக்க முன்வரலாம். இன் ஷா அல்லாஹ் அனைத்தையும் வஹியின் அடிப்படையில் சந்தேகத்துக்கு இடமின்றி என்னால் நிரூபிக்கலாம் என்ற உறுதியான நம்பிக்கையோடு தான் இதை எழுதவே ஆரம்பித்திருக்கிறேன்.

பகுத்தறிவு, யதார்த்தவாதம் போன்ற சித்தாந்தங்களின் அடிப்படையிலேயே தமது வாழ்வில் அனைத்தையும் சிந்தித்துப் பழகிவிட்ட இன்றைய தலைமுறையில், அனேகமான முஸ்லிம்கள் கூட மறைவான உலகம் பற்றிய மார்க்கத்தின் நிலைபாடுகளை இன்று தலைகீழாகவே புரிந்து வைத்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

பல மார்க்க ஆதாரங்களை, அவை கூறும் உண்மையான கருப்பொருளில் புரிந்து கொள்ளாத நிலையில் இவ்வாறானவர்கள் ஆதாரங்களை அனுகுவதையும் பார்க்க முடிகிறது. இவ்வாறான தப்பான அனுகுமுறைகளைத் தகர்த்தெறிய வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமை. இந்தக் கடமையுணர்வின் அடிப்படையிலும் பல அமானுஷ்யமான அம்சங்களை இந்தப் பகுதியில் அலசவிருக்கிறோம். இன் ஷா அல்லாஹ் தக்க ஆதாரங்களோடு ஒவ்வொன்றும் தெளிவாக நிரூபிக்கப்படும்.

இரண்டாவது வகையான தகவல்கள்:

இந்த வகையைச் சார்ந்த தகவல்கள், மேற்கூறப்பட்ட முதலாவது வகையிலிருந்து சற்று மாறுபட்டது. அறிவியல், மற்றும் நிதர்சனம் சார்ந்த பகுதி தான் இது. இந்த வகையான தகவல்களில் மார்க்க நிலைபாடுகளுக்கு எந்தவகையிலும் முரணாகாத விதத்தில், விஞ்ஞானம் சார்ந்த சில அம்சங்கள் அலசப்படும். மேலும், மைய நீரோட்ட வரலாற்றுப் பதிவுகளில் சொல்லப்படாமல் மறைக்கப்பட்ட பல வரலாற்று உண்மைகள், மற்றும் தற்கால உலகில் பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் பல அமானுஷ்ய நிகழ்வுகள் போன்றவை பற்றியும் தேவைக்கேற்ப இங்கு அலசப்படும்.

இவ்வாறான அறிவுசார் பகுதிகளில் எனது கருத்துக்கள் தான் நூற்றுக்கு நூறு வீதம் சரியென்று நான் முழு உத்தரவாதத்தோடு வாதிட மாட்டேன். எனது தேடல்களுக்கும், ஆய்வுகளுக்கும் அமைய இந்தக் கருத்துக்கள் தாம் உண்மை என்பது தான் இங்கு எனது நிலைபாடு.

நான் சொல்கிறேன் என்பதற்காக இவ்வாறான தகவல்கள் அனைத்தையும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுவது எனது நோக்கமல்ல. வாசகர்களாகிய நீங்கள் இவற்றை வாசிப்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், அவரவர் சக்திக்குட்பட்ட வகையில் இது குறித்து மேலதிகத் தேடல்களை நீங்களும் மேற்கொள்ள வேண்டும். அந்தத் தேடல்களின் மூலமும் எனது கருத்துக்களை சரியென்று உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே, நீங்கள் இவ்வாறான தகவல்களை ஏற்றுக் கொள்வது சிறந்தது. இதையே நான் வலியுறுத்துகிறேன்.

சுருக்கமாகக் கூறுவதென்றால், மேலே குறிப்பிடப்பட்ட இரண்டு வகையான தகவல்களும் இரண்டறக் கலந்த நிலையில் தான் இந்த நெடுந்தொடர் அமைந்திருக்கும். மார்க்க நிலைபாடுகள் சார்ந்த அம்சங்கள் எவை? உலகளாவிய அம்சங்கள் எவை? என்பதை வாசகர்கள் இலகுவாகப் பிரித்தறிந்து கொள்ளும் வண்ணமே இந்தத் தொடர் வடிவமைக்கப் பட்டிருக்கும் இன் ஷா அல்லாஹ்.

இந்த இடத்தில் வாசகர்களுக்கு ஒரு கேள்வி எழலாம். அதாவது, “மார்க்க நிலைபாடுகள், மற்றும் மார்க்கம் அல்லாத உலகளாவிய தகவல்கள் ஆகிய இரண்டு வகையான தகவல்களையும் ஒன்றாகக் கலந்து தான் இந்தத் தொடர் அமைய வேண்டுமா? இரண்டு வகையான தகவல்களையும் தனித்தனியாகப் பிரித்து வெவ்வேறு ஆய்வுகளாக வெளியிட்டால் பல குழப்பங்களைத் தவிர்க்கலாமே..?” என்ற கேள்வி தான் அது. இந்தக் கேள்விக்கான சுருக்கமான எனது பதில் இது தான்:

இங்கு நாம் அலசவிருக்கும் விடயத்தைப் பொருத்தவரை, மார்க்க ஆதாரங்களையும், அது சார்ந்த உலகளாவிய தகவல்களையும் தனித்தனியாக அலசுவதை விட, ஒன்றாக சேர்த்து அலசுவது தான் பொருத்தமான அனுகுமுறை. இரண்டையும் தனித்தனியாகப் பிரித்து அனுகும் போது, பல மர்மங்கள் பற்றிய உண்மைகளைத் தெளிவான வடிவத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டுவது என்பது மிகவும் கடினமான காரியம். இதை எனது அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். இதன் விளைவாகவே இந்த அனுகுமுறை தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது. எனது அனுகுமுறையில் இருக்கும் நியாயங்களை, இந்தத் தொடர் நிறைவடையும் போது வாசகர்களாகிய நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

இந்தத் தொடர் மூலம் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் உங்களை வந்தடையக் காத்திருக்கின்றன. இதுவரை நீங்கள் கற்றறிந்திருக்கும் அறிவின் பிரகாரம், இந்த உலகம் எவ்வாறு இயங்குகிறது என்று நீங்கள் நம்பிக் கொண்டிருக்கிறீர்களோ, அந்த நம்பிக்கையின் அடித்தளத்தையே ஆட்டம் காணச் செய்வது போலவும் பல தகவல்கள் இங்கு சொல்லப்படும். இதன் மூலம் உங்கள் சிந்தனையைக் குழப்புவது எனது நோக்கமல்ல. மாறாக, நிஜம் என்று இதுவரை நீங்கள் நம்பிக் கொண்டிருக்கும் பல அம்சங்கள் உண்மையில் நிஜங்கள் அல்ல; அவை போலிகள் என்பதை உங்களுக்கு உணர்த்துவதே இந்த ஆய்வின் நோக்கம்.

எந்தவொரு விடயத்தைப் பற்றியும் சரியான உண்மையை அறிந்து கொள்ள வேண்டுமென்றால், அதைப் பல மாறுபட்ட கோணங்களிலிருந்து நோக்க வேண்டும். அப்போது தான், அதன் சரியான வடிவத்தைக் கிரகித்துக் கொள்ள முடியும். இதுவரை இந்த உலகத்தையும், இதிலிருக்கும் படைப்புகள், ஜீவராசிகள் போன்றவற்றையும் குறிப்பிட்ட ஒரு கோணத்தில் மட்டுமே நம்மில் அனேகமானோர் பார்த்துப் பழகி விட்டார்கள்.

ஆனால், இதே உலகத்தை வேறொரு கோணத்திலிருந்து பார்க்கும் போது, இதுவரை பார்வைக்குப் புலப்படாத பல உண்மைகள் பளிச்சென்று புலப்படும். வழமையான கோணத்திலிருந்து பார்த்த போது விளக்கங்களுக்கு அப்பாற்பட்ட மர்மங்கள் போல தோற்றமளித்த பல அம்சங்கள், உண்மையில் மர்மங்கள் அல்ல என்பதும் இந்த மாறுபட்ட கோணத்தின் மூலம் புலப்படும். இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டும் தான் இந்தத் தொடர் அமைந்திருக்கும்.

இந்த நீண்ட ஆய்வுக் கட்டுரை இன் ஷா அல்லாஹ் நான்கு பிரதான தொடர்களாக வகைப்படுத்தப்பட்டு, ஒன்றன் பின் ஒன்றாக ஓர் ஒழுங்கில் பதிவேற்றப்படவிருக்கின்றது. ஆய்வின் கருப்பொருளை வாசகர் இலகுவில் புரிந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணத்திலேயே இவ்வாறு நான்கு தொடர்களாக இந்த ஆய்வு வகுக்கப் படுகிறது. நான்கு தொடர்களதும் சாராம்சம் பின்வருமாறு:

முதலாவது தொடர்:

ஜின்களின் உலகம் பற்றி விளக்கும் பல மார்க்க ஆதாரங்களை நமது புரிதலுக்கு ஏற்ப இலகுவாக விளங்கிக் கொள்ளும் பொருட்டு, அல்லாஹ்வின் படைப்புகள் பற்றிய விஞ்ஞான ரீதியான பல அடிப்படைகளை அலசுவதாகவே இந்த முதலாவது தொடர் அமைந்திருக்கும். இதில் கணிசமான அளவு விஞ்ஞானம் பற்றிய தகவல்கள் உள்ளடக்கப் பட்டிருக்கும். எனவே, விஞ்ஞானத்தில் அவ்வளவாக ஈடுபாடில்லாத சில சகோதரர்களுக்கு இந்தத் தொடரை வாசிக்கும் போது சில சமயம் கொட்டாவி வரலாம்; சில பகுதிகள் கொஞ்சம் புரிந்து கொள்ளக் கடினமானவை போலவும் இருக்கலாம். இருந்தாலும் சகித்துக் கொள்ளுங்கள்; வேறு வழியில்லை. ஏனெனில், இந்த ஆய்வின் பிற்பகுதியில் அலசப்பட இருக்கும் ஜின்கள் பற்றிய பல மர்மங்களைப் புரிந்து கொள்வதற்கு இந்த அறிவியல் பற்றிய அறிமுகம் அத்தியாவசியமானது.

இரண்டாவது தொடர்:

மார்க்க நிலைபாடுகள் குறித்த எந்தக் கருத்துக்களும் இந்தத் தொடரில் இருக்காது. மாறாக, அதிர்ச்சி தரக் கூடிய, நம்ப முடியாத, மறைக்கப்பட்ட பல வரலாற்றுச் சம்பவங்கள் பற்றி இந்தத் தொடரில் ஓரளவுக்கு அலசப்படும். இந்தத் தொடரில் பல சுவாரசியமான உண்மைச் சம்பவங்கள் பற்றிக் கூறப்படும். மேலும், மாற்றுக் கருத்தில் இருக்கக் கூடிய பலருக்கும் இந்தத் தொடரில் தான், எனக்கு எதிரான அனேகமான மாற்றுக் கருத்துக்கள் தோன்ற வாய்ப்பிருக்கிறது. அவசியம் என்று கருதுவதாலேயே இந்தத் தொடரும் எமது ஆய்வில் உள்ளடக்கப் படுகிறது.

மூன்றாவது தொடர்:

இது தான் முக்கியமான தொடர். மார்க்க ஆதாரங்களின் அடிப்படையில் ஜின்களின் உலகம் பற்றி விரிவாக அலசும் ஒரு தொடராக இந்தத் தொடர் தான் இருக்கும். இந்த மூன்றாவது தொடர் மக்களுக்குத் தெளிவாகப் புரிய வேண்டும் என்பதைக் கருத்திற் கொண்டு மட்டுமே மேற்குறிப்பிடப்பட்ட முதலாம், இரண்டாம் தொடர்கள் கூட உள்ளடக்கப் பட்டிருக்கின்றன. மேலும், இந்தத் தொடர்களின் இறுதியில், மார்க்க ஆதாரங்களின் அடிப்படையில் ஜின்களின் உலகம் குறித்து யார் என்னோடு விவாதிப்பதாக இருந்தாலும், இந்தத் தொடரையொட்டியே விவாதிக்க வேண்டியிருக்கும்.

நான்காவது தொடர்:

மார்க்க ஆதாரங்களின் அடிப்படையிலும், மற்றும் நவீன அறிவியலின் அடிப்படையிலும் நாம் வாழும் இந்தப் பூமியைப் பற்றி ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் அலசுவதாகவே பிரதானமாக இந்தத் தொடர் அமைந்திருக்கும். இந்தத் தொடருக்கான அவசியம் என்னவென்பதுவும் இன் ஷா அல்லாஹ் தொடரின் இறுதியில் வாசகருக்கே புரியும்.

அறிமுகம் போதுமென்று நினைக்கிறேன்; இனி நமது பயணத்தை ஆரம்பிக்கலாம்.

     Chapter 02     

கண்களால் பார்த்த பின் நம்புவதற்குப் பெயர் பகுத்தறிவு அல்ல; அதற்கு ஒரு மிருகத்தின் அறிவு கூடப் போதும்.
கண்ணால் ஒரு விசயத்தைப் பார்க்க முடியாத போது,
அதை ஆதாரங்களின் அடிப்படையிலும், சிந்தனையின் அடிப்படையிலும் நம்புவதற்குப் பெயர் தான் பகுத்தறிவு;
முறையாக சிந்திக்கும் மூளை இதற்கு அத்தியாவசியம்.

தற்கால உலகின் நவீன விஞ்ஞானத்துக்கு இரண்டு முகங்கள் இருக்கின்றன.

1. மையநீரோட்ட விஞ்ஞானம் (Mainstream Science)

2. மாற்றீட்டு விஞ்ஞானம் (Alternative Science)

இந்த இரண்டு முகங்களையும் தனித்தனியாகப் பிரித்து நோக்கினால், ஒவ்வொன்றினுள்ளும் பாதி தான் உண்மையிருக்கும்; மீதியைப் பொய்களே நிரப்பியிருக்கும். இரண்டு முகங்களையும் இணைத்து விளங்க யாரால் முடிகிறதோ, அவரால் மட்டுமே உண்மையான விஞ்ஞானம் என்னவென்பதைச் சரிவரப் புரிந்து கொள்ள முடியும்.

மையநீரோட்ட விஞ்ஞானம்:

பாடசாலைகளிலும், பல்கலைக் கழகங்களிலும் நமக்கு விஞ்ஞானம் என்ற பெயரில் கற்பிக்கப் படுவது மையநீரோட்ட விஞ்ஞானம் மட்டும் தான். விஞ்ஞானத்தின் முழுமையான வடிவம் இது தான் என்று கூறுவதற்கில்லை.

“விஞ்ஞானம் என்பது, கல்விக் கூடங்களிலும், பல்கலைக் கழகங்களிலும் கற்பிக்கப் படும் இந்த மையநீரோட்ட விஞ்ஞானம் மட்டுமே; இது அல்லாத வேறு எதுவும் விஞ்ஞானமே கிடையாது” என்று யாராவது உறுதியாக அடித்துக் கூறினால், அவர் ஆய்வு செய்யத் தெரியாத கிணற்றுத் தவளை என்று தான் அர்த்தம். ஒருசில மனிதர்கள் எழுதிய சில புத்தகங்களைக் கண்மூடித் தனமாக நம்பிக் கொண்டிருப்பவர் என்று தான் இதற்கு அர்த்தம். உண்மை இதை விடப் பல மடங்கு விசாலமானது.

மையநீரோட்ட விஞ்ஞானத்தில் சில உண்மைகளும் இருக்கின்றன; சில பொய்களும் இருக்கின்றன. இதில் பரிசோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகள் (Experimented Facts), மற்றும் பிரசித்தி பெற்ற விஞ்ஞானிகளால் முன்வைக்கப் பட்டிருக்கும், நிரூபிக்கப்படாத தனிப்பட்ட சித்தாந்தங்கள் (Theories) ஆகிய இரண்டும் இரண்டறக் கலந்திருக்கும்.

அதாவது, இதை எளிய நடையில் சொல்வதென்றால், இந்த மையநீரோட்ட விஞ்ஞானத்தின் ஒரு பகுதிக்கு ஆதாரம் உண்டு; மற்றப் பாதிக்கு ஆதாரம் இல்லை; ஏதோ ஒரு தனிமனிதனின் ஊகம் மட்டுமே அதில் உண்டு.

அதாவது இதை இன்னும் எளிய நடையில் சொல்வதென்றால், இந்த விஞ்ஞானத்தின் ஒரு பாதி ஆதாரபூர்வமான உண்மை; மறு பாதி, வெறும் கற்பனை மட்டுமே.

மையநீரோட்ட விஞ்ஞானம் என்பது உண்மையில் ஓர் அரசியல் கட்சியைப் போன்றது. நிர்வாக மட்டத்தில் இருக்கும் ஒருசில சர்வதேசத் தலைவர்கள் மூலம் மட்டுமே இதன் விதிமுறைகள் அனைத்தும் இயற்றப்பட்டிருக்கின்றன. இவர்களின் விருப்புவெறுப்புகளுக்கு அமையவே உலகில் ஒவ்வொரு மூலையிலும் இன்று விஞ்ஞானம் கற்பிக்கப் படுகிறது.

எதை மக்களுக்குச் சொல்ல வேண்டும்; எதை மறைக்க வேண்டும்; விஞ்ஞானத்தில் எதைப் பாடசாலைகளில் கற்பிக்க வேண்டும்; எதை இருட்டடிப்புச் செய்ய வேண்டும்... என்பன போன்ற அனைத்தும் இந்தத் தலைவர்களால் மட்டுமே தீர்மாணிக்கப் படுகின்றன என்பது தான் உலகில் அனேகமானோர் அறியாத உண்மை.

மையநீரோட்டவியல் சித்தாந்தம் (Mainstreamism):

மையநீரோட்ட விஞ்ஞானம் மட்டுமல்ல; மையநீரோட்ட வரலாறு, மையநீரோட்டக் கல்வித்திட்டம், மையநீரோட்ட மருத்துவம், மையநீரோட்ட மீடியா... என்று சொல்லிக் கொண்டே போகலாம். அதாவது இன்றைய உலகில் இருக்கும் எந்தத் துறையை எடுத்தாலும், அந்தத் துறையை நிர்வகிக்கக் கூடிய பிரதான அமைப்புகளாக இருக்கும் அமைப்புகளால், எதுவெல்லாம் அங்கீகரிக்கப் படுமோ, அவை மட்டுமே மையநீரோட்டம் என்பது தான் இன்றைய உலகின் நிலை.

இவை அனைத்தையும் தமது கைப்பிடிக்குள் வைத்துக் கொண்டு, தமது விருப்பு வெறுப்புக்களுக்கு அமைய ஒரு ரகசியக் கும்பல், இந்த உலகைப் பல நூற்றாண்டுகளாக நிர்வகித்து வருகிறது. இவர்கள் வைத்தது தான் இன்று உலகில் சட்டம்.

இவர்கள் நினைக்கும் போது உலகில் யுத்தங்கள் மூளும்; இவர்கள் நினைக்கும் நாடுகளில் மட்டும் அமைதி நிலவும். இவர்கள் கட்டளைப்படி மட்டுமே மீடியாக்களில் செய்திகள் கூட ஒளிபரப்பாகும். இவர்கள் எதைக் கற்பிக்கச் சொல்கிறார்களோ, அவை மட்டுமே பாடசாலைகளிலும், பல்கலைக் கழகங்களிலும் பாடநெறிகளாகக் கற்பிக்கப்படும்.

உள்ளூர் வங்கியிலிருந்து உலக வங்கி வரை உலகிலிருக்கும் அத்தனை வங்கிகளுக்கும் இவர்கள் தான் திரைமறைவில் உண்மையான சொந்தக் காரர்களாக இருப்பார்கள். இவற்றின் மூலம், உலகின் மொத்தப் பொருளாதாரத்தையுமே தமது கைப்பிடிக்குள் வைத்திருக்கிறார்கள்.

உலகில் வாழும் ஒவ்வொரு குடிமகனது இரத்தத்திலும் என்னென்ன பதார்த்தங்கள் கலக்க வேண்டும்; அவற்றின் மூலம், உலக மக்கள் அனைவரும் எப்படியெல்லாம் இவர்கள் தயவிலேயே என்றென்றும் தங்கி வாழ்பவர்களாக இருக்க வேண்டும் என்று இவர்கள் நினைப்பார்களோ, அவ்வாறான பதார்த்தங்களே மருந்து மாத்திரைகள், தடுப்பூசிகள் என்ற பெயரில் உலக சுகாதார திணைக்களம் போன்ற அமைப்புகளின் ஊடாக உலகின் ஒவ்வொரு குடிமகனின் இரத்தத்தினுள்ளும் வந்து சேரும்.

சுருங்கக் கூறினால், உலக அரங்கின் திரைக்குப் பின்னால் இருந்து கொண்டு, உலகையே கட்டியாண்டு கொண்டிருப்பது இந்த இரகசியக் கும்பல் தான்.

ஆனால் இவர்கள் யாருமே தலைமைப் பதவிகளில் இருக்க மாட்டார்கள்; அனேகமானோருக்கு இவர்கள் யாரென்று கூடத் தெரியாது. உலகின் எல்லாத் துறைகளிலும் அதிகார மட்டத்தில் (பெரிய பெரிய நாடுகளின் ஜனாதிபதிகள் உட்பட) இவர்களது அடியாட்களே இவர்கள் சார்பாக அட்சி செய்து கொண்டிருப்பார்கள். அவ்வாறான ஆட்சித் தலைவர்களைத் தமது இஷ்டத்துக்கு ஏற்றவாறு குடுமியைப் பிடுத்து ஆட்டுவிப்பதன் மூலமே இவர்களது ரகசிய சாம்ராஜ்ஜியம் நடந்து கொண்டிருக்கிறது.

இவர்கள் யார் என்பதை அலசுவது இந்தத் தொடரின் நோக்கமல்ல; இன் ஷா அல்லாஹ் இன்னொரு தொடரில் இது பற்றி விரிவாகப் பார்க்கலாம். சுருக்கமாக இப்போதைக்குக் கூறுவதென்றால், “இலுமினாட்டி” (Illuminati) என்று அழைக்கப்படுவோர் இவர்கள் தாம். பதின்மூன்று யூத கோத்திரங்களைச் சார்ந்த அங்கத்தவர்கள் தாம் இவர்கள்.

அஸ்தர், Bபண்டி, கொலின்ஸ், டுபோண்ட், ஃப்ரீமன், கென்னடி, லீ, ஒனாஸிஸ், ரெனோல்ட்ஸ், ரொக்கஃபெல்லர், ரொத்ஷைல்ட், ரஸல், வான்டுய்ன் ஆகிய 13 பழமை வாய்ந்த கோத்திரங்களும் தான் இவை.

இந்தப் பதிமூன்று கோத்திரங்களிலும் இருந்து முளைத்த இன்னும் ஒருசில உப கோத்திரங்களும் இருக்கின்றன. உதாரணத்துக்கு மெரோவேங்கியன், டிஸ்னி, மெக்டானல்ட் போன்ற குடும்பங்களைக் குறிப்பிடலாம்.

இதில் சுவாரசியமான அம்சம் என்னவென்றால், இந்தக் கோத்திரங்கள் அனைத்துமே யூதக் கோத்திரங்கள். ஆனாலும், இவர்கள் யூத பைபிளைப் பின்பற்றுவதில்லை; மாறாக “லூசிஃபேரியனிசம்” (Luciferianism) எனும் ஷைத்தானிய மதத்தைத் தான் இவர்கள் பின்பற்றுகிறார்கள். இவர்களது கடவுள் வேறு யாருமல்ல; இப்லீஸ் தான்.

இவர்களுக்கும், இப்லீஸின் பட்டாளத்தைச் சேர்ந்த ஜின்களுக்கும் இடையில் ஏராளமான இரகசியத் தொடர்புகள், மற்றும் ஒப்பந்தங்கள் இருக்கின்றன. அந்த ஒப்பந்தகளின் அடிப்படையில் தான் இவர்கள் இன்றைய உலகை வழிநடத்திச் சென்று கொண்டிருக்கிறார்கள். அதாவது, இதை இன்னொரு விதத்தில் சொல்வதென்றால், இப்லீஸின் பாரிய திட்டங்களை உலகில் செயல்படுத்தும், இப்லீஸின் மனிதப் பிரதிநிதிகள் தான் இவர்கள். மனித ஷைத்தான்கள் என்பது இவர்கள் தாம்.

கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் இது தான் உண்மை. இதை இன் ஷா அல்லாஹ் விரிவாகத் தகுந்த ஆதாரங்களோடு இந்தத் தொடரில் அலச இருக்கிறோம்.

இவர்களின் இப்போதைய இலக்கு ஒன்றேயொன்று தான்:

தஜ்ஜால் வரும் போது, அவனது கையில் இந்த உலகின் மொத்த நிர்வாகத்தையும் ஒப்படைக்க வேண்டும். மிக சீக்கிரத்தில் தஜ்ஜால் வெளிவரவிருப்பதை இவர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். தஜ்ஜால் வந்தவுடன், அவனது கையில் மொத்த உலகத்தினதும் ஆட்சியை ஒப்படைக்கும் விதத்தில், இன்றைய உலகம் மொத்தத்தையும் அதற்கேற்றாற்போல் ஆயத்தம் செய்து கொண்டிருக்கும் பணியில் தான் இப்போது இவர்கள் மும்மரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களைப் பற்றிய அறிமுகம் இவ்வளவும் போதும். மீண்டும் விசயத்துக்கு வருவோம்.

உலகிலிருக்கும் மையநீரோட்ட சித்தாந்தங்கள் அனைத்தையும் இவர்கள் தான் திட்டம் வகுத்து, உருவாக்கி, நிர்வகித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

இந்த அடிப்படையில் இன்று விஞ்ஞானம் என்ற பெயரில் கல்விக் கூடங்களில் கற்பிக்கப்படும் மையநீரோட்ட விஞ்ஞானம் கூட இவர்கள் வகுத்த பாடநெறி தான். பாதி உண்மையான விஞ்ஞானத்தோடு மீதி பொய்யான சித்தாந்தகளையும் கலந்து தான் கல்விக்கூட விஞ்ஞானத்தின் பாடநெறிகள் வகுக்கப் பட்டிருக்கின்றன. இவ்வாறு செய்வதன் நோக்கம், சுயமாக சிந்திக்க முடியாத, மூளைச்சலவை செய்யப்பட்ட ஒரு சமூகத்தை உலக அரங்கில் உருவாக்குவது மட்டுமே.

இது தான் மையநீரோட்ட விஞ்ஞானத்தின் நிலை. இனி அறிவியலின் அடுத்த முகத்துக்கு வருவோம்.

மாற்றீட்டியல் சித்தாந்தம் (Alternativism):

ஷைத்தானின் திட்டங்களை உலகில் அமுல்படுத்திக் கொண்டிருக்கும் இலுமினாட்டி கோத்திரங்களின் கோரப்பிடிக்குள் சிக்கியிருக்கும் அனைத்துத் துறைகளிலும், அவர்களுக்கு சவாலாகவும், அவ்வப்போது உண்மைகளை அம்பலப் படுத்துபவர்களாகவும் ஒருசில சிந்தனையாளர்கள் வரலாற்றில் முளைப்பதுண்டு.

இவ்வாறான சிந்தனையாளர்களின் பார்வையில் அறிவியல், விஞ்ஞானம், வரலாறு போன்ற அனைத்தும் சற்று மாறுபட்டதாக இருக்கும். மையநீரோட்டக் கருத்துக்களுக்கு எதிரான கருத்துக்கள் இவ்வாறான சிந்தனையாளர்கள் வாயிலாக உலக அரங்கில் முன்வைக்கப் படுவதுண்டு. இதற்குக் காரணம் இவ்வாறானவர்கள் சுயமாகவும், சுதந்திரமாகவும், இன்னொருவரது சிந்தனை ஆதிக்கம் இல்லாமலும் ஆய்வு செய்வது தான்.

இவ்வாறான ஆய்வுகள் மூலம் வெளிப்படும் கருத்துக்கள் தான் மாற்றீட்டியல் சித்தாங்கள் என்று அழைக்கப்படுகின்றன. உதாரணத்துக்கு மாற்றீட்டு விஞ்ஞானம் (Alternative Science), மாற்றீட்டு மருத்துவம் (Alternative Medicine) போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

இவ்வாறான மாற்றீட்டு அறிவியல் கூட நூற்றுக்கு நூறு உண்மையென்று சொல்லி விட முடியாது. அதிலும் பல தவறான சித்தாந்தங்கள் இருக்கத் தான் செய்கின்றன. இந்த இடத்தில் தான் நமது பகுத்தறிவை நாம் சரியாக உபயோக்கிக்க வேண்டும்.

அல்லாஹ் நமக்கு வழங்கிய சொந்த மூளையைக் கொண்டு சுயமாக சிந்தித்து நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், இரண்டு தரப்புக் கருத்துக்களையும் முடிந்தவரை ஒப்பிட்டு அலசி, நமது சிந்தனைக்கு ஏற்ப, எது உண்மை என்பதை நாம் தான் தீர்மாணித்துக் கொள்ள வேண்டும். இது தான் சிந்திக்கும் மக்கள் செய்யும் காரியம். இதைத் தான் இந்தத் தொடர் மூலம் நான் செய்ய முயற்சித்திருக்கிறேன்.

இதன் நிறைகள் அனைத்தும் அல்லாஹ்வைச் சாரும்; குறைகள் அனைத்தும் என்னையே சாரும். அல்லாஹ்வே அனைத்தும் அறிந்தவன்.

     Chapter 03      

ஆரம்பிக்கப்படும் இந்த ஆய்வுப் பயணம் சமயங்களில் ஷைத்தானின் சாம்ராஜ்யத்தினூடு பயணிப்பதாகவும், மற்றும், பல அமானுஷ்ய உண்மைகளைத் தர்க்கரீதியாக அலசுவதாகவும் இருக்கும்.

ஷைத்தானின் சாம்ராஜ்ஜியத்தினூடு பயணிக்கப் போவதாக சொன்னவுடன் சிலரது உள்ளத்தில் ஒரு தயக்கம் ஏற்படலாம். அல்லாஹ்வின் இறை வேதத்தைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கும் வரை எந்தக் குழப்பத்துக்கும் அஞ்ச வேண்டியதில்லை.

இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயெ இன்றைய உலகைச் சூழ்ந்துள்ள ஒருசில குழப்பங்களை இங்கு அலசப் போகிறோம்.

இன்றைய உலகம் அறிவீனத்திலும், முட்டாள் தனத்திலுமே மூழ்கியிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே பின்வரும் ஹதீஸ் அமைந்திருக்கிறது:

மறுமை நாளுக்கு முன்பாகக் கொலைகள் மலிந்த ஒரு காலக்கட்டம் வரும்.
அப்போது கல்வி மறைந்துபோய் அறியாமை வெளிப்படும். (புகாரி 7066)

இந்த ஹதீஸின் வெளிச்சத்தில் தற்கால உலகில் அரங்கேறிக் கொண்டிருக்கும் ஒருசில அறிவீனங்களை இங்கு பட்டியலிட்டுக் காட்டலாமென நினைக்கிறேன்:

முதலாவது அறிவீனம்:

“நமக்கு முன் இந்த உலகில் வாழ்ந்து மறைந்த எல்லா சமுதாயங்களையும் விட அறிவிலும், நாகரீகத்திலும் நாம் தான் பலமடங்கு முன்னேறி இருக்கிறோம்” என்ற ஒரு நினைப்பில் இன்று நம்மில் அனேகமானோர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இருக்கும் அறிவீனங்களிலேயே இந்த ஒரு நினைப்பை விட மாபெரும் அறிவீனம் வேறெதுவும் இருக்க முடியாது. உண்மை இதற்கு மாற்றமானது.

நமக்கு முன்சென்ற பல சமுதாயங்களை விட உண்மையில் நாம் இன்று அறிவில் பிந்தங்கிய நிலையில் தான் இருக்கிறோம். தொழிநுட்பம் எனும் ஒரேயொரு முன்னேற்றத்தைத் தவிர சிந்தனை சார்ந்த அறிவின் பல அம்சங்களில் நம்மில் அனேகமானோர் இன்று சராசரி மனிதனுக்கு இருக்க வேண்டிய அறிவை விடக் குறைவான அறிவோடு தான் இருக்கிறோம்.

இரண்டாவது அறிவீனம்:

ஒருசில அசாதாரண நிமிடங்களைத் தவிர ஏனைய பொழுதுகளிலெல்லாம் நமது உள்ளம் நமது கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என்று நம்மில் அனேகமானோர் நம்பிக் கொண்டிருக்கிறோம். அதாவது நாம் எதை நினைக்க வேண்டும் என்பதை நாம் தான் தீர்மாணிக்கிறோம் என்ற ஒரு நினைப்பிலேயே நம்மில் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பகுத்தறிவின் மீது கொண்ட அதீத நம்பிக்கையின் விளைவு தான் இந்த அறிவீனம். “என் பகுத்தறிவை மீறி என் மூளை என்ன தான் செய்து விடப் போகிறது?” என்ற இந்த அசட்டு தைரியம் தான் நம்மைச் சுற்றி நடந்து கொண்டிருக்கும் நம்மை மீறிய பல நிகழ்வுகள் மீது கவனம் செலுத்த விடாமல் நம் அறிவுக் கண்ணை மறைக்கிறது.

உண்மை என்னவென்றால், நம் அன்றாட வாழ்வின் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நம் உள்ளமும், சிந்தனையும், தீர்மானங்களும் நமது கட்டுப்பாட்டில் இல்லை. இந்த உண்மையை அலசும் விதமாகத் தான் இந்த ஆய்வின் முதல் கட்டம் ஆரம்பிக்கிறது.

அனேகமான மனிதர்களிடம் சுவாரசியமான ஒரு சுபாவத்தை நீங்கள் அவதானிக்கலாம்., என்ன தான் முயற்சி செய்தாலும், சிலரிடம் உண்மை / சத்தியம் எடுபடுவதில்லை. என்ன தான் காரண காரியங்களுடன் தர்க்க ரீதியாக விளக்கினாலும், கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போல் உண்மையை உணர்த்திக் காட்டினாலும், அதை அவர்களது உள்ளம் சரிகாண்பதில்லை. ஆரம்பத்தில் வைத்த அதே வாதங்களையே திரும்பத் திரும்ப முன்வைத்துக் கொண்டிருப்பார்கள்.

இவ்வாறானவர்களைப் பார்த்து நாம் என்ன சொல்வோம்? “இவரது மூளை சலவை செய்யப்பட்டிருக்கிறது” என்போம்.

ஆனால், இதை விட எளிய நடையில் இதை இப்படி சொல்லலாம்:

“இவரது சிந்தனை இவர் கட்டுப்பாட்டில் இல்லை. யாரோ ஒருவர் இவரது சிந்தனையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார். இவரது பகுத்தறிவைக் கட்டிப் போட்டு, இவரை ஒரு கருவியாக உபயோகித்து, யாரோ ஒருவர் தனது நோக்கத்தை இவர் மூலம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.”

மூளைச்சலவை என்பதன் அர்த்தமே இது தான்.

இந்தக் கோணத்தில் இந்த உண்மையை விளங்கும் போது, இதுவரை நம் கண்ணுக்குப் புலப்படாமலிருந்த ஒரு பேருண்மை பளிச்சென்று புலப்படும். ஒருவர் மூளையை / சிந்தனையை இன்னொருவர் ஆக்கிரமிப்பது என்பது ஒன்றும் கடினமான காரியமல்ல என்பதை ஒத்துக் கொள்வதற்கு இது ஒன்றே போதும். இதே அடிப்படையை மனதில் வைத்துக் கொண்டு இனி விடயத்துக்கு வருவோம்.

சத்தியப் பிரச்சாரங்களை நாம்மில் பலர் எடுத்த எடுப்பில் மறுப்பதற்கும், தர்க்க ரீதியான வாதங்கள் மூலம் ஒரு விடயம் நிரூபிக்கப் பட்டாலும், அதைக் கண்டுகொள்ளாமல் மறுபக்கம் திரும்பிக் கொள்வதற்கும் காரணம்... நம்மில் பலரது சிந்தனை நம் கட்டுப்பாட்டில் இருப்பதற்குப் பதிலாக, ஷைத்தானின் கட்டுப்பாட்டில் இருப்பது தான்.

பல நூறு திட்டங்கள் மூலம் மனித உள்ளத்தை ஷைத்தான் ஆக்கிரமிப்பதன் நோக்கம் ஒன்றேயொன்று தான்; மனிதன் சிந்திக்கக் கூடாது. மனிதனை சுதந்திரமாகச் சிந்திக்க விட்டால், மனித இனத்தை அடியோடு வேரறுக்கும் தனது திட்டம் தவிடுபொடியாகி விடும். எனவே, தனது சக்திக்கு உட்பட்ட எல்லா விதங்களிலும் மனிதனை சுயமாகச் சிந்திக்காதவனாக வைத்துக் கொள்ளவே ஷைத்தான் பாடுபட்டுக் கொண்டிருக்கிறான். இதை உறுதிப்படுத்தும் விதமாகத் தான் பின்வரும் ஆதாரங்கள் அமைந்துள்ளன:

ஆதாரம் 1:

மனிதர்களின் இரத்த நாளங்களில் எல்லாம் ஷைத்தான் ஓடிக் கொண்டிருக்கிறான். அவன் உங்கள் உள்ளங்களில் தீய எண்ணத்தை விதைத்து விடுவான் . (புகாரி 2035)

ஆதாரம் 2:

"என்னை விட நீ சிறப்பித்த இவரைப் பற்றிக் கூறுவாயாக! கியாமத் நாள் வரை எனக்கு நீ அவகாசம் அளித்தால் சிலரைத் தவிர இவரது சந்ததிகளை வேரறுப்பேன்'' எனவும் கூறினான்.

"நீ போ! அவர்களில் யாரேனும் உன்னைப் பின்பற்றினால் உங்களுக்கு நரகமே கூலி. (அது) நிறைவான கூலி'' என்று (இறைவன்) கூறினான்.

உனது குரல் மூலம் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழிகெடுத்துக் கொள்! உனது குதிரைப் படையையும், காலாட்படையையும் அவர்களுக்கு எதிராக ஏவிக் கொள்! அவர்களது பொருட்செல்வங்களிலும், குழந்தைச் செல்வங்களிலும் அவர்களுடன் நீ பங்காளி ஆகிக்கொள்! அவர்களுக்கு வாக்குறுதியும் அளித்துக் கொள்! (என்றும் இறைவன் கூறினான்.) ஏமாற்றத்தைத் தவிர வேறெதனையும் ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை. - (அல் குர்ஆன் – 17:62-64)

இந்த ஆதாரங்கள் மூலம் ஒரு விடயம் தெளிவாகப் புலப்படுகிறது. ஷைத்தானுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கும் ஆற்றல், மற்றும் அதிகாரம் என்பது உள்ளத்தில் ஏற்படுத்தும் ஊசலாட்டத்தோடு மட்டுப்படுத்தப்பட்டதல்ல. அதையும் தாண்டிய அதிகாரைம் சைத்தானுக்கு வழங்கப் பட்டிருக்கிறது என்பது இந்த வசனங்களின் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது.

இங்கு ஷைத்தான் அல்லாஹ்வைப் பார்த்து “மனிதனை வழிகெடுப்பேன்” என்று மட்டும் சொல்லவில்லை. “சிலரைத் தவிர இவரது சந்ததிகளை வேரறுப்பேன்” என்று சவால் விடுகிறான். உள்ளத்தில் ஊசலாட்டத்தை உண்டுபன்னி ஒரு மனிதனை வழிகெடுப்பதற்கும், அவனை வேரறுப்பதற்கும் இடயில் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

ஒருவனை நேர்வழியிலிருந்து திசைதிருப்பி விட்டாலே போதும்; வழிகெடுத்தல் எனும் காரியம் அத்தோடு நிறைவடைந்து விடும். ஆனால், அத்தோடு மட்டும் நின்று விடாமல், கிடைக்கப் பெறும் சந்தர்ப்பங்களிலெல்லாம் ஒருவனது வாழ்க்கையை எல்லாத் துறைகளிலும் சின்னாபின்னமாக்குவதையே வேரறுத்தல் என்ற சொல் குறிக்கும். ஒருவன் மீது ஜன்மப் பகையும், வைராக்கியமும் எவனது உள்ளத்தில் குடிகொண்டிருக்குமோ, அவனுக்குத் தான் வேரறுக்க வேண்டும் என்ற தேவை இருக்கும்.

மனித இனத்தின் மீது தீராத பகையும், மாறாத வைராக்கியமும் பூண்ட ஒரே எதிரி ஷைத்தான் தான். இதைத் தான் பின்வரும் குர்ஆன் வசனம் சொல்லிக் காட்டுகிறது:

ஷைத்தான் உங்களுக்கு எதிரியாவான். அவனை எதிரியாகவே ஆக்கிக் கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 35:6)

தீராத பகை உணர்வோடு மனிதனை ஈருலகிலும் அழிக்கத் துடிக்கும் ஒரே எதிரி ஷைத்தான் என்பதால் தான், எம்மை வேரறுக்கும் தேவை அவனுக்கு இருக்கிறது. எனவே தான், “இவரது சந்ததிகளை வேரறுப்பேன்” என்று அல்லாஹ்விடமே சவால் விட்டான்.

அவனது திட்டம், உள்ளத்தில் ஊசலாட்டங்களை ஏற்படுத்துவதன் மூலம் மனிதனை வழிகெடுப்பது மட்டுமல்ல; ஈருலகிலும் மனிதனை நிம்மதியாக வாழ விடவே கூடாது; சந்தர்ப்பம் கிடைக்கும் இடத்திலெல்லாம் மனிதனை எல்லா விதங்களிலும் சின்னாபின்னமாக்க வேண்டும் என்பதும் தான் அவனது திட்டம். இதை உறுதிப்படுத்தும் விதமாகவே அவனது சவாலுக்கு அல்லாஹ் கூறிய பதிலும் அமைந்திருப்பதைப் பார்க்கலாம்.

வழிகெடுப்பது மட்டும் தான் ஷைத்தானின் நோக்கமாக இருந்திருந்தால், “உனது குரல் மூலம் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழிகெடுத்துக் கொள்!” என்று ஷைத்தானுக்கு அனுமதி கொடுத்தால் மட்டுமே போதுமானது; அந்த அனுமதியோடு அல்லாஹ் நிறுத்தியிருப்பான். ஆனால், அத்தோடு நிறுத்தவில்லை; அதைத் தொடர்ந்து மேலதிகமாக, “உனது குதிரைப் படையையும், காலாட்படையையும் அவர்களுக்கெதிராக ஏவிக்கொள்; அவர்களது பொருட்செல்வங்களிலும், குழந்தைச் செல்வங்களிலும் அவர்களோடு நீ பங்காளி ஆகிக்கொள்...” என்றெல்லாம் அவனுக்கு வழங்கப் பட்டிருக்கும் அதிகாரங்களை அல்லாஹ் இங்கு பட்டியலிட்டுக் காட்டுகிறான்.

உள்ளத்தில் ஊசலாட்டத்தை ஏற்படுத்துவதன் மூலம் வழிகெடுக்கும் ஒருவனுக்குக் காலாட்படையும், குதிரைப் படையும், செல்வத்தின் பலமும் வழங்கப்படுவதில் அர்த்தமிருக்காது. இங்கு அல்லாஹ் குறிப்பிடுவது, ஆள் பலம், பொருளாதார வளம், இராணுவ பலம் என்று ஓர் அரசாங்கத்துக்கு இருக்க வேண்டிய அத்தனை அதிகாரங்களையும் தான்.

ஆகவே இதன் மூலம், ஷைத்தானின் திட்டம் வழிகெடுப்பது மட்டுமல்ல; அடியோடு மனிதனை வேரறுப்பது என்பதுவும், ஷைத்தானுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கும் ஆற்றல், அதிகாரங்கள் என்பது உள்ளத்தில் உணர்வுகளைத் தூண்டுவதோடு மட்டுப்படுத்தப் பட்டதல்ல; அதையும் தாண்டியது என்பதுவும் மறுக்க முடியாதவாறு நிரூபணமாகிறது.

ஹிதாயத் (நேர்வழி) என்பது வேறொன்றுமல்ல; ஷைத்தானின் இந்த ஆதிக்கச் சிறையிலிருந்து அல்லாஹ் நமது உள்ளத்துக்கு வழங்கும் விடுதலை தான். ஹிதாயத் என்னும் இந்த விடுதலை கிடைத்தால் மட்டுமே நமது சிந்தனை சுதந்திரமாக வேலை செய்யும். இந்தச் சுதந்திரம் நமது மூளைக்குக் கிடைத்தால் மட்டுமே, சரியான அடிப்படையில் நம்மால் சிந்தித்து செயலாற்ற முடியும்.

எந்தவொரு மனிதனுக்கும் அல்லாஹ் அநீதி இழைப்பவன் அல்ல. அதனால், மனித வாழ்வின் முதல் அத்தியாயத்தையே அல்லாஹ் ஹிதாயத்தோடு தான் ஆரம்பித்து வைக்கிறான்.

ஆதாரம்:

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போல, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில் தான் பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தை விட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கி விடுகின்றனர். (அறிவிப்பவர் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1385)

ஒவ்வொரு குழந்தையும் ஹிதாயத்தோடு முஸ்லிமாகவே பிறக்கிறது என்பதை மேலுள்ள ஹதீஸ் அழகாக உறுதிப்படுத்துகிறது.

இவ்வாறு சுதந்திரமாகப் பிறக்கும் மனிதனை, அவன் பிறந்த அடுத்த கணமே அவனது பரம எதிரியான ஷைத்தான் வந்து கவ்விப் பிடித்துக்கொள்கிறான்; அந்த நிமிடத்திலிருந்து தனது இருள் சிறையில் அந்த மனிதனை அடைத்து வைக்கத் தேவையான தனது செயல்திட்டங்களை ஆரம்பித்து விடுகிறான். இதைப் பின்வரும் ஹதீஸ் உறுதிப்படுத்திக் காட்டுகிறது:

பிறக்கும் குழந்தை எதுவாயினும் பிறக்கும் போதே ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தான் தீண்டுவதால் அக்குழந்தை உடனே கூக்குரலெழுப்பும். (ஆனால்,) மர்யமையும் அவருடைய புதல்வரையும் தவிர என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 4548)

இந்த ஹதீஸ் மூலம் சில உண்மைகள் நமக்குப் புலப்படுகின்றன. அதாவது, பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் ஷைத்தான் தீண்டுகிறான் என்பதை இந்த ஹதீஸ் இலக்கியமான அர்த்தத்தில் கூறவில்லை. மாறாக ஷைத்தான் எனும் ஜின், அந்தக் குழந்தையைத் தனது கைகளால் பிடிப்பதையே இந்த ஹதீஸ் பச்சையாகச் சொல்கிறது. ஷைத்தானின் பிடியின் வேதனை தாங்க முடியாமல் தான் ஒவ்வொரு மனிதக் குழந்தையும் இவ்வுலகில் தனது முதலாவது அழுகையை வீரிட்டு அழுகிறது என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது.

இவ்வாறு பிறப்பிலேயே ஷைத்தான் வந்து பிடிக்கும் இந்தப் பிடியை, அந்த மனிதனது ஆயுள் உள்ளவரை ஷைத்தான் விடவே மாட்டான். தன்னால் முடியும் போதெல்லாம், தனது பிடியை இன்னும் இறுக்கத் தான் முயற்சிப்பான். அந்தக் குழந்தை வளர வளர, அதன் பெற்றோரின் வளர்ப்புக்கு ஏற்ப ஷைத்தானின் பிடி இறுகும்; அல்லது தளறும். ஷைத்தானின் இருள் சிறையின் ஆரம்பம் இது தான்.

இந்தச் சிறையிலிருந்து அந்த மனிதனது உள்ளத்தை விடுதலை செய்யும் சக்தி அல்லாஹ்வுக்கு மாத்திரமே உண்டு. ஆனால் இந்த விடுதலையை அல்லாஹ் எல்லோருக்கும் ஒரேமாதிரி வழங்கி விடுவதில்லை. தன்னை நேர்வழியில் செலுத்துமாறு அந்த மனிதன் தன்னிடம் பிரார்த்திக்க வேண்டுமென்று எதிர்பார்த்து அல்லாஹ் காத்திருப்பான். தன்னை மட்டுமே கடவுளாக ஏற்றுத் தன்னிடம் நேர்வழிக்காகப் பிரார்த்திக்க மாட்டானா என்று அல்லாஹ் ஆவலோடு காத்திருப்பான்.

பிரார்த்திப்பதற்கான சந்தர்ப்பத்தையும் அல்லாஹ்வே ஏற்படுத்தியும் கொடுக்கிறான். குறைந்தது ஒரு நாளைக்கு 17 சந்தர்ப்பங்களை ஐவேளைத் தொழுகையில் ஓதப்படும் ஸூரத்துல் பாத்திஹா மூலம் அல்லாஹ் வழங்குகிறான். “யா அல்லாஹ் என்னை நேரான பாதையில் செலுத்துவாயாக” என்று அவனிடம் உளமாற உதவி கேட்பதற்கு வாய்ப்பையும் அவனே கொடுத்து, அன்போடு உதவக் காத்திருக்கிறான்.

வாய்ப்பைப் பயன்படுத்தி, வாய் விட்டு அவனிடம் மனப்பூர்வமாக உதவி கோரினால் போதும்; ஷைத்தானின் சிறைக் கதவுகளை உடைத்தெறிந்து, அந்த மனிதனின் உள்ளத்திற்கு மீண்டும் அல்லாஹ் விடுதலையைப் பெற்றுக் கொடுக்கிறான். விடுதலை கிடைத்த அடுத்த கணமே, அவனது மனக் கண் திறக்கும். இதற்கு முன் புலப்படாதிருந்த சத்தியப் பாதை தெளிவாகப் புலப்படத் தொடங்கும். அதன் பிறகு, அந்த நேரான பாதையில் எப்படி நடப்பது? எவ்வளவு தூரம் நடப்பது என்பதை அந்த மனிதனே தீர்மானித்துக் கொள்ளட்டுமென்று அல்லாஹ் சுதந்திரமாக விட்டு விடுகிறான்.

அதே நேரம், நேர்வழிக்காகப் பிரார்த்திப்பதற்காகவேனும் ஒரு மனிதன் அல்லாஹ்வின் பால் ஒரு கணம் கூடத் திரும்பவில்லையென்றால், அவன் காலத்துக்கும் குருடனாகிறான்; ஷைத்தானின் பூரண கைப்பாவையாகவே வாழ்ந்து, முடிவில் நரகப் படுகுழியில் வீழ்ந்து விடுகிறான்.

நேர்வழியைக் காட்டுவதென்பது ஓர் ஆட்டிடையன் தன் ஆட்டு மந்தையை வீடு நோக்கி வழி நடத்திச் செல்வதைப் போன்றது. எந்தவொரு ஆட்டையும் அந்த மந்தையில் அவன் கட்டி இழுத்துச் செல்வதில்லை. ஒரேயொரு குச்சி மூலம் ஆடுகளை வழி நடத்திச் செல்கிறான். அத்தனை ஆடுகளும் முன்னால் செல்லும் ”முன்மாதிரி” ஆட்டைப் பின்பற்றி ஒரே பாதையில் சென்று கொண்டிருக்கும். ஓரிரு ஆடுகள் ஆங்காங்கே கொஞ்சம் பாதையை விட்டு விலகும் போது, குச்சியைக் கொண்டு இடையன் லேசாகத் தட்டுவான். அத்தோடு அத்தோடு அவை மீண்டும் சரியான பாதைக்கு மீண்டு விடும்.

இந்த அடிப்படையில் மொத்த ஆடுகளையும் வீடு கொண்டு சேர்க்க வேண்டுமென்றால், அத்தனை ஆடுகளுக்கும் கண் பார்வை இருக்க வேண்டும். மந்தையில் ஒரு ஆட்டுக்குக் கண் பார்வையில்லாமலிருந்தால், என்ன தான் குச்சியால் தட்டினாலும், என்ன தான் முன்னால் செல்லும் ஆடு சரியான பாதையில் நடந்து காட்டினாலும், அந்தக் குருட்டு ஆடு சரியான வழியில் பயனிக்கப் போவதில்லை. தான்தோன்றித் தனமாகக் கால் போன திக்கில் அந்த ஆடு விலகிப் பயணிக்கும். ஈற்றில் வழி தவறிக் காட்டில் தனியே சிக்கி, ஓநாய்களுக்கு விருந்தாகி விடும்.

இதே தத்துவத்தின் அடிப்படையில் தான் அல்லாஹ் மனிதனுக்கு நேர்வழி காட்டுகிறான். இந்தத் தத்துவத்தை ஒவ்வொரு நபியும் அடிமனதில் உணர்ந்திருக்க வேண்டுமென்பதனால் தான் அத்தனை நபி மார்களையும் அல்லாஹ் ஆடு மேய்ப்பவர்களாக ஆக்கியிருக்கலாம்.

தினமும் எத்தனை தடவை ஷைத்தான் மனிதனை நேர்வழியை விட்டும் விலகச் செய்ய முயற்சிக்கிறான்? குறைந்தது எத்தனை தடவை நம்மை மேய்க்கும் இடையன் நம்மைக் குச்சியால் தட்டி, நேரான பாதையில் செலுத்த வேண்டியிருக்கிறது? ஆகக் குறைந்தது தினம் ஐந்து தடவையாவது நம்மை மேய்க்கும் இடையன் நம்மைக் குச்சியால் தட்டி நேர்வழியில் செலுத்த வேண்டிய அளவுக்கு நமது நிலைமையிருக்கிறது.

இதனால் தான் குறைந்த பட்சம் ஐந்து விடுத்தமாவது ஒரு முஸ்லிம் தொழுது, அல்லாஹ்விடம் நேர்வழியைக் காட்டச் சொல்லிப் பிரார்த்திக்க வேண்டுமென்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.

ஒரு நாள், ஒரு மணித்தியாலம், ஒரு நிமிடம் நாம் அல்லாஹ்வின் கருணையிலிருந்தும், உதவியிலிருந்தும் தூரமாகினால், அது ஒன்றே ஷைத்தானுக்குப் போதும். அந்த ஒரு நிமிடத்தை சந்தர்ப்பமாக உபயோகித்து, நம்மை மொத்தமாகக் கவ்விக் கொள்ளும் அத்தனை செயல்திட்டங்களையும் ஷைத்தான் தயார் நிலையிலேயே வைத்திருக்கிறான்.

ஷைத்தானின் சக்தியை நம்மில் பலர் இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லையென்றே சொல்ல வேண்டும். அதுவும் தஜ்ஜாலின் ஃபித்னா யுகத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் இன்றைய உலகில் ஷைத்தானின் ஆதிக்கம் மனித வரலாற்றில் இதற்கு முன் இருந்ததை விடப் பன்மடங்கு அதிகமாகவே இருக்கும் என்பது தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பல முன்னறிவிப்புகளைப் பார்க்கும் போது தெளிவாகப் புலப்படுகிறது.

தஜ்ஜாலின் யுகத்தைச் எதிர்பார்க்கும் ஷைத்தானிய சக்திகள் தம் பலத்தையும், தொழினுட்பங்களையும் பன்மடங்காக விருத்தி செய்யும் வேலைத்திட்டங்களில் மும்மரமாக ஈருபட்டிருக்கின்றன. அதே அளவுக்கு நம்மிடம் பலம் இல்லையென்றாலும், அவற்றுக்கு முகம் கொடுக்கும் அளவுக்காவது நம்மிடம் அவர்கள் திட்டங்கள் பற்றிய அறிமுகமாவது இருக்க வேண்டும். அவ்வாறான ஓர் அறிமுகத்தைக் கொடுக்கும் நோக்கிலேயே இனிவரும் பகுதி அமையவிருக்கிறது.

மனித உள்ளத்தை ஷைத்தான் ஆதிக்கம் செலுத்துவது ஊசலாட்டத்தின் மூலம் மட்டுமே என்று நம்மில் அனேகமானோர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இது தவறான நினைப்பு. உள்ளத்தில் ஊசலாட்டம் ஏற்படுத்துவதையும் தாண்டிய பல சதித் திட்டங்கள் பௌதீக மட்டத்திலும் நம்மைச் சுற்றி அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றன. இந்தத் திட்டங்கள் அனைத்துக்கும் இப்லீஸ் தான் சூத்திரதாரி. அவனது பரிவாரங்களுள் ஜின்கள் மட்டுமல்ல; மனிதர்களும் சேர்ந்து தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறான மனிதர்கள் தாம் மேலே குறிப்பிடப்பட்ட “இலுமினாட்டி” எனும் 13 யூதக் கோத்திரங்களையும் சேர்ந்த ஷைத்தானின் ஊழியர்கள்

இந்தப் பரிவாரங்கள் மூலம் ஷைத்தான் பல்வேறு வகைகளில் மனித உள்ளங்களைக் கைப்பற்றும் நோக்கில் பல சிந்தைக் கட்டுப்பாட்டு உத்திகளை இன்றைய உலகில் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறான். அவற்றுல் ஒருசில திட்டங்களைப் பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம்.

கட்டுரையின் தொடர்ச்சிக்கு கீழுள்ள "Next" ஐ அழுத்தவும்