Home குடும்பம் ஆண்-பெண் பாலியல் ஒரு துளி ஆறடி உயரமுள்ள மனிதனாக உருமாறும் அதிசயம்
ஒரு துளி ஆறடி உயரமுள்ள மனிதனாக உருமாறும் அதிசயம் PDF Print E-mail
Sunday, 09 April 2017 09:55
Share

ஒரு துளி ஆறடி உயரமுள்ள மனிதனாக உருமாறும் அதிசயம்

    ரஹ்மத் ராஜகுமாரன்     

இந்த உலகில் உங்களைப் பிரமிக்கத் தூண்டும் அதிசயம் எது? என்று கண்ணதாசனிடம் கேட்கப்பட்டது.

"சக்தி வாய்ந்த மைக்ராஸ்கோப் மூலம் மட்டுமே கண்ணுக்குத் தெரியும் ஒரு புள்ளி - ஒரு துளி விந்து ஆறடி உயரமுள்ள மனிதனாக உருமாறும் விஷயம்தான் என்னைப் பொறுத்தவரை மாபெரும் அதிசயம்" சிலிர்த்துப் போய் பதில் சொன்னார் கண்ணதாசன்.

கண்ணதாசன் மட்டுமா? ''பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்'' என்று வைரமுத்தும் வியந்த விஷயம் இந்த ஜனனத் தொழிற்சாலை என்னும் படைப்பு விஷயம்தான்.

ஆண் - பெண் உடலுறவில் உச்சக்கட்டத்தில் ஆண் வெளியேற்றும் விந்துதான் இந்த ஜனனத் தொழிற்சாலையின் வேலையை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிறது.

ஒரு முறை ஆண் வெளியேற்றும் விந்தில் 30 கோடி விந்தணுக்கள் (யப்பா.... - எல்லா உயிரணுவுமே மனிதனாக முடிந்தால். ஒரே தடவையில் கால்வாசி சீனாவே உருவாகிவிடும்) இருக்கின்றன.

இது கர்ப்பப்பை வரை சென்று பத்திரமாக "சுமை"யை இறக்கி விட்டு வருவதற்கு வழி செயது கொடுக்கும் வகையில்தான் விரிந்து கொடுக்கும் சதைப் பகுதிகளுடன் கூடியது தான் இந்த பெண்ணுறுப்பு. இதன் அமைப்பு ஆண் இன உறுப்பின் அத்தனை நீளத்திற்கும் தடிமனுக்கும், வலுவாக நாலாபுறம் திமிரும் போது அதையும் அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வகையில் தான் பெண்ணுறுப்பு பெண்களுக்கு அமைந்திருக்கிறது. இது எப்படி என்று எண்ணி மாளாத பொழுதே விஞ்ஞானத்திறகு இல்லை"

பெண் இன உறுப்பு

பெண்ணுறுப்பின் நீளம் ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும் சுமாராக 8 செ.மீ அகலம் 3 செ.மீ இத்தனை சின்ன துளைதான் அப்புறம் ஆச்சரியமாக அகல விரிந்து பத்து மாதம் ஆன குழந்தைக்கு வழிவிடுகிறது இது எப்படி முடிகிறது என்பது விஞ்ஞானத்தின் வியப்பான விஷயம்.

பெண்ணுறுப்பினுள்ள கருப்பை பார்ப்பதற்கு கருஞ்சிவப்பு நிறமான ஒரு பேரிக்காயைப் போல மேல்புறம்படுத்தும் கீழ்புறம் சிறுத்தும் இருக்கும் இந்த வீட்டில்தான் கண்ணுக்குத் தெரியாத புள்ளியாக இருக்கும் கரு முழுக் குழந்தையாக உருவெடுக்கும் அதிசயம் நடக்கிறது.

கர்ப்பப்பையின் இரண்டு பக்கமும் சினைப் பைகள் பாதாம் பருப்பு சைஸில் இருக்கும் குழந்தை உருவாவதற்கு மிக முக்கியமான சினை முட்டையை மாதம் ஒன்று என்ற கணக்கில் உருவாக்கி அனுப்பி வைக்கிறது இதை இயற்கையே தேர்வு செய்து அனுப்புகிறது இது இரண்டாவது வியப்பான விஷயம்

ஃபெலோப்பியன் என்றும் இரு கருக் குழாய்கள் இது நோட்டுப் புத்தகம் தைக்கும் நூலின்பருமனில்இருக்கும்.இந்தக்குழாயகளுக்குஉள்ளேதான்பெண்ணின்சினைமுடயோடுஆணின் உயிர்ணு சேர்ந்து கரு உருவாகும் அற்புதம் நடக்கிறது இரண்டு குழாயில் ஒன்று பாதிக்கப்பட்டால் இன்னொரு குழாய் வழியாக விந்தணு செல்லும்.

செர்விக்ஸ் என்பது கர்ப்பப்பையின் கழுத்துப்ப குதி கோழி முட்டையின் வெள்ளைக்கரு போல இங்கே சுரக்கும் ஒரு திரவம். பெண் களுக்கு செக்ஸி இருக்கும் ஈடுபாட்டை அதிகப்படுத்துவதோடு விந்து உயிரணுக்கள் வழுக்கிக் கொண்டு கர்ப்பப்பையை நோக்கி வேகமாக உள்ளே செல்ல வசதியும் செய்து தருகிறது. டபுள் ஆக் ஷன்.

இந்த பெண்ணுறுப்பினுள்ளேயுள்ள கர்ப்ப்பையில்தான் கரு உருவாகி அவயவங்கள் பொருத்தி அழகான கோலத்தில்தான் நீங்களும் நானும் இருந்து வெளியே வந்தோம்.

"மனிதனே ' உன்னை சிருஷ்டித்து மேலான விதத்தில் உருவகித்து, மிகக ஒழுங்காக உன்னை அமைத்த மிக்க கண்ணியமுள்ள உனது இறைவனைப் பற்றி உன்னை மயக்கிவிட்டது எது? அவனே தான் விரும்பிய (மிக்க அழகான) கோலத்தில் உன்னை (உன்னுடைய அவயவங்களைப்) பொருத்தினான்" (திருக்குர்ஆன் 82 : 6 -8)

-ரஹ்மத் ராஜகுமாரன்