Home கட்டுரைகள் கதையல்ல நிஜம் 'உளவு' பார்க்கச் சென்றோம்! முழு 'நிலவு' பார்த்து நின்றோம்!
'உளவு' பார்க்கச் சென்றோம்! முழு 'நிலவு' பார்த்து நின்றோம்! PDF Print E-mail
Sunday, 05 February 2017 08:34
Share

'உளவு' பார்க்கச் சென்றோம்! முழு 'நிலவு' பார்த்து நின்றோம்!

அமெரிக்காவின் 03.03 மில்லியன் சனத்தொகை கொண்ட முஸ்லிம் சமூகத்தையும் அதன் நடவடிக்கைகளையும் கண்காணிக்க, 2001 முதல் 2016 வரை சுமார் பதினைந்து வருடங்கள்,

பதினைந்தாயிரம் உளவாளிகள் மூலம், நாடு முழுவதும் உள்ள பள்ளிவாயில்கள், குர்ஆனிய வகுப்புகள், வழிபாட்டு மற்றும் சமூக நிகழ்ச்சிகளின் ரகசிய ஒலிப்பதிவுகள்,

மற்றும் கண்காணிப்புகள், உலக அளவில் உள்ள 7485 முஸ்லிம் பிரபலங்களின் மின்னஞ்சல்கள் என தேடித்துருவி உளவுபார்த்து,

எஃ.பி.ஐ. இன் பணிப்பாளர் 'ஜேம்ஸ் பி கொமி'யும் அதன் முன்னாள் அதிகாரி 'கேசி ஹன்னா'வும் சமர்ப்பித்த ஆய்வறிக்கையின் சாராம்சம் இது!

o   உலக மதங்களில் மிகப்பெரிய மதம் இஸ்லாம் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால், அது எந்த அளவு சர்வதேச அளவில் எல்லாரையும் ஈர்க்கத்தக்க மதம் என்ற எதார்த்தத்தை உணர்ந்து கொண்டோம்.

o   இஸ்லாமிய உலகம் எத்துணை அதி அற்புத மான செயல்திறன் மிக்க பகுதிகளைக் கொண்டி ருக்கிறது என்பதையும் புரிந்து கொண்டோம்.

o   முஸ்லிம்களின் பல இல்லங்களுக்குள் நாங்கள் ஊடுருவி ஆய்வு செய்தபோது, உணர்வுப்பூர்வ மான அறபு எழுத்துக்களையும் திரைச்சீலைகளை யும் கண்டோம்.

o  இஸ்லாமிய இல்லங்களில் அலங்கரித்துக் கொண்டிருந்த நூலகங்களில் - நூல்களில் விரவிக் கிடந்த இறைத்தூதர் முஹம்மதின் நேரடி வார்த்தைகளான ஹதீஸ் (நபிமொழி)களால் பெரிதும் கவரப்பட்டோம்.

o  பல வகையான அரேபிய இந்தோனேசிய மற்றும் ஆப்பிரிக்க உணவுகளை ருசித்து உண்டோம். அத்தகைய உணவுகளை எங்கள் வாழ்நாளில் நாங்கள் சுவைத்ததே இல்லை. அவர்கள் அருந்தும் தேநீர் கூட தேனாமிர்தமாக இருந்தது. அதையும் அவர்கள் ரசித்து, ருசித்து அருந்தினார்கள்.

o  மேற்கத்திய பெண்கள் பெற்றுவரும் சொத்து ரிமையை விட அதிகமான சொத்துரிமையை, முஸ்லிம் பெண்கள் பெற்றுக் கொள்கிறார்கள் என்ற உண்மையையும் புரிந்து கொண்டோம்.

o  ஏன் முஸ்லிம்கள் பன்றி இறைச்சி உண்ப தில்லை என்பது முதல், முஸ்லிம்களின் விடுமுறை நாள்கள் எவை, முஸ்லிம் பெண்கள் ஏன் தலையை மூடியவாறு உடையணிகிறார்கள் என்பது வரை யிலான பல்வேறு வினாக்களுக்கு விடைகள் பெற்றோம்.

o  சில முஸ்லிம் குடிமக்களை அவர்களது சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தி பல நாள்களாக, பல வாரங்களாக, ஏன், சிலநேரம் பல மாதங்களாக தடுப்புக் காவலில் வைத்திருந்த போது, அவர்களிடமிருந்து இஸ்லாமின் உன்னதத் தன்மையை உணர்ந்தோம்.

o   பல்லாயிரக்கணக்கான அமெரிக்க முஸ்லிம் களின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்த போது, அவர்களது கடன் திட்டங்கள், கணக்குகள் அனைத்திலும் வட்டி தவிர்ந்து கொள்ளப்பட்டி ருந்தமையைக் கண்டு, எப்படி இப்படி என்று ஆச்சரியப்பட்டோம்.

o   சில நூற்றாண்டுகளுக்கு முன்பு ஐம்பெரும் தூண்களாகக் கருதப்படும் இஸ்லாமின் ஐந்து கடமைகளே முஸ்லிம்களின் ஆன்மிக வாழ்வை வழிநடத்துகின்றன என்ற கருத்தில் நம்பிக்கை யற்று இருந்தோம். ஆனால், அது உண்மை என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொண்டோம்.

o  இறுதியாக, 'என்னே, இனிமையான மக்கள்; என்னே, இனிய மார்க்கம்' என்று அதிசயித்து, 'இத்தருணத்தில் இஸ்லாமையும் அதன் உயரிய கலாச்சாரத்தையும் எங்களுக்குக் கற்றுத் தந்த மைக்காக அமெரிக்க வாழ் முஸ்லிம்களுக்கு எங்கள் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி கூறுகிறோம்' என அறிக்கை முடிவுற்றிருந்தது.
(இலங்கை அல்ஹஸனாத் -ஜன 2017 இதழ் - இரண்டு பக்கக் கட்டுரையின் சுருக்கம்)

o   சுப்ஹானல்லாஹ்! என்னே, ஆச்சரியம்...!

காற்று வாங்கப் போனேன்; ஒரு கவிதை வாங்கி வந்தேன் என்ற பாடலுக்கொப்ப, 'உளவு பார்க்கச்

சென்றோம்; முழு நிலவு பார்த்து நின்றோம்' என்ற உன்னத நிலை பாருங்கள்...!

அனைத்துப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே...!

source:  https://www.facebook.com/jalaludeen.jalal.18/posts/1135071539937630