வாசனை PDF Print E-mail
Wednesday, 28 December 2016 07:48
Share

வாசனை

       ரஹ்மத் ராஜகுமாரன்      

மனிதனது நாசி எவ்வளவு தூரத்திற்கு வாசனையை நுகரும் சக்தியைக் கொண்டிருக்கும்?

எவ்வளவு தூரம் என்பது கணக்கு அல்ல! எவ்வளவு நுட்பம் என்பதுதான் கணக்கு! நுகருவதற்கு வாசனை மூக்கை வந்து சேர வேண்டியது ஒரு Must (கட்டாயம்).

பஸ் ஸ்டாண்டில் போடும் கறி, மசால்வடை காற்றினில் கலந்து உங்கள் வீட்டுக்குள் வந்து மூக்கினில் நுழைந்துதான் அதை உங்களால் நுகர முடியும் ஆனால் கொஞ்சம் வாசனைப் போதும் ஒரு மில்லியன் காற்று மாலிக்யுல்களில் ஒரே ஒரு மாலிக்யுல் மசாலா வாசனை மூக்கின் அருகில் வந்தால் போதும் உடனே நாக்கு வேறு உமிழ் நீர் சுரந்து 'நான் ரெடி 'நீங்கள் வடை வாங்க ரெடியா?"

நுகரும் சக்தி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி சிவப்பிந்தியர்களில் ஒரு பிரிவினர் வேட்டையாடும் போது முகர்ந்து பார்த்தே கொஞ்ச தூரத்தில் மான் இருக்கிறது இந்தப் திரும்பி கொஞ்ச தொலைவில் உள்ள பொந்துக்குள் முயல் ஜோடியாக இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பார்கலாம்.

இருப்பினும் மனிதனுடைய மோப்ப சக்தி மற்ற மிருகங்களை விட ரொம்ப குறைவு.

நாயகளுக்கு நம்மை விட 100 மடங்கு மோப்ப சக்தி கொண்டது அதனால்தான் காவல்துறையில் நாய்க்கென தனி பிரிவு உள்ளது.

நம் மூக்கினுள்ளே கூரைப் பகுதியில் அரை சதுர அங்குல அளவுக்கு இருக்கும் நுகரும் பிரதேசம் மிக அதிசயமானது.

மூக்கின் உள்ளே நுழைந்து பார்த்தால் பக்கததுக்கு சுமார் 5 கோடி Nerve fibres சிலிர்த்துக் கொண்டிருக்கும் இவை ஆயிரக்கணக்கான வாசனைகளை வித்தியாசம் கண்டுபிடிக்கக் கூடியவை.

இது பாண்ட்ஸ் பவுடர் இது மதுரை மல்லி இது திருநெல்வேலி சாந்தி அல்வா பார்க்காமலே சொல்லி விட முடியும் அதுவும் இருட்டில் கொஞ்சம் அதிகமாக மோப்ப சக்தி வந்து விடுமாம் இது ஏன்னு ரொம்பவும் யோசிக்காதீங்க.

"நீங்கள் என்னுடைய இந்தச் சட்டையைக் கொண்டு போய் என் தந்தை முகத்தில் போடுங்கள் அதனால் உடனே அவர் இழந்த பார்வையை அடைந்து விடுவார்... (அதைப் பெற்றுக் கொண்டு)

அவர்களின் ஒட்டகங்கள் (எகிப்திலிருந்து) பிரியவே அவர்களின் தந்தை (யஃகூப் அலை) "இதோ யூசுஃப் உடைய வாடையை நிச்சயமாக நான் நுகர்கிறேன். இதனால் என்னை நீங்கள் பைத்தியக் காரனென்று எண்ணாமலிருக்க வேண்டுமே! என்றார். (குர்ஆன் 12: 93,94)

இதைச் சொல்லும் போது நபி யாஃகூப்  அலைஹிஸ்ஸலாம்  சிரியாவில் இருந்தார்கள் இது நபியின் மோப்ப சக்தியை அல்லாஹ்தான் அறிவான்.