Home கட்டுரைகள் அரசியல் அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தல்!
அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தல்! PDF Print E-mail
Wednesday, 02 November 2016 08:21
Share

அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தல்!

[ ஹிலாரி வென்றால் அவரது வலதுகரமான ஹூமா அப்தின் சீஃப் ஆஃப் ஸ்டாஃப் ஆகுவது உறுதியான ஒன்று. அமெரிக்க ஜனாதிபதிக்கு அடுத்த வலிமையுள்ள, அத்தனை ரகசியங்களும் தெரிந்த, முக்கியமான முடிவெடுக்கின்ற பதவி அமெரிக்க சீஃப்-ஆஃப்-ஸ்டாஃப் பதவிதான். தான் நினைப்பவரை எந்த பதவிக்கும் நியமிப்பதற்கும், பதவி உயர்வு செய்வதற்கும், பதவி இறக்குவதற்குமான அத்தனை அதிகாரங்களும் உள்ள பதவி அது.

ஹூமா அப்தின்    ஒரு இஸ்லாமிக் ஃப்ரதர்ஹூட்டைச் சேர்ந்த, அடிப்படைவாத எண்ணம் கொண்ட முஸ்லிம் பெண்மணி. அவரது பின்னனியில் சவூதி அரேபியா, கத்தார், பாகிஸ்தான் போன்ற நாடுகள் இருக்கின்றன. சவூதி ஏகப்பட்ட பணத்தை ஹிலாரிக்குக் கொடுத்திருக்கிறது. ஹூமாவின் மீது கை வைத்தால் ஹிலாரிக்கு ஆபத்து வரக்கூடும் என்பதால் அவரை யாரும் ஒன்று செய்ய முடியாது.

ஹிலாரி வென்றால் அவரது வலதுகரமான ஹூமா அப்தின் சீஃப் ஆஃப் ஸ்டாஃப் ஆகுவது உறுதியான ஒன்று. அமெரிக்க ஜனாதிபதிக்கு அடுத்த வலிமையுள்ள, அத்தனை ரகசியங்களும் தெரிந்த, முக்கியமான முடிவெடுக்கின்ற பதவி அமெரிக்க சீஃப்-ஆஃப்-ஸ்டாஃப் பதவிதான். தான் நினைப்பவரை எந்த பதவிக்கும் நியமிப்பதற்கும், பதவி உயர்வு செய்வதற்கும், பதவி இறக்குவதற்குமான அத்தனை அதிகாரங்களும் உள்ள பதவி அது.

என்.ஜி.ஓ.க்கள் மூலம் இந்தியாவிற்குத் தொல்லைகள் தந்த ஹிலாரி மீண்டும் பதவிக்கு வருவது இந்தியாவிற்கு சாதகமான ஒன்றல்ல. மோடிக்குத் தொல்லைகள் காத்திருக்கிறது. ]

அடுத்த  அமெரிக்க அதிபர்  தேர்தல்!

அடுத்த  அமெரிக்க அதிபர் தேர்தல் ஏறக்குறைய முடியும் தருவாயை அடைந்திருக்கிறது. என் வாழ்நாளில் இதுபோன்றதொரு மோசமான அமெரிக்கத் தேர்தலைக் கண்டதில்லை. என்னைப் போலவே பல அமெரிக்கர்களுக்கும் அதுவே எண்ணமாக இருக்கலாம். ஹிலாரியும், ட்ரம்பும் கடைசிக் கட்டப் பிரச்சாரத்தில் மாநிலம், மாநிலமாகச் சென்று கொண்டிருக்கிறார்கள். அடுத்த அமெரிக்க அதிபர் யாரென்று இன்னும் ஒரு பத்து நாட்களுக்குள் தெரிந்துவிடும்.

அமெரிக்க ஜனாதிபதியின் ஒரு கண்ணசைப்பு பல இலட்சக்கணக்கானவர்களின் மரணத்திற்குக் காரணமாகலாம். அல்லது இலட்சக்கணக்கானவர்களின் வாழ்விற்கும் காரணமாகலாம். அதற்கான வரலாற்று ஆதாரங்கள் பல உண்டு. பெருமளவிற்கு உலகப் பொருளாதாரம் அமெரிக்கப் பொருளாதாரத்துடன் பின்னிப் பிணைந்திருக்கிறது. எனவே அமெரிக்கத் தேர்தலை உலகம் அத்தனை எளிதில் உதாசீனப்படுத்திவிட முடியாது.

இந்தத் தேர்தலில் போட்டியிடுகிற இரண்டு பேர்களும் ஒவ்வொரு வகையில் தகுதியற்றவர்கள் என்றாலும், சென்ற வாரம் வரைக்கும் ஹிலாரி வெல்வது ஏறக்குறைய உறுதியாக இருந்தது என்றே நினைக்கிறேன்.

சென்ற வாரம் எஃப்.பி.ஐ. ஹிலாரியின் அழிக்கப்பட்ட ஈமெயில் குறித்த விவகாரங்களைக் கையில் எடுத்த பின்னர் நிலைமை கொஞ்சம் மாறியிருக்கிறது. இருந்தாலும் இறுதியில், கொஞ்சம் இழுபறிக்குப் பிறகு, ஹிலாரியே வெல்வார் என்பது என்னுடைய தனிப்பட்ட கணிப்பு. அது தவறாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது.

ஹிலாரி செகரட்டரி ஆஃப் ஸ்டேட்டாக இருந்த காலத்தில் அவரது தனிப்பட்ட மெயில் சர்வரில் இருந்து அனுப்பப் பட்ட முப்பத்து மூன்றாயிரம் ஈமெயில்களை அழித்த விவகாரம் அது. அமெரிக்க அரசாங்கத்தின் அமைச்சரவையில் பணிபுரிகின்ற எவரும் தனிப்பட்ட முறையில், தனிப்பட்டதொரு சர்வரில் இருந்து ஈமெயில் அனுப்புவது கடுமையான குற்றம்.

எதிரி நாடுகள் எதுவும் தனிப்பட்ட ஈமெயில் சர்வர்களை ஹேக் செய்வது அரசாங்க ரகசியங்களைக் கைப்பற்றலாம் என்கிற காரணத்தால் பலவித பாதுகாப்புகளைக் கொண்ட அரசாங்கத்து ஈமெயிலை மட்டுமே அவர்கள் உபயோகிக்க வேண்டும் என்பது விதி. ஆனால் ஹிலாரி அந்த விதியை உதாசீனப்படுத்தியது மட்டுமல்லாமல், விஷயம் வெளியே கசிந்தவுடன் அதிலிருந்த முப்பதாயிரத்திற்கும் மேலிருந்த ஈமெயில்களை அழித்தார்.

இன்றைய டெக்னாலஜியின் உதவி கொண்டு சாதாரணமாக அழிக்கப்பட்ட எந்தவொரு தகவலையும், ஈமெயிலையும் மீண்டும் தோண்டி எடுக்கலாம். ஆனால் ஹிலாரியும், அவரைச் சார்ந்தவர்களும் BleachBit என்கிற சாப்ட்வேரின் துணை கொண்டு ஈமெயில்களைச் சுத்தமாகத் துடைத்தார்கள். எல்லா ஈமெயிலும் அழிந்து போனதால் ஹிலாரிக்கு எதிராக எஃப்.பி.ஐ-யினால் ஒன்றும் செய்ய இயலவில்லை. தேர்தல் காலம் நெருங்க, நெருங்க அந்த விவகாரம் மெல்ல, மெல்ல மறைக்கப்பட்டது. மறக்கடிக்கப்பட்டது. நீங்களோ அல்லது நானோ பணிபுரியும் அலுவலகத்தில் எந்தவொரு முக்கிய ஈமெயிலையும் அழித்தால் குறைந்தது இருபது வருட ஜெயில் தண்டனை உண்டு என்பதினை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஹிலாரியை யாராலும் ஒன்றும் செய்ய இயலவில்லை.

அந்த மெயிலில் இருந்த தகவல்கள் அனைத்தும் ஹிலாரியின் ஊழல் விவகாரங்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தனது பதவியைப் பயன்படுத்திக் கொண்டு ஹிலாரி, அவரது கிளிண்டன் ஃபவுண்டேசனுக்காக ஏராளமான பணத்தை வளைகுடா நாடுகளில் இருந்து வாங்கிய தகவல்கள், மற்றும் லிபியாவிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆயுதம் கொடுத்த விவகாரங்கள் போன்ற மிக மோசமான விவகாரங்கள் அந்த ஈமெயில்களில் இருந்தன என்பதனை விக்கிலீக் கண்டுபிடித்து வெளியிட்டது. இருந்தாலும் அந்த விவகாரம் மிகத் தந்திரமாக அமுக்கப்பட்டது.

இதற்கிடையில் ஹூமா அப்தீன் என்கிற மிக முக்கியப் பெண்மணியைப் பற்றியும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஹூமா, ஹில்லாரியின் வலது கரம் போன்ற பெண்மணி. அமெரிக்க காங்கிரஸ்மேனாக இருந்த அந்தோணி வீனரின் மனைவி. இந்த அந்தோணி வீனர் என்கிற ஆசாமி பெண்கள் விவகாரத்தில் கொஞ்சம் அப்படி, இப்படியான ஆசாமி.

இந்த மாதிரியான விவகாரங்களில் சிறுவர்களை அறிந்தோ அல்லது அறியாமலோ ஈடுபடுத்துவது மிகப்பெரும் குற்றம். எனவே போலிஸ் அந்தோணி வீனரின் கம்ப்யூட்டரைத் தோண்ட ஆரம்பித்து, ஆச்சரியமூட்டும் வகையில் ஹிலாரியால் அழிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட ஈமெயில்களைக் கண்டுபிடித்தார்கள். ஏன், எதற்காக, எப்படி என்பதெல்லாம் யாருக்கும் புரியாத ரகசியங்கள். அடிப்படையில் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாகிவிட்டது. விடுவாரா ட்ரம்ப்? அவர் சத்தம் கொடுக்க ஆரம்பிக்க, ஹிலாரியும், ஒபாமாவும், அமெரிக்க அட்டர்னி ஜெனரலும் அந்த விவகாரத்தை அமுக்க ஏகப்பட்ட பிரயத்தனங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பொதுவில் கிளிண்டன்களுக்கு எதிரான, அல்லது அவர்களுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய, அவர்களது விஷயம் அறிந்தவர்களை சத்தமில்லாமல் வெளியுலகிற்கு அனுப்புவது தொடர்ந்து நடக்கிற ஒன்று. சென்ற வாரம் விக்கிலீக்கின் நிறுவனர் அப்படித்தான் மேலுலகம் போனார்.

இன்னொரு முக்கிய விக்கிலீக்கரான ஜூலியன் அசாஞ்சே லண்டனின் ஈக்வெடார் தூதரகத்தில் ஒளிந்து கொண்டிருக்கிறார். அல்லது நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார். ஹூமா அப்தினை அப்படி ஒன்றும் செய்து விட முடியாது. ஹூமா ஒரு இஸ்லாமிக் ஃப்ரதர்ஹூட்டைச் சேர்ந்த, அடிப்படைவாத எண்ணம் கொண்ட முஸ்லிம் பெண்மணி. அவரது பின்னனியில் சவூதி அரேபியா, கத்தார், பாகிஸ்தான் போன்ற நாடுகள் இருக்கின்றன. சவூதி ஏகப்பட்ட பணத்தை ஹிலாரிக்குக் கொடுத்திருக்கிறது. ஹூமாவின் மீது கை வைத்தால் ஹிலாரிக்கு ஆபத்து வரக்கூடும் என்பதால் அவரை யாரும் ஒன்று செய்ய முடியாது.

ஹிலாரி வென்றால் அவரது வலதுகரமான ஹூமா அப்தின் சீஃப் ஆஃப் ஸ்டாஃப் ஆகுவது உறுதியான ஒன்று. அமெரிக்க ஜனாதிபதிக்கு அடுத்த வலிமையுள்ள, அத்தனை ரகசியங்களும் தெரிந்த, முக்கியமான முடிவெடுக்கின்ற பதவி அமெரிக்க சீஃப்-ஆஃப்-ஸ்டாஃப் பதவிதான். தான் நினைப்பவரை எந்த பதவிக்கும் நியமிப்பதற்கும், பதவி உயர்வு செய்வதற்கும், பதவி இறக்குவதற்குமான அத்தனை அதிகாரங்களும் உள்ள பதவி அது.

என்.ஜி.ஓ.க்கள் மூலம் இந்தியாவிற்குத் தொல்லைகள் தந்த ஹிலாரி மீண்டும் பதவிக்கு வருவது இந்தியாவிற்கு சாதகமான ஒன்றல்ல. மோடிக்குத் தொல்லைகள் காத்திருக்கிறது. மீண்டும் இவாஞ்சலிஸ்ட்களும், சோனியா மொய்னோ போன்றவர்களும் அடுத்த ஆட்டத்தைத் துவக்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

எல்லாரையும் விட பாகிஸ்தான் ஹூமாவை எதிர் நோக்கிக் காத்துக் கிடக்கிறது. எல்லா விதத்திலும் அடிவாங்கித் துவண்டு கிடக்கும் பாகிஸ்தானுக்கு ஹூமாவே நம்பிக்கை நட்சத்திரம். அதையும் விட, ஒபாமா மூலம் அமெரிக்க அதிகாரத்தைக் கைப்பற்றிய முஸ்லிம்கள், ஹூமா அப்தின் மூலம் அதனைத் தக்க வைத்துக் கொள்வது இன்றைக்கு முற்றிலும் சாத்தியமாகியிருக்கிறது.

அமெரிக்க தேர்தல் முடிவுகளை உலகம் ஆவலுடன் எதிர் நோக்கியிருக்கிறது. என்னையும் சேர்த்து.

Narenthiran PS சுவற்றிலிருந்து..