Home கட்டுரைகள் நாட்டு நடப்பு அல்லாஹ் அவனுடைய மார்க்கத்தை நிலை நிறுத்தியே தீருவான்
அல்லாஹ் அவனுடைய மார்க்கத்தை நிலை நிறுத்தியே தீருவான் PDF Print E-mail
Monday, 31 October 2016 10:50
Share

அல்லாஹ் அவனுடைய மார்க்கத்தை நிலை நிறுத்தியே தீருவான்

பொது சிவில் சட்டத்தை பிஜெபி விவாதப்பொருளாக்கியது இந்திய மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்ல கிடைத்த நல்ல வாய்ப்பாக பார்க்கிறேன் அல்ஹம்துலில்லாஹ்.

தலாக் என்றால் என்ன? அல்குர்ஆனில் விவாகரத்து பற்றி என்ன சொல்லப்பட்டு உள்ளது என்பதை அனைத்து டிவிக்களும் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

இன்னும் பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகள் சுதந்திரம் பற்றி சொல்லச் சொல்ல சாதாரன பாமரமக்கள் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றுவிடுகிறார்கள்.

ஏதோ ஒன்றை நினைத்து ஏதோ ஒன்றை செய்துவிட்டதை இப்போது பிஜெபி அரசு உணர்கிறது. ஆனால் நிலமை பிஜெபியின் கைமீறி போய்விட்டது.

யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அல்லாஹ் அவனுடைய மார்க்கத்தை நிலை நிறுத்தியே தீருவான் என்பது நிறுபிக்கப்பட்டுள்ளது.

ஒரு பெண் தலாக் செய்துவிட்டால் மீண்டும் கணவனுடன் சேர இன்னொரு ஆணுடன் உவு கொண்டுவிட்டு வரவேண்டும் இதுதான் ஹலாலான வழி, சரியத் சட்டம் என்று ஆச்சாரியா போன்றவர்கள் எந்த ஆதாரமும் காட்டாமல் பிதற்றி அதற்கு  டஜன்கனக்கில் பல்பு வாங்கியதும் நடந்தது.

சொந்த காசில் சூனியம் வைப்பது என்று ஒரு பழமொழி சொல்வார்கள். அது மக்கள் மன்றம் நடத்திய தந்தி டிவிக்கும் பாண்டேக்கும் மிக பொருத்தமாக இருந்தது.

இரண்டு பிஜெபிகாரர்களை நிகழ்ச்சிக்கு அழைத்த தந்திடிவி தமீமுல் அன்சாரியோடு சேர்த்து தவ்ஹித் ஜமாத்தை சேர்ந்த ஒருத்தரையும் அழைத்து இருந்தால் பாண்டேயின் டவுசரை கழட்டி காயப்போட்டு இருப்பார்கள்.

பட்டி தொட்டி எல்லாம் இஸ்லாமிய சட்டத்தை கொண்டுபோகவும் தலாக் சட்டம் பற்றி புறியாமல் இருந்த முஸ்லிம்களுக்கு தெளிவை ஏற்படுத்தி தரவும் வாய்ப்பை உறுவாக்கி கொடுத்த பிஜேபிக்கு நன்றியை சொல்லிக் கொள்வோம்.

இரட்டை கோபுரம் இடிபட்டபிறகு அமெரிக்காவில் இஸ்லாத்தை நோக்கி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தார்கள்.

இந்த பொதுசிவில் சட்டம் என்ற பெயரில் இஸ்லாமிய சட்டத்தை ஒழித்துவிடலாம் என நினைத்த பிஜெபியின் நிலை ஆப்பசைத்த குரங்கின் நிலையாக ஆகிவிட்டது.

இதன் மூலம் இஸ்லாத்தை விளங்கி மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை நோக்கிவரத்தான் போகிறார்கள் இன்ஷா அல்லாஹ்.

நன்றி:  அன்சாரி