Home இஸ்லாம் இம்மை மறுமை நிச்சயிக்கப்பட்டது நிழலாகத் தொடரும்
நிச்சயிக்கப்பட்டது நிழலாகத் தொடரும் PDF Print E-mail
Wednesday, 19 October 2016 07:28
Share

நிச்சயிக்கப்பட்டது நிழலாகத் தொடரும்

நம்முடைய பிறப்பு; நம்முடைய விருப்பு, வெறுப்பிற்கிணங்க அமையவில்லை. நம்முடைய இறப்பும் நம்முடைய விருப்பு, வெறுப்பிற்கிணங்க அமையப்போவதில்லை.  அதாவது நம்முடைய இவ்வுலக ஆரம்பமும், முடிவும் நம்முடைய விருப்பு, வெறுப்பிற்கிணங்க இல்லை. நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை

ஆனால், இவ்வுலக வாழ்வில் நாம் நினைப்பது அனைத்தும் நம்முடைய எண்ணம், சொல், செயல், நம்முடைய மனைவி, மக்கள், உற்றார், உறவினர்கள், அதைச் சார்ந்த சுற்றுப்புற சூழல்கள், நிகழ்வுகள் அனைத்தும் நம்முடைய விருப்பு வெறுப்பிற்கிணங்க நிகழவேண்டும், அமைய வேண்டும் என எதிர்பார்க்கிறோம். அதற்கான முயற்சிகளில் மும்முரமாக ஈடுபடுகிறோம்.

நம்முடைய இவ்வுலக வாழ்விற்கான வாழ்வாதாரங்களான பொன், பொருள், துணைவன், துணைவி, இடம், உணவு அனைத்தும் நம்முடைய தாயின் கருப்பையில் ஏக வல்லோனால் நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், அதனை செம்மையாக, முழுமையாக அடைய வேண்டிய எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கிறோம். அனைத்து உத்திகளையும் பிரயோகித்து பெற முயற்சிக்கிறோம்.

வாழ்வாதாரங்கள் எவ்வளவு, எங்கு, எப்படி, எப்போது கிடைக்குமென தெள்ளத்தெளிவாக அறியாத நிலையிலும் அதனைப் பெற்று நம்முடைஅய இவ்வுலக வாழ்வில் சுகபோகத்துடன் வாழ ஆசைப்படுகிறோம். அதற்காக முழு முயற்சியில் கடுமையாக உழைக்கிறோம்.

தனது எல்லா ஆசைகளும், தேவைகளும் முழுமையாக பூர்த்தியாக வேண்டும் என ஒவ்வொரு மனிதனும் விரும்புகின்றான். அதனை நிறைவேற்ற தனது உதிரத்தை வேர்வையாக்கி உழைக்கின்றான். இவையனைத்தும் தனது விருப்பப்படி நடக்க வேண்டுமென முயற்சிக்கிறான். ஆனால், வழிமுறைகளில் அந்த மாமனிதரைப் பின்பற்றுவது போன்று இதிலும் பின்பற்றிட கடமைப்பட்டுள்ள்ளோம்.

இவ்வுலக வாழ்வின் முடிவில் நாம் நிச்சயமாக நாம் மரணத்தை சந்தித்தே ஆக வேண்டும் என்பதை சிறிதும் நினைப்பதில்லை. மாறாக மரணம், இறப்பு, சாவு என்பதை அசூசையாக, அபச்சாரமாக, தீயதாகவே கருதுகிறோம்.

இவ்வுலகில் நமக்குக் கிடைக்கும் வாழ்வாதாரங்கள் நல்லதா? கெட்டதா? அதன் விளைவுகள் என்ன? என்பதை அறியாத மனிதன் அதனை முழுமையாக பெற முயற்சிக்கிறான். ஆனால், நம்முடைய இறுதி முடிவு, மரணம் நல்லதாக அமைய வேண்டும் என்பதை சிந்திப்பதே இல்லை. மனிதனின் இவ்வுலக வாழ்வின் முடிவான மரணத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரவோ, அதனைத் தடுத்து நிறுத்தவோ, ஏன்? சிறிது காலம் தாமதம் செய்யவோ கூட முடியாது.

ஏகன் இறைவனால் என்றோ நிச்சயிக்கப்பட்ட மரணம் நொடிப்பொழுதில், நாம் எதிர்பாராத நிலையில் நம்மை சந்திக்கும். திடீரென தாக்கும். உலக இச்சைகலீல் மூழித் திளைக்கும் மனிதன், மரணத்தைக் கண்டு பயப்படுகிறான், விரண்டோடுகிறான். நாம்மால், மரணத்திலிருந்து தப்பிக்கவே முடியாது. இதனை அல்லாஹ் படம் பிடித்துக் காட்டுவதைப் பாரீர்.

"நீங்கள் எதைவிட்டும் விரண்டோடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களை சந்திக்கும் எனக் கூறுவீராக.."

இதே கருத்தினை இறைமறை மற்றோரிடத்தில், "நீங்கள் எங்கிருந்த போதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும், நீங்கள் மிகவும் உறுதியாகக்கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்தபோதிலும் சரியே". (அல்குர்ஆன் 4:78)

"ஒருவரை மரணம் சந்திக்கின்றபோது, அதனை ஏற்க மறுத்து அதற்குப் பகரமாக பூமி நிறைய தங்கத்தையே ஈடாகக் கொடுத்தாலும் ஏற்கப்படமாட்டாது. அவனுடைய காலக்கெடு வாழ்வின் தவணை முடிந்து விட்டது என உயிர் பிடுங்கப்படும்" (அல்குர்ஆன் 3:91) என்பது இறைவனின் நியதியாகும். இதிலில்ருந்து மனித இனத்தில் உயர்ந்தவர்களான நபிமார்களும் கூட விதிவிலக்கல்ல.

காலக்கெடு

இந்த உலகம் எத்தனியோ மனிதர்களின் இறுதி யாத்திரைகளை இமை கொட்டாமல் பார்த்துக்கொண்டே இருக்கிறது. இன்று யாருடைய மரணத்திற்காகவோ ஒருவன் அழுகின்றான். சில காலங்களுக்குப்பின் இவனே சவமாகிவிட வேறு யாரோ அழுது கொண்டிருக்கிறார்கள். இது உலகின் கடைசி மனிதன் உள்லவரை நிகழ்ந்துகொண்டே தான் இருக்கும் என்பதை யாராவது தடுத்து நிறுத்த முடியுமா?

ஊரும், உறவும் உற்றாரும், பெற்றோரும், ஜனாஸா, மய்யித், டெட்பாடி, பிணம் போன்ற வார்த்தைகளைச் சொல்லி உயர்திணையாய் இருந்தவனை அஃறிணையாக்கி விடுகிறார்கள்.

இதோ நம்மைப்படைத்த இறைவன் சொல்வதை மீண்டும் கேளுங்கள்;

"எங்கிருந்தபோதும் மரணம் உங்களை அடைந்தே தீரும். உறுதி மிக்க கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே" (அல்குர்ஆன் 4:78)

"நீங்கள் எந்த மரனத்தை விட்டு விரண்டோடுகிறீர்களோ அந்த மரணம் நிச்சயமாக உங்களை சந்தித்தே தீரும். (அல்குர்ஆன் 62:8)

மனிதர்கள் மய்யித்துகளை அடக்கம் செய்யமுடியுமே தவிர மரணத்தை அடக்கம் செய்ய முடியாது. சடலங்களைத்தான் புதைக்க முடியுமே தவிர சாவைப் புதைக்க முடியாது.

www.nidur.info