ஹஸீனா அம்மா பக்கங்கள் (5) |
![]() |
![]() |
![]() |
Saturday, 17 September 2016 07:06 | |||
ஹஸீனா அம்மா பக்கங்கள் (5) எது, எதில் மறைக்கப்பட்டுள்ளது? பெண்களின் வெட்கம் அவளின் படைப்பிற்குள், பெண்களின் வாக்குறுதி அவளின் பரிசுத்தத்தன்மைக்குள், பெண்களின் தைரியம் அவளின் பொறுமைக்குள், பெண்களின் கண்ணியம் அவளின் மன்னிக்கும் தன்மைக்குள், பெண்களின் அழகு அவளின் குணத்திற்குள், பெண்களின் ஆற்றல் அவளின் உறுதிக்குள், பெண்களின் சிறப்பு அவளின் முன்யோசனைக்குள், பெண்களின் மடத்தனம் அவளின் பேச்சிற்குள், பெண்களின் அன்பு அவளின் பணிவிடைக்குள், பெண்களின் கவலை அவளின் கண்ணீருக்குள், பெண்களின் சந்தோஷம் அவளின்மீது கொள்ளும் அன்பிற்குள், பெண்களின் உயர்வு அவளின் மெளனத்திற்குள், பெண்களின் வாலிபம் அவளின் சிகை அலங்காரத்திற்குள், பெண்களின் சேட்டை அவளின் புன்சிரிப்பிற்குள், பெண்களின் கைசேதம் அவளின் கனவிற்குள் மறைக்கப்பட்டுள்ளது.
பத்தைத் தடுக்கும் பத்து 1. ''சூரத்துல் ஃபாத்திஹா'' ரப்பின் கோபத்தை தடுக்கும். 2. ''சூரா யாஸீன்'' கியாமத்து நாளில் தாகத்தைத் தனிக்கும். 3. ''சூரா துகான்'' கியாமத்து நாளின் அமளியைத் தடுக்கும். 4. ''சூரா வாகிஆ'' வறுமையைத் தடுக்கும். 5. ''சூரா முல்க்'' கப்ரின் வேதனையைத் தடுக்கும். 6. ''சூரா கவ்ஸர்'' வழக்காளிகளின் வழக்குகளைத் தடுக்கும். 7. ''சூரா காஃபிரூன்'' மரண வேளையில் குஃப்ரைத் தடுக்கும். 8. ''சூரா இக்லாஸ்'' நயவஞ்சத்தைத் தடுக்கும். 9. ''சூரா ஃபலக்'' பொறாமையைத் தடுக்கும். 10.''சூரா நாஸ்'' சந்தேகத்தைத் தடுக்கும். நூல்: கஸீனத்துல் அஸ்ரார்
குறைவான ஆகாரம் குறைவான பேச்சுக்கள் குறைவான பாவங்கள் - அப்துல் ஹக்கீம், சித்தரேவு
''துஆவைத் தவிர வேறு எதுவும் விதியை மாற்றாது. நற்கருமங்களைத் தவிர வேறு எதுவும் ஆயுளை அதிகமாக்காது. மனிதன் பாவச்செயலால் பொருளாதாரத்தை இழக்கிறான்.'' (அறிவிப்பவர்: ஸல்மா ஃபார்ஸி ரளியல்லாஹு அன்ஹு) "நீங்கள் மய்யித்தை பார்க்கச்சென்றால், அப்பொழுது அந்த மய்யித்துக்காக நல்ல துஆச் செய்யுங்கள். ஏனெனில் அந்த நேரத்தில் நீங்கள் செய்யும் துஆவிற்கு மலக்குகள் ஆமீன் கூறுகின்றனர்." (அறிவிப்பவர்: உம்மு ஸல்மா ரளியல்லாஹு அன்ஹா)
ஏழு விஷயங்கள் நன்மைகளின் புதையலாகும் 1. வணக்கத்தில் இக்லாஸ் (மனத்தூய்மை). 2. பெற்றோருக்கு உபகாரம் புரிவது. 3. உறவினர்களைச் சேர்ந்து வாழ்வது. 4. அமானிதத்தை நிறைவேற்றுவது. 5. பாவம் செய்வதில் எவருக்கும் வழிபடாமலிருப்பது. 6. மனோ இச்சையின்படி செயலாற்றாமல் இருப்பது. 7. அல்லாஹ்வை பயந்து, நன்மையை ஆதரவு வைத்து வழிபாட்டில் முயற்சிப்பது. நூல்: தன்பிஹுல் ஙாஃபிலீன்
1. வாயை சுத்தப்படுத்துகிறது. 2. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்கு காரணமாகிறது. 3. ஷைத்தானுக்கு கோபத்தை உண்டாக்குகிறது. 4. மிஸ்வாக் செய்பவனை அல்லாஹ் நேசிக்கிறான். வானவர்களும் அன்பு வைக்கிறார்கள். 5. மிஸ்வாக் கபத்தை நீக்குகிறது. 6. வாயில் நறுமனத்தை உண்டாக்குகிறது. 7. பித்தத்தை நீக்குகிறது. 8. பார்வையை கூர்மையாக்குகிறது. - முஹம்மது முஸ்தஃபா, திருச்சி
www.nidur.info
|