Home கட்டுரைகள் நாட்டு நடப்பு அரசியல் சாசனம் தந்திருக்கும் சட்டத்திற்கு எதிரான தீர்ப்பு!
அரசியல் சாசனம் தந்திருக்கும் சட்டத்திற்கு எதிரான தீர்ப்பு! PDF Print E-mail
Wednesday, 14 September 2016 08:06
Share

அரசியல் சாசனம் தந்திருக்கும் சட்டத்திற்கு எதிரான தீர்ப்பு!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஹஜ் பெருநாள் தொழுகை சென்னை பாரதி கல்லூரியில் இன்று காலை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பேச்சாளர் சகோ.பீ.ஜைனுல் ஆபிதீன் உரை நிகழ்த்தினார். தற்கால நடப்புகளையும் பிரச்சினைகளையும் அலசி ஆராய்ந்த பெருநாள் உரையின் சாராம்சம் இதோ!

இன்றைக்கு இஸ்லாமியர்கள் கொண்டாடும் இந்த பண்டிகைதான் சிறப்பானது. தூய்மையான ஆடைகளை அணிந்து இறைவனை வணங்குவதோடு எங்களின் பண்டிகை முடிந்து விட்டது. நாங்கள் எங்கள் பண்டிகையில் பட்டாசு வெடிக்க மாட்டோம், அதன்மூலம் காற்றை மாசுபடுத்தி பிற மக்களை தொந்தரவு செய்ய மாட்டோம்.

அதுபோல எங்களை நாங்களே துன்புறுத்திக் கொள்ள மாட்டோம். சாயம் தோய்ந்த பொருட்களை நீர் நிலைகளில் கரைத்து நீரை மாசு படுத்த மாட்டோம், பூசனிக்காய் உடைத்து அதனால் ஏற்படும் தீமைகளைச் செய்ய மாட்டோம். ஆனால் எங்கள் பாண்டிகைதான் அதிகாமாக எதிர்க்கப்படுகின்றது.

எங்கள் மத நம்பிக்கைப்படி ஆடு மாடு ஒட்டகங்களைப் பலி கொடுக்கிறோம். அதை நாங்களும் உண்டு ஏழைகளுக்கும் தருகிறோம். மற்ற மதத்தவர்கள் எங்களை விட அதிகமாக பலி கொடுக்கின்றனர். அவற்றை யாருக்கும் பிரையோசானம் இல்லாமல் தீயில் போட்டு பொசுக்குகின்றனர். ஆனால் எங்களை நோக்கி மட்டுமே தடையைப் போடுகிறான்.

ஒட்டகம் அறுக்காதே என்கிறான். ஒட்டகம் பிரச்சினையாக்கப்பட்டதால் மாட்டை விட்டு விட்டான். இல்லாவிட்டால் மாட்டை அறுக்காதே என்பான் அதுவும் இல்லாவிட்டால் ஆட்டை அறுக்காதே என்பான். ஆக எதையாவது சொல்லி நம் பண்டிகையை நிறுத்துவது மட்டுமே அவன் நோக்கம். இதையெல்லாம் சொல்பவன் வெறும் சைவம் மட்டும் சாப்பிடுபவனா என்றால் இல்லை, அவன் அனைத்தையும் தின்பவனாக இருக்கிறான்.

அடுத்து புளுகிராஸ் என்ற மிருகசாதியினர் வெறி நாய் மனிதனைக் கடித்தாலும் நாய்க்கு சாப்போர்ட் பண்ணக் கூடியவர்கள் அவர்கள் முஸ்லிம்களின் பெருநாள் வந்தால் மட்டும்தான் எதிர்க்கிறார்கள். சில பண்டிகையின் போது விலங்குகளை கழுத்தைக் கடித்து துப்புகிறான் அப்போதெல்லாம் இவர்கள் எங்கே இருப்பார்கள் என்றே தெரியாது.

30 லட்சம் பேர் ஒரே நேரத்தில் ஹஜ்ஜின் போது கூடுகிறார்கள். அங்கே ஒரு துண்டு பீடியை பார்க்க முடியுமா? ஒரு சாராய பாட்டிலை பார்க்க முடியுமா? ஒரு சண்டை சச்சரவைப் பார்க்க முடியுமா? ஆனால் இங்கே டாஸ்மாக் கடை திறந்த பிறகுதான் ஊர்வலத்தையே துவக்குகின்றான். நமது மக்கள் தொழுகைக்கு கூடினால் யாரும் கடையை அடைப்பதில்லை. ஆனால் வெறும் 20, 30 பேர் கூடுறான் அவனுக்கு பயந்து கடை அடைக்கப் படுகின்றது.

மும்பையில் ஒரு போலீஸ் அதிகாரியை தண்ணீரில் முக்கி சாகடிக்கப் பார்த்தார்கள், இங்கே சென்னையில் ஒரு போலீஸ் உயரதிகாரியை ரத்தம் சொட்டச் சொட்ட அடித்தார்கள். ஆனால் இதெல்லாம் பூதாகாரமாகக் காட்டப்படுவதில்லை. ஆனால் நமது பண்டிகையை மட்டும் கொச்சைப்படுத்தி காட்டுகிறான். காரணம் நாம் நிம்மதியாக பெருநாள் கொண்டாடக் கூடாது என்பதற்காக!

அடுத்து ஒட்டக பிரச்சினை! மதம் சார்ந்த விசயங்களில் மிருகவதை சட்டப்பிரிவு 25 ன் படி பலியிடுதல் போன்ற மதஉரிமை தொடர்புடையவைகளுக்கு எவ்விதமான கட்டுப்பாடுகளும் இல்லை என தெளிவாக அரசு தரப்பும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தரப்பும் வாதங்களை எடுத்து வைத்த பிறகும் எல்லாவற்றையும் தள்ளுபடி செய்துவிட்டு தடை விதிக்கிறானென்றால் இவர்களெல்லாம் படித்து விட்டு நீதிபதியாக வந்தார்களா அல்லது லஞ்சம் கொடுத்து வந்தார்களா என்று ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. கிராமத்தில் உள்ள பாமர மக்கள் முஸ்லிம்களிடத்தில் மாமன் மச்சான்களாக பழகும் போது இஸ்லாமியர்களுக்கெதிராக துவேசங்களை விதைப்பவர்கள் நகரத்தில் உள்ள படித்தவர்கள்தான்.

அறுவைக் கூடம் இல்லை என்ற காரணத்தைக் காட்டி ஒட்டகம் அறுக்கத் தடை விதிக்கிறான். ஆனால் மாநகாராட்சி, நகராட்சி தவிர கிராமப்புறங்களில் ஆடு மாடு வெட்டவே கூடங்கள் கிடையாது. கடைக்காரர்கள் கடைக்குள்ளேயும் ரோட்டில் போட்டுமே ஆடு மாடுகளை அறுத்து விற்பனை செய்கிறார்கள். இந்த கூடம் இல்லை என்ற காரணத்தை அவர்களுக்குச் சொல்லி வியாபாரத்திற்கு தடை விதிக்க முடியுமா? சொல்லிப்பார்! புரட்சி வெடிக்கும் இன்னொரு சுதந்திரப் போராட்டத்தை இந்த நாடு சந்திக்க வேண்டிவரும். உனக்கு தைரியம் இருந்தால் செய்துபார்.

அடுத்து ஒட்டகம் உணவுப் பட்டியலில் இல்லை என்கிறான். தமிழகத்தில் ஒட்டகம் இல்லை அதனால் உணவுப் பட்டியலில் இல்லை. ஆனால் ராஜஸ்தான் உணவுப் பட்டியலில் இருக்கிறது. ஒட்டகத்தை வெட்டி இங்கே விற்பனை செய்யமுடியாதே தவிர சாப்பிடலாம். எலியை பூனையை காக்கையை சாப்பிடும் குறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா? முடியாது. ஆனால் காக்கா பிரியாணி கடை போட்டால் நடவடிக்கை எடுக்கலாம்.

நீதிமன்றத்தில் மற்றவர்கள் போனால் சட்ட புத்தகத்தை திறந்து வைத்து தீர்ப்பளிக்கிறான். ஆனால் முஸ்லிம்கள் நீதிமன்றத்தை நாடினால் சட்ட புத்தகத்தை மூடி வைத்து விட்டு அவன் இஷ்டப்படி தீர்ப்பளிக்கிறான். முஸ்லிம்கள் நீதிமன்றத்துக்கு வந்திடாதே, உனக்கு எதிராதான் தீர்ப்பளிப்போம். என்று சொல்லாமல் சொல்கிறான், பாபர் மசூதி வழக்கில் இழந்தவனுக்கு ஒரு பங்கு இடித்தவனுக்கு இரு பங்கு என தீர்ப்பளித்தானே அதைப்போல!

ஒட்டகத் தீர்ப்பை காவல்துறை கட்டாயமாக அமுல்படுத்த வேண்டும் என்று சொல்கிறானே, காவிரி தீர்ப்பை இப்படித்தான் அமுல்பாடுத்தினானா? நதி ஓடும் கடைகோடி மடை வரை உள்ளவனுக்கும் அந்த நதியில் உரிமை உண்டு. காவிரி பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள் என்று சொன்னால் நான் தலையிட முடியாது என்று மோடி சொல்கிறார்.

ஒரு நாட்டின் பிரதமர் தலையிடா விட்டால் பின்னர் யார் தலையிடுவது? ஜார்ஜ் புஷ்ஷை வரச் சொல்லலாமா? ஒபாமாவை வரச்சொல்லலாமா? அதுபோல மஹராஷ்டிராவில் நடந்த உரியடி திருவிழாவிற்கு நீதிமன்றம் தடை விதித்த போது ஆளும் சிவசேனா அரசு மத உரிமையில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று சொன்னது.

காவிரிக்கு தீர்ப்பு சொன்ன நீதிமன்றத்துக்கு எதிராக கர்நாடக மக்கள் பிரச்சினையாக்குறானே அதுமாதிரி ஒட்டகத்தை நாங்கள் ஏன் பிரச்சினையாக்கக் கூடாது? ஒட்டகத்தை வைத்து ஆழம் பார்க்கிறான். இன்னைக்கு ஒட்டகம் என்பான் நாளைக்கு மாடு அப்றம் ஆடு கோழின்னு போயி நிப்பான்.

தெளிவாகச் சொல்கிறோம் இந்த நீதிமன்றத் தீர்ப்பை மதிக்க தேவையில்லை, இது சட்டத்திற்கு புறம்பான தீர்ப்பு, நீ என்ன பிரச்சினை செய்தாலும் அறுப்பவர்கள் அறுத்தே தீர்வார்கள். என்ன வேண்டுமானாலும் செய்து கொள். அரசியல் சாசனம் எங்களுக்கு உரிமையைத் தந்திருக்கும் போது அதற்கு மாற்றமாக நீ என்ன தீர்ப்பு சொன்னாலும் அதை ஏற்க மாட்டோம்.

இவ்வாறு சகோ. பீஜே உரையாற்றினார். நிகழ்ச்சியின் இறுதியில் சகோதரி ஒருவர் தன் வாழ்வியலை இஸ்லாத்தின்பால் இணைத்துக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!

- onlinepj