ஹஸீனா அம்மா பக்கங்கள் (2) |
![]() |
![]() |
![]() |
Monday, 22 August 2016 11:49 | |||
ஹஸீனா அம்மா பக்கங்கள் (2) அல்லாஹ் நான்கு வகை மக்கள் மலக்குகளின் துஆ தர்மம் தலைகாக்கும் விரோதிக்கும் உதவுக! பெற்றோரைப் பேணிக்கொள்வீர்களாக! தூங்கி வழியும் முஸ்லிம்களே விழித்துக் கொள்ளுங்கள்! [ வயதான எங்களின் அன்புத் தாயார் ஹஸீனா பீவி அவர்கள் அவ்வப்போது நூல்களைப்பார்த்து எழுதி வைத்திருந்த குறிப்புகளின் தொகுப்பாகும் இது. -adm. nidur.info]
அல்லாஹ் மெய்யாகவே, அல்லாஹ் சாந்தமானவன். சாந்தமுள்ள மனிதனை நேசித்து, அவனுடன் பிரியமாய் இருக்கின்றான். ''உண்மையுடன் என்னை எழுப்பிய அல்லாஹ்வின் மீது ஆணையாகக் கூறுகிறேன், தாய்ப்பறவை தன் குஞ்சை நேசிப்பதைவிடத் தன் அடியார்களை அல்லாஹ் அதிகமாக நேசிக்கின்றான்." நீங்கள் தர்மம் கொடுங்கள், நான் உங்களுக்குக் கொடுப்பேன்" என்று இறைவன் கூறுகின்றான். ஆண்டவனுடைய இரண்டு கைகளும் நிரைந்திருக்கின்றன. இரவும் பகலும் கொடுத்தாலும் (அவனுடைய செல்வம் குறையாது). அல்லாஹ் தூய்மையானவன். தூய்மையுள்ளோரை நேசிக்கிறான். ஒரே இறைவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று அறிந்து மரணமடைகின்றவன் சொர்க்கத்திற்குச் செல்வான்.
நான்கு வகை மக்கள் 1. இம்மையிலும் செழிப்பான வாழ்க்கை, மறுமையிலும் செழிப்பான வாழ்க்கை பெறுபவர்கள். 2. உலகில் செழிப்பான வாழ்க்கை கிடைத்து, மறுமையில் நெறுக்கடியான வாழ்க்கை கிடைக்கப் பெறுபவர்கள். 3. இவ்வுலகில் சிரமமான வாழ்க்கையும், மறுமையில் வசதியான வாழ்க்கையும் கிடைக்கப் பெறுபவர்கள். 4. இம்மையிலும் நெருக்கடி, மறுமையிலும் நெருக்கடியான வாழ்க்கை பெறுபவர்கள். (நூல்: கஜுல் உம்மால்)
மலக்குகளின் துஆ "அனுதினமும் அதிகாலை இரு மலக்குகள் (வானத்திலிருந்து) இறங்குகின்றனர். ஒருவர், "யா அல்லாஹ்! தர்மம் செய்பவர்க்கு பிரதி பலனைக்கொடு" என்று ''துஆ''ச் செய்கிறார். மற்றொருவர், "யா அல்லாஹ்! தேக்கி வைப்பவரின் பொருளை அழித்துவிடு" என்று ''துஆ''ச் செய்கிறார் என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள். (நூல்: மிஷ்காத்)
தர்மம் தலைகாக்கும் "தர்மம் செய்வதற்காக துரிதப்படுத்துவீர்களாக. நிச்சயமாக துன்பம் தர்மத்தைத் தாண்டிச் செல்லாது" நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருவுளமானதாக அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் திருவுளமானார்கள்; தான தர்மம் செய்வது பொருளை குறைத்து விடாது. மன்னித்து விடுவதானது மனிதனது கண்ணியத்தை அதிகரிக்கச் செய்யும். அல்லாஹ்வுக்காகப் பணிந்து செல்பவரின் அந்தஸ்தை அல்லாஹ் உயர்த்தியே தவிர விடுவதில்லை. (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு)
விரோதிக்கும் உதவுக! உங்களில் எவரெல்லாம் (மார்க்கத் துறையில்) மேன்மைக்குறியவர்களாகவும்; (உலகியல் துறையில்) வசதி பெற்றவர்களாகவும் இருக்கின்றனரோ, அவர்கள் "சுற்றத்தார்களுக்கும், எளியவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (ஹிஜ்ரத்) நாடு துறந்தவர்களுக்கும் கொடுத்துதவ மாட்டோம்" என சத்தியம் செய்ய வேண்டாம். அவர்களை மன்னித்து விடுவீர்களாக! (பிறர் செய்த தவறுகளை) மறந்துவிடுவார்களாக! உங்கள் தவறுகளை அல்லாஹ் மன்னித்து விடுவதை நீங்கள் விரும்ப வில்லையா? அல்லா ஹ் மன்னிப்பவனும், குருபையாளனுமாவான். (அல்குர்ஆன் -ஸூரத்துன் நூர்)
தன் பெற்றோரின் நன்மைக்காக துஆச் செய்யாமல் இருப்பது நிச்சயமாக ரிஜ்க் - உணவு விஸ்தீர்ண பரக்கத்தை தடை செய்கிறது. (நபிமொழி) "யார் தன் தாயைவிட மனைவியை சிறந்தவள் என்று கருதுகிறாரோ, அவரை அல்லாஹ்வும், மலக்குகளும் சபிக்கின்றனர். அவரின் எந்த வணக்கமும் அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. பெற்றோர்களைப் பேணாமல் இருப்பது இம்மை மற்றும் மறுமைப் பேறுகளை இழக்கச் செய்கிறது.
தூங்கி வழியும் முஸ்லிம்களே விழித்துக் கொள்ளுங்கள்! துயில் கொண்ட மனிதர்களே மெளத் வந்து நெருங்கும் முன்னே வட்டி வாங்கும் செயல் வள்ள நபி சொன்ன சொல்லை கன்னிப்பெண்ணை மணமுடிக்க கரும்பு திண்ண கூலி கேட்கும் மஹரைக் கொடுத்து மணமுடிக்க மா நபியின் வழி அது தூங்கி வழியும் முஸ்லிம்களே இன்ஷா அல்லாஹ் பக்கங்கள் தொடரும். www.nidur.info
|