ஹஸீனா அம்மா பக்கங்கள் (1) |
![]() |
![]() |
![]() |
Tuesday, 16 August 2016 18:13 | |||
ஹஸீனா அம்மா பக்கங்கள் (1) அன்பின் அடையாளம் அழகானதும் மிக அழகானதும் ஏழைக்குறிய உயர்வு நன்மைகளின் புதையல்கள் சிறந்த நட்புக்கு மூன்று பன்புகள் தேவை [ வாழும் காலத்தில் எங்களின் அன்புத் தாயார் ஹஸீனா பீவி அவர்கள் அவ்வப்போது நூல்களைப்பார்த்து எழுதி வைத்திருந்த குறிப்புகளின் தொகுப்பாகும் இது. -adm. nidur.info]
அன்பின் அடையாளம் 1. அல்லாஹ்வை அன்பு வைப்பதற்கு அடையாளம் குர்ஆனை அன்பு வைப்பதாகும் 2. குர்ஆனை அன்பு வைப்பதற்கு அடையாளம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அன்பு வைப்பதாகும். 3. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அன்பு வைப்பதற்கு அடையாளம் அவர்களின் சுன்னத்துகளை அன்பு வைப்பதாகும். 4. சுன்னத்துகளை அன்பு வைப்பதன் அடையாளம் மறுமையை அன்பு வைப்பதாகும். 5. மறுமையை அன்பு வைப்பதன் அடையாளம் உலகை வெறுப்பதாகும். 6. உலகை வெறுப்பதன் அடையாளம் உலகில் வாழப்பபோதுமான உணவைப்பெற்று மறுமையை அடைவதாகும். (நூல்: இஹ்யா உலூமித்தீன்)
அழகானதும் மிக அழகானதும் 1. நீதி புரிதல் அழகு. 2. தயாளத் தன்மை அழகு. 3.. பேணுதலாய் இருப்பது அழகு. 4. பொறுமை கொள்வது அழகு 5. தவ்பாச் செய்வது அழகு. 6. நாணம் கொள்வது அழகு. என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு உபதேசித்தார்கள்.
1. ஏழையின் அமல்களில் இக்லாஸ் (மனத்தூய்மை) இருக்கும். 2. மக்களை விட்டும் தனித்திருப்பார். 3. ஏழ்மையின் காரணத்தால் அவருக்கு அநீதி இழைக்கப்பட மாட்டாது. 4. பொருள் தேடுவதை விட்டும் ஓய்வு பெற்றிருப்பார். 5. பொருள் இல்லாததால் அவருக்கு திருடர் பயம் இல்லை. 6. உலமாக்களின் சகவாசத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார். 7. கஞ்சன் என்ற பெயரை விட்டும் நீங்கி விடுவார். 8. தன்னிடம் உள்ளதைக்கொண்டு போதுமாக்கிக்கொள்வார். 9. அல்லாஹ்வின் மீதே அவரது நம்பிக்கை இருக்கும். (நூல்: தத்ஹிரதுல் வாயிலீன்)
1. வணக்கத்தில் இக்லாஸ் (மனத்தூய்மை) ஏற்படுவது. 2. பெற்றோருக்கு உபகாரம் செய்வது. 3. உறவினர்களைச் சேர்ந்து வாழ்வது. 4. அமானிதத்தை நிறைவேற்றுவது. 5. பாவம் செய்வதில் எவருக்கும் வழிபடாமல் இருப்பது. 6. மனோ இச்சையின்படி செயலாற்றாமல் இருப்பது. 7. அல்லாஹ்வை பயந்து, நன்மையை ஆதரவு வைத்து வழிபாட்டில் ஈடுபடுவது. நூல்: தன்பீஹுல் ஙாபிலீன்
1. உங்கள் நண்பரை நல்ல பெயர் சொல்லி அழையுங்கள். 2. நீங்கள் உங்கள் நண்பர்களை சந்திக்கும்போது ஸலாம் சொல்வதில் முந்திக்கொள்ளுங்கள். 3. நீங்கள் ஒரு சபைக்குச் சென்றால் உங்கள் நண்பர்களை முதலில் இருக்கையில் அமரச் செய்யுங்கள்.
இன்ஷா அல்லாஹ் பக்கங்கள் தொடரும். www.nidur.info
|