Home இஸ்லாம் நோன்பு நோன்பும் போதைகளும்
நோன்பும் போதைகளும் PDF Print E-mail
Wednesday, 08 June 2016 13:40
Share

நோன்பும் போதைகளும்

ரமலான் என்பதன் பொருள் கரித்தல், எரித்தல் என்பதாகும், கடந்த கால வாழ்வில் ஏற்பட்ட மனிதர்களின் பாவங்கள் கரிந்து போகிற மாதம் இது.

நோன்பை குறித்து இறைவேதமாம் திருக்குர்ஆன் இப்படி வர்ணிக்கிறது.

இறைநம்பிக்கை கொண்டாரே உங்கள் மீது நோன்பு கடமையாக்கப்படுகிறது உங்கள் முன் உள்ள கூட்டத்தார் மீது விதியாக்கப்பட்டது போன்று ஏனெனில் நீங்கள் இறையச்சம் கொள்வதற்காக.

இவ்வசனத்தில் குறிப்படப்பட்ட படி மனிதன் இறையச்சம் பெறுகிற விஷயத்தில் நோன்பு மிக முக்கியமானதாகும்.

இந்த நோன்பின் வழியாக மனிதன் தன் உணர்வுகளின் மீது ஆளுமை பெறுகிறான்.

இந்த ஆளுமைதான் “தக்வா” என்று சொல்கிற இறையச்சதின் ஆணிவேறாகும்.

தன் புற உறுப்புகளை மிகச்சரியாக கையாளுகிற மனிதன் தன் உணர்வு மற்றும் இச்சைகளில் ஆளுமை செலுத்த இயலாமல் ஆகிவிடுகிறான் அல்லது அதை மறந்து இருக்கிறான்.

அந்த ஆளுமையை நோன்பு நமக்கு கற்றுதருகிறது.

வெறும் பசித்திருப்பது மட்டும் நோன்பின் நோக்கமன்று, அதன் ஊடாக மனிதனின் முழு குணமும் மாற்றி அமைக்கப்படுவதைத்தான் இஸ்லாம் விரும்புகிறது.

ஏனெனின், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒரு கூற்று நம் அக கண்களைத் திறக்கிறது.

“எவன் ஒருவன் பொய் பேசுவதையும், அதையே செயலாக செய்வதையும் விடவில்லையோ அவன் பகல் முழுவதும் பசித்திருப்பதும், குடிக்காமல் இருப்பதும் இறைவனுக்கு எந்த தேவையும் இல்லை”

பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய ஒரு செய்தியை நபிகள் நாயகம் அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த ஹதீஸின் மூலமாக நாம் உணர்கிற ஒரு பாடம், பொய் பேசுவதை வாழ்வின் ஏதாவது ஒரு சந்தர்பத்தில் செய்கிற மனிதன், பின் அது வழக்கமாகி அதுவே பழக்கமாகவும் ஆகிவிடுகிறது. அந்த பழக்கம் குறித்தான உணர்வு கூட இல்லாமல் அதை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறான்.

அது போன்ற நம் வாழ்வில் உள்ள செயல்களை திரும்பி பார்பதற்குண்டான ஒரு சந்தர்பம்தான் நோன்பு ஆகும்.

ரமலானுடைய காலங்களில் நம்முடைய பழக்கத்தில் உள்ள சில விசயங்களை நாம் விடுகிறோம். உதாரணமாக பீடி, சிக்ரேட், மது போன்ற லாகிறி பொருட்களை முற்றிலுமாக இந்த ரமலானில் விட்டு விடுகிறோம்.

இதை விடுவது மட்டும் போதும் என்றும் நினைத்துக்கொள்கிறோம்.

ஆனால், ஹராமான சொல், செயல், பார்வைகளை விட்டு தவிர்ந்திருப்பதற்கு அழகிய ஒரு வழியை அல்லாஹ் நமக்கு காண்பிக்கிறது.

உங்களுக்கு ஹலாலாக உள்ள ஆகுமாக்கப்பட்ட பொருளை தவிர்ந்திருங்கள் என்று இறைவன் கூறுகிறான்.

உலகில் எவ்வளவு விலை உயர்ந்த பொருளாக இருந்தாலும், அழகிய பொருளாக இருந்தாலும் அது நமக்குரியது என்று ஆகிவிட்டால் அதன் அருமைகளை நாம் மறந்து போகிறோம். மற்றதை தேட ஆரம்பிக்கிறோம்.

இன்றைக்கு உணவுகளும் ஒரு போதையாக ஆகிவிட்து. வகை வகையான உணவை உண்பதற்கு உயர்தர ஹோட்டல்களுக்கும், வெகு தூரம் பிரயாணிக்கிறோம். அந்த போதையை உணரத்தான். ஹாலாலான நம்மக்கு முன்னால் உள்ள உணவை நீ உண்ணக்கூடாது என்று இஸ்லாம் நமக்கு கற்றுத்தருகிறது. அப்பொழுது தான் ஹலால் உணவை குறித்து மனிதன் சிந்திக்கிறான். உணவின் மீதுள்ள போதை தெளிகிறது.

ஹலாலான அழகிய மனைவி உடன் இருக்க அதைவிடுத்து மற்ற அன்னியப்பெண்களை அவன் கண்கள் தேடுகிறது. அனுமதிப்பட்ட மனைவியை தொடுவதற்க்கும், இச்சை பேச்சுகள் பேசுவதற்கும் நோன்பு தடையை ஏற்படுத்தும் போது மனிதனின் அன்னியப்பெண்கள் மீதான போதை தெளிகிறது.

கெட்ட பேச்சுகளில் பழக்கமான நாவு அந்த போதையிலே திழைத்திருக்கிறது. நல்ல விஷயங்களையே ரமலானில் குறைத்து பேசவும். யாராவது சண்டையிட வந்தால் நான் நோன்பாளி என்று சொல்லவும் எனபதைக்கொண்டு பேச்சில் உள்ள போதையை இஸ்லாம் உணரவைக்கிறது.

இதை எல்லாம் விட இன்றைக்கு இளையவர், பெரியவர் என்ற வித்தியாசம் இல்லாமல். எல்லோருடைய நேரத்தையும் மொத்தாக தின்று கொண்டிருப்பது. இன்றைய Social Media/ Mass Media என்று அழைக்கப்படும் whatsup, face book, Telegram போன்றவை நம்முடைய மொத்த நேரத்தையும் எடுத்துக்கொள்கிறது.

எவ்வளவு நேரம் அதில் செலவிடுகிறோம் என்று கூட தெரியாமல் தன்னை மறந்து வேறு ஒரு உலகிற்கு நாம் சென்றுவிடுகிறது.

இன்றைக்கு இருக்கும் எல்லா போதகளையும் விட மோசமான போதை அது தான். ஆக இந்த ரமலானின் நாம் ஒரு உறுதி எடுக்கவேண்டும். Ramzan free from facebook, whatpu, telegram என்று நம்முடைய வாட்ஸ் அப்பில் ஸ்டேடஸ் இட்டுவிட வேண்டும். நாம் அதில் பாயான் கேட்கலாம், நல்ல விஷயங்களை பகிந்துகொள்ளலாமே என்று நம் மனதும் ஷைத்தானும் வலியுறுத்துவார்கள்.

அல்லாஹ் காப்பானாக ரமலான் என்பது அமல்களின் மாதம் Month of Action அது படிக்கிறது மாதம் அன்று. அதில் அதிகமாக குர்ஆன் ஓதுவது, ஸலவாத் சொல்வது, என்ற நல்லறங்களால் நம் மறுமை ஏடு நிறப்படவேண்டும்.

அதில் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொறுமையின் மாதம் என்று வர்ணித்ததுபோன்று பொறுமையாகவும், அமைதியாகவும் இருந்து நம் உள்ரங்க குண நலன் மாறுவதற்கு முயற்சி செய்யவேண்ம். இந்த ரமலானை முழுமையாக பயன்படுத்தி நம்மை நாம் பண்படுத்துவதற்க்கு அல்லாஹ் உதவிசெய்வான ஆமீன்.