Home குடும்பம் இல்லறம் புதுமணத் தம்பதிகளும் அவர்களின் முதல் இரவும்

இஸ்லாம் கூறும் திருமணம் -Abdul Basith Bukhari

புதுமணத் தம்பதிகளும் அவர்களின் முதல் இரவும் PDF Print E-mail
Wednesday, 25 May 2016 07:46
Share

புதுமணத் தம்பதிகளும் அவர்களின் முதல் இரவும்

மணமகன், மணமகள் அவர்கள் தொடங்கும் புதிய வாழ்க்கை!

கணவன் மனைவிக்கு ஆடையாகவும்,  மனைவி கணவனுக்கு ஆடையாகவும் என்ற திருமறை வசனம் உள்ளது.

உலகிலே பொருள்களில் சிறந்த பொருள் நல்ல ஸாலிஹான மனைவி தான்  என்கிறது ஒரு ஹதீஸ்.

அல்லாஹ்வின் மிகப்பெரிய கிருபை.. யாரோ ஒரு பெண், யாரோ ஒரு ஆண் அவர்கள் பிறந்ததது வேறு இடம்! வாழ்ந்தது வேறு இடம்! ஒருவர்கொருவர் அறிமுகம் இல்லாமல், அவர்களை அல்லாஹு தஆலா திருமணம் என்ற இருமனமும் இணையும் நிக்காஹ் மூலமாக ஒன்று சேர்கிறான்.

அவர்களின் உள்ளத்தில் அன்பு என்னும் பாசம் என்னும் பிணைப்புகளை கொண்டு இருவரையும் இணைக்கிறான். அதற்குமுன் அவர்கள் அறிமுகம் இல்லாதவர்களாக இருந்தார்கள்.

அந்த பெண் உள்ளத்திலும், அந்த ஆண் உள்ளத்திலும் அல்லாஹு தஆலா பிரியத்தை ஏற்படுத்துகிறான். அதற்கு பிறகு அவர்கள் ஒருவொர்கொருவர் அன்பும், பாசமும் நேசமும் கொண்டவர்களாக வாழ்கிறார்கள். இதுதான் அல்லாஹ்வின் மிக பெரிய கிருபை ,அததாட்சியும் கூட.

இன்று நபிவழியில் திருமணம் நடக்கிறதா என்பது ஒருபக்கம் இருக்கட்டும். மணமகனும், மணமகளும் எப்படி அவர்கள் வாழ்கையை நபிவழியில் தொடங்க வேண்டும் என்பது தான் இந்த கட்டுரையின் இலக்குக்காக உள்ளது.

மணமகன் மணமகளுக்கு மஹர் தொகையை கொடுத்த பிறகு, மணமகன் மணமகளின் நெற்றி முடியை பிடித்து ஒரு சிறிய துஆச் சொல்ல வேண்டும்:

"அல்லாஹும்ம இன்னி அஸ்அலுக்க கைரஹா வ கைர மா ஜபல்தஹா அலைஹி வ அவூது பிக்க மின் ஷர்ரிஹா வ ஷர்ரி மா ஜபல்தஹா" என்ற துஆச் ஓத வேண்டும்!

பொருள்: Lord I ask you to give me the good and the good of the character on whichyou've shaped and I refuge with you against the evil and the evil of thecharacter on which you've shaped.

இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டிய வழிமுறை.

பிறகு வீடு கூடும்போது, அதாவது ஒரு துஆச் உள்ளது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் :

உங்களில் ஒருவர் தம் மனைவியிடம் இல்லற உறவு கொள்ள நாடினால் அவர்;

''பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான வஜன்னிப்பிஷ் ஷைத்தான மா ராஜக்தன"

- அல்லாஹ்வின் திருப்பெயரால், யா அல்லாஹ்! எங்களை விட்டு ஷைத்தானை விலக்குவாயாக எங்களுக்கு நீ வழங்கும் குழந்தையை விட்டும் ஷைத்தானை விலக்குவாயாக''

- என்று கூறுவாரேயானால் அதில் அவ்விருவருக்கும் குழந்தையை அல்லாஹ் ஏற்படுத்தியிருந்தால், ஷைத்தான் அக்குழந்தைக்கு எந்த இடையூறும் தரமாட்டான். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

இல்லறத்தில் ஈடுபட்டுகொண்டிருக்கும் போது, விந்து வெளியாகும் நேரத்தில் அப்பொழுது ஒரு துஆச் இருக்கிறது அதையும் கற்று கொண்டு அந்த நேரத்தில் சொல்ல வேண்டும்.

இருவரும் இல்லற உறவில் ஈடுபடுவதற்கு முன், இருவரும் அல்லாஹ்வை தொழுது கொள்ள வேண்டும் (ரொம்ப ரொம்ப அவசியம்) அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் விதமாக, பிராத்தனையும் செய்ய வேண்டும்!

ஆற்றுத் தண்ணீரை வெள்ளம் அடித்துக்கொண்டு போகாது என்ற பழமொழி உண்டு.  அந்த நேரத்தில் நிதானம் வேண்டும், அவசரப்பட கூடாது.

ஆண்களுக்கு பல கனவுகளும், கற்பனைகளும், எதிர்ப்பாப்பும் இருப்பது போல, பெண்ணுக்கும் அதே போல இருக்கும்!

இல்லற உறவு இன்பம்மாக இருக்க வேண்டும். மாறாக துன்பம்மாக மாறிவிட கூடாது. இந்த உறவில் தான் அன்பு இன்னும் அதிகரிக்கும்.

எப்படி வேண்டுமானாலும் வாழலாம், இப்படிதான் வாழ வேண்டும் என்று இரண்டு options உள்ளது. அதை choose பண்ணுவது நீங்கள்தான்! எல்லோரும் முஸ்லிமாக இருக் கிறோம் ஆனால் முஸ்லிமாக வாழ்கிறோமா? என்பது தான் கேள்வி?

நிக்காஹ் விஷயத்திலும், பிறகு தலாக்கு விஷயத்திலும் சரியான முறையில், அல்லாஹ்வும் அவன் தூதரும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் காட்டி தந்த வலி முறையில் இருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை என்று தான் சொல்ல முடியும்.

எந்த பிரச்சனை எடுத்து கொண்டாலும், அதை இஸ்லாம் என்னும் கண்ணாடி அணிந்து நாம் பார்க்க வேண்டும். அதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வலி முறையில் தீர்வு காண வேண்டும். மாறாக இருந்தால் எல்லாம் கெடுதியாக தான் முடியும், சிக்கல்லாகதான் வரும் என்பதை ஒவ்வொரு முஸ்லிம்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்!

புதுமண தம்பதிகள் இஸ்லாத்தின் அடிப்படையில் ,நபி வழிமுறைப்படி வாழ தெரிந்து கொள்ள வேண்டும்! மாற்றுமத கலாசாரம் முறைப்படி இருந்தால், ஆரம்பம் பார்பதற்கு நன்மையாக தெரியும், போக போக முடிவு அழிவின் பாதையில் தான் முடியும்!

இளசுகளின் மனசில் புதுசு புதுசாக இருக்கும், கற்பனைகளும், எதிர்ப்பார்ப்புகளும் இருக்கத்தான் செய்யும்! தவறான ஆபாச வீடியோக்களை பார்த்து இப்படி இப்படி எல்லாம் செய்யணும் என்று விபரித ஆசைகளுக்கு போய் விழாதீர்கள்! கணவனும், மனைவியும் இல்லற உறவு இருந்ததைப் பற்றி மனைவி தன் தோழிகளிடம் சொல்வதோ, கணவன் தன் தோழர்களிடம் சொல்வதோ மிக பெரிய பாவம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

இல்லற உறவு என்பது உடலும் உடலும் உறசிகொல்வதோ, தொட்டு விளையாடுவதோ இன்பமும், சந்தோசமும் துள்ளிக்  குதித்துக்கொண்டு வரும் என்று நினைக்காதீர்கள்! இது சில மணி நேரம் அல்லது அதற்குள்தான். இன்பமும், சந்தோசமும் என்று நிலைத்து இருக்க வேண்டும் மென்றால், மனைவியும், கணவனும் அல்லாஹ்க்கும், அவன் தூதர்க்கும் கட்டுப்பட்டு வாழ வேண்டும்! நிச்சயமாக உங்கள் வாழிவில் சந்தோசமும், நன்மைகளும், நேசமும், பாசமும், பற்று, ஒருவொர்கொருவர் பிரியாமல் அன்போடு வாழ முடியும்! நல்ல ஸாலிஹான பிள்ளைகளை பெற்றடுக்க முடியும்!

இல்லற உறவில் ஈடுபடுவதற்கு முன், மணமகனும் ,மணமகளும் ஒருவொர்கொருவர் புரிந்து கொள்ள வேண்டும். என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது, என்பதை பற்றி மனசைவிட்டு பேச வேண்டும்.

இல்லற உறவில் ஈடுபடும்போது...

இல்லற உறவில் ஈடுபடும்போது, மென்மையாக, மெதுவாக ஆரபிக்க வேண்டும். எப்படி வேண்டுமானாலும் உங்கள் மனைவியை நீங்கள் அனுபவிக்கலாம்! ஆனால் சில நிபந்தனை (அல்லாஹ் அனைத்தையும் அறிதவன், அவன் பார்வை விட்டு எதுவும் மறையாது, அவன் அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான் என்று அச்சத்துடன் ஈடுபட வேண்டும்) பெண்ணின் பின் துவாரத்தில் உறவு கொள்ள கூடாது இதை தவிர்த்து கொள்ள வேண்டும்! சில கணவன்மார்கள் ஆசைபடுவார்கள் மனைவிமார்கள் அவர்களுக்கு எடுத்து சொல்லி புரிய வைக்க வேண்டும்.

மனைவியின் மார்புகளை தொடுவது, முத்தம் கொடுப்பது, காம்புகளை நெருடுவது மென்மையாக வாயை வைத்து சுவைப்பது. உங்கள் மனைவிடம் ரொம்ப மென்மையாக நடந்து கொள்ளவேண்டும்! வேகம் இருக்க கூடாது விவேகம் தான் முக்கியம்! மனைவிக்கு வெறுப்பு வரும்படி நடக்க கூடாது, அப்படி எதுவும் நடக்காமல் இருக்க கணவன் கவனமாக ஈடுபட வேண்டும்!

மனைவியும் கணவன் எதிர்ப்பார்ப்பை, திர்ப்தியை பூர்த்திசெய்ய வேண்டும். ஒருவொர்கொருவர் இன்பத்தையும், சந்தோசத்தையும் பரிமாறி கொள்ள வேண்டும். முடிவில் இருவரும் திர்ப்த்தி அடைய வேண்டும்! அல்லாஹ்வும் உங்களை திர்ப்த்தி அடைய வேண்டும் ,நன்மையும் தர வேண்டும் அதுமட்டுமின்றி நல்ல ஸாலிஹான பிள்ளைகள் தர வேண்டும்.

மனிதனுக்கு வயிற்று பசி இருப்பது போல, உடல் பசியும் இருக்கும். மனிதனுக்கு பசித்தால் உண்ண வேண்டும் என்று ஆசைப்படுவான் ,அதுபோல உடலில் ஒருவிதமான சூடும், தாகமும் பசியும் சேர்ந்து வந்தால், அவன் மனைவிடம் உடலுறவு கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவான். இது இயற்கை! ஒவ்வொன்றுக்கும் அதன் கடமைகளை நிறைவேற்றி ஆக வேண்டும்! இல்லற உறவும் அப்படிதான், ஒரு ஹதீஸின் கருத்து: ஒரு அந்நிய பெண்ணை கண்டால், உடனே உன் மனைவிடம் சென்றுவிடு!

இயல்பாக மனிதனுக்கு அவன் பார்வை நோக்குவது பெண்ணின் மார்புகள்தான். ஆண்கள் பெண்களை விதவிதமாக ரசிப்பார்கள், ஆனால் பெண்களுக்கு ஆண்கள் அளவுக்கு  ரசிப்புத்தன்மை இல்லை. பிறர் ரசிக்கும்படி பெண்கள் ஆடை அணிந்து வருவது கூடாது. வீட்டில் இருக்கும்போது கூட பெண்கள் கண்ணியமாக அடக்கமாக இருக்க வேண்டும். நம் வீடுதானே என்று அலட்சியமாக நினைத்து விடக்கூடாது.

''ஒரு மனைவி தன் கணவனை திருப்தி நிலையில் அவள் மரணித்து விட்டால் என்றால் இன்ஷா -அல்லாஹ் அவள் நிச்சயமாக சுவர்க்கம் புகுவாள்'' என்பது அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்கள் கூறிய ஒரு ஹதீஸின் கருத்து.

மார்க்க விஷயத்தை தெரிந்து கொள்ள வெட்கம் இருக்க கூடாது. உடல் உறவு கொள்வதைப் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்! மார்க்கம் தெரிந்த ஆலிம்களிடம் வெட்கப்படாமல் உங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்த வேண்டும். நபிவழி எப்படி, அவர்களின் ஹதீஸ்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் உங்கள் மனைவிடம் இல்லற உறவு கொள்ளும் போதெல்லாம் நீங்களும் உங்கள் மனைவியும் ஒழு செய்து கொள்ள வேண்டும். இது நபி வழி.

ஒருமுறை இல்லற உறவில் ஈடுப்பட்ட பிறகு, மீண்டும் ஆசை வந்தால் இருவரும் தங்கள் உறுப்பை நன்றாக சுத்தம் செய்து விட்டு, ஒலுவும் செய்து விட்டு மீண்டும் இல்லற உறவில் ஈடுபடலாம்!

அல்லாஹ் உங்களுக்கு இல்லற வாழ்வில் நல்லற வாழ்வாக ஆக்க, அருள் புரிய வேண்டும் என்று துஆச் செய்தவனாக இந்த சிறிய கட்டுரையை முடிக்கிறேன்.

முகவரி: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

source: http://kiyamath.blogspot.in