மழலை மொழி PDF Print E-mail
Sunday, 03 April 2016 06:33
Share

மழலை மொழி

    மௌலவி M.J. முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்)    

இனிய மொழி
என் சின்னக் குழந்தைகளின்
மழலை மொழி!

இலக்கியம் இல்லா இன்னிசை!
இலக்கணமற்ற தேன் மழை!
அறுந்தறுந்து விழும் அழகிய கவிதை!

எல்லோரும் விரும்பும் கவிதை
அது – சின்னஞ் சிறுசுகளின்
சிங்காரச் சரிதை!

ஆக்கங்கள் அனைத்திலும்
களிப்புக்களுண்டு.
களிப்புக்கேயுறிய ஆக்கம்தானே
கண்மனிகளின் கவிதைகள்!

மரபுக் கவிதையுமன்று – அவை
பூரிக்க வைக்கும் புதுக் கவிதையுமன்று!
சின்னஞ் சிறுசுகளின் சிறிப்புக்கள்
இன்பம் தரும் இயற்கைக் கவிதை!

அர்த்தமற்ற அந்த வார்த்தைகளுக்கு
அவரவர்கள் தரும் அர்த்தங்கள்
பேஷ்..! பேஷ்!

மழலை மொழி பேச
எனக்கும் ஆசைதான் – ஆனால்
நீங்கள் ஏற்கமாட்டீர்கள்!
ஏசுவீர்கள், ஏளனம் பேசுவீர்கள்
ஏனக்கேனிந்த வம்பு.

அதோ ஒரு குழந்தை அழுகின்றது
அது – சின்னக் குழந்தையின்
சினுக்கள் கீதம்!

அவன் சிரிப்பு
சில்லறைக் காசுகளாய்
உதிரும் போதெல்லாம் – என் கவலைகளும்
உதிர்ந்து போகும்!

மழலைச் செல்வத்துக்காய்
ஏங்கும் இதயங்கள் ஏராளம்.

source: http://suvanathendral.com/portal/?p=49