Home இஸ்லாம் இம்மை மறுமை இன்பத் திளைப்பில் முஃமின்கள்
இன்பத் திளைப்பில் முஃமின்கள் PDF Print E-mail
Thursday, 03 March 2016 06:44
Share

இன்பத் திளைப்பில் முஃமின்கள்

ஹஜ்ரத் பராஃ பின் ஆஜிப் ரளியல்லாஹு அன்ஹு ஒரு ஹதீஸில் கூறுவதாவது;  ஒரு முறை ஒரு அன்சாரியின் ஜனாஸாவை அடக்குவதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சென்றோம். 

நாங்கள் அடக்குமிடத்தை அடைந்த பொழுது அதுவரி கப்ரு தோண்டப்படாதிருந்ததைக் கண்டோம். எனவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உட்கார்ந்தார்கள். நாங்களும் எண்களின் தலைகளில் பறவைகள் உட்கார்ந்திருப்பதைப் போன்று அமைதியாகவும் மரியாதையுடனும் அமர்ந்தோம்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தமது கையிலிருந்து ஒரு குச்சியினால்(விசனமுடையவன்) கிளறிக் கொண்டிருப்பதைப் போன்று பூமியில் குத்திக் கொண்டிருந்தனர். அப்போது தமது தலையை உயர்த்தி, ''கப்ரின் வேதனையை விட்டும் பாதுகாப்புத் தேடுங்கள்! என இரண்டு அல்லது மூன்று முறை கூறினார்கள்.

''நிச்சயமாக ஒரு முஃமின் இவ்வுலகைத் துறந்து மறு உலகை முன்னோக்கும் நேரத்தில் சூரியனைப் போன்று பிரகாசமுள்ள வெண்ணிற முகமுடைய மலக்குகள் வானத்திலிருந்து அவரை நோக்கி வருகின்றனர். தங்களுடன் சுவர்க்கத்திலிருந்து கபன் துணிகளும் வாசனைப் பொருள்களும் கொண்டு வருகின்றனர்.

மரண நேரத்திலிருப்பவருடைய கண்பார்வை எட்டும் வரை மலக்குகள் பெரும் கூட்டமாக அவரருகில் அமர்வார்கள். பின் மலக்குல் மௌத் வந்து அவரின் தலையருகில் அமர்ந்து, 'பரிசுத்த ஆத்மாவே! அல்லாஹ்வின் மன்னிப்பு, அவனது பொருத்தம் ஆகியவற்றின் பக்கம் வருவாயாக! என அழைக்கின்றார். அதைச் செவியுறும் முஃமின் உயிர் தண்ணீர்ப் பாத்திரத்திலிருந்து தண்ணீர் வழிந்தோடுவது போன்று மிகச் சுலபமாக வெளியேறுகிறது.

உடன் மலக்குல் மௌத் அதை எடுத்துக் கொள்கின்றனர். மலக்கல் மௌத்து கைக்கு உயிர் வந்தபின் கணநேரம் கூடத் தாமதிக்க விடாமல் பெருங் கூட்டமாக வந்து மலக்குகள் அவ்வுயிரை அவர்களின் கையிலிருந்து வாங்கித் தயாராகக் கொண்டு வந்திருந்த கபன் துணிகள், வாசனைத் திரவியங்களில் வைத்து வான் நோக்கி எடுத்துச் செல்ல ஆரம்பிக்கின்றனர். அவ்வாசனை பற்றிக் கூறும்போது பூமியில் உள்ள மிக மிக உயரக வாசனைப் பொருளைப் போன்று நல்வாசனை பரினமித்துக்கொண்டிருக்கும்'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   கூறினார்கள். .

மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்; ''முஃமின் உயிரை எடுத்துக்கொண்டு வானுலக செல்லும் மலக்குகளின் கூட்டம் எதிரில் வானவர்களின் பல கூட்டனகளைச் சந்திக்க நேரும்போது ஒவ்வொரு கூட்டமும், 'இப்பரிசுத்த ஆத்மா எது.? என வினவுவர். ஆத்மாவை எடுத்துச் செல்லும் கூட்டம் இவ்வுலகில் அம்மனிதர் அழைக்கப்பட்ட பெயர்களில் மிகச் சிறந்த பெயரைக் கூறி, இன்னானின் மகன் இன்னார் என்று பதிலளிப்பார். இவ்வாறே முந்திய வானத்தை அடைந்து (வாசல்) திறக்குமாறு கோருவார்கள், வாசல் திறக்கப்படும். ஒவ்வொரு வானிலுமுள்ள முகர்ரபான மலக்குகள் அடுத்த வானம் வரை அந்த ரூஹை வழியனுப்பி வைப்பர். இவ்விதம் ஏழாவது வானத்தை அடைந்தவுடன் அல்லாஹ் மலக்குகளை நோக்கி, எனது அடியாருடைய (அமல்கள எழுதப்பட்ட) கிதாபை இல்லிய்யீனில்* எழுதிவிடுங்கள்,, அவரது உயிரை பூமிக்கு கொண்டு செல்லுங்கள்,, ஏனெனில் நான் அவரைப் பூமியில் நின்றுமே படைத்தேன். அதிலேயே நான் மீட்டுவேன்,, மீண்டும் அதில் இருந்தே மறுமுறையும் வெளியாக்குவேன்!' எனக் கூறுவான். எனவே அவரது உயிரை உடலில் பக்கம் திருப்பப்படும்.

பின்னர் இரு மலக்குகள் அவரிடம் வந்து அவரை உட்காரவைக்கின்றனர். அவரிடம், 'உனது ரப்பு யார்.? என்று கேட்க, 'எனது ரப்பு அல்லாஹ்' என்று பதிலளிக்கிறார். 'உனது மார்க்கம் எது.? என்று கேட்க, 'எனது மார்க்கம் இஸ்லாம்' என்று விடையளிக்கிறார். 'உங்களுக்கிடையில் அனுப்பப்பட்ட இம்மனிதர் யார்?' என (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பற்றிக் கேட்கின்றனர்) அதற்கு அவர், 'அவர் அல்லாஹ்வின் திருத்தூதர்' என விடை பகர்கின்றார். மேலும், உனது இல்முகள் என்ன.? என வினவ, 'நான் அல்லாஹ்வின் வேதத்தைப் படித்தேன், நான் ஈமான் கொண்டேன்,, அதை நான் உண்மைப்படுத்தி வைத்தேன்' என மொழிகின்றார்.

(இவ்வினா விடைகளின் முடிவில்) வானில் நின்றும் அல்லாஹ்வின் அறிவிப்பாளர்களிலொருவர், 'எனது அடியாளன் உண்மை சொன்னான். ஆகையால் அவனுக்குச் சுவர்க்கத்தின் விரிப்பை விரியுங்கள்,, சுவர்க்கத்தின் ஆடைகளை அணிவியுங்கள்,, சுவர்க்கத்தின் பக்கமாக வாசல் திறந்து விடுங்கள்' என அறிவிக்கின்றனர். ஆகையால் அவருக்குச் சுவர்க்கத்தின் சுகமும், வாசனையும் வந்து கொண்டிருக்கும். இன்னும் அவரது கப்ரு அவரின் பார்வை எட்டுமளவிற்கு விஸ்தரிக்கபடுகிறது .

இந்நிலையில் கப்ரிலிருக்கும் அம்முஃமினிடம் மிக அழகிய முகத்தோற்றமுடைய சிறந்த ஆடைகள் அணிந்து நல்ல மணம் பரிமளிக்கக் கூடிய ஒருவர் வந்து, 'உனக்கு சந்தோஷமளிக்கும் நற்செய்தியைக் கேட்டுக்கொள். இதுதான் உனக்கு வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்த நாள்' என்று கூறுவார். அதற்கு அம்முஃமின் நீங்கள் யார்? உங்கள் முகப் பொலிவு நற்செய்தி கொண்டு வருவதாக இருக்கிறதே! எனக் கேட்பார். அதற்கு அவர் 'நானே உனது நற்செயல்கள் ' என்று விடையளிப்பார். இதைக் கேட்ட முஃமின் (மகிழ்ச்சி மேலீட்டால்) 'யா' அல்லாஹ்! இப்போதே கியாமத் நாளை ஏற்படுத்து. ஏனெனில் நான் என்னுடைய குடும்பம், பொருள், சுற்றத்தார்களிடம் செல்ல வேண்டும்' எனக் கூறுவார். ''இங்கு அவர் குறிப்பிடுவது சுவர்க்கத்திலுள்ள குடும்பம், பொருள், உறவினர்களையே என்று மிர்காத்தில் கூறப்பட்டுள்ளது.
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

- சத்திய பாதை இஸ்லாம்