Home இஸ்லாம் இஸ்லாத்தை தழுவியோர் இந்தக் குர்ஆன் உண்மையாகவே மிக நேரிய வழியைத்தான் காட்டுகிறது!

Ex.Baramin Convert to Islamᴴᴰ┇Abdur Rahim (Sankar Narayanan)┇Way to Paradise Class

இஸ்லாமை தழுவிய சகோதரி ஆயிஷா ஃபாத்திமா கடந்து வந்த சோதனைகள்

இஸ்லாமைத் தழுவிய பிரபல நடிகை மோனிகா

இஸ்லாமைத் தழுவிய தமிழ் கிருஸ்துவப்பெண்

இந்தக் குர்ஆன் உண்மையாகவே மிக நேரிய வழியைத்தான் காட்டுகிறது! PDF Print E-mail
Friday, 19 February 2016 07:08
Share

இந்தக் குர்ஆன் உண்மையாகவே மிக நேரிய வழியைத்தான் காட்டுகிறது!

இந்தக் குர்ஆன் உண்மையாகவே மிக நேரிய வழியைத்தான் காட்டுகிறது. இது ஈமான் கொண்டு நற்கிரியை புரிந்தவர்களுக்கு மிகச் சரியான கூலி உண்டென்று நற்செய்தி  சொல்கிறது. (அல்குர்ஆன்  17:9).

இறை நம்பிக்கை இல்லாதவர்களுக்கு நான் சொல்வேன்: நீங்கள் குர்ஆனைத் திறந்த மனதோடு பாருங்கள். நீங்கள் அவ்வாறு வாசித்தால் அறிவதற்கு ஏராளம் உள்ளது.

இஸ்லாம் என்னை ஏற்றது ஏன்?

இந்தக் குர்ஆன் உண்மையாகவே மிக நேரிய வழியைத்தான் காட்டுகிறது. இது ஈமான் கொண்டு நற்கிரியை புரிந்தவர்களுக்கு மிகச் சரியான கூலி உண்டென்று நற்செய்தி சொல்கிறது. (அல்குர்ஆன்  17:9).

என் பெயர் ஜாசியன் ஃபாரேஸ். கடைசிப்பகுதி என் குடும்பப் பெயர். என் தந்தை ஒரு லெபனானி. என் தாய் ஒரு ஸ்பானிஷி.. நான் பிறந்தது அமிரிக்காவில் மிச்சிகனில். என் பாட்டனார்கள் சுத்த இஸ்லாமியர்கள். ஆனால் என் தந்தை எந்த மதமுமில்லை. எம்மதமும் சம்மதமுமில்லை. ஆகவே நாங்களும் அப்படியே வளர்க்கப் பட்டோம்.

நாங்கள் மூவர் பிறந்தோம். நான் ஒருவன் மட்டும் லெபனானில் ஆறு ஆண்டுகள் இருக்க வைக்கப் பட்டேன். அது என் டீன் வயது. அதாவது 13 லிருந்து 19 க்குள். அப்படி இருந்த போது தான் எனக்கு மத்திய ஆசியக் கலாச்சாரம் கிடைத்தது.

அடுத்து நான் அமெரிக்காவில் கப்பற்படையில் வந்து சேர்ந்த போது நானும் இராக் போரில் நுழையும் படி ஏவப்பட்டேன். அங்கே நான் ஃபல்லுஜாஹ்ப் பகுதியிலும் அல் அன்பார் பிராந்தியத்திலும் உள்ளூரார்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் பெற்றேன்.. ரமலான் மாதத்தில் மற்ற அரபுகளுடன் அங்கிருந்த ஆண்டுகளில் பழகும் வாய்ப்புப் பெற்றேன். அவர்கள் தங்களின் மார்க்கத்தின் மீதுஎவ்வளவு பற்றாக இருந்தார்கள் என்பதை நான் கண் கூடாகக் கண்டேன்.

அசந்தர்ப்ப வசமாக நான் சுடப் பட்டேன். என் ஒரு சிறுநீரகத்தை இழந்தேன். என் வீடு திரும்பினேன். அங்கே நான் வெற்று வாழ்க்கையை உணர்ந்தேன். நான் குவைத்தில் சந்தித்த பெண் உனது பாட்டனார்கள் வாழ்க்கைக்குத் திரும்பு என்று போதித்தாள்.

2008ல் நான் குர்ஆனை வாசிக்க ஆரம்பித்தேன். அது எனக்குப் புதிய தொரு உணர்வைக் கொடுத்தது. தவ்ராத்தை விடவும் பைபிளை விடவும் அல்குர்ஆன் நேரடியாக விசயத்திற்கு வந்தது. முஸ்லிம்களின் வாழ்க்கை அதனுடைய வழக்கமாக ஆகி விட்டது. நான் இந்த மாற்றத்தை விரும்பினேன். என் உண்மை யான சொருபத்தை அறிய ஆவலானேன்.

இந்தக் குர்ஆன் உண்மையாகவே மிக நேரிய வழியைத்தான் காட்டுகிறது. இது ஈமான் கொண்டு நற்கிரியை புரிந்தவர்களுக்கு மிகச் சரியான கூலி உண்டென்று நற்செய்தி சொல்கிறது. (அல்குர்ஆன் 17:9).

இந்த வாசகத்தை நான் வாசித்த பின் என் மாமூல் வாழ்க்கையாக அதைப் பெற்றேன். எனக்கு சாதாரணமாகவே சென்ற ஆண்டுகளில் ஏராளமான நண்பர்கள் ஏற்பட்டனர். எல்லோருமே மத்திய ஆசிய நாட்டவர்களே. குறிப்பாக எகிப்து, பாலஸ்தீன், ஜோர்தான் கத்தார் போன்ற நாடுகள். இந்த நண்பர்கள் எனக்கு நான் யார் என்பதைக் காட்டினார்கள். அவர்களுக்கு நான் நன்றிக் கடன் பட்டவனாக இருப்பேன்.

ஒரு முஸ்லிம் பாலஸ்தீனியப் பெண்மணி என் வாழ்க்கையில் வந்தாள். நான் ஒரு நல்ல முஸ்லிமாக ஆக எனக்கு உணர்வூட்டினாள் என் முன்னோர்களின் மார்க்கத்தை எனக்குக் கிடைக்கச் செய்தாள். என் முன்னோர்கள் இதற்காக நன்றிக் கடன் பட்டவர்கள்.

இந்த வருடம் எனக்கு இரண்டாம் ரமலான். என்னால் நோன்பு வைக்க முடியாமற் போய் விட்டது. எனக்கு இளம் சர்க்கரை நோய் இருந்தது. அந்த முப்பது நாட்களும் நான் நோன்புக்குரிய தெண்டப் பரிகாரம் செய்தேன். அதாவது ஒரு நோன்புக்கு இரண்டு ஏழைகளுக்கு உணவு அளிப்பது என்ற ஈட்டு முறையைச் செய்தேன். என்னைப் போன்ற நோன்பு வைக்க முடியாதவர்களுக்கு மட்டுந்தான் அந்தப் பரிகாரம் என்பதையும் நான் உணர்த்தப் பட்டேன்.

ஒரு நோன்பு வைக்க முடியாமையை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாமல் எவ்வளவு வருத்தப் பட்டார்கள் என்பதை நான் நேரடியாகப் பார்த்ததும் நான் வைக்க முடியாமைக்கு மிக மிக வருத்தப்பட்டேன்.

இந்த ஈதுப் பெருநாளில் தான் என்னுடைய பிறந்த நாள் வந்தது. நான் அமெரிக்காவிலே இருந்தாலும் முஸ்லிம்களுடன் இணைந்து விட்டேன். விருந்தில்லாமலே நாங்கள் சகோதரர்களாகி தீனிலே எங்கள் வாழ்க்கையை இனிமையாகக் கழித்தோம்.

நான் ரமலான் மாதத்தை நேசிக்கிறேன். அது ஒரு முஸ்லிம் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் போதிக்கிறது. அந்த மாதத்தில் எப்படி இருந்தோமோ அப்படியே எல்லா நாட்களிலும் இருக்க வேண்டு மென்று நினைக்கிறேன்.

''மன்னிப்பைக் காட்டு. நீதிக்காகப் பேசு. அறியாதவர்களைப் பற்றிக் கவலையை விடு.'' (அல்குர்ஆன் 7:199).

நம்முடைய இறைவனை எவர் மீதும் எதையும் திணிக்க முடியாது. சரியானவர்களுக்குச் சரியான பாதையை எடுத்துச் சொல்ல வேண்டும். இது தான் எனக்கு நடந்தது. நான் இஸ்லாத்தைத் தேர்ந்தெடுத்தேன் என்றால் அது என் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கிறது. என் குடும்பத்தார் எதை நம்பிக்கை கொண்டிருந்தார்களோ அதற்கே நான் வந்து விட்டேன். அவர்கள் எப்படி வாழ்ந்தார்களோ அப்படியே நானும் வாழ்கிறேன். இதற்காகத்தான் நான் அல்குர்ஆனை வாசிக்கும்படி ஏவப்பட்டேன் . அதை நான் ஓதுவதில் மகிழ்ச்சியைக் காண்கிறேன். பெருமை கொள்கிறேன். என் இறைவனுக்கு ஒரு பெயர் உண்டு. அது தான் அல்லாஹ்.

இறை நம்பிக்கை இல்லாதவர்களுக்கு நான் சொல்வேன்: நீங்கள் குர்ஆனைத் திறந்த மனதோடு பாருங்கள். நீங்கள் அவ்வாறு வாசித்தால் அறிவதற்கு ஏராளம் உள்ளது.

-மௌலானா அப்ஸலுல் உலமா உவைஸ்

- முஸ்லிம் முரசு நவம்பர் 2015

source: http://jahangeer.in/November2015.pdf