Home கட்டுரைகள் சமூக அக்கரை வஹ்ஹாபிசம் பற்றிய தவறான புரிதல்கள்
வஹ்ஹாபிசம் பற்றிய தவறான புரிதல்கள் PDF Print E-mail
Monday, 08 February 2016 08:33
Share

வஹ்ஹாபிசம் பற்றிய தவறான புரிதல்கள்

    இனியவன்    

இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாடுகள் பற்றிய புரிதலற்றதாக இருக்கிறது சமஸின் கட்டுரை.

வஹ்ஹாபிசம் என்பது ஷாஃபி, ஹனஃபி என்று சொல்லக் கூடிய இஸ்லாமிய சிந்தனைப் பள்ளிகளைப் போன்ற ஒன்றே தவிர வேறல்ல. அரேபியாவில் 18 நூற்றாண்டில் வாழ்ந்த அப்துல் வஹ்ஹாப் என்பவரின் பின்பற்றாளர்களே வஹ்ஹாபிகள் என அழைக்கப் படுகின்றனர்.

இஸ்லாத்தின் ஒவ்வொரு விவகாரங்களையும் அதன் சட்ட மூலங்களான குர்ஆன் மற்றும் ஹதீஸ் இரண்டிலிருந்து மட்டுமே பார்க்க வேண்டும் என்று சொல்வதையும், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மற்றும் அவர் வழி வந்த சஹாபாக்களை பின்பற்ற வேண்டும். புதிய இடைச்செருகல்கள் (பித்அத்) கூடாது என்பதை தவிர வேறு எதையும் வஹ்ஹாபிசம் கூறவில்லை.

நெகிழ்வுத் தன்மை குறைந்த, குறுகலான பார்வையுடன் கூடிய வஹ்ஹாபிய (இப்படி அழைப்பதையே அவர்கள் விரும்புவதில்லை) அறிஞர்களின் மார்க்க விளக்கங்கள் மற்ற சிந்தனைப் பள்ளி அறிஞர்களால் கடிந்துரைக்கப் பட்டாலும் சுன்னத் வல் ஜமாத் எனும் கட்டமைப்புக்குள்ளாகவே அவர்கள் பார்க்கப்படுகின்றனர்.

தமிழகத்தில் தவ்ஹீத் ஜமாத்தினர் (ததஜ) மட்டுமல்ல அஹ்லே ஹதீஸ், JAQH, ஜமாத்தே இஸ்லாமி போன்ற அமைப்புகளும் வஹ்ஹாபி என்றே அழைக்கப் படுகின்றனர். எனினும் இவர்களுக்குள்ளாகவும் சில கருத்து வேறுபாடுகள் உள்ளன. இந்த கருத்து வேறுபாடுகளை இஸ்லாம் எதிர்க்கவில்லை.

சுருக்கமாக சூஃபி சிந்தனைக்கு எதிரான, பித்அத் எனும் இடைச்செருகல்களுக்கு எதிராக தூய இஸ்லாத்தை முன் வைக்கும் அமைப்புகள் வஹ்ஹாபிகள் என்று அழைக்கப் படுகின்றனர். வஹ்ஹாபி என்பதை ஒரு கெட்ட வார்த்தை போல இந்தியாவில் சிலர் சித்தரித்து வருகின்றனர்.

ஆனால்....

சமஸ்... உங்களுக்கு தெரியுமா இந்திய விடுதலை வரலாற்றில் வஹ்ஹாபிகளுக்கென்று சிறப்பான இடமிருக்கிறது. சுமார் 200 ஆண்டு கால ஆயுதம் தாங்கிய போராட்டங்களை ஸையது அஹ்மது ஷஹீத் உள்ளிட்டோர் தலைமையில் ஆங்கிலேயரை எதிர்த்து நடத்தியதோடு மட்டுமல்ல வெள்ளையரை துரத்தியடித்து விட்டு வட இந்தியாவின் பல பகுதிகளை ஆட்சியும் செய்துள்ளனர். அந்நேரத்தில் எந்த மாற்று மத வழிப்பாட்டு தலங்களும் இடிக்கபட்டதாகவோ, பிற சமய மக்கள் துன்புறுத்தப் பட்டதாகவோ எந்த வரலாற்று பதிவும் இல்லை.

ஆக, வஹ்ஹாபிகள் தங்கள் ஆட்சியில் எவ்வித இடிப்புகளையும் செய்யாத போது இனிமேல் செய்வார்கள் என அச்சப்படுவதும், உலகத்திலேயே மிக மோசமான, கீழ்த்தரமான, பெண்களை கூட்டாக நடுத்தெருவில் பாலியல் வல்லுறவு செய்யக்கூடிய, பிஞ்சு குழந்தைகளையும், பெண்களையும், முதியவர்களையும் எரித்து கொல்லக் கூடிய, கன்னியாஸ்திரி பெண்களையும் கற்பழிக்க கூடிய, மிருகங்களை மனிதர்களை விட மேலானதாக கருதக் கூடிய ஒரு கழிசடை கும்பலோடு வஹ்ஹாபிகளை ஒப்பிடுவதும் வன்மையாக கண்டிக்கத் தக்கது.

பிராமணர்கள் பேசும் இந்து மத அடிப்படைவாதம் பிற மக்களை இழிவு படுத்தி அடிமைகளாக்குகிறது. இஸ்லாம் பேசும் அடிப்படைவாதம் இழிவைப் போக்கி, மனிதனுக்கு சமத்துவத்தையும், ஓரிறை வணக்கத்தையும், ஒழுக்க ரீதியான வாழ்வியலையும் வழங்குகிறது.

எனவே இஸ்லாமிய அடிப்படைவாதம் இந்தியாவுக்கு ஆபத்தல்ல. ஆறுதல். அது வஹ்ஹாபி உள்ளிட்ட எந்த பெயரில் வந்தாலும் சரி!

source: https://www.facebook.com/kanchiiniavan?fref=ts&__mref=message_bubble