Home குடும்பம் இல்லறம் கணவரின் உயிரணு„ மனைவிக்கு மட்டுமே!

இஸ்லாம் கூறும் திருமணம் -Abdul Basith Bukhari

கணவரின் உயிரணு„ மனைவிக்கு மட்டுமே! PDF Print E-mail
Sunday, 10 January 2016 08:04
Share

கணவரின் உயிரணு„ மனைவிக்கு மட்டுமே!

      அ. செய்யது அலி மஸ்லஹி, பாஜில்      

"உங்கள் மனைவியர் உங்களின் விளை நிலங்கள். உங்கள் விளை நிலங்களுக்கு நீங்கள் விரும்பியவாறு செல்லுங்கள்! உங்களுக்காக (நல்லறங்களை) முற்படுத்துங்கள்” (அல்குர்ஆன் 2:223)

இந்த வசனம் பல பிரச்சனைகளுக்கு சரியான தீர்வாக அமைந்துள்ளது.

முதலாவது : சிலவழிமுறைகளில் தாம்பத்திய உறவு கொள்ளக்கூடாது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்தில் வாழ்ந்த யூதர்கள் பரப்புரை செய்து வந்தனர்.

“அவ்வாறு உறவு கொண்டால், குழந்தை மாறுகண் உடையதாகப் பிறக்கும் என பரப்புரை செய்து வந்தனர்” (நூல் முஸ்லிம் : 2592)

இரண்டாவது : குறிப்பிட்ட நாட்களில்தான் இல்லறம் நடத்த வேண்டும் எனும் மூடநம்பிக்கை இருந்து வந்தது. இத்தகைய தவறான நம்பிக்கைக்கு எதிராகவே இவ்வசனம் தீர்வாக அருளப்பட்டது.

‘நீங்கள் விரும்பியவாறு செல்லுங்கள்’ எனும் சொற்றொடர் மூடநம்பிக்கைக்கு எதிராகவும், ஒருவலுவான தீர்வாகவும் அமைந்துள்ளது.

மூன்றாவது : இன்றைய நவ நாகரீக உலகில் நவீன பிரச்சனையாக உருவெடுத்துள்ள ‘செயற்கை முறையில் கருவூட்டல்’ போன்ற பிரச்சனைக்கும் இவ்வசனம் அழகான தீர்வாக அமைந்துள்ளது.

பருவமடைந்த ஆரோக்கியமான பெண்களுக்கு தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சினை முட்டைகள் உற்பத்தியாகும். அந்த கரு முட்டைகள் அடுத்த கட்டத் தேவையான ஆணின் விந்து கிடைக்கப் பெறாத சந்தர்ப்பத்தில் அம்முட்டைகளுடன் கருவறை சுவர் சுத்திகரிக்கப்பட்டு கழிவுகளாக வெளியேற்றப்படும். இதற்கு ‘மாதவிடாய்’ என்று கூறப்படுகிறது.

“மாதவிடாய்ப் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள் (நபியே) நீர் கூறும் ‘அது (ஒரு உபாதையான தீட்டு ஆகும்’’ (அல்குர்ஆன் 2:222)

ஆகுமான திருமண உறவின்மூலம் இறை நாட்டப்படியும் இயற்கை விதிப்படியும் குழந்தைப்பாக்கியம் கிடைக்கிறது. திருமணமான கணவனும் - மனைவியும் கலப்பதினால் சினை முட்டையுடன் கணவனின் விந்து இணையும் போது அங்கு கரித்தரிப்பு ஏற்படுகிறது. கருக்கட்டல் நிகழ்ந்தால், கருப்பையில் புதிய கருவ தங்கியதும், இயக்குநீர் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக மாதவிடாய் ஏற்படுவது தற்காலிகமாகத் தடைபடுகிறது.

சில காரணங்களால் ஆணின் விந்தும், பெண்ணின் முட்டையும் இணைந்து கருவை உருவாக்கத்தை ஏற்படுத்தாத போது, விந்தையும், முட்டையையும் கண்ணாடி கிண்ணத்தில் வளர்ப்பூடகத்தில் இணைத்து கருவவை உருவாக்கி, பெண்ணின் கருப்பைக்குள் வைத்து வளர்க்கும் முறை பரீட்ச்சிக்கப்பட்டு, இச்சோதனை வெற்றிபெற்றது. இதன் மூலம் ‘பரிசோதனைக்குழாய் குழந்தைகள்’ உருவாக்கத்திற்கு வழி காணப்பட்டது.

இத்தகைய செயற்கை கருவூட்டல் முறையை மேற்கூறப்பட்ட வசனம் ஆதரிக்கும் தீர்வாக அமைந்துள்ளது. எனினும் ‘செயற்கை முறையில் கருவூட்டப் பல வழிகள்’ இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றில் எது அனுமதிக்கப்பட்டது? எது தடுக்கப்பட்டது? என்பதையும் இவ்வசனம் தீர்வாக கூறுகின்றது.

செயற்கையான முறையில் விந்தை பெண்ணின் இனப்பெருக்க உறுப்பினுள் உட் செலுத்தும் போது, குழந்தை பாக்கியம் கிடைக்கிறது. இதற்கு பல வழிகள் உண்டு.

1. ஒரு பெண்ணின் ஆண் துணையிடமிருந்து உயிரவை எடுத்து, அப்பெண்ணின் முட்டையுடன் இணைத்து கருவவை உருவாக்குவது.

2. ஒரு பெண்க்கு வேறு ஆணிடமிருந்து விந்தை பெறுவது.

3. கணவன் - மனைவி ஆகியோரின் செயற்கை கருவை வாடகைத் தாய் சுமப்பது.

4. வெவ்வேறு ஆண் - பெண் செயற்கை கருவை வாடகைத் தாய் சுமப்பது.

இப்படிப்பட்ட பழவழிகள் உண்டு.

இவற்றின் ஆகுமானவழி முதலாவது அகுமுறையாகும். என்பதை அந்த வசனத்தின் ‘உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள்’ என்ற சொற்றொடர் மூலம் கணவனின் உயிரவை எடுத்து செயற்கை முறையில் மனைவிக்குச் செலுத்தலாம். கணவன் அல்லாத மற்றவர்களின் உயிரவை எடுத்து மனைவிக்குச் செலுத்தக் கூடாது என்பதை விளங்க முடிகிறது.

செயற்கை கருவூட்டல் முறையில்கூட கணவனின் உயிரவை மனைவிதான் சுமக்கவேண்டும். வாடகைப் பெண்கள் அல்ல.

அண்டை வீட்டாரை எனக்கு வாரிசாக்கி விடுவாரோ என்று நான் எண்ம் அளவுக்கு, அண்டை வீட்டாரை அரவணைத்து வாழும்படி ஜிப்ரயீல் (வானவர் தலைவர்) என்னிடம் வலியுறுத்திக் கொண்டேயிருந்தார் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியிருக்கிறார்கள்.

அண்டை வீடு என்பதை அல்லாஹ் இருவகைப் படுத்தித் தந்திருக்கிறான்.

1. “வல் ஜாரி ஃதில் குர்பா - உறவினரான அண்டைவீட்டார்”

2. வல் ஜாரில் ஜுனுபி - அன்னியரான அண்டை வீட்டார்.”

இதற்கு விளக்கமாக, முஸ்லிமான அண்டைவீட்டார் முதல் வகை. முஸ்லிம் அல்லாத அண்டைவீட்டார், இரண்டாவது வகை என்று “மஆரிபுல் குர்ஆன்” குறிப்பிடுகிறது.

பல ஊர்களில், நகரங்களிலுள்ள அடுக்கு மாடித்தளங்களில் அடுத்தடுத்து இருப்போர் முஸ்லிம்களாக இருந்தும் கதவு திறப்பதில்லை! நலம் விசாரிப்பதில்லை! சலாம் கூடக் கூறிக் கொள்வதில்லை! வேறு பல முஸ்லிம் குடும்பங்கள் அண்டை வீட்டார் எந்த மதத்தவராக இருந்தாலும் மிக நேசமாக, நட்பு பாராட்டி உறவினர்களைப் போல் பாராட்டுதலும் நடக்கின்றது.

- முஸ்லிம் முரசு டிசம்பர் 2015

source: http://jahangeer.in/December_2015.pdf