Home கட்டுரைகள் குண நலம் சகிப்புத்தன்மை: அதன் எல்லையும், வலிமையும்
சகிப்புத்தன்மை: அதன் எல்லையும், வலிமையும் PDF Print E-mail
Thursday, 07 January 2016 07:36
Share

சகிப்புத்தன்மை: அதன் எல்லையும், வலிமையும்

    பஷீர் அஹ்மத் உஸ்மானி    

[ அல்லாஹ் கூறுகின்றான்: “ஒரு விஷயம் உங்களுக்கு நன்மையாக இருக்கும் நிலையில் அதனை நீங்கள் வெறுக்கக் கூடும். மேலும், ஒரு விஷயம் உங்களுக்குத் தீமையாக இருக்கும் நிலையில் அதனை நீங்கள் விரும்பக்கூடும். (இவற்றை) அல்லாஹ் நன்கு அறிகின்றான். ஆனால் நீங்கள் அறிவதில்லை.”]

சகிப்புத்தன்மை தற்போது நாட்டின் விவாதப் பொருளாக மாறிப்போயிருக்கிற முக்கியத்துவம் வாய்ந்த ஓர் விஷயமாகும்.

பாமரர்கள், படித்தவர்கள், ஆள்கிறவர்கள், குடிமக்கள் என எல்லோராலும் அதிகம் பேசப்பட்ட ஓர் அம்சமாகும்.

பத்திரிக்கை ஊடகங்கள் பெரிய எழுத்தாளர்களைக் கொண்டும், காணொளி ஊடகங்கள் பெரிய பெரிய மேதாவிகளை அழைத்தும் சகிப்புத்தன்மைக்கு புதியதோர் வரைவிலக்கணத்தைக் கொடுத்திருக்கின்றனர்.

திருக்குறளுக்கு அடுத்து அதிக விளக்கமும், விரிவுரையும் பெற்ற ஒன்று இருக்குமானால் அது சகிப்புத்தன்மை என்ற வார்த்தையாகத்தான் இருக்கும்.

நாட்டில் நிலவுகிற சகிப்புத்தன்மையற்றப் போக்கைக் கண்டித்து நாடெங்கிலும் உள்ள எழுத்தாளர்கள், கலைத்துறையச் சார்ந்த கலைஞர்கள் என பெரும் திரளானோர் ஒருவர் பின் ஒருவராக அரசு அவர்களுக்கு அளித்த கௌரவங்களையும், அடையாளங்களையும், விருதுகளையும் திருப்பிக் கொடுத்ததோடு, கடுமையான கண்டனங்களையும் பதிவு செய்திருந்த நிகழ்வுகள் அனைத்தையும் ஊடகத்தின் வாயிலாக நாம் அறிந்திருக்கின்றோம்.

சமீபத்திய பிகார் தேர்தலில் பாஜக வின் வீழ்ச்சிக்கு சகிப்புத்தன்மை குறித்த கண்ணோட்டமும், விமர்சனமும் தான் முக்கியப் பங்கு வகித்ததாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். (மாலைமலர், நாகர்கோவில் பதிப்பு, 9:11:15)

அப்படி என்ன தான் இருக்கிறது, இந்த சகிப்புத்தன்மை என்ற வார்த்தையில் என்று கேள்வி எழுப்பினால்?...

இஸ்லாத்தின் பதில் என்னவாக இருக்கும்? இதோ..

சகிப்புத்தன்மை என்பது பன்முகங்கள் கொண்ட ஓர் உயரிய பண்பு என இஸ்லாம் அடையாளப்படுத்தும்.

விட்டுக் கொடுப்பது, பெருந்தன்மையோடு நடப்பது, போதுமென்ற மனதை பெற்றிருப்பது, பொறுமை காப்பது, மன்னிப்பது, மறப்பது, என்பன போன்ற பல்வேறு குணங்களோடு தொடர்புடையது என்று கூறி அழகு சேர்க்கும்.

தனிமனித வாழ்வில் துவங்கி, கூட்டு வாழ்க்கை, பொது வாழ்க்கை, இல்லறம், குடும்பம், கொடுக்கல் – வாங்கல், அரசியல், வணக்க வழிபாடு என மனித சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும், குறிப்பாக ஓர் இறைநம்பிக்கையாளனின் வாழ்வின் அத்தனைத் தளங்களிலும் ஆளுமை செலுத்துகிற ஆற்றல் கொண்ட ஓர் அற்புதப் பண்பு என வலியுறுத்தும்.

சகிப்புத்தன்மையை இழக்கிற அல்லது தூக்கி எறிகிற மனித சமூகத்திடம், குறிப்பாக ஓர் இறைநம்பிக்கையாளனிடம் பொறாமை, பகைமை, விரோதம், குரோதம், காழ்ப்புணர்ச்சி, பழிவாங்கும் உணர்வு போன்ற இஸ்லாம் வெறுக்கும் தீய பண்புகள் இடம் பெரும் அபாயம் இருப்பதாக வலிமையாக எச்சரிக்கும்.

சுருங்கச் சொல்ல வேண்டுமானால், உயர் பண்பாடுகளின் உறைவிடமாய், தீய பண்பாடுகளில் இருந்து காக்கும் கேடயமாய் அமைந்திருக்கும் மிக உயர்ந்த பொக்கிஷம் தான் சகிப்புத்தன்மை என்று இஸ்லாம் வர்ணிக்கும்.

ஒரு படி மேலே சென்று அல்லாஹ் தன் அடியானிடம் மிகவும் நேசிக்கும் அழகிய பண்பே சகிப்புத்தன்மை தான் என மகுடம் சூட்டும்.

வாருங்கள்! இத்தகைய சகிப்புத்தன்மை குறித்து இஸ்லாம் கூறும் அழகிய வழிகாட்டலைக் கொஞ்சம் பார்த்து வருவோம்!.....

சகிப்புத்தன்மை குறித்து இஸ்லாம் கூறும் அழகிய வழிகாட்டல்கள்

1. விருப்பு, வெறுப்பின் போது சகிப்புத்தன்மை வேண்டும்.

விருப்பு, வெறுப்பு இது மனித வாழ்க்கையில் இடம் பெறும் தவிர்க்க முடியாத ஓர் அம்சமாகும். இன்னும் சொல்லப்போனால், மனிதன் தன் வாழ்க்கையில் அதிக முக்கியத்துவம் தருகிற அம்சமும் இது தான்.

நமக்கு விருப்பமான ஒன்று நடக்காமல் போனாலும், வெறுப்பான ஒன்று நடந்தாலும் அதை சகிப்புத்தன்மையோடு அணுகக் கற்றுக் கொள்ள வேண்டும்.

وَعَسَى أَنْ تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَكُمْ وَعَسَى أَنْ تُحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ لَكُمْ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ

அல்லாஹ் கூறுகின்றான்: “ஒரு விஷயம் உங்களுக்கு நன்மையாக இருக்கும் நிலையில் அதனை நீங்கள் வெறுக்கக் கூடும். மேலும், ஒரு விஷயம் உங்களுக்குத் தீமையாக இருக்கும் நிலையில் அதனை நீங்கள் விரும்பக்கூடும். (இவற்றை) அல்லாஹ் நன்கு அறிகின்றான். ஆனால் நீங்கள் அறிவதில்லை.”

குடும்ப வாழ்வில் சகிப்புத்தன்மை வேண்டும்..

وَحَدَّثَنِى إِبْرَاهِيمُ بْنُ مُوسَى الرَّازِىُّ حَدَّثَنَا عِيسَى - يَعْنِى ابْنَ يُونُسَ - حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ جَعْفَرٍ عَنْ عِمْرَانَ بْنِ أَبِى أَنَسٍ عَنْ عُمَرَ بْنِ الْحَكَمِ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- அ لاَ يَفْرَكْ مُؤْمِنٌ مُؤْمِنَةً إِنْ كَرِهَ مِنْهَا خُلُقًا رَضِىَ مِنْهَا آخَرَ ஞ. أَوْ قَالَ அ غَيْرَهُ .

அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஓர் இறை நம்பிக்கையுடைய கணவன் தன் இறை நம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய குணத்தில் ஏதேனும் ஒரு குணம் அவனுக்கு பிடிக்க வில்லையென்றால், அவளுடைய வேறு குணங்கள் அவனுக்கு மன நிறைவு அளிக்கக் கூடும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)

சகிப்புத்தன்மையை இழந்து விட்டால் நம் நிலை தவறிவிடும். வாழ்க்கைப் போங்கு மாறிவிடும்.

எப்போது நாம் சகிப்புத்தன்மையை மேற்கொள்கின்றோமோ அப்போது வியக்கத்தக்க வாழ்க்கையை நோக்கி நாம் பயணிக்க ஆரம்பமாகி விடுவோம். அங்கே, மனநிறைவும் நிம்மதியும் நம்மை ஆட்கொண்டு விடும்.

மன நிறைவான, நிம்மதியான வாழ்விற்கு..

حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ الأَزْدِىُّ وَشَيْبَانُ بْنُ فَرُّوخَ جَمِيعًا عَنْ سُلَيْمَانَ بْنِ الْمُغِيرَةِ - وَاللَّفْظُ لِشَيْبَانَ - حَدَّثَنَا سُلَيْمَانُ حَدَّثَنَا ثَابِتٌ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِى لَيْلَى عَنْ صُهَيْبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- அ عَجَبًا لأَمْرِ الْمُؤْمِنِ إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ وَلَيْسَ ذَاكَ لأَحَدٍ إِلاَّ لِلْمُؤْمِنِ إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْرًا لَهُ وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ

சுஹைப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “இறை நம்பிக்கையாளனின் நிலை வியப்பிற்குரியது! அவன் எந்த நிலையிலிருந்தாலும் அதனால் நன்மைகளையே குவிக்கின்றான். இந்த நற்பேறு இறை நம்பிக்கையாளனைத் தவிர வேறு யாருக்கும் வாய்ப்பதில்லை. அவன் வறுமை, நோய், துன்பம், சோதனை ஆகிய நிலைகளின் போது பொறுமையைக் கைகொள்கிறான். மகிழ்ச்சியான தருணங்களில், அவன் விரும்பியவை நடக்கிற போது இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றான். இந்த இரண்டு நிலைகளுமே அவனுக்கு நன்மைக்கான காரணங்களாக அமைகின்றன” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)

2. சோதனைகளின் போது சகிப்புத்தன்மை வேண்டும்...

1. பசியில் வாடும் போது..

மனித வாழ்க்கையில் சோதனைகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். அல்லாஹ் அதைப் பல்வேறு வடிவங்களில் மனித வாழ்க்கையில் இடம் பெறச் செய்கின்றான். அந்த வடிவங்களில் ஒன்று பசி, பட்டினி.

அப்படி அவன் பசி, பட்டினியில் வாடும் போது சகிப்புத்தன்மையைக் கையாள வேண்டும்.

عن أبي هريرة رضي الله عنه قال: دخلت على النبي صلى الله عليه وسلم وهو يصلي جالسا, فقلت: يا رسول الله! اراك تصلي جالسا فما أصابك؟ فقال النبي صلى الله عليه وسلم: الجوع يا أبا هريرة! فبكيت, فقال: لا تبك يا أبا هريرة, فانّ شدة الحساب يوم القيامة لا تصيب الجائع اذا احتسب في دار الدنيا.

அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வீட்டிற்கு அண்ணலாரைக் காண்பதற்காகச் சென்றேன். அப்போது, அண்ணலார் வீட்டில் உட்கார்ந்து தொழுது கொண்டிருந்தார்கள்.

நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுது முடிக்கும் வரை காத்திருந்து விட்டு, தொழுது முடித்த பின் “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் உட்கார்ந்து தொழ நான் கண்டேனே! உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது?” என வினவினேன்.

அப்போது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “அபூஹுரைராவே! பசி தான் காரணம்” என்றார்கள். அதைக் கேட்டதும் நான் அழுது விட்டேன். அப்போது, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை நோக்கி “அபூஹுரைராவே! இப்போது நான் என்ன சொல்லிவிட்டேன்! என்று அழுகின்றீர்கள்?” நாளை மறுமை நாளில் கேள்வி கணக்கின் கஷ்டத்தை உணரும் பட்சத்தில் உலகில் பசியோடு இருக்கும் நிலை ஒன்றும் பெரிதாகத் தெரியாது” என்று பதில் கூறினார்கள். (நூல்: அபூதாவூத்)

அகழ் யுத்தத்தின் போது அகழ் தோண்டிக்கொண்டிருந்த ஒரு நபித்தோழர் தம்முடைய பசியை முறையிட்டு விட்டு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தாம் வயிற்றில் கல் ஒன்றை கட்டியிருப்பதைக் காண்பிக்க, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதே பசிக்காக தாங்கள் வயிற்றில் கட்டியிருந்த இரு கற்களைக் காண்பித்தார்கள். (நூல்: புகாரி)

ஒரு நாள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது அருமை மகளார் ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டிற்கு பேரர்களான ஹஸன், ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹுமா) இருவரையும் பார்க்கச் சென்றார்கள்.

வீட்டில் பேரர்கள் இல்லாததைக் கண்ட பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஃபாத்திமாவே! குழந்தைகளை காணவில்லையே எங்கே சென்றிருக்கின்றார்கள்? என்று கேட்டார்கள்.

”உங்களது மருமகன் தான் அவர்களை (ஓர் இடத்தின் பெயரைச் சொல்லி) அங்கே விளையாட அழைத்துச் சென்றிருக்கின்றார்” என்று ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா பதில் கூறினார்கள்.

குறிப்பிட்ட இடத்தில் அன்னையர் திலகம் கூறியவாறே தம் மகன்களோடு அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் விளையாடிக் கொண்டிருப்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டார்கள்.

அண்ணலாரைக் கண்டதும் பேரர்கள் இருவரும் பாசத்தோடு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கரங்களில் தஞ்சம் புகுந்தனர். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேரர்களின் தலையை அன்பாக வருடி விட்டார்கள்.

பின்னர், அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களை நோக்கி “அலீ அவர்களே! இந்த உச்சி வெயிலில் ஏன் குழந்தைகளை விளையாட அழைத்து வந்தீர்கள்?” என்று அன்பு கலந்த கண்டிப்போடு வினவினார்கள்.

அதற்கு, அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! வீட்டில் உண்பதற்கு உணவேதும் இல்லை. ஏற்கனவே, இருவரும் நேற்றிலிருந்து ஒன்றும் உண்ணவில்லை. நானும், ஃபாத்திமாவும் தான். விளையாட அழைத்து வந்தால் விளையாட்டின் கவனத்தில் உணவை மறந்து விடுவார்கள் அல்லவா? அது தான் அழைத்து வந்தேன்” என்று பதில் கூறினார்கள். (நூல்: திர்மிதீ)

ஸஅது இப்னு அபீ வக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: “நாங்கள் அல்லாஹ்விற்காக மேற்கொண்ட யுத்தம் ஒன்றின் பயணத்தின் போது உண்ண உணவில்லாமல் சிரமப்பட்டோம். பல நாட்கள் இப்படியே கழிந்தது. ஒரு நாள் எனக்கு பசி தாங்க வில்லை. அங்கிருந்த முள் மரம் ஒன்றின் இலை, தளைகளைப் பறித்து கழுவி சாப்பிட்டேன். அனைத்துத் தோழர்களும் என்னைப் பார்த்து சாப்பிட்டனர். இறுதியில் எங்களின் மலம் கால்நடைகளின் புழுக்கையைப் போல் இருப்பதை நாங்கள் உணர்ந்தோம். (நூல்: புகாரி)

ஸஅத் இப்னு முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: “அல்லாஹ்விற்காக மேற்கொண்ட யுத்தம் ஒன்றின் பயணத்தின் போது உண்ண உணவில்லாமல் சிரமப்பட்டேன். ஒரு நாள் இரவு சிறுநீர் கழிப்பதற்காக ஓரிடத்தில் ஒதுங்கினேன். அப்போது என் சிறுநீர் பட்ட இடத்தில் ஏதோ சரசர வென்று சப்தம் வருவதை உணர்ந்து அதைக் கையால் எடுத்துப் பார்த்தேன். அது காய்ந்து போன ஒட்டகத்தின் தோலின் ஒரு பகுதியாக இருந்தது.

மறுநாள் காலை அதை நான் சுத்தமாக கழுவி, நன்கு காயவைத்து, பொடியாக்கி, பின்பு நன்கு உலர வைத்து அதை தண்ணீரோடு சேர்த்து சாப்பிட்டேன்”. (நூல்: திர்மிதீ)

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களது வறுமை நிலையை மறுமை நாளின் நிலையோடு ஒப்பிட்டு சகிப்புத்தன்மையை வெளிப்படுத்தினார்கள்.

பின்நாளில் இதே ஸஅத் இப்னு அபீ வக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்கள் சொத்தின் மூன்றில் இரண்டை, சரிபாதியை அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக அர்ப்பணிக்க முன் வந்த செய்தியை வரலாறு பதிவு செய்திருக்கின்றது.

இதே ஸஅத் இப்னு முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஜனாஸாவை மலக்குமார்கள் சுமந்ததோடு, 70000 வானவர்கள் ஜனாஸா தொழுகையிலும் கலந்து கொண்டு துஆச் செய்யும் நற்பேற்றைப் பெற்றார்கள் எனும் செய்தி வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறது.

2. நோயில் முடங்கும் போது..

عمران بن حصين
أسلم عام خيبر، وغزا مع رسول الله صلى الله عليه وسلم غزوات، بعثه عمر بن الخطاب إلى البصرة، ليفقه أهلها وكان من فضلاء الصحابة، واستقضاه عبد الله بن عامر على البصرة، فأقام قاضياً يسيراً، ثم استعفي فأعفاه.
قال محمد بن سيرين: لم نر في البصرة أحداً من أصحاب النبي صلى الله عليه وسلم يفضل على عمران بن حصين.
وكان مجاب الدعوة وكان في مرضه تسلم عليه الملائكة، فاكتوى ففقد التسليم، ثم عادت إليه، وكان به استسقاء فطال به سنين كثيرة، وهو صابر عليه، وشق بطنه، وأخذ منه شحم، وثقب له سرير فبقي عليه ثلاثين سنة، ودخل عليه رجل فقال: يا أبا نجيد، والله إنه ليمنعني من عيادتك ما أرى بك! فقال: يا ابن أخي، فلا تجلس، فوالله إن أحب ذلك إليّ أحبه إلى الله عز وجل.
وحقق ايمان عمران بن حصين أعظم نجاح، حين أصابه مرض موجع لبث معه ثلاثين عاما، ما ضجر منه ولا قال: أفّ..
بل كان مثابرا على عبادته قائما، وقاعدا وراقدا..
وكان اذا هوّن عليه اخوانه وعوّاده أمر علته بكلمات مشجعة، ابتسم لها وقال:
" ان أحبّ الأشياء الى نفسي، أحبها الى الله"..!!
وكانت وصيته لأهله واخوانه حين أدركه الموت:
" اذا رجعتم من دفني، فانحروا وأطعموا"..

இம்ரான் இப்னு ஹஸீன் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபித்தோழர்களில் நபிகளாரின் தனிப் பெரும் பாசத்திற்குரிய ஒருவர். கைபரின் போது இஸ்லாத்தைத் தழுவினார்கள்.

துஆ ஒப்புக்கொள்ளப்படும் தூய நபர்களில் ஒருவராகவும் விளங்கினார்கள்.

கைபருக்குப் பின் நடந்த அனைத்துப் போர்களிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களோடு ஆர்வத்தோடு கலந்து கொண்டார்கள்.

அவர்களுக்கு வயிற்றில் ஒரு கட்டி இருந்தது. அக்கட்டியை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றினார்கள். முறையான மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தால் முடக்கு வாதத்தால் முடங்கிப் போனார்கள்.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் அவர்கள் படுத்தப் படுக்கையாய் ஆனார்கள். என்ற போதிலும் இறைவழிபாட்டில் சிறிதேனும் அவர்கள் விலகிட வில்லை.

ஒரு நாள் அன்னாரை நலம் விசாரிக்க வந்த ஒருவர், “அபா நுஜைதே! உம்மை நலம் விசாரிக்க ஒவ்வொரு நாளும் வரவேண்டும் என நினைப்பேன். ஆனால், மக்கள் உன் நிலை குறித்து என்னிடம் சொன்ன போது இந்த நிலையில் உம்மைப் பார்க்கும் சக்தி எமக்கு வரவில்லை. இப்போது கூட மனதைக் கல்லாக்கிக் கொண்டு தான் உம்மை நலம் விசாரிக்க வந்தேன்” என்று கூறியவாறு அமர்ந்தார்கள்.

அப்போது, இம்ரான் பின் ஹஸீன் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் “தோழரே! நீர் அமரவேண்டாம்! அல்லாஹ் நான் எப்படி இருக்க வேண்டும் என விரும்புகின்றானோ, அவ்வாறே நானும் இருக்க விரும்புகின்றேன். என்னை இப்படிப் பார்க்க விரும்புகின்றான். நான் அதை மனப்பூர்வமாக பொருந்திக்கொண்டேன்” என்று பதில் கூறினார்கள்.

فدخل عليه بعض الصحابة فرأوه فبكوا، فنظر إليهم وقال: لم تبكون؟! قالوا: لحالك، وما أنت عليه من هذا الابتلاء؛ فقال عمران بن حصين -رضي الله عنه-: "شيء أحبه الله أحببته، أنتم تبكون، أما أنا فراضٍ، أحب ما أحبه الله، وأرضى بما ارتضاه الله تعالى، وأسعد بما اختاره الله"، ثم قال لهم: "والله أكون على حالي هذا فأحس بتسبيح الملائكة وأحس بزيارة الملائكة، فأعلم هذا الذي بي ليس عقوبة وإنما يختبر رضائي عنه،

இன்னொரு முறை அவர்களை சந்திக்கச்சென்ற சில ஸஹாபாக்கள் அவர்களின் நிலை கண்டு அழுதபோது, ஏன் அழுகிறீர்கள்? அல்லாஹ் பிரியப்பட்டதை நான் பிரியப்பட்டுவிட்டேன். அவன் திருப்திபட்டதை நான் திருப்திபட்டு விட்டேன். என்று சொன்னதுடன், நீங்கள் என்னை இந்த நிலையை பரிதாபமாகக் காண்கிறீர்கள்.

அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றேன்! இதே நிலையில் இருக்கவே நான் விரும்புகின்றேன். ஏனெனில், நான் மலக்குமார்களின் தஸ்பீஹை கேட்கிறேன். அவர்களை சந்திக்கிறேன், அவர்களின் ஸலாமிற்கு பதில் கூறுகின்றேன், நன்றாக விளங்கிக்கொள்ளுங்கள்! அல்லாஹ் எனக்கு வழங்கிய தண்டனையாக இதை நான் கருத வில்லை, மாறாக, அவனிம் முடிவை நான் திருப்தியோடு ஏற்றுக் கொள்கின்றேனா என்பதை சோதிப்பதற்காக எனக்கு இதை வழங்கியதாக நான் கருதுகின்றேன்” என்றும் கூறினார்கள். (நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ...., உஸ்துல் ஃகாபா)

حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِى مَرْيَمَ حَدَّثَنَا أَبُو غَسَّانَ حَدَّثَنِى أَبُو حَازِمٍ عَنْ سَهْلٍ أَنَّ رَجُلاً مِنْ أَعْظَمِ الْمُسْلِمِينَ غَنَاءً عَنِ الْمُسْلِمِينَ فِى غَزْوَةٍ غَزَاهَا مَعَ النَّبِىِّ - صلى الله عليه وسلم - فَنَظَرَ النَّبِىُّ - صلى الله عليه وسلم - فَقَالَ அ مَنْ أَحَبَّ أَنْ يَنْظُرَ إِلَى الرَّجُلِ مِنْ أَهْلِ النَّارِ فَلْيَنْظُرْ إِلَى هَذَا ஞ . فَاتَّبَعَهُ رَجُلٌ مِنَ الْقَوْمِ ، وَهْوَ عَلَى تِلْكَ الْحَالِ مِنْ أَشَدِّ النَّاسِ عَلَى الْمُشْرِكِينَ ، حَتَّى جُرِحَ فَاسْتَعْجَلَ الْمَوْتَ ، فَجَعَلَ ذُبَابَةَ سَيْفِهِ بَيْنَ ثَدْيَيْهِ حَتَّى خَرَجَ مِنْ بَيْنِ كَتِفَيْهِ فَأَقْبَلَ الرَّجُلُ إِلَى النَّبِىِّ - صلى الله عليه وسلم - مُسْرِعًا فَقَالَ أَشْهَدُ أَنَّكَ رَسُولُ اللَّهِ . فَقَالَ அ وَمَا ذَاكَ ஞ . قَالَ قُلْتَ لِفُلاَنٍ அ مَنْ أَحَبَّ أَنْ يَنْظُرَ إِلَى رَجُلٍ مِنْ أَهْلِ النَّارِ فَلْيَنْظُرْ إِلَيْهِ . وَكَانَ مِنْ أَعْظَمِنَا غَنَاءً عَنِ الْمُسْلِمِينَ ، فَعَرَفْتُ أَنَّهُ لاَ يَمُوتُ عَلَى ذَلِكَ فَلَمَّا جُرِحَ اسْتَعْجَلَ الْمَوْتَ فَقَتَلَ نَفْسَهُ . فَقَالَ النَّبِىُّ - صلى الله عليه وسلم - عِنْدَ ذَلِكَ அ إِنَّ الْعَبْدَ لَيَعْمَلُ عَمَلَ أَهْلِ النَّارِ ، وَإِنَّهُ مِنْ أَهْلِ الْجَنَّةِ ، وَيَعْمَلُ عَمَلَ أَهْلِ الْجَنَّةِ ، وَإِنَّهُ مِنْ أَهْلِ النَّارِ ، وَإِنَّمَا الأَعْمَالُ بِالْخَوَاتِيم .

ஸஹ்ல் இப்னு ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் கைபர் போரில் கலந்து கொண்டேன். போரில் எதிரிகளுக்கு பதிலடி கொடுப்பதில் முஸ்லிம்களிலேயே மகத்தான பங்காற்றிய ஒருவரைப் பார்த்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”நரகவாசிகளில் ஒருவரைப் பார்க்க விரும்புகின்றவர் இவரைப் பார்த்துக் கொள்ளலாம்” என்று கூறினார்கள்.

அவரைப் பற்றி நபியவர்கள் ஏன் அவ்வாறு கூறினார்கள் என்பதை அறிவதற்காக மக்களில் ஒருவர் அவரைப் பின் தொடர்ந்தார். அந்த மனிதரோ இணைவைப்பாளர்களை எதிர்த்துப் போராடுவதில் எல்லோரையும் விட கடுமையாக போராடும் அதே நிலையில் இருந்தார்.

இறுதியில் அவர் எதிரிகளால் கடுமையாகக் காயப்பபடுத்தப் பட்டார். அதனால் அவர் அவசரமாக இறந்து விட விட விரும்பி, தமது வாளின் கூரான பகுதியைத் தம் மார்புகளுக்கிடையில் வைத்து அழுத்திக் கொண்டார். வாள் அவருடைய தோள்களுக்கிடையே இருந்து வெளியேறியது.

பின் தொடர்ந்து சென்ற அந்த மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நோக்கி வந்து “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்று உறுதி படக் கூறுகின்றேன்” என்றார்.

அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “என்ன விஷயம்? என்று கேட்டார்கள். அப்போது, அவர் “தாங்கள் எவரைக் குறித்து நரகவாசிகளில் ஒருவரைப் பார்க்க விரும்புகின்றவர் இவரைப் பார்த்துக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டீர்களோ அவர் முஸ்லிம்களுக்காக போராடுவதில் மகத்தான பங்காற்றினார்.

தாங்கள் அவர் குறித்து இவ்வாறு கூறியதால் நிச்சயம் அவர் இதே தியாக நிலையில் இறக்கப் போவதில்லை என்பதை அறிந்து கொண்டு, அவரைப் பின் தொடர்ந்தேன். அவர் எதிரிகளால் கடுமையாகத் தாக்கப்பட்ட போது அவசரமாக இறந்து விட விரும்பி தற்கொலை செய்து கொண்டார்” என்று சொன்னார்.

அப்போது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “ஓர் அடியார் நரகவாசிகளின் செயல்களைச் செய்து வருவார். ஆனால், இறுதியில் அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராகி விடுவார். இன்னொருவர் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்துவருவார். இறுதியில் அவர் நரக வாசிகளில் ஒருவராகி விடுவார். இறுதி முடிவுகளைப் பொறுத்தே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றன” என்று கூறினார்கள்.

يَا رَسُولَ اللَّهِ صَدَّقَ اللَّهُ حَدِيثَكَ ، قَدِ انْتَحَرَ فُلاَنٌ فَقَتَلَ نَفْسَهُ . فَقَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - அ يَا بِلاَلُ قُمْ فَأَذِّنْ ، لاَ يَدْخُلُ الْجَنَّةَ إِلاَّ مُؤْمِنٌ ، وَإِنَّ اللَّهَ لَيُؤَيِّدُ هَذَا الدِّينَ بِالرَّجُلِ الْفَاجِرِ  .

இன்னொரு அறிவிப்பில்.... “பிலாலே! எழுந்து சென்று “இறைநம்பிக்கையாளர் தவிர வேறெவரும் சொர்க்கத்தில் நுழைய முடியாது. மேலும், அல்லாஹ் இந்த மார்க்கத்திற்குப் பாவியான மனிதனின் மூலமாகவும் வலுவூட்டுவான்” என்று மக்களிடையே அறிவிப்புச் செய்யுங்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி, கிதாபுல் கத்ர், பாபு அல் அமலு பில் ஃகவாதீமி)

மேற்கூரிய இரு நிகழ்வுகளில் முதல் நிகழ்வு சகிப்புத்தன்மையால் ஏற்படும் நன்மையை உணர்த்துகிறது. பிந்தைய நிகழ்வு சகிப்புத்தன்மையை இழந்ததால் ஏற்பட்ட தீமையை உணர்த்துகின்றது.

3. சக முஸ்லிம்களால் அவமானப்படுத்தப் படும்போது...

ஒரு மனிதன் பெரும்பாலும் தனக்கு அறியாத, நெருக்கம் இல்லாத ஒருவரின் மூலமாக ஏதேனும் துன்பத்திற்கு உள்ளானால் பெரிது படுத்தமாட்டான். ஆனால், அதே தனக்கு மிகவும் தெரிந்த நெருக்கமானவரின் மூலம் ஏதேனும் துன்பமோ, நெருக்கடியோ ஏற்பட்டால் அவனால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை.

இன்னும் அவன் செய்யாத ஒரு குற்றத்தைச் செய்ததாகக் கூறி மன ரீதியான நெருக்கடி தரும் போது அப்படியே துவண்டு போய் விடுகின்றான்.

சதா குற்றச்செயல்களில் ஈடுபடுகிறவன் இது மாதிரியான தருணங்களில் அலட்டிக் கொள்ளமாட்டான். அதுவே, நிரபராதியாக இருக்கும் ஒருவனால் ஏற்றுக் கொள்ள இயலாமல் துடித்துப் போய்விடுவான். இது போன்ற நிலைகளிலும் சகிப்புத்தன்மையை இஸ்லாம் கையாளச் சொல்கிறது.

حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ حَدَّثَنَا أَبِى حَدَّثَنَا الأَعْمَشُ قَالَ سَمِعْتُ شَقِيقًا يَقُولُ قَالَ عَبْدُ اللَّهِ قَسَمَ النَّبِىُّ - صلى الله عليه وسلم - قِسْمَةً كَبَعْضِ مَا كَانَ يَقْسِمُ ، فَقَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ وَاللَّهِ إِنَّهَا لَقِسْمَةٌ مَا أُرِيدَ بِهَا وَجْهُ اللَّهِ . قُلْتُ أَمَّا أَنَا لأَقُولَنَّ لِلنَّبِىِّ - صلى الله عليه وسلم - فَأَتَيْتُهُ وَهْوَ فِى أَصْحَابِهِ فَسَارَرْتُهُ فَشَقَّ ذَلِكَ عَلَى النَّبِىِّ - صلى الله عليه وسلم - وَتَغَيَّرَ وَجْهُهُ وَغَضِبَ ، حَتَّى وَدِدْتُ أَنِّى لَمْ أَكُنْ أَخْبَرْتُهُ ثُمَّ قَالَ அ قَدْ أُوذِىَ مُوسَى بِأَكْثَرَ مِنْ ذَلِكَ فَصَبَرَ  .

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹுனைன் போரின் போது கிடைத்த செல்வங்களை வழக்கமாகப் பங்கிடுவதைப் போன்று பங்கிட்டுக் கொண்டிருந்தார்கள்.

அந்தப் பங்கீட்டைப் பெறுவதற்காக நான் வரிசையில் நின்று கொண்டிருந்தேன். அப்போது, அன்ஸாரிகளில் ஒருவர் என்னிடம் வந்து “அல்லாஹ்வின் மீதாணையாக! இது அல்லாஹ்வின் திருப்தி நாடப்படாத பங்கீடாகும்” என அதிருப்தியுடன் கூறினார்.

அதற்கு, நான் அவரிடம் ”நிச்சயம் இதைப்பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறுவேன்” என்று சொன்னேன். என்முறை வந்த போது எனது பங்கீட்டை வாங்க நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்றேன். அவர் கூறியதை நபி {ஸல்} அவர்களிடம் கூறி விடலாம் என்று முனைந்தேன். ஆனால் நபிகளாரைச் சுற்றிலும் நபித்தோழர்கள் அமர்ந்திருந்தனர்.

எனவே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காதோரமாகச் சென்று இரகசியமாக அவர் சொன்னதைச் சொன்னேன்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முகமே மாறிவிட்டது. அவர் கூறிய அந்த வார்த்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அதிக மனவருத்தத்தைக் கொடுத்தது. இதையடுத்து நான் அவர்களிடம் அவர் கூறியது பற்றி தெரிவிக்காமல் இருந்திருக்கலாமே என்று நினைத்தேன்.

பிறகு, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இதை விட அதிகமாக மன வேதனைக்கு ஆளாக்கப்பட்டார். இருப்பினும், பொறுமையுடன் அவர் சகித்துக் கொண்டார்” என்று கூறினார்கள். (நூல்: புகாரி)

عن عكرمة عن ابن عباس قال: فقدوا قطيفة يوم بدر فقالوا: لعل رسول الله صلى الله عليه وسلم أخذها. فأنزل الله: { وَمَا كَانَ لِنَبِيٍّ أَنْ يَغُلَّ } أي: يخون.
وقال ابن جرير: حدثنا محمد بن عبد الملك بن أبي الشوارب، حدثنا عبد الواحد بن زياد، حدثنا خصِيف، حدثنا مِقْسَم حدثني ابن عباس أن هذه الآية: { وَمَا كَانَ لِنَبِيٍّ أَنْ يَغُلَّ } نزلت في قطيفة حمراء فُقدت يوم بدر، فقال بعض الناس: لعل رسول الله صلى الله عليه وسلم أخذها قال فأكثروا في ذلك، فأنزل الله: { وَمَا كَانَ لِنَبِيٍّ أَنْ يَغُلَّ وَمَنْ يَغْلُلْ يَأْتِ بِمَا غَلَّ يَوْمَ الْقِيَامَةِ }

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

பத்ரு யுத்தத்தின் போது எதிரிகளிடமிருந்து ஃகனீமத்தாக கிடைத்த பொருட்களில் சிகப்பு நிற அழகிய போர்வை ஒன்று பங்கிடும் போது காணாமல் போனது. அப்போது, மக்களில் சிலர் ”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எடுத்திருக்கலாம்” என கூறிக்கொண்டனர். இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகவும் மன வேதனை அடைந்தார்கள்.

அப்போது, அல்லாஹ் “மேலும், மோசடி செய்வது எந்த ஒரு நபிக்குரிய செயலாகவும் இருக்க முடியாது. எனவே, எவர் மோசடி செய்கின்றாரோ அவர் மறுமை நாளில் தான் செய்த மோசடியுடன் தான் வருவார். பின்னர் ஒவ்வொரு மனிதனுக்கும் அவரவர் சம்பாதித்தற்கான கூலி முழுமையாகக் கொடுக்கப்படும். அவர்களில் யார் மீதும் அநீதி இழைக்கப்பட மாட்டாது” எனும் இறைவசனத்தை இறக்கி ஆறுதல் அளித்தான். (நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர், திர்மிதீ)

சகோதர, சமய மக்களோடு..

இஸ்லாம் ஏகத்துவ அழைப்பை எடுத்துச் சொல்லுமாறு பணித்தாலும் சகோதர சமயத்தாரோடு இஸ்லாத்தை சொல்லுவதில் நிர்பந்திக்கக் கூடாது என்றும் பணிக்கிறது.

ادْعُ إِلَى سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ وَجَادِلْهُمْ بِالَّتِي هِيَ أَحْسَنُ

“( நபியே!) விவேகத்துடனும், அழகிய அறிவுரைகள் மூலமாகவும் உம் இறைவனின் மார்க்கத்தின் பக்கம் அழைப்பீராக! (அல்குர்ஆன்: 16: 125)

لَا إِكْرَاهَ فِي الدِّينِ

“தீனில் (இறைநெறியை மேற்கொள்வதில்) யாதொரு கட்டாயமோ – நிர்ப்பந்தமோ இல்லை”. (அல்குர்ஆன்: 2: 256)

وَقُلِ الْحَقُّ مِنْ رَبِّكُمْ فَمَنْ شَاءَ فَلْيُؤْمِنْ وَمَنْ شَاءَ فَلْيَكْفُرْ

“இது (இஸ்லாம்) உங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள சத்திய (மார்க்க) மாகும். இனி நம்பிக்கை கொள்ள விரும்புவோர் நம்பிக்கை கொள்ளட்டும்! நிராகரிக்க விரும்புவோர் நிராகரிக்கட்டும்!” (அல்குர்ஆன்: 18: 29)

அல்லாஹ்வை உயிரை விட அதிகம் நேசிக்கச் சொல்கிற மார்க்கம், அதே நேரத்தில் பிற சமய மக்களின் கடவுளர்களை விமர்சிப்பதை, ஏசுவதை தடுக்கிறது.

وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ

“இறைநம்பிக்கையாளர்களோ அல்லாஹ்வை அனைவரையும் விட அதிகம் நேசிக்கின்றார்கள்”. (அல்குர்ஆன்: 2: 165)

وَلَا تَسُبُّوا الَّذِينَ يَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ فَيَسُبُّوا اللَّهَ عَدْوًا بِغَيْرِ عِلْمٍ كَذَلِكَ زَيَّنَّا لِكُلِّ أُمَّةٍ عَمَلَهُمْ

“மேலும், முஸ்லிம்களே! அல்லாஹ்வை விடுத்து அவர்கள் யாரை அழைத்துப் பிரார்த்திக்கின்றார்களோ, அத்தகைய கடவுளர்களை நீங்கள் ஏசாதீர்கள். பிறகு அவர்கள் அறியாமையினால், எல்லை மீறி அல்லாஹ்வையே திட்ட ஆரம்பித்து விடுவார்கள். நாம் இவ்வாறே ஒவ்வொரு பிரிவினருக்கும் அவரவருடைய செயலை அழகாக்கி இருக்கின்றோம்”. (அல்குர்ஆன்: 6: 108)

சகோதர, சமய மக்களோடு வாழ்கிற போது சகிப்புத்தன்மை கடைபிடிக்கத் தூண்டுகிற இஸ்லாம் சகிப்புத்தன்மையின் உச்சமாக இவ்வாறு கட்டளை பிறப்பிக்கிறது.

قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ (1) لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ (2) وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ (3) وَلَا أَنَا عَابِدٌ مَا عَبَدْتُمْ (4) وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ (5) لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ (6)

“( நபியே!) அவர்களிடம் நீர் கூறிவிடும்! ஓ! இறைநிராகரிப்பாளர்களே! நீங்கள் எவற்றை வணங்குகின்றீர்களோ அவற்றை நான் வணங்குவதில்லை. நான் யாரை வணங்குகின்றேனோ அவனை நீங்கள் வணங்குபவர் அல்லர். மேலும், நீங்கள் வணங்கியவற்றை நான் வணங்குபவன் அல்லன். நான் யாரை வணங்குகின்றேனோ, அவனை நீங்கள் வணங்குகின்றவர்கள் அல்லர். உங்களுக்கு உங்களுடைய மார்க்கம். எனக்கு என்னுடைய மார்க்கம்”. (அல்குர்ஆன்: 109: 1 – 6)

எதிரிகளாக யாரைப் பார்க்க வேண்டும்ஸ சக மனிதர்களாக யாரைப் பார்க்க வேண்டும் என இஸ்லாம் சகிப்புத்தன்மைக்கு ஓர் எல்லையையும் வகுத்துத் தந்திருக்கின்றது.

அனைவரையும் மனிதனாகப் பாருங்கள் என இஸ்லாம் கூறுகின்றது.

وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا (70

“நாம் ஆதத்தின் வழித்தோன்றல்களுக்கு கண்ணியம் அளித்துள்ளோம். மேலும், தரையிலும் கடலிலும் அவர்களுக்கு வாகனங்களை வழங்கினோம். தூய பொருள்களிலிருந்து அவர்களுக்கு ஆகாரம் வழங்கினோம். மேலும், நாம் படைத்த பெரும்பாலான படைப்புக்களை விட அவர்களுக்கு அதிகச் சிறப்புகளை வழங்கினோம்”. (அல்குர்ஆன்: 17: 70)

لَا يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ لَمْ يُقَاتِلُوكُمْ فِي الدِّينِ وَلَمْ يُخْرِجُوكُمْ مِنْ دِيَارِكُمْ أَنْ تَبَرُّوهُمْ وَتُقْسِطُوا إِلَيْهِمْ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ ()

“தீன் (இறைமார்க்கம்) தொடர்பான விஷயங்களில் எவர்கள் உங்களுடன் போர் புரியவில்லையோ – உங்களை உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்ற வில்லையோ அவர்களிடம் நீங்கள் நல்லவிதமாகவும், நீதியுடனும் நடப்பதிலிருந்து அல்லாஹ் உங்களைத் தடுப்பதில்லை. திண்ணமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிக்கின்றான்”. (அல்குர்ஆன்: 60:8)

பிற மதத்தவர்களோடு மேற்கொள்ளும் சகிப்புத்தன்மையின் எல்லைஸ.

ولما أراد أبو سفيان الانصراف أشرف على الجبل ثم صرخ بأعلى صوته إن الحرب سجال يوم بيوم اعل هبل، فقال النبي صلى الله عليه وسلم: قم يا عمر فأجبه، فقال: الله أعلى وأجل، لا سواء قتلانا في الجنة وقتلاكم في النار، قال أبو سفيان: لنا العزى ولا عزى لكم، فقال النبي صلى الله عليه وسلم: أجيبوه، قالوا: ما نقول؟ قال قولوا: الله مولانا ولا مولى لكم.

உஹத் யுத்தக்களம் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் எனும் வதந்தியை கமீஆ என்பவன் பரப்பிவிடுகிறான். காரணம் தனித்து விடப்பட்டிருந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குறிவைத்து சில இணைவைப்பாளர்கள் அம்பெய்ய முனைந்ததை பார்த்த தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சிங்கமென சீறிப்பாய்ந்து எறியப்பட்ட அம்புகளையெல்லாம் தமது உடலைக் கேடயமாக பயன்படுத்தி தாங்கிக் கொண்டார்கள்.

இந்தக் காட்சியை கண்ணுற்ற அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு, அபூ உபைதா ரளியல்லாஹு அன்ஹு இருவரும் முன்னேறிச் சென்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை காக்கும் பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார்கள்.கிட்டத்தட்ட 35 அல்லது 39 காயங்களுடன் மயக்கமுற்ற தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு கீழே சாய்ந்தார்கள்.

அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உஹதை பற்றி பேசுகிற சந்தர்ப்பம் ஏற்படும் போதெல்லாம் “அன்றைய தினம் (உஹத்) முழுவதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பாதுகாத்த நன்மையெல்லாம் தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களையேச் சாரும்” என்று கூறுவார்கள்.

உஹதில் நபிகளாரைச் சுற்றி நடைபெற்ற இத்தாக்குதலையெல்லாம் தூரத்தில் இருந்து நோட்டமிட்ட கமீஆ மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று வதந்தியை பரப்பி விட்டான்.

உஹத் யுத்தம் முடிந்து மகிழ்ச்சிப் பெருக்கோடு திரும்பிக்கொண்டிருந்த அபூ சுஃப்யான், முஸ்லிம்களின் நிலையை அறிய மலையின் மீது ஏறி நின்று முஸ்லிம்களை நோக்கி “உங்களில் முஹம்மத் உயிரோடு இருக்கின்றாரா? உங்களில் அபூபக்கர் உயிரோடு இருக்கின்றார? உங்களில் உமர் உயிரோடு இருக்கின்றார? என்று உணர்ச்சியை தூண்டும் விதமாகவும், கோபமூட்டும் விதமாகவும் கூவினார்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதிலளிக்க வேண்டாமென தடுத்து விட்டார்கள். ஆனால் முஸ்லிம்களிடமிருந்து எந்த பதிலும் வராததைக் கண்ட அபூ சுஃப்யான் தமது வீரர்களை நோக்கி “என் மக்களே! அறிந்து கொள்ளுங்கள், இவர்களையே நீங்கள் கொன்று வீட்டீர்கள்; அது போதும் என்றார்.

உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அபூ சுஃப்யானுடைய இந்த ஏளனப்பேச்சை கேட்டு கொதிப்படைந்து பதில் கூற முற்பட்டபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் கரங்களைப்பற்றி இழுத்தார்கள். ஒன்றும் பேசாதீர்கள் என்று சொல்வது போல் அது அமைந்திருந்தது.

அபூ சுஃப்யான் மீண்டும் கூறினார்: “ஹூபுல் சிலைக்குத்தான் கண்ணியமும் உயர்வும்”

இப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உமர் ரளியல்லாஹு அன்ஹு  அவர்களை பதில் கூறுமாறு பணித்தார்கள்.

உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் “ஏய்! அல்லாஹ்வின் எதிரியே! நீ யாரையெல்லாம் கொன்று விட்டதாகக் கூறினாயோ அவர்கள் உயிரோடு தான் இருக்கிறார்கள்” மேலும், அல்லாஹ் தான் உயர்ந்தவன், கண்ணியமானவன்! என்று வீராவேசத்துடன் பதில் கூறினார்.

இதைக் கேட்டு சினமுற்ற அபூ சுஃப்யான் “இந்த வெற்றி எவ்வளவு மகிழ்ச்சியானது பத்ரில் நாங்கள் அடைந்த தோல்விக்கு பகரமாய் ஆகிவிட்டது. போரென்றால் இப்படித்தான்” என்று பதில் கூறினார்.

அதற்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் “ஒருக்காலும் சமமாக முடியாது; உங்களில் கொல்லப்பட்டவர் நரகத்தில் இருப்பார்கள். எங்களில் கொல்லப்பட்டவர்களோ மேலான சுவனத்தில் இருக்கின்றார்கள்! என்று பதிலடி தந்தார்கள்.

அப்போது, அபூசுஃப்யான் “எங்களுக்கு உஸ்ஸாவின் துணை எப்போதும் உண்டு, உங்களுக்கு இல்லையே! என்றார்.

அதற்கு, உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் “அல்லாஹ்வே எங்களுக்கு சிறந்த பாதுகாவலனாக இருக்கின்றான். உங்களின் பாதுகாவலனாக அல்லாஹ் இல்லையே? என்று பதில் கூறினார்கள்.

இதைக் கேட்டதும் அபூ சுஃப்யான் உமரே! இங்கே வாரும் என்றார்.

நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் செல்லுமாறு உமருக்கு அனுமதி வழங்கியதும், உமர் ரளியல்லாஹு அன்ஹு அபூசுஃப்யானின் அருகில் சென்றார்கள். அப்போது, அபூ சுஃப்யான் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் உமரே! ஒரு உண்மையை என்னிடம் சொல்ல வேண்டும்.

உண்மையில் எங்கள் வீரர்கள் முஹம்மதைக் கொன்று விட்டார்களா?இல்லையா?என்று கேட்டார்.

அதற்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக நீங்கள் அவர்களை கொல்லவில்லை. இப்போதும் அவர்கள் உமது பேச்சை கேட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள்” என்றார்கள்.

இதைக் கேட்ட அபூ சுஃப்யான் “ உமரே! இப்னு கமீஆ வை விட நீர் உண்மையாளராகவும் நல்லவராகவும் இருக்க உம்மை நான் காண்கிறேன்” என்றார். (நூல்: தஹ்தீப் சீரத் இப்னு ஹிஷாம், பக்கம் 150)

எதிரிகள் எப்போதும் நம்மோடு ஆரோக்கியமான நிலையில் அணுகுவார்கள் என்று கருதிவிடக் கூடாது. சிலபோது நம்மை ரோஷமூட்டுவார்கள். அந்த நேரத்தில் சகிப்புத்தன்மையை மேற்கொண்டிருக்காமல் அவர்களின் வழியிலேயே சென்று அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் எனும் எல்லையை வகுத்துத் தந்தார்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

யர்முக் யுத்த களத்தின் முதல் நாள் தளபதி காலித் இப்னு வலீத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வீரர்களின் அணிவகுப்பை சரிசெய்து கொண்டிருந்த தருணம் அது...

ரோமப் படையின் தளபதி மாஹான் இஸ்லாமியப்படையின் வீரத்தளபதி காலித் பின் வலீத் ரளியல்லாஹு அன்ஹு மற்றும் இஸ்லாமிய படைவீரர்களை நோக்கிஸ

قد علمنا أنه لم يخرجكم من بلادكم إلا الجهد والجوع فإن شئتم أعطيت كل واحد منكم عشرة دنانير وكسوة وطعاماً، وترجعون إلى بلادكم، وفي العام القادم أبعث إليكم بمثلها!

”உங்களின் வறுமையும், ஏழ்மையும் தான் உங்களை எங்களுக்கு எதிராக போரிடத் தூண்டியிருக்கும் என நான் நினைக்கிறேன். இப்போது ஒன்றும் கெட்டுப்போய் விடவில்லை.

நீங்கள் விரும்பினால் உங்கள் ஒவ்வொருவருக்கும் 10 தீனார்களையும், நல்ல ஆடைகளையும், சிறப்பான உணவுகளையும் தருகிறேன். பெற்றுகொண்டு ஓடி விடுங்கள். அடுத்த ஆண்டு இப்படி படை நடத்தி வந்து வாங்கத்தேவையில்லை. நானே உங்கள் பகுதிக்கு வந்து இதே போன்று வினியோகிக்கிறேன்” என்று ஏளனமாக் கூறினான்.

ரோமப்படைத்தளபதியின் இந்த ஆணவப் பேச்சுக்கு பிண்ணனியில் தமது படையில் 4 லட்சம் வீரர்கள் அணிதிரண்டு வந்திருப்பதும், இஸ்லாமியப் படையில் வெறும் 46 ஆயிரம் வீரர்கள் மட்டுமே இருப்பதும் தான் அப்படிப் பேசுமாறு அவனைத்தூண்டியது என்பதை காலித் ரளியல்லாஹு அன்ஹு விளங்கிக் கொண்டார்கள்.

காலித் இப்னு வலீத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ரோமப் படைத்தளபதி மஹனை நோக்கி:

إنه لم يخرجنا من بلادنا الجوع كما ذكرت، ولكننا قوم نشرب الدماء، وقد علمنا أنه لا دم أشهى ولا أطيب من دم الروم، فجئنا لذلك!)ஸ وعاد بجواده الى صفوف الجيش ورفع اللواء عالياً مؤذناً بالقتال: (الله أكبر، هبي رياح الجنة)

”கவனமாகக் கேட்டுக்கொள்! மாஹானே! நீ சொன்னது போன்ற சூழ்நிலையில் நாங்கள் இல்லை. நாங்கள் வந்த நோக்கத்தை நீ தவறாக கணித்து விட்டாய். நாங்கள் எதிரியின் ரத்தத்தை குடித்து தாகம் தீர்க்க துடிப்பவர்கள். அதுவும் ரோமர்களின் ரத்தம் மிகவும் ருசியாக இருக்கும் என்பதை கேள்விப்பட்டோம். அதனை பரீட்சித்துப்பார்க்க வேண்டியே இங்கு வந்தோம்” என்று கூறினார்கள்.

பின்பு காலித் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது படைவீரர்களை நோக்கி “என்னருமைத் தோழர்களே! சுவனத்து தென்றல் காற்றை சுவாசிக்க விரைந்து செல்லுங்கள்! அல்லாஹு அக்பர் என வீரமுழக்கமிட்டு எதிரிகளின் களத்தினுள் முதல் வீரராக நுழைந்தார்கள். (நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்..)

பதில் சொல்வதோடு நின்று விடாமல் அதை யுத்த களத்திலும் நிரூபித்துக் காட்டினார்கள். தளபதியும், இஸ்லாமியப் படை வீரர்களும்.

ஆம்! 4 லட்சம் கொண்ட ரோமப்படை 46 ஆயிரம் பேர் கொண்ட சின்னஞ்சிறு படையிடம் சிக்குண்டு சிதறி ஓடி தோல்வியைத் தழுவினர்.

قال محمد بن إسحاق في السيرة: ثم قدم على رسول الله صلى الله عليه وسلم وهو بمكة عشرون رجلا أو قريب من ذلك، من النصارى، حين بلغهم خبره من الحبشة. فوجدوه في المسجد، فجلسوا إليه وكلموه وساءلوه -ورجال من قريش في أنديتهم حول الكعبة -فلما فرغوا من مساءلة رسول الله عما أرادوا، دعاهم إلى الله وتلا عليهم القرآن، فلما سمعوا القرآن فاضت أعينهم من الدمع، ثم استجابوا لله وآمنوا به وصدقوه، وعرفوا منه ما كان يوصف لهم في كتابهم من أمره. فلما قاموا عنه اعترضهم أبو جهل بن هشام في نفر من قريش، فقالوا لهم: خَيَّبَكُم الله مِنْ ركب. بعثكم مَنْ وراءكم من أهل دينكم ترتادون لهم لتأتوهم بخبر الرجل، فلم تطمئن مجالسكم عنده حتى فارقتم دينكم وصدقتموه فيما قال؛ ما نعلم ركبًا أحمق منكم. أو كما قالوا لهم. فقالوا [لهم] سلام عليكم، لا نجاهلكم، لنا ما نحن عليه، ولكم ما أنتم عليه، لم نَألُ أنفسَنا خيرًا .

அபீசீனியாவிலிருந்து 20 பாதிரிமார்கள் அடங்கிய குழு ஒன்று சந்திக்க வந்தது. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “இவர்கள் என்னுடைய தோழர்களை மிக உயர்ந்த கண்ணியத்தோடு நடத்திய அபீசீனியாவின் மேதகு மேன்மக்கள் இதோ வருகை புரிந்திருக்கின்றார்கள்.. அதே போன்று இன்று நானும் மிகவும் கண்ணியத்தோடு அவர்களை நடத்தப் போகின்றேன் என்று நன்றிப் பெருக்கோடு கூறினார்கள்.

அவர்களோடு அமர்ந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது, பாதிரிமார்கள் கிருஸ்துவ மதத்தின் மாண்புகளைக் கூறினர். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

பின்னர், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களிடத்திலே இறைமறையின் வசனங்களை ஓதிக் காண்பித்தார்கள். அதைக் கேட்ட பாதிரிமார்கள் தேம்பித் தேம்பி அழுதார்கள்.

அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஓதி முடித்ததும் பாதிரிமார்கள் அனைவரும் தூய இஸ்லாத்தை வாழ்வின் நெறியாக ஏற்றுக் கொண்டனர்.

இதைக் கேள்வி பட்ட குறைஷிகள் பொறாமையால் பொசுங்கிப் போனார்கள்.

பின்பு, இஸ்லாத்தின் ஏகத்துவச் சுடரை ஏந்தி அங்கிருந்து விடை பெற்றுச் சென்ற அபீசீனிய முன்னாள் பாதிரிமார்களைச் சந்தித்து, இடைமறித்த அபூஜஹ்ல் தலைமையில் அடங்கிய குறைஷிகள் “நீங்கள் தனியொரு மனிதனின் சொல்லைக் கேட்டு உங்கள் மார்க்கத்தைத் துறந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக அறிகின்றோம். நீங்கள் முஹம்மதின் மார்க்கத்தை விட்டும் பிரிந்து சென்று விடுங்கள். இல்லையேல் உங்களை மடமைத் தனம் ஆட்கொண்டு விடும்” என்று கூறினர்.

அதற்கு, அவர்கள் “உங்கள் மீது சாந்தி நிலவட்டும்! நாங்கள் ஒரு போதும் மடமைத்தனத்தை அடையப் போவதில்லை, உங்கள் வேலையைப் பார்த்து விட்டு செல்லுங்கள்! முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறித்து எங்களது நெஞ்சங்கள் நல்லதையே எண்ணுகின்றன. நீங்கள் தான் மடமைத்தனத்தில் சிக்கிக் கொண்டிருக்கின்றீர்கள்” என்று கூறிச் சென்றனர்.

நன்றிப் பெருக்கோடு விருந்தோம்பலை வெளிப்படுத்திய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், பாதிரிமார்கள் கிருஸ்துவத்தை நபிகளாரிடத்திலேயே பிரஸ்தாபித்த போது சகிப்புத்தன்மையோடு அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

பின்னர், தங்களுக்கான வாய்ப்பு வரும் போது அல்லாஹ்வின் மார்க்கத்தின் திருமுன் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.

அல்லாஹ் அவர்கள் குறித்து அல்கஸஸ் அத்தியாயத்தின் 52 முதல் 54 வரையிலான வசனங்களை இறக்கியருளினான். (நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர், பாகம்: 3, பக்கம்: 519)

எனவே, சகிப்புத்தன்மையை, பொறுமையை வாழ்வில் எப்படி மேற்கொள்ள வேண்டும், அதன் எல்லைகள் என்ன?, அதன் வலிமை என்ன? என்பதை நாம் மேற்கூறிய நிகழ்வுகளில் இருந்து தெரிந்து கொண்டோம்.

இறுதியாக,

அன்றொரு நாள் கைஸ் குழுவினர் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் காண தூரமான பகுதியிலிருந்து வருகை புரிந்திருந்தனர், வந்த அவசரத்திலும், நபிகளாரைக் காண வேண்டும் என்ற ஆர்வத்திலும், வாகனங்களை அப்படியே விட்டு விட்டு, பொருட்களை ஆங்காங்கே வைத்துவிட்டு அழுக்கடைந்த ஆடையோடும், புழுதி படிந்த முகத்தோடும் நபிகளாரின் சபைக்குள் நுழைந்தனர்.

ஆனால் அவர்களின் தலைவர் அஷஜ் அப்துல் கைஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வாகனத்தை ஓரமாக கட்டிவிட்டு, பொருட்களை பத்திரப்படுத்தி வைத்துவிட்டு, நன்றாக குளித்து ஆடை மாற்றி அண்ணலாரின் முன்வந்து ஸலாம் கூறி நின்றார்கள்.

إن فيك خصلتين يحبهما الله: الحلم والأناة

மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரை நோக்கி “உம்மிடம் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் விருப்பமான இரு பண்புகள் உள்ளன. அவை சகிப்புத் தன்மையும், கம்பீரமான நிதானமும் தாம்” என்று கூறினார்கள்.

அதற்கவர் “அல்லாஹ்வும், அவன் தூதரும் பொருந்திக் கொள்கிற இரு பண்புகளை எனக்குள் ஏற்படுத்திய அல்லாஹ்வுக்கே அனைத்துப்புகழும்!” என்று கூறினார் என இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்.

அஷஜ் அப்து கைஸ் என்பது பட்டப்பெயர். அவரின் இயற்பெயர் முந்திர் இப்னு ஆயித் ரளியல்லாஹு அன்ஹு என்பதாகும். (நூல்: அஹமது பாகம்:4, பக்கம். 205, இஸ்தீஆப், பாகம்:1, பக்கம்:89)

ஆகவே, சகிப்புத்தன்மையோடு வாழும் பாக்கியத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

உலகெங்கிலும் நவம்பர் 7 –ஆம் தேதியை சர்வதேச பொறுமையாளர் தினமாக கொண்டாடுகின்றார்கள்.

இந்த தலைப்பு போன வாரம் போட வேண்டியது. எனினும் வாழ மறந்த வாழ்க்கை எனும் தலைப்பில் பதிவிட்டோம்.

நவம்பர் 14 குழந்தைகள் தினம் கொண்டாடப் பட இருப்பதால் குழந்தை வளர்ப்பு சம்பம்ந்தமாக பேச விரும்புபவர்கள் நம்முடைய முந்தைய பதிவுகளான “சிறார்களை சீராக்குவோம்” ”விழுதுகளை விருட்சமாக்குவோம்” எனும் தலைப்புகளைப் பார்வையிடுங்கள்.

வருகை தரும் அனைவருக்கும், கருத்துக்களை தெரிவிக்கும் அனைவருக்கும் நன்றியை “ஜஸாக்கல்லாஹு ஃகைரன்” எனும் துஆவின் வாயிலாக தெரிவித்துக் கொள்கின்றேன்.

source: http://vellimedaiplus.blogspot.in/2015/11/blog-post_12.html