பசுமை எங்கே..? இயற்கை எங்கே..? |
![]() |
![]() |
![]() |
Friday, 06 November 2015 06:41 | |||
பசுமை எங்கே..? இயற்கை எங்கே..? பசுமையும், இயற்கை வளமும் இறைவன் இவ்வுலகில் நமக்கு வழங்கிய அருட்கொடை. மனிதராய் பிறந்த நமக்கும், மற்றபிற அனைத்து உயிர் இனங்களுக்கும் இவ்வுலகில் உயிர் வாழவும், மற்றபிற தேவைகளுக்கும் பசுமையும் இயற்கை வளமும் பல வகையில் உதவியாய் இருக்கின்றது. பசுமை வளமும், இயற்கை வளமும் நமக்கு அரிதாய் கிடைத்த பொக்கிசங்கள். இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பசுமையையும், இயற்கையையும் மனிதன் ஏதாவது ஒரு சுய தேவைகளுக்காக அழித்துக்கொண்டே தான் இருக்கின்றான். அதன் தாக்கத்தை இன்று நாம் கொஞ்சம் கொஞ்சமாக உணர்கிறோம், காணமுடிகிறது. (பருவமழை பொய்த்து போதல், அனல்காற்று, புழுதிமண், நிலத்தடி நீர் இன்மை,வைரஸ் கிருமிகள் பரவுதல், ஓசனில் ஓட்டை,தட்பவெட்ப சூழ்நிலை மாற்றம்,) இன்னும் எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம். பசுமையை, இயற்கையை அழித்தல் நாம் நம்மையே அழித்துக்கொள்வதற்கு சமமே. ஒரு பசுமையை, இயற்கையை அழித்து விட்டு நாம் ஒன்பதாயிரம் இன்னல்களுக்கு நடுவில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். பசுமையையும், இயற்கையையும் அழித்ததால் நாம் இழந்தவைகளை கணக்கிட்டுச்சொல்ல முடியாது. அதில் சில நம்மால் மறக்க முடியாதவை... நம்மால் அழிந்து கொண்டு இருப்பவை...!!! இதோ சில நினைவூட்டல்... பச்சைப்பசேலென படர்ந்து கிடந்த வயல்வெளிகள் எங்கே..? பாதையாய் நாம் நடந்து சென்ற வாய்க்கால் வரப்புக்கள் எங்கே...? பச்சிளம் நிறமாய் பளிச்சிட்ட புல்வெளிகள் எங்கே..? நித்தம் பூக்கும் பூமரங்கள் எங்கே...? வாய் ருசிக்க சாப்பிட்ட கோவைப்பழங்கள் எங்கே..? நாக்கு சிவக்க சாப்பிட்ட நாவப்பழங்கள் எங்கே...? நாக்கு அரிக்க சாப்பிட்ட முந்திரிப்பழங்கள் எங்கே...? அடர்த்தியாய் எழுந்து நின்ற அலிஞ்சிமரங்கள் எங்கே...? நாம் அள்ளிக்கில்லி விளையாண்ட ஆமனக்குச்செடிகள் எங்கே...? வீட்டு வேலியை பாதுகாத்த முல்லுமுருங்கைகள் எங்கே..? ஆடு, மாடுகள் ருசித்துச்சாப்பிடும் அந்தக் கிலுவை இலைகள் எங்கே...? தொட்டதும் மூடிக்கொள்ளும் தொட்டாசிணுங்கிகள் எங்கே..? தோல் சிவக்க அரிக்கும் செந்தூண்டி இலைகள் எங்கே...? கூட்டம் கூட்டமாய் பறந்து சென்ற பறவைக்கூட்டங்கள் எங்கே....? கும்மாளம் அடித்துச்சென்ற பூநாரைகள் எங்கே...? வெட்டிச்சென்று தாவி ஓடிய வெட்டுக் கிளிகள் எங்கே..? விடிகாலைப்பொழுதில் உதயமாகும் ஈசைப் படைகள் எங்கே...? ஓடிமறைந்து உற்று நோக்கும் ஓணான்கள் எங்கே..? ஒய்யாரமாய் பழம் ருசிக்கும் அழகிய அணில்கள் எங்கே..? வண்ண வண்ண நிறத்தில் வட்ட மடித்த வண்ணத்துப்பூச்சிகள் எங்கே...? வான் சரிந்த இருட்டினில் வெட்டி மின்னிய மின்னட்டாம் பூச்சிகள் எங்கே...? தாவிப்பிடித்து தன் தம்பிக்கு கொடுத்த தட்டான்கள்(தும்பி) எங்கே..? தங்க நிறத்தில் தன வீட்டில் தஞ்சமடையும் பொன்வண்டுகள் எங்கே.? தூரத்து மரத்தில் கூடுகட்டி வாழ்ந்த தூக்கணாங்குருவி எங்கே..? துள்ளிவந்து தோளில் அமரும் மைனாக்கள் எங்கே...? நம்வீட்டில் மழலைப்பேச்சு பேசிய பச்சைக்கிளிகள் எங்கே..? நாம் ரசித்துப்பார்த்த மரம் கொத்திப்பறவைகள் எங்கே...? சப்த ஒலி மட்டும் கேட்டு ரசித்த சாரீர வண்டுகள் எங்கே....? இன்னபல நம் கண்ணில்படா இயற்கை பிறவிகள் எங்கே...? இவை அனைத்தும் இப்போது எங்கே...? தீர்வு ? மீண்டும் பசுமையை ஏற்படுத்துவோம் இயற்கையை காப்போம்...! இழந்ததை மீட்போம்...! இன்பமாய் வாழ்வோம்...! - அதிரை மெய்சா source: http://adirainirubar.blogspot.in/2015/10/blog-post_25.html
|