Home இஸ்லாம் நூல்கள் அண்ணலாரும் அறிவியலும் - நூல் அறிமுகம்
அண்ணலாரும் அறிவியலும் - நூல் அறிமுகம் PDF Print E-mail
Sunday, 18 October 2015 08:04
Share

தூண்டில் பதிப்பகத்தைத் தொடங்கிய போது, தற்போது விற்பனையில் இல்லாத சிறந்த நூல்களை மறுபதிப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தையும் முன்மொழிந்து தொடங்கினோம். அதற்கு முக்கியமானதொரு காரணம் உண்டு. நவீன அறிவியல் வளர்ச்சியில் முன்னேறியிருக்கும் இன்றைய காலகட்டத்தில் எழுத்துத் துறையில் இயங்குபவர்களுக்கு தரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

பிறமொழிகளில் உள்ள நல்ல நூல்கள் தமிழ்மொழியில் ஏராளமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. எத்தனையோ நூல்களும், தகவல்களும் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன.

ஆனால், முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் எழுத்துத் துறையில் இயங்கியவர்களுக்கு இதுபோன்ற வசதி வாய்ப்புகள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை. தன் வாழ்நாளில் பெரும் பகுதியை நூலகங்களில் செலவிட்டு, பெரும் சிரமப்பட்டு ஒவ்வொரு நூலையும் உருவாக்கித் தந்தனர். குறிப்பாக, எத்தனையோ முஸ்லிம் எழுத்தாளர்கள் வறுமையில் வாடிய நிலையிலும் நல்ல நூல்களைத் தந்துவிட்டுச் சென்றுள்ளனர்.

அப்படி உருவான நூல்களில் பெரும்பாலானவை முதல் பதிப்போடு நின்று போய் இன்றைய தலைமுறையினருக்கு கிடைக்காமல் போன நிலை வேதனைக்குரிய விஷயமாகும்.

எத்தனையோ ஆகச்சிறந்த புத்தகங்கள் அழிந்ததோடு மட்டுமல்லாமல் அப்புத்தகத்தை எழுதிய எழுத்தாளர்களையும் சமுதாயம் மறந்துபோன அவலநிலையை சிறிதேனும் போக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில்தான் பழைய புத்தகங்களை மறுபதிப்பு செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தோம். அதன்படி வளர்தமிழிச் செல்வர் மணவை முஸ்தபா அவர்களை எழுதிய 'அண்ணலாரும் அறிவியலும்' என்ற நூலை மறுபதிப்பு செய்து வெளியிட்டுள்ளோம்.

இன்றைய உலகம் பழமைவாதிகள் என்று கூறும் முஸ்லிம்கள் அறிவியலின் வளர்ச்சிக்கும், புதிய கண்பிடிப்புகளுக்கும் எத்தனை சிறப்புமிக்க அடித்தளத்தை அமைத்துச் சென்றுள்ளனர் என்பதை மணவை முஸ்தபா அவர்கள் மிகவும் அற்புதாக, தக்க ஆதாரங்களோடு இந்நூலில் பதிவு செய்துள்ளார்.

முஸ்லிம்கள் உலகிற்கு எத்தகைய பங்களிப்பையும் செய்யாதவர்கள் என்ற பொய்யான பிரச்சாரம் செய்யப்பட்டு வரும் தற்போதைய சூழ்நிலையில் நாம் மறுபதிப்பு செய்ய வேண்டிய முதல் நூல் இதுதான் என்று முடிவெடுத்து அண்ணலாரும் அறிவியலும் என்ற நூலை மறுபதிப்பு செய்து இன்றைய தலைமுறையினருக்கு அறிமுகம் செய்வதில் பெரிதும் மகிழ்கிறோம்.

பெருமானார் (ஸல்) காலம் தொடங்கி விரைவு நடைபோட்டு பின்னர், மின்னல் வேக வளர்ச்சி பெற்று அறிவு தேடல் முயற்சி, அறிவியல் தேட்டமாக வலுப்பெற்று, எண்ணற்ற விஞ்ஞான விந்தைகளை உலகுக்களித்து உலகின் போக்கையே முற்றாக மாற்றியமைத்த வரலாறு...

இழந்த வரலாற்றை அறிவார்ந்த கண்ணோட்டத்தோடு மீட்டெக்க அனவைரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது...

விலை ரூ. 110 (கொரியர் செலவும் சேர்த்து)
நூல் தேவைக்கு:
9003 1203 51
8903 4903 51