Home செய்திகள் உலகம் மக்காவில் கிரேன் விபத்து: வரலாறு காணாத நஷ்ட ஈட்டுத்தொகையை வாரி வழங்க சவூதி மன்னர் உத்தரவு!
மக்காவில் கிரேன் விபத்து: வரலாறு காணாத நஷ்ட ஈட்டுத்தொகையை வாரி வழங்க சவூதி மன்னர் உத்தரவு! PDF Print E-mail
Wednesday, 16 September 2015 20:12
Share

மக்காவில் கிரேன் விபத்து: வரலாறு காணாத நஷ்ட ஈட்டுத்தொகையை வாரி வழங்க சவூதி மன்னர் உத்தரவு!

ஹாஜிகளின் விபத்து குறித்து சவூதி மன்னர் சல்மான்  பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

உயிரிழந்த ஹாஜிகளின் குடும்பத்திற்கு இன்சூரன்ஸ் நிறுவனம் இரத்தபணமாக தலா 3 லட்சம் ரியால் (இந்திய மதிப்பில் ரூ 53 லட்சம்) வழங்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதற்கிடையில் சவூதி அரேபிய அரசின் சார்பில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா 1 மில்லியன் ரியால் (இந்திய மதிப்பில் ரூ1.70 கோடி) வழங்கப்படும். பலத்த காயம் அடைந்து நிரந்தரமாக உறுப்புகளை இழந்து  இயலாமையில் தள்ளப்பட்டவர்களுக்கும் இதே தொகை 1 மில்லியன் ரியால் (இந்திய மதிப்பில் ரூ1.70 கோடி) வழங்கப்படும் என்றும்,

படுகாயம் அடைந்த ஹாஜிகளுக்கு நிவாரண தொகையாக தலா 5 லட்சம் ரியால் (இந்திய மதிப்பில் ரூ 87 லட்சம்) வழங்கப்படும் என்றும்,

இறந்தோரின் குடும்பத்திலிருந்து இருவர் மன்னரின் விருந்தாளிகளாக அடுத்த வருடம் 2016 ஹஜ்ஜுக்கு வந்து செல்லும் முழு செலவையும் சவூதி அரசு ஏற்கும் என்றும்,

காயம்பட்டு இம்முறை ஹஜ் செய்ய இயலாமல் போனவர்கள், குணமடைந்து அடுத்து வருடம் ஹஜ் செய்வதற்கான அனைத்து செலவையும் சவூதி அரசு ஏற்கும் என்றும்,

தற்போது காயம்பட்டு மருத்துவமனை படுக்கையில் சிகிச்சையிலுள்ள நோயாளியை கவனித்துக்கொள்ள அவரின் குடும்ப உறவினர் இருவருக்கு ஸ்பெஷல் விசிட் விசா தந்து வரவழைக்கப்படுவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹஜ்ஜின் காலம் முடியும் வரை கட்டுமான பணிகளை நிறுத்தவும், அதை நிர்வகிக்கும் பின்லாடன் நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பிக்கபட்டது.

விபத்து தொடர்பான விசாரனை முடியும் வரை பின்லாடன் நிறுவன உரிமையாளர் மற்றும் உயரதிகாரிகள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இவ்விபத்தில் மாண்டவர்கள் 111 பேரில், இந்தியர்கள் 11 பேர், காயமடைந்த இந்தியர்கள் 19 பேர்.

இந்திய தூதரக கவுன்சிலர் B.S.முபாரக் கூறுகையில், ''சவூதி மன்னர் அளித்துள்ள நஷ்ட ஈடு இதுவரை உலகில் எங்கும் கேள்விப்படாதது. மன்னரின் நல்லெண்ணத்திற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும், இது'' என்றார்.

"இந்த சோகமான விபத்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவுவதில் சவூதி மன்னர் சல்மான் மற்றும் சவூதிகளின் தாராள தன்மையை நன்கு எடுத்துரைக்கின்றன" என்று லண்டனை தலைமையகமாக கொண்ட இங்கிலாந்தின் தலமை ஹஜ் கவுன்சிலின் அதிகாரி ரஷீத் மொகரடியா கூறினார். மாண்டவர்களில் 2 பேர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்களாவர்.

"என்னுடைய 50 வருட ஊடக துறையில், எந்த ஒரு முஸ்லிம் தலைவரும் இதுபோன்ற ஒரு பிரம்மாண்டமான நஷ்ட ஈடு அளித்ததாக நான் கேள்விபட்டதே இல்லை", என்று அமெரிக்காவை சார்ந்த, பத்திரிக்கையாளர் கமர் அப்பாஸ் ஜாப்ரி கூறியுள்ளார்.

ஹரம் ஷரீபின் தலைமை இமாம் நேரில் ஆறுதல்!

முஸ்லிம்களின் புனித ஆலயமான மக்காவில் இயற்கை சீற்றத்தினால் ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்த ஹாஜிகளை புனித ஆலயத்தின் தலைமை இமாம் அப்துல் ரஹ்மான் அவர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறி இனிப்பு வழங்கினார், மேலும் அவர்கள் விரைவில் குணமடைய பூங்கொத்தும் கொடுத்து மகிழ்வித்தார்.

திகைத்து நிற்கிறது உலகம்:

உலகத்தில் பொதுவாக புனித தலங்களுக்கு செல்லும் பக்தர்கள் விபத்தின் காரணமாக பலியாவதையும், படுகாயம் அடைந்து சிகிச்சை பெறுவதையும் பல இடங்களில் காண முடியும், அவ்வாறு பக்தர்கள் இறப்பதையோ அல்லது படுகாயம் அடைந்ததையோ அன்றைய தினம் ஒரு நாள் மட்டும் செய்தியில் ஒளிபரப்புவார்கள். அதோடு நிறுத்திக்கொள்வார்கள். ஆனால் மக்காவில் விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்த மக்கள் மருத்துவமனையில்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவுடன்....

ஒரு நாட்டின் மன்னர் நேரில் செல்கிறார், 200 கோடி முஸ்லிம்களின் புனித ஆலயத்தின் தலைமை இமாம் நேரில் செல்கிறார், ராணுவ வீரர்கள் வரிசையில் நின்று இரத்தம் வழங்குகின்றனர். இதைக்காணும் உலகம் திகைத்து நிற்கிறது.

மக்காவில் மட்டும் இது எப்படி சாத்தியம் ஆகிறது?

உலகத்தின் புருவத்தை உயர்த்திக்கொண்டிருக்கும் சமத்துவ மாநாடு என்று சொல்லக்கூடிய மக்கா ஹஜ் புனித பயணத்திற்காக 30 லட்சம் முஸ்லிம்கள் ஒன்று கூடியுள்ளார்கள்.

அந்த 30 லட்சம் முஸ்லிம்களில் வெள்ளையனும் கருப்பனும், அமெரிக்கனும் ஆப்பிரிக்கனும்,அரபியும் அரபி அல்லாதவனும், பணக்காரனும் ஏழையும் ஒன்றாக நின்று தோலோடு தோல் உரசி, காலோடு கால் உரசி ஒன்றாக நின்று ஏக இறைவனை வணங்கும் உன்னத மாநாடான உலக சமத்துவ மாநாட்டை நோக்கி உலகம் திகைத்து நிற்கிறது.

 

King: SR1m for family of each crane victim

JEDDAH: Custodian of the Two Holy Mosques King Salman has ordered massive payouts for the families of those killed and injured in last week’s crane crash tragedy, which claimed the lives of 111 people and injured over 238.

In a royal decree on Tuesday, the king announced that there would be SR1 million paid to each victim’s family, SR1 million to those whose injuries resulted in permanent disability, and SR500,000 for each of the injured, the Saudi Press Agency reported.

The king stated that these payments would not exclude the families of the deceased, and the injured, from launching lawsuits through the courts for compensation.

He also announced that the Kingdom would host two family members of those who died, for next year’s Haj. Those who were injured and cannot complete their rituals this year would be able to return next year as the king’s guests. The family members of the injured in hospitals for treatment would be granted visit visas to remain in the Kingdom.

The king also reviewed the report of the committee investigating the incident, which concluded that the crane was blown over by strong winds on Friday while the machine was in an incorrect position.

The king ordered that the report be sent to the Bureau of Investigation and Public Prosecution for further investigations into the procedures adopted by the Saudi Binladin Group.

Meanwhile, Pakistani Consul General Aftab A. Khokher has welcomed the king’s gesture. “This once again proves King Salman’s kindness and care for the Ummah,” he said. “Although nothing can compensate for the loss of life, this will bring huge comfort to the families of those who lost their loved ones.”

Syed Abu Ahmad Akif, the Makkah-based director general of Haj in Pakistan, said: “My salute to the benevolent king for making this large-hearted announcement. He is a true leader of the Muslim world.” Akif said Friday’s deceased were martyrs, and the compensation would provide good support for their families.

Some 11 Pakistanis died in the crash and 14 were injured. At the current exchange rate, the compensation for each Pakistani martyr will come to 27 million Pakistani rupees.

Indian Consul General B.S. Mubarak described the king’s compensation as unparalleled. “It is a great gesture on the part of the king and will help alleviate the suffering of the families and relatives of those who died,” he said.

He said other than the monetary compensation, King Salman’s announcement of inviting two relatives of each of the martyrs for Haj next year was “a very thoughtful gesture.”

In India, SR1 million equals 17 million rupees. There were 11 Indians who lost their lives in the crash and 19 were among the injured. Two are still missing, according to Mubarak.

A well-known American radio broadcaster of Pakistani origin, Qamar Abbas Jafri, who performed Haj in 2013, described the king’s announcement as unprecedented. “In my 50-year journalistic career, I have not heard of any Muslim leader announcing such a healthy compensation,” he told Arab News from Washington.

“When I saw the photos of the king in the Washington papers visiting the injured and personally meeting them in Makkah hospitals, I was very impressed. In the countries where we come from, such as India and Pakistan, leaders do not even care to visit the site of accidents. They only issue sterile statements.”

Jafri said the compensation reinforces the image of King Salman as “the king of kings.”

Rashid Mogradia, chief executive officer of the London-based Council of British Hajis, said: “It shows the generous nature of the Saudis and that of King Salman in assisting all those who were affected by the tragic accident.” The speed and transparency with which the inquiry was conducted and the guilty were named demonstrates King Salman’s utmost concern and care for the guests of Allah, he said.

Two Britons were among the 111 dead.

source: http://www.arabnews.com/featured/news/807031