Home இஸ்லாம் ‘ஷிர்க்’ ‪இஸ்லாத்திற்கும் தர்காவிற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை‬
‪இஸ்லாத்திற்கும் தர்காவிற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை‬ PDF Print E-mail
Friday, 11 September 2015 09:18
Share

‪இஸ்லாத்திற்கும் தர்காவிற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை‬

இஸ்லாமிய வழிகாட்டுதலின்படி, ஒரு ‪‎மனிதர்_இறந்துவிட்டால்‬, அவரை (மைய்யவாடியிலோ/கப்ருஸ்தானிலோ) மண்ணை தோண்டி புதைத்து அடக்கம் செய்துவிட்டு பின்பு ஒரு சாண் அளவு தான் மண்ணால் உயர்த்த வேண்டும். இதை தான் நாம் எல்லா மைய்யாவாடிகளில் பார்த்து வருகிறோம்.

ஆனால் ‪#‎தர்காக்களிலோ கட்டடம்‬ கட்டி இரண்டு அடியிலிருந்து நம்மைவிட உயரமாக ‪#‎ஏழு‬ அடி வரை உயரத்தி இருப்பதையெல்லாம் நாம் பார்க்கிறோம். இதை இஸ்லாம் ஆதரிக்கவேயில்லை மாறாக எதிர்க்கிறது.

1765. ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: கப்றுகள் (புதைக்கப்பட்ட இடம்) பூசப்படுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம்‬ எழுப்பப்படுவதையும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‪#‎தடை‬ செய்தார்கள். - மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. (ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 11. இறுதிக் கடன்கள்.)

வாழ்கையின் வழிகாட்டியான நபிகள் நாயகம் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது நபிமொழியின் மூலம் கட்டடம் எழுப்பவது கூடாது என்பதை அறிய முடிகிறது.

ஆக தர்காவின் ‪‎அடிப்படையே_தவறு‬ என பார்த்தோம். இப்போது தர்காவில் நடக்கும் ‪வழிபாட்டை‬ பற்றி ஆராய்வோம்.

தர்காவில் ஒருவர் அடக்கம் செய்யப்பட்டு, கட்டடம் எழுப்பி பச்சை போர்வையெல்லாம் போர்த்தி, அவரிடம் (அடக்கம் செய்யப்பட்டவரிடம்) உதவி தேடுவதும், அவரை அல்லாஹ்விற்கு (வணக்குத்திற்குரிய ஒரே இறைவனை குறிக்க அரபியில் - அல்லாஹ்) இடைதரகராய் வைக்கும் வண்ணம் தான் அதிகப்படியாக வழிபாடுகள் அமைந்துள்ளன..

என்ன தான் ‪#‎அல்லாஹ்வை‬ நம்பி, அவனுக்கு ‪#‎இடைதரகர்‬ வைத்தாலும், அது அல்லாஹ்வை ‪#‎சரியாக‬ முறையில் நம்பியதாக ‪#‎ஆகாது‬. அவர்களும் நிராகரிப்பவர்களே!! இதை நான் சொல்லவில்லை!! திரிக்குர்ஆன் சொல்கிறது.

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்திலேயே கூட இவ்வாறு நம்பிக்கையுடைவர்கள் இருந்தார்கள்.(பார்க்க திருக்குர்ஆன் 10:31,10:18,39:3) அவர்கள் இறைநிராகரிப்பாளர்கள் என்றே பல இடங்களில் கூறுகிறது.

ஆக ‪தர்காவின்‬ வழிபாட்டு முறையோ ‪இஸ்லாத்திற்கு‬ நேர் ‪முரணானது‬, எதிரானது. இன்னும் தர்காவின் அடிப்படையும் இஸ்லாத்திற்கு நேர் முரணானது. பல முஸ்லிம்கள் இஸ்லாம் குறித்த சரியான அடிப்படை புரிதல் இல்லாததால் இவ்வாறு தர்காவிற்கு செல்கிறார்கள். இதை நாங்கள் அவர்களிடம் எடுத்து சொல்லிக் கொண்டு தான் இருக்கிறோம். இன்னும் அதிகமாக எடுத்துச்சொல்ல வேண்டியிருக்கிறது.

‪முஸ்லிம்மல்லாத‬ நண்பர்களே!! அன்பர்களே!! தர்காவை(சமாதி வழப்பாட்டை) பார்த்து இஸ்லாம் என நினைத்து விடாதீர்கள். இஸ்லாத்தின் அதிமுக்கிய கோட்பாடே "‪‎ஓன்றே குலம்‬ ‪ஒருவனே தேவன்‬" என்பதே. இந்த கொள்கை தான் பகுத்தறிவுக்கு ஒத்துபோவது. இதனால் மட்டுமே சமத்துவம் பிறக்கும். எனக்கு ஒரு கடவுள் உனக்கு வேறு கடவுள் என சொல்வதனால் நம்மினுள் பிரிவு தான் ஏறபடும்.