Home கட்டுரைகள் அரசியல் தப்லீக் ஜமாத்தினரை குறி வைக்கும் மோடி அரசு!
தப்லீக் ஜமாத்தினரை குறி வைக்கும் மோடி அரசு! PDF Print E-mail
Saturday, 09 May 2015 06:46
Share

தப்லீக் ஜமாத்தினரை குறி வைக்கும் மோடி அரசு!

  கொள்ளுமேடு ரிஃபாயி   

[ வெளிநாட்டிலிருந்து வரும் தப்லீக் ஜமாத்தினரை இந்தியாவிலிருந்து வெளியேற்ற வேன்டுமென்று உளவுத் துறையின் ஆலோசனையின் அடிப்படையில் மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்குமேயானால்.. இமிக்கிரேசன் கேட் வழியாக இவர்கள் இந்தியாவிற்குள் வரும்போது இந்நாட்டின் சட்டவிதிகளை மீறித் தான் நுழைகிறார்களா.?

ஒரு வாதத்திற்காக வெளிநாடுகளிலிருந்து வரும் அந்த அமைப்பினரை தடை செய்வது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயம் என்று மத்திய அரசு கருதுமேயானால், அந்த அமைப்பின் உலகளாவிய தலைமையகம் இந்தியாவில் தான் ஆண்டாண்டு காலமாக இயங்கி வருகின்றது.

சுதந்திர இந்தியாவின் சட்டம் ஒழுங்கிற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாக காவல்துறையில் இந்த அமைப்பினர் மீது பதியப்பட்ட ஒரு முதல் தகவல் அறிக்கையையேனும் (FIR) உளவுத்துறையாலும் மத்திய அரசாலும் காட்ட முடியுமா..? ]

தப்லீக் ஜமாத்தினரை குறி வைக்கும் மோடி அரசு!

தப்லீக் ஜமாஅத் என்ற பெயரைக் கேட்ட உடனேயே அவர்களின் எளிமையான தோற்றமும் பணிவான நடவடிக்கைகளும் தான் நமக்கு நினைவுக்கு வரும். தேவைக்கு மட்டும்  பொருளாதாரத்தை திரட்டுவதில் தமது நேரத்தை பயன்படுத்துவார்களே தவிர மீதமிருக்கும் நேரங்களை தஷ்கீல் எனப்படும் தனி நபர் சந்திப்புக்கள் நடத்தி அந்த நபர்களை பள்ளித் தொடர்புடையவர்களாக மாற்றுவதிலேயே குறியாக இருப்பார்கள்.

தப்பித் தவறி நாட்டு நடப்புக்களையோ, அரசியல் நிலவரங்களையோ பேசவோ கேட்கவோ மாட்டார்கள். அவர்களில் நாளேடுகள் படிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைவு தான்.சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்ட தப்லீக் இஜ்திமாக்களில் புகைப்படம் எடுப்பதற்கு கூட அந்த அமைப்பினர் தடை விதித்தனர்.

இந்த நவீன யுகத்திலும் இப்படியா..? என்று அதற்கான காரணத்தை அந்த அமைப்பினரிடம் கேட்ட போது கேமராக்கள் வாயிலாகத் தான் சாத்தானிய செயல்கள் இன்றைய காலத்தில் இணையம் வழியாக வேகமாக பரவுகிறது.ஆகையால் அத்தகைய பாவங்களை அனுமதிக்க முடியாது என்று கூறுகிறார்கள்.

உலகத்துடனான தொடர்புகளை பெரும்பாலும் வெறுக்கக் கூடிய அந்த அமைப்பினர் மீது மத்திய நரேந்திர மோடி அரசாங்கத்தின் பார்வை தற்போது திரும்பியுள்ளது.

இது பற்றி பிரபல ஆங்கில ஏடு ஒன்றில் வெளியாகியிருக்கும் தகவல் வருமாறு :

இஸ்லாமிய நெறிமுறைகளை கடைபிடிப்பது தொடர்பாகமுஸ்லிம்களிடையே பிரச்சாரம் செய்வதற்காக சவூதி அரேபியா,இந்தோனோசியா,கத்தார்,ஐக்கிய அரபு அமீரகம், மியான்மர், பிரான்ஸ் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளிலிருந்து தப்லீக் ஜமாத் அமைப்பினர் சுற்றுலா விசாவில் இந்தியாவிற்குள் நுழைந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இதே நோக்கத்திற்காக இலங்கை,மியான்மர்,பங்களாதேஷ் போன்ற நாடுகளிலிருந்தும் தனி நபர்கள் இந்தியாவுக்குள் நுழைகின்றனர்.

அடிப்படைவாதத்தை போதிப்பதாக கூறி இந்த அமைப்பை பல்வேறு நாடுகள் தடை செய்துள்ளன.இந்நிலையில் தப்லீக் பிரச்சாரத்துக்காக வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் சுற்றுலா விசாவில் நுழைந்திருப்பவர்களை உடனடியாக நாட்டிலிருந்து வெளியேற்றுமாறு உளவுத்துறையின் அறிக்கையை மேற்கோள்காட்டி மத்திய உள்துறை அமைச்சகம் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசாங்கங்களுக்கு  சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்திய சட்டங்களுக்கு முரணான ஒன்றை மட்டுமே இந்நாட்டில் தடை செய்ய முடியும். அவ்வாறு சட்டத்தை மீறுபவர்கள் இந்த நாட்டிற்குள் நுழைய முடியாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறைந்ததாக இந்தியாவின் இமிக்கிரேசன் விளங்குகிறது.

வெளிநாட்டிலிருந்து வரும் தப்லீக் ஜமாத்தினரை இந்தியாவிலிருந்து வெளியேற்ற வேன்டுமென்று உளவுத் துறையின் ஆலோசனையின் அடிப்படையில் மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்குமேயானால்.. இமிக்கிரேசன் கேட் வழியாக இவர்கள் இந்தியாவிற்குள் வரும்போது இந்நாட்டின் சட்டவிதிகளை மீறித் தான் நுழைகிறார்களா.?

ஒரு வாதத்திற்காக வெளிநாடுகளிலிருந்து வரும் அந்த அமைப்பினரை தடை செய்வது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயம் என்று மத்திய அரசு கருதுமேயானால், அந்த அமைப்பின் உலகளாவிய தலைமையகம் இந்தியாவில் தான் ஆண்டாண்டு காலமாக இயங்கி வருகின்றது.

சுதந்திர இந்தியாவின் சட்டம் ஒழுங்கிற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாக காவல்துறையில் இந்த அமைப்பினர் மீது பதியப்பட்ட ஒரு முதல் தகவல் அறிக்கையையேனும் (FIR) உளவுத்துறையாலும் மத்திய அரசாலும் காட்ட முடியுமா..?

மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு பதவியேற்றதிலிருந்து முஸ்லிம்களுக்கு எதிராக சமூக மற்றும் அரசியல் தளங்களில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இத்தகைய விரும்பத்தகாத செயல்கள் தொடருமேயானால் இந்தியாவின் இறையாண்மை கேள்விக்குறியாகி விடும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.

– மக்கள் உரிமை வார இதழ் (30 ஏப்ரல்- 06 மே 2015)

source: http://www.lalpettimes.com/2015/05/blog-post_41.html