Home கட்டுரைகள் கதைகள் பெரும் பணக்கார அறிவாளியா இருக்கிறதவிட அடுத்தவன் காசுக்கு ஆசைப்படாத முட்டாள் உழைப்பாளியா இருப்பது மேல்!
பெரும் பணக்கார அறிவாளியா இருக்கிறதவிட அடுத்தவன் காசுக்கு ஆசைப்படாத முட்டாள் உழைப்பாளியா இருப்பது மேல்! PDF Print E-mail
Saturday, 08 November 2014 06:25
Share

பெரும் பணக்கார அறிவாளியா இருக்கிறதவிட  அடுத்தவன் காசுக்கு ஆசைப்படாத முட்டாள் உழைப்பாளியா இருப்பது மேல்!

ஒரு பணக்கார முதலாளி இருந்தார், சகல வசதியும் நிறைந்த ஒரு செல்வந்தர் ஆனால் அவருடைய உண்மையான சேவகனோ ஒரு முட்டாள்

பலதவணை கூறியும் அவன் தன் முட்டாள்தனங்களை மாற்றிக்கொள்ளவில்லை,ஒருநாள் முதலாளி அவனை அழைத்து, "உன்னை நினைத்தால் எனக்கு ரொம்ப கவலையாக இருக்கு ஆன நீ உண்மை விசுவாசி, உன் பிள்ளைகளை நினைத்தால்தான் எனக்கு கவலையாக இருக்கு, அதனால நான் உனக்கு கொஞ்சம் பொருள் தர்றேன் அதை வைத்துக்கொள"் என்றார்.

அதற்கு அந்த பணிக்காரன், "அய்யா, நீங்க தரும் சம்பளமே எனக்கு போதும் என் பிள்ளைகள் நாளை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள், அவர்களைப்பற்றி நமக்கு என்ன கவலை? ஆண்டவன் இருக்கான் முதலாளி" என்றான்.

முதலாளி அவனை, "போடா மடையா! ஆண்டவன் இருப்பான்... ஆன நம்ம பாதுகாப்புக்கு நாம சிலதை வச்சிக்கனும்! சரி பரவாயில்லை இதை நீ வைத்திரு, உன்னை விட முட்டாளை நீ எப்ப பாக்குறியோ அப்ப இதை அவனிடம் கொடு" என்றார்- அவனும் பெற்றுக்கொண்டான்.

முதலாளி தம் பிள்ளைகள் அடுத்த இரண்டு தலைமுறைகளுக்கு உண்ணத்தேவையான அளவு சொத்தை அவர்களுக்கு பகிர்ந்தளித்தார் -அவர்களோ வசதி வந்ததும் இருந்த இடம் விட்டு பறந்துவிட்டனர்.
 .
முதலாளி நோய்வாய்பட்டார், அவரிடம் லாபம் பெற்ற யாரும் இப்போது அவரோடு இல்லை செல்வமும் ஐஸ்வர்யமும் துடைத்து வைக்கப்பட்டதுபோல இருந்தது அவர் வீடு, இதனால் மனமுடைந்தவர் வெளியேறி செல்ல தயாரானார் .

பணிக்காரனை அழைத்து, "நான் போகிறேன் நீ உடம்பை பார்த்துக்கொள் என்றார்.

பணிக்காரன்- முதலாளி எங்க போறீங்க, பயண ஏற்பாடெல்லாம் செஞ்சசிட்டிங்களா?

முதலாளி- நான் போகும் இடம் நிலையில்லா இடம் அதற்கு ஏற்பாடு ஒன்றும் தேவையில்லை.

பணிக்காரன்-போற இடத்தில் தங்க, இருக்க சமைக்க இதற்கெல்லாம் இடமும் ஆட்களும் நியமித்தாகிவிட்டதா?

முதலாளி- அதெல்லாம் தேவையில்லை, நான் போகும் இடம் நானே அறியேன் அங்கே வசதி வாய்ப்பு தேடி நான் செல்லவில்லை, எனக்கு மனசாந்தி தேடி போகிறேன்.

பனிக்காரன்- உங்கள் மனசாந்தி எதில் உள்ளது?

முதலாளி- பணம் இருந்தால் தான் மனிதன், அது இல்லாவிட்டால் அவன் பிணம் என்றார்.
 
பனிக்காரன் ஓடிச்சென்று அந்த பொருள் பெட்டியை கொண்டுவந்து, "முதலாளி நான் அறிந்தவரையில் மிகப் பெரும் முட்டாள் நீங்கதான், இதை நீங்களே வச்சுக்கங்க" என்றான்

பிறகு சொன்னான்- முதலாளி யாருக்கு எதில் மனநிறைவோ அவர்கள் அதை இழக்கக்கூடாது, நீங்க முன்னூறு வருஷமா பெரிய பணக்கார குடும்பம் அதனால உங்க தேவைக்கான அத்தனையும் பணமாகத்தான் இருந்தது.. அதேபோல உங்கள் பிள்ளைகளுக்கும் பணம் தான் முக்கியமாகப்பட்டது.. உங்களை அனாதையாக்கிட்டு அவங்க போயிட்டாங்க!

ஆனா நீங்க கொடுத்த இந்த பெட்டியை என் மக்கள் தினமும் கடந்து சென்றார்கள் ஆனால் ஒருதவணை கூட திறந்தும் பார்க்கல. இது என்னனும் கேட்கல, காரணம் அவங்க அன்றாட வாழ்க்கை உழைப்பிலதான் இருந்தது!

காசில் மன-நிறைவு பெரும் பணக்கார அறிவாளியா இருக்கிறதவிட நான் அடுத்தவன் காசுக்கு ஆசைப்படாத முட்டாள் உழைப்பாளியா இருந்துட்டுப்போறேன்.

- Rosy S Nasrath