Home கட்டுரைகள் விஞ்ஞானம் விஞ்ஞானத்தின் வாலில் (2)
விஞ்ஞானத்தின் வாலில் (2) PDF Print E-mail
Monday, 18 May 2009 07:35
Share

விஞ்ஞானத்தின் வாலில் (2)

  இந்திய முஸ்லிம் விஞ்ஞானி ஜியாவுத்தீன் சர்தார்  

அண்மையில் பிரான்ஸ் நாட்டு மருத்துவர் Dr. மாரிஸ்புகைல் இத்தகைய ஒப்பீட்டு ஆராய்ச்சிக்கு நம்பகத்தன்மையை வழங்கியுள்ளார். அவருடைய 'விஞ்ஞான ஒளியில் பைபிளும் குர்ஆனும்' (தமிழ் பதிப்பு மில்லத் பப்ளிஷர்ஸ் வெளியீடு 1982) என்ற நூலைப் படிக்கும் எல்லா முஸ்லிம்களும் கடுமையான தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகியே தீருவார்கள்.

அரபு, ஃபார்ஸி, உருது, துருக்கி, தமிழ் என்று எல்லா மொழிகளிலும் அதனுடைய மொழி பெயர்ப்பு வெளியாகிவிட்டது. நவீன அறிவியல் வெளிச்சத்தில் வான்மறை வேதங்களை அவர் ஆய்வுக்கு உட்படுத்தகிறார். நான்கு தலைப்புகளில் அவர் தனது ஆராய்ச்சியை அமைத்துக் கொண்டுள்ளார்.

விண்ணியல், மற்றும் தாவரங்களின் உயிர்வாழ்க்கை, மனிதப் படைப்பு, இந்நூலில் அவர் முஸ்லிம் நூலாசிரியர்களின் வழிமுறையை கையாண்டுள்ளார். அதாவது, முதலில் குர்ஆன் வசனத்தைக் கூறி பிறகு அதற்கான அறிவியல் விளக்கத்தைக் கூறுவது. புறநோக்கு முறையை அவர் கையாண்டுள்ளார்.

குர்ஆனில் கூறப்பட்டுள்ள அறிவியல் உண்மைகள் குர்ஆன் இறங்கிய காலகட்டத்தில் கண்டுபிடிக்கப்படாதவை என்பதை அரும்பாடுபட்டு நிரூபிக்கிறார். இன்னும் சொல்லப்போனால் அவற்றில் பல, இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்காலத்தில் நிலவிவந்த கருத்துகளுக்கு நேர்மாற்றமானவை என்றும் கூறுகிறார்.

குர்ஆனிய வசனங்களின் கீழ் சூரிய, சந்திர சுழற்சி, நீரோட்டங்கள், கருப்படித்தரங்கள் போன்றவற்றை விளக்கமாக ஆராய்ந்த பிறகு இவ்வாறு கூறுகிறார்தற்காலத்தில் நவீன அறிவியலால் நிரூபிக்கப்பட்ட எந்த உண்மையும் குர்ஆனோடு முரண்படவில்லை. அது போன்றே அது சம்பந்தமாக அக்காலகட்டத்தில் நிலவிவந்த கருத்துகளில் எதுவும் குர்ஆனில் இடம் பெறவில்லை.

அத்தோடு இது வரைக்கும் கண்டுபிடிக்கப்படாத எத்தனையோ விஷயங்கள் குர்ஆனில் உள்ளன. அடியேன் அது சம்பந்தமான கட்டுரை ஒன்றை குர்ஆன் கூறும் உடல் உறுப்புகள், கருப்படித்தரங்கள் பற்றிய உண்மைகள் என்ற தலைப்பில் 1976 நவம்பர் 9ம் நாள் ; French Academy of Medicine ல் வாசித்தேன்.

அறிவியல் தவறுகள் இல்லாத நிலையில் மனிதனின் நவீன கண்டுபிடிப்புகள், குர்ஆன் இறைவனால் இறக்கியருளப்பட்ட வேதம் என்கிற குர்ஆன் முஃபஸ்ஸிரீன்களின் கருத்தோடு பொருந்திப் போகின்றன! இறைவன் தவறான ஒன்றைக் கூற மாட்டான் என்பதையும் இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்!

நவீன அறிவியலின் அளவுகோலில் பைபிள் நிலைக்கவில்லை. விஞ்ஞானக் கண்ணோட்டத்தோடு ஆராயும் போது (பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என்ற) இரண்டு சுவிசேஷக்காரர்களின் வாதங்களும் நிற்கவில்லை!

இது புகைலுடைய தீர்ப்பு! ஆக, இறைவேதம் குர்ஆனில் எவ்வித குறைபாடுகளும் கிடையாது. 'தற்போதைய பைபிள் இறைவேதமே அல்ல!' என்கிற முஸ்லிம்களின் கொள்கைக்கு இது வலு சேர்க்கின்றது.ஆனால் எங்கே புகைல் தனது பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறாரோ, அங்கே

'புகைலிசம்' தொடங்குகின்றது. குர்ஆனில் மென்மேலும் அறிவியல் உண்மைகளைத் தேடிப்பயணிக்கும் முயற்சிகள் தற்காலத்தில் வேகமாகத் தொடர்கின்றன.உதாரணமாக பாக்கிஸ்தானைச் சேர்ந்த ஷம்சுல் ஹக் குர்ஆனில் சுநடயவiஎவைல கொள்கையையும் ஞரயவெரஅ ஆநஉhயniஉள கொள்கையையும் கண்டுபிடிப்பதில் வெற்றி கண்டுவிட்டார். இதற்கான குர்ஆனிய ஆதாரங்களையும் அவர் முன் வைக்கிறார். (இஸ்லாமிய உலகில் அறிவியலும், தொழில் நுட்பமும் என்பது அவருடைய நூல்)

அவ்வாறே மன்ழூர் குதா என்பவர் குர்ஆனில் விண்பொருட்களின் இயக்கம், பரிணாமக் கொள்கை, புவியின் மீதான வாழ்வின் சுழற்சி, நீர், நிலத்தின் மீதான புறநோக்கு படித்தரம் போன்றவற்றைத் தேடி அடைந்துள்ளார். (இஸ்லாமிய சிந்தனை மற்றும் அறிவியலில் முஸ்லிம்களின் சாதனைகள் இஸ்லாமாபாத் 1983)

ஹாருன் யஹ்யா போன்றவர்கள் நெட்டிலும் எழுத்திலும் டார்வினிசத்தை கிழிகிழியென்று கிழித்துக் கொண்டிருக்கின்றனர்.

கருவியல் பற்றிய குர்ஆனிய உண்மைகளைப் பற்றி இதுவரைக்கும் ஏராளமானவர்கள் சொல்லி விட்டார்கள். இன்னும் சொல்லிக்கொண்டே உள்ளார்கள்.

இவ்வனைத்து ஆராய்ச்சிகளையும் பார்க்கும் போது நமக்கு என்ன விளங்குகின்றது என்றால் எந்த ஒரு அறிவியல் உண்மையையும் குர்ஆன் விட்டு வைக்கவில்லை என்பது தான்!!.

உருவாக்குவது. இப்போது செய்ய வேண்டிய அடுத்த வேலை என்னவென்றால் இவற்றை ஒரு அமைப்பாக முறைப்படுத்தி பாடத்திட்டத்தில் இடம் பெறச் செய்வது. அந்தக் காரியத்தை முஹம்மது அப்துல் ஸமீஃ, முஸ்லிம் ஸஜ்ஜாத் ஆகிய இருவரும் ஓர் அறிக்கையின் மூலம் வெளிப்படுத்தி உள்ளனர். (இஸ்லாமியப் பார்வையின் அடிப்படையிலான அறிவியலை பாடத்திட்டத்தில் வகைப்படுத்துவது ஐளெவவைரவந ழக ளஉநைnஉந ளுவரனநைள ஐளடயஅயடியன 1983) அதன்படி இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல் என்று எல்லாப் பாடங்களிலும் அது தொடர்பான குர்ஆனிய வசனங்களை இணைப்பது.

அஃப்ஸாலுர் ரஹ்மானுடைய பார்வைக்கும் இவ்விரண்டு பாகிஸ்தான் அறிவியலாளர்களின் ஆலோசனைக்கும் பாராட்டத்தக்க ஒரு வித்தியாசம் உள்ளது. உதாரணமாக பரிணாம வளர்ச்சிக் கொள்கையை எவ்வாறு சேர்க்க முடியும்? அது இறைவன் இல்லை என்று கூறுபவர்களுக்கு அல்லவா சாதகமாக முடியும்? மூ இது தவிர இஸ்லாத்திற்கு ஒத்துவராத இன்னும் பல விஷயங்களும் இருக்கலாம் என்று இவர்கள் கூறுகின்றனர்.

உளவியல் ரீதியாக முஸ்லிம் விஞ்ஞானிகளையும், அறிவு ஜீவிகளையும், அணுகுகின்றது. ஒரு புறம் குர்அன் மீதான, இஸ்லாத்தின் மீதான அவர்களுடைய ஈமானை அதிகரிக்கச் செய்கின்றது. மறுபுறம் மேற்குலக அறிவியலின் உயர்வு அதனுடைய உச்சபட்ச ஏற்பின் மீது அவர்களுடைய நம்பிக்கையை உறுதிப்படுத்துகின்றது.

எப்படியோ, புகைலிசத்தினால் ஏற்படக் கூடிய தீமைகள் மிகவும் அபாயகரமானவையாகவே உள்ளன. குர்ஆனில் எல்லா வகையான அறிவியலும் உள்ளது. அறிவியல் நோக்கில் குர்ஆனைப் படிப்பதால் எல்லா வகையான அறிவையும், புதுப்புது கருத்துக்களையும் கண்டுபிடிப்புகளையும் சென்றடையலாம் என்பது போன்ற அறிவையும் உணர்வையும் மயக்கிவிடுகின்ற மார்க்கக் கண்ணோட்டத்தை இவ்விநோதமான வழிமுறை வழங்குகின்றது.

இயற்பியல் உண்மைகளைப் பற்றிய சில அடையாளக் குறியீடுகளை குர்ஆன் தெரிவிப்பது என்னவோ உண்மை தான். ஆனால், குர்ஆன் ஒரு போதும் அறிவியல் நூல் ஆகிவிடாது. இது ஹிதாயத்திற்கான நூல். அறிவைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று மட்டுமே இது வலியுறுத்துகின்றது. இலம் குர்ஆனோடு முடிந்து விடுவதில்லை. குர்ஆனில் இருந்து தொடங்குகின்றது.

எல்லாவற்றிற்கும் மேலாக புகைலிசம் குர்ஆனையும் அறிவியலையும் ஒன்று சேர்த்து அறிவியலுக்கு புனித அந்தஸ்த்தை வழங்கிவிடுகின்றது. இறைவனின் வஹியை நீரூபிக்க அறிவியலின் அவசியம் எல்லாம் தேவையில்லை.

ஒரு வேலை ஏதேனும் ஒரு அறிவியல் உண்மை குர்ஆனோடு ஒத்துப் போகவில்லை என்றால், அல்லது குர்ஆன் குறிப்பிடுகின்ற ஒன்றை நவீன அறிவியல் தவறு என்று நிரூபித்து விட்டது என்றால் குர்ஆன் பாதில் (நஊதுபில்லாஹ்) ஆகிவிடுமோ?

அப்போது பைபிளை உதவாக்கரை என்று புகைல் புறக்கணித்து விட்டது போன்று குர்ஆனும் புறக்கணிக்கப்பட்டு விடுமோ?

இப்போது குர்ஆனில் கூறப்பட்டுள்ள, தற்கால அறிவியலால் நிரூபிக்கப்பட்ட ஒரு கருத்து, நாளை தவறு என்று ஒதுக்கப்பட்டு அவ்விடத்தை வேறொரு கருத்து பிடித்துக் கொண்டால் என்ன ஆகும்? இன்று குர்ஆன் சரி, நாளை தவறாகவும் ஆகலாம் என்று அர்த்தமா?

அதுமட்டுமல்ல, புகைலிசம் அறிவியலுக்கு புனித அந்தஸ்த்தை தந்து விடுவதால் அறிவியல் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் ஆரோக்கியமான விமர்சனங்களைக் கூட நீர்த்துப் போகச் செய்துவிடுகின்றது. எப்படி என்றால், குர்ஆன் அறிவுத்தேடலுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளதால் ஏற்கனவே முஸ்லிம் விஞ்ஞானிகள் பெரும்பாலோர் அறிவியலை மதிப்போடும், மரியாதையோடு அணுகுகின்றனர்.

புகைலிசம் வேறொரு புதிய கோணத்தில் இதனை மென்மேலும் மெருகேற்றி விடுகின்றது. முஸ்லிம் விஞ்ஞானிகளின் ஒரு தலைமுறையே அறிவியல் சொல்வது அனைத்தும் உண்மையோ உண்மை என்று நம்புகிறது. அதே நேரத்தில் யாராவது அறிவியலை விமர்சித்தாலோ, சீர்படுத்த நினைத்தாலோ அவர் மீது கேள்விக் கணைகளை தொடுக்கின்றது. அறிவியல் அனைத்தும் நன்மைக்கே என்று நம்புவதானது, அறிவியல் மனித குலத்துக்கே சேவை செய்கின்றது. எனவே முஸ்லிம் சமூகத்தின் தேவைகளையும் அது பூர்த்தி செய்து தனதாக்கிக் கொள்ளும் என்கிற தீய முடிவின் பால் இட்டுச் செல்லும்.

உண்மைக்கான ஒரு தேடலே அறிவியல். அதனுடைய கண்டுபிடிப்புகளும், உண்மைகளும் குர்ஆனுடைய வசனங்களை போன்று சரியானவையும் அல்ல. ஆகவும் முடியாதுஸ ஏற்கனவே உலகத்தைப் பற்றி ஏற்றுக் கொண்டுள்ள ஒரு கொள்கைக்கு ஒப்ப, கொடுக்கப்பட்ட பார்முலாக்களைப் இவர்கள் இன்னும் ஒருபடி மேலேறிப் போய் 'குர்ஆனை ஓர் அறிவியல் பாடநூலாக ஆக்குங்கள்!' என்றும் கூறலாம். அஃப்ஸலுர் ரஹ்மான் இதைத்தான் கூறியுள்ளார் ; (Quranic Science. The Muslim School Trust, London 1981)

அவருடைய ஆராய்ச்சி நர்சரி ஸ்கூல் லெவலில் உள்ளது.

பௌதீக உலகம் மற்றும் புலன்களுக்கு அப்பாற்பட்ட எல்லாவற்றையும் குர்ஆன் அறிவுபூர்வமாகவும், முழுமையாகவும் கூறியுள்ளது.

பாமரமக்கள் முதற்கொண்டு படித்தோரும் அதனால் பயன் பெறுவர்!.

வெப்பம், ஒளி, ஓசை இவ்வாறாக இடி மின்னல் வரை எல்லா இரண்டாங்கட்ட அறிவியல் தகவல்களையும் குர்ஆனில் அவரால் காணமுடிகிறது!

ஒரு நீண்ட பட்டியலை குர்ஆனின் மேற்கோள்களோடு அவர் வாசிக்கிறார். நூலின் நோக்கம் என்ன தெரியுமா?

பள்ளிக்கூட பாடத்திட்டத்தில் இடம் பெறுவது மற்றும் எதிர்கால முஸ்லிம் விஞ்ஞானிகளை உருவாக்குவது!.

இப்போது 'புகைலிசம்' செய்யவேண்டிய அடுத்த வேலை என்னவென்றால் இவற்றை ஒரு அமைப்பாக முறைப்படுத்தி பாடத்திட்டத்தில் இடம் பெறச்செய்வது. ஒருசில இடங்களில் அதில் அவர்கள் வெற்றியும் பெற்றுள்னர். பரிமாணவளர்ச்சிக் கொள்கையை எவ்வாறு ஏற்றுக்கொள்வது? அது இறைமறுப்பாளர்களுக்கல்லவா சாதகமாக அமையும்? என்று கூறி டார்வினை நாசூக்காக வெளியேற்றி விட்டார்கள். பெரிய பெரிய அறிவியலாளர்களே டார்வின் கொள்கையை புறக்கணித்து உள்ளார்கள் இவர்கள் கூறுவது கூட சமாதானத்துக்கான ஒரு வாதமாகத்தான் படுகின்றது.

வன்முறையினாலும் கட்டாயப்படுத்தப்படுவதாலும் இயற்கை தனது ரகசியங்களை உமிழ்ந்து விடுகின்றது!' என்று பேகன் கூறியுள்ளார்.

இந்த அடிப்படையில் பார்த்தால் வன்முறையும், பலாத்காரமும் கட்டாயப்படுத்துவதும் நவீன அறிவியலிலிருந்து பிரிக்கவே முடியாத பகுதிகள் ஆகும். தற்போது வளர்ந்து வரும் நவீன அறிவியல் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்றால் ஒரு குறிப்பிட்ட கலாச்சாரம், ஒரு குறிப்பிட்ட உலகியல் பார்வை மட்டுமே அதன் கீழ் வளர்ந்து செழிக்க முடியும்.

நவீன அறிவியலைப் பொறுத்தவரை 'குர்ஆன் திலாவத்' அதனுடைய அடிப்படைப் பண்புகளையோ, அணுகுமுறையையோ ஒரு போதும் மாற்றி விடாது. அறிவியலின் அணுகுமுறை நடுநிலையானது. புறநோக்கு கொண்டது என்பதெல்லாம் நம்பவே முடியாத மாயை. யாரையும் சாராத எவ்வித வெறியுமற்றது என்பதெல்லாம் கட்டுக்கதை!

நாம் நம்முடைய உலகியல் கொள்கை, நம்முடைய பண்பாட்டைக் கொண்டு அதனைப் பரிசுத்தப் படுத்தாதவரை அதனைக் கொஞ்சங்கூடப் புரிந்து கொள்ள முடியாது. விஞ்ஞானிகள் பெரும்பாலும் தங்களுடைய கருத்துகளை தங்களுடைய சார்பு, சுயபற்று, தம்முடைய நியதிகளுக்கு தகுந்தவாறு புகுத்தியே கூறுகிறனர்.

பண்பாட்டு இடைவெளி உள்ள இடத்தில் வெறும் பார்வை மட்டுமல்ல, அனுபவமும் சாத்தியமில்லாததே! அனுபவம் கூட ஏதேனும் ஒரு குறிப்பிட்ட உலகியல் கொள்கையோடு பொருந்தியிருந்தால் தான் பொருள் செறிந்ததாக இருக்க முடியும்.இயற்கையைப் பற்றிய சட்டங்கள், கொள்கைகள் கணிதச் சமன்பாடுகளின் அடிப்படையில் நிறுவப்படுவதில்லை. மாறாக அவை சோதனைக் கூடங்களிலும், நிறுவனங்களிலும்

'மை' ஊற்றப்பட்ட எழுதுகோல்களைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட கொள்கைகளில் ஒரு சில குர்ஆனிய விளக்கங்களோடு ஒத்துப்போகின்றன என்றால் அது ஒரு சாதாரண, முக்கியத்துவம் இல்லாத விஷயம் தான். சில 'நியதிகளின் அடிப்படையில் தான் குர்ஆன் அறிவைப் பெறச்சொல்லி ஊக்கப்படுத்துகின்றது.இந்த

'நியதிகள்' தாம் நம்முடைய கவனத்திற்கு உரியவை!. அவற்றை நோக்கித்தான் நாம் நமது அறிவியல் முயற்சிகளை செலுத்த வேண்டும். அந்த நியதிகளுக்கு அறிவியல் வடிவம் கொடுத்தால் தான் நம்மால் குர்ஆனுக்கு 'முஃக்லிஸ்' ஆக விசுவாசமானவர்களாக இருக்க முடியும். நம்முடைய கடமைகளையும் அதன் கீழிலிருந்து நிறைவேற்ற முடியும்!!!

The Future of Muslim Civilization என்ற புகழ்பெற்ற நூலை எழுதியுள்ள இந்திய முஸ்லிம் விஞ்ஞானி ஜியாவுத்தீன் சர்தார் Ziauddin Sardar முன்பொருமுறை எழுதியிருந்த கட்டுரை ஒன்றைத் தழுவி எழுதப்பட்டது இக்கட்டுரை.

Source: A1realism.com