Home இஸ்லாம் கட்டுரைகள் உயிரைப் பற்றிய பல மலைக்க வைக்கும் உண்மைகள்!
உயிரைப் பற்றிய பல மலைக்க வைக்கும் உண்மைகள்! PDF Print E-mail
Saturday, 09 August 2014 06:32
Share

உயிரைப் பற்றிய மலைக்க வைக்கும் உண்மைகள்!

''முஹம்மதே! உயிரைப் பற்றி அவர்கள் உன்னிடம் கேட்கின்றனர். 'உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்' என்று கூறுவீராக.'' (குர்ஆன் 17:85)

குர்ஆன் கூறும் இந்த வசனம் நம்மை வியப்பின் உச்சத்துக்கே கொண்டு செல்கிறது. குர்ஆனின் பல வசனங்கள் உலகில் உள்ள அனைத்து படைப்புகளைப் பற்றியும் சிந்திக்கச் சொல்கிறது. விண்வெளி பயணம் மனிதர்கள் ஆகிய நீங்கள் செய்ய முடியும்.

இன்னும் பல அறிவியல் முன்னேற்றங்களைக் கண்டாலும் உயிரைப் பற்றி உங்களால் ஒரு முடிவுக்கு வர முடியாது என்று அடித்து சொல்கிறது குர்ஆன்.

'மனிதனே நீ குறைவாகவே அறிவு கொடுக்கப்பட்டிருக்கிறாய். உயிரின் சூட்சுமத்தை உன்னால் அறிந்து கொள்ள முடியாது' என்று கூறுகிறது.

உயிரைப் பற்றி சில யூதர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டபோது என்ன நடந்தது என்பதை பின் வரும் புகாரி ஹதீஸ் நமக்கு விளக்குகிறது.

பேரீச்ச மட்டை ஒன்றைக் கையில் ஊன்றியவர்களாக, நபி அவர்கள் மதீனாவில் மக்கள் சஞ்சாரம் இல்லாத ஒரு பாழ் வெளியில் சென்றபோது அவர்களுடன் நானும் சென்று கொண்டிருந்தேன். அப்போது யூதர்களின் குழு ஒன்றை அவர்கள் கடந்து சென்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரிடம் 'ரூஹை (உயிர்) பற்றி அவரிடம் கேளுங்கள்' என்றார்.

அவர்களின் இன்னொருவர் 'அவரிடம் அதைப் பற்றிக் கேட்காதீர்கள்; உங்களுக்குப் பிடிக்காத எதையும் அவர் சொல்லப் போவதில்லை' என்றார். அவர்களில் மற்றொருவரோ, '(இல்லை!) இறைவன் மீது ஆணையாக நாம் (அதைப் பற்றி) அவரிடம் கேட்டே விடுவோம்' என்றார். (முடிவில்) அவர்களில் ஒருவர் எழுந்து, 'அபுல் காஸிம் அவர்களே! உயிர் என்றால் என்ன? என்று கேட்டார்.

உடனே நபி அவர்கள் மெளனமானார்கள். 'அவர்களுக்கு இறைவனிடமிருந்து இப்போது செய்தி அறிவிக்கப்படுகிறது' என்று என்னுடைய மனதிற்குள் நினைத்தபடி நான் நின்று கொண்டிருந்தேன். (இறைச் செய்தி வரும்போது ஏற்படும் சிரமம் விலகும் வரை பொறுத்திருந்தேன்)) அவர்கள் தெளிவடைந்தபோது '(நபியே!) உம்மிடம் அவர்கள் ரூஹைப் பற்றிக் கேட்டார்கள். ரூஹு என்பது என் இறைவனுடைய கட்டளையைச் சார்ந்ததாகும். ஞானத்தில் (மிகக்) குறைந்த அளவே தவிர அவர்கள் கொடுக்கப்படவில்லை என்று நீர் (பதில்) கூறும்!' (திருக்குர்ஆன் 17:85) என்று (திருக்குர்ஆன் வசனத்தை) கூறினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (ஸஹீஹூல் புகாரி 125) Volume:1, Book: 3)

இந்த நபி மொழியை நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏற்கெனவெ தயார் செய்திருந்து திட்டமிட்டு சொன்ன பதிலும் கிடையாது இது. தனது தோழர்களோடு நடந்து செல்லும் பொது எதேச்சையாக யூதர்கள் எதிரில் தென்பட அவர்கள் முகமது நபியிடம் தங்களது சந்தேகத்தைக் கேட்கின்றனர்.

யூதர்கள் கேட்ட கேள்விக்கு அவர்களால் சுயமாக பதில் சொல்ல முடியவில்லை. சிறிது நேரம் மௌனமாகிறார்கள். ஏனெனில் இது போன்ற அறிவு பூர்வமான விஷயங்களை அந்த அரபு மக்கள் அதிகம் விளங்கியிருக்கவில்லை. பிறகு இறைச் செய்தி வருகிறது. அந்த நேரத்தில் முகமது நபிக்குள் ஏற்படும் மாற்றத்தை நபித் தோழர் கவனிக்கிறார். அன்று இறங்கிய இந்த வசனம் இன்று வரை விஞ்ஞானிகளால் ஒரு தீர்வைக் காண முடியவில்லை.

பல சினிமாக்களில் இறந்தவுடன் அந்த உடலிலிருந்து ஒரு ஆவி பிரிவது போலவும் பிறகு அந்த ஆவி வேறொரு உடலில் புகுந்து கொண்டு 'லக லக லக லக லக' என்று புரியாத மொழியில் பேசுவதை பார்த்து நம் தமிழன் வாய் பிளந்து உட்கார்ந்திருப்பது எல்லாம் அறிவியலுக்கு சாததியம் இல்லை. அதே போல் பேய் பிசாசு குட்டி சாத்தான் என்று சொல்லி நாகூரிலும், ஏர்வாடியிலும், வேளாங்கண்ணியிலும் மனநோயாளிகள் புரள்வதை அறிவியலும் ஒத்துக் கொள்வதில்லை இஸ்லாமும் ஒத்துக் கொள்வதில்லை.

ஏதோ இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவரவர் கற்பனைக்கு ஒரு வரையறையை உயிருக்கு வைத்திருக்கிறார்கள்.

இனி உலக வழக்கில் உயிரைப் பற்றி நாம் வைத்திருக்கும் இலக்கணத்தை வரிசையாக பார்ப்போம்.

1. உடம்பு உயிர் எடுத்ததோ?

உயிர் உடம்பு எடுத்ததோ?

உடம்பு உயிர் எடுத்த போது உருவம் ஏது?

உருத் தரிப்பதற்கு முன் உடல் கலந்தது எங்ஙனே?

கருத் தரிப்பதற்கு முன் காரணங்கள் எங்ஙனே?

நம் முன்னோர்களான சிவ வாக்கியர் கூட இந்த உயிரின் சூட்சுமத்தை விளங்காமல் அதனையே பாடலாக எழுதி வைத்து சென்றும் விட்டார்.

2. உயிருக்கு விக்கி பீடியா தரும் தகவல்

உலக மதங்கள் பலவற்றில் உயிர் என்பது, உயிரினம் ஒன்றின் "பொருள் தன்மை" அற்ற பகுதியைக் குறிக்கும். ஆன்மா, ஆவி போன்ற வேறு பல பெயர்களாலும் குறிப்பிடப்படும் இதிலேயே சிந்தனை, ஆளுமை முதலியன அடங்கியிருப்பதாகக் கருதப்படுகிறது. இறையியலில், பொதுவாக உயிர் ஒரு உயிரினத்தின் இறப்பிற்குப் பின்னரும் தொடர்ந்து இருப்பதாக நம்பப்படுகிறது. சில மதங்கள், உயிர்கள் இறைவனால் படைக்கப்பட்டன என்கின்றன.

வேறு சில மதங்களில் உயிர் எவராலும் படைக்கப்படாத நிலையானவற்றுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இறப்பின் போது உடலை விட்டு நீங்கும் உயிர் இன்னொரு உடல் எடுத்து உலகில் மீண்டும் பிறக்கின்றது என்கின்றன மறுபிறவியில் நம்பிக்கை கொண்ட சில மதங்கள். உடல் உயிர்களுக்கான தற்காலிகத் தங்குமிடம் என்றும், இறுதியில் இறைவனைச் சென்றடைவதற்கான செயல்களில் ஈடுபடுவதற்காக உயிர்களுக்கு இறைவன் உடலைக் கொடுக்கிறான் என்பதும் சில மதங்களின் கொள்கை.

உலகிலுள்ள பொருள்களைக் கிடைபொருள், கிளர்பொருள் என அறிவியல் உலகம் பகுத்துக் காண்கிறது.

உயிர் உள்ள பொருளை அறிவியல் கிளர்பொருள் Organism என்கிறது.

இது தூண்டினால் துலங்கும் response to stimuli.

இனப்பெருக்கம் செய்யும் reproduce.

வளர்ந்து மறையும் grow and develope.

தனித்துவம் கொள்ளும் Homeostasis.

இதனைத் தமிழர் மால் என்றனர். மால் என்றால் ஆசை. எல்லா உயிருக்கும் ஆசை உண்டு. பிற்காலத்தில் இதனைச் சத்தி என்றனர். சத்துள்ள பொருள் சத்தி. உடலில் சத்து இருந்தால் இயங்கும். இயங்குவது சக்தி.

source: http://suvanappiriyan.blogspot.in/2014/08/blog-post_4.html