Thursday, 05 June 2014 06:12 |

கோழையாக வாழ்ந்திடாதே!
கோழையாக வாழ்ந்திடாதே எந்த கொடுமைக்கும் நீ பயந்திடாதே ஏழைக்கும் கோபமுண்டு -என்பதை யாரிடமும் மறந்தும் காட்டிடாதே
பேச்சிலே பணிவாக இருந்தாலே பீதியில் நடுங்கிடுவார் பார்த்தாலே பிறப்பை ஏங்கி தவிக்காதே-வாழ்க்கை பெருகிடும் உனது உழைப்பாலே
நேர்மையய் என்றும் மறக்காதே நெஞ்சிலே துணிவை இழக்காதே வஞ்சனையின்றி உழைத்தாலே -வாழ்க்கை விஞ்சிடும் உனது அறத்தாலே
வசதியானவன் வாழ்வெல்லாம் நன்கு வாழ்வதாய் மட்டும் எண்ணிவிடாதே வாய் நிறைய சிரிப்பதாலே-அவன் வாழ்கையை பெரிதாய் நினைக்காதே
தோல்விக்கு பயந்து இருக்காதே தொடரும் கவலைகள் மறைந்தாலே தொட்டிடும் சிகரத்தை மனத்தாலே -அதனால் தொடங்கிடு மகிழ்ச்சியை மனதாலே
source: http://www.kaviyazhi.blogspot.com/
|