Home செய்திகள் உலகம் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 848 பாதிரியார்கள் “டிஸ்மிஸ்”
பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 848 பாதிரியார்கள் “டிஸ்மிஸ்” PDF Print E-mail
Monday, 12 May 2014 06:17
Share

o  பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 848 பாதிரியார்கள் “டிஸ்மிஸ்”

o  "எக்ஸிட் போல்" கருத்துக்கணிப்பு : எதிர்கட்சியாக செயல்பட 'பாஜக' முடிவு !

o  இந்தியாவில் உள்ள பாராளுமன்ற மக்களவை தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை = 543

பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 848 பாதிரியார்கள் “டிஸ்மிஸ்”

ஜெனீவா: பாலியல் குற்றங்களில் சிக்கிய 848 பாதிரியார்களைப் பதவி நீக்கம் செய்து வாடிகன் திருச்சபை உத்தரவிட்டுள்ளது.

ஐ.நா. சபைக் கூட்டம் ஜெனீவாவில் நடந்தது. அப்போது சர்வதேச நாடுகளில் மக்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

பாலியல் குற்றங்கள்:

வாடிகன் நகரின் சார்பில் அதன் ஐ.நா. சபை தூதர் ஆர்ச்பிஷப் சில்வானோ தொமாசி கலந்து கொண்டார். பாதிரியார்கள் செய்த பாலியல் குற்றங்கள் பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

நடவடிக்கைகள்: அப்போது, பலாத்காரம் மற்றும் குழந்தைகளிடம் பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்பித்தார்.

பாதிரியார்கள் பதவிநீக்கம்:

அதில், ‘‘கடந்த 10 ஆண்டுகளில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 848 பாதிரியார்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 2572 பேருக்கு சிறிய அளவிலான தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன'' என கூறப்பட்டிருந்தது.

வருடம் வாரியாக பட்டியல்: அந்த அறிக்கையில் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வருடம் வாரியாக குறிப்பிடப்பட்டிருந்தது. (Read more at: http://tamil.oneindia.)

 

 

"எக்ஸிட் போல்" கருத்துக்கணிப்பு : எதிர்கட்சியாக செயல்பட 'பாஜக' முடிவு !

 

 

தேர்தலில் ஓட்டு போட்டுவிட்டு வெளியே வருபவர்களிடம், பாஜக, நடத்திய 'எக்ஸிட் போல்' முடிவுகள் கட்சிக்கு சாதகமாக இல்லை என்பதால், எதிர்கட்சியாக செயல்பட முடிவு செய்துள்ளது.

 

வாங்கிய காசுக்கு ஊடகங்கள் நடத்திய போலி கருத்துக்கணிப்புகளை பி.ஜே.பி. நம்பவில்லை. உத்தர பிரதேசத்தில் 50 இடம், மெற்கு வஙகாளத்தில் 15 இடம், ஆந்திராவில் 15 இடம் என்று பொய்யான தகவல்களை அள்ளித்த்தெளித்து அக்கட்சிக்கு 270 சீட்டுகல் கிடைக்கும் என்று ஊடகங்கள் ஊதிய பலோன் வெடித்துவிட்டதோ என்னவோ பி.ஜே.பி. தனியாக ஒரு ரகசிய சர்வே நடத்தியிருப்பதாக தெரிகிறது.

பாரதீய கட்சியின் சார்பில், நம்பகமான நிறுவனத்தை அமர்த்தி, நடத்தப்பட்ட இந்தக் கருத்துக் கணிப்பில், நேற்றுடன், 502 தொகுதிகளுக்கு நடந்து முடிந்துள்ள தேர்தலில், 140 இடங்களில் கூட பாஜக வெற்றிப்பெற முடியாது எனத்தெரிய வந்துள்ளது.

 

கடைசி கட்டமாக, 12 ந்தேதி, சொற்ப இடங்களில் நடக்கும் தேர்தல் முடிவுகளால் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை எனவும், கருத்துக் கணிப்பு நிறுவனம் தெரிவித்து விட்டது.

 

முதல் முறையாக வாக்களிக்கும் 'இளைய தலைமுறை'யினர், பாஜகவுக்கு ஓட்டு போடுவார்கள் என பேசப்பட்டு வந்த நிலையில், அதுவும் பொய்த்துப் போய், இந்த தேர்தலில், 66.27% அளவு தான் மொத்த வாக்குப்பதிவு நடந்துள்ளது.

 

25 கூட்டணிக்கட்சிகள், தங்களுடன் இருப்பதாக பெருமையுடன் பேசிவந்த பாஜகவினருக்கு, கூட்டணி கட்சிகளால் எந்தப் பலனும் இல்லை, எனவும் தெரிவிக்கப்பட்டு விட்டது.

 

தமிழகத்தில் உள்ள கூட்டணி கட்சிகள் போலவே, எல்லா இடங்களிலும், அவை 'செல்லாக்காசு'களாகவே உள்ளன.

 

குறிப்பாக, பாஜகவினர் பெரிதும் நம்பியிருந்த தெலுங்கு தேசம் கட்சியினர், சீமாந்திராவில் நேற்று நடந்த தேர்தலில், YSR காங்கிரசிடம் அடி வாங்கி ஓடியதை கண்கூடாக பார்க்க முடிந்தது.

 

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, தற்போதுள்ள 205 இடங்களில் சில இடங்கள் குறைந்தாலும் கூட, அக்கட்சி ஆட்சியமைக்க போட்டி போட்டுக் கொண்டு பலரும் ஆதரவு கொடுப்பார்கள் என சொல்லப்படுகிறது.

 

இரு துருவங்களாக உள்ள...

 

கம்யூனிஸ்டுகளும் - மம்தாவும்,

 

 

லாலுவும் - நிதீஷும்,

 

முலாயமும் - மாயாவதியும்,

 

என, எல்லோரும் ஒன்றிணைந்து காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்க ஆதரவு கொடுப்பார்கள் என உறுதியாக பார்க்கப்படுகிறது.

 

இதனால், ஆட்சியமைக்கும் வீண் முயற்சிகளில் இறங்காமல், எதிர்கட்சியாக செயல்பட 'பாஜக' முடிவு செய்து விட்டது.

 

அதேநேரம், மோடியை குஜராத்துக்கு அனுப்பாமல், நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவராக்கவும் கட்சி முடி செய்துள்ளது.

 

2019 தேர்தல் வரை மோடி'யையே பிரதமர் வேட்பாளராக வைத்திருக்கவும் ஆர்.எஸ்.எஸ். மேலிடம் விரும்புகிறது.

 

 

இந்தியாவில் உள்ள பாராளுமன்ற மக்களவை தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை = 543

 

அவற்றுள் ஆட்சி அமைக்க ஒரு கட்சிக்கோ அல்லது ஏதோ ஒரு கூட்டணிக்கு பாதிக்கு மேல் ஒன்று உறுப்பினர்கள் அதாவது அறுதி பெரும்பான்மையுடன் 543 இல் பாதியான 271 க்கும் கூடுதலான ஒரு உறுப்பினர் பெற்று 272 உறுப்பினர்கள் பாராளுமன்ற மக்களவையில் ஆதரவு தெரிவிக்க வேண்டும்....அவர்களது ஆதரவு கடிதமும் குடியரசு தலைவருக்கு அளிக்கப்பட வேண்டும்.......அவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தொற்றுமை அடிப்படையில் ஒருவரினை பிரதமராக தேர்வு செய்து அவருக்கான ஆதரவு கடிதத்தினையும் அளிக்க வேண்டும்.........

 

இந்தியாவில் பாராளுமன்ற மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை மாநில வாரியாக,யூனியன் பிரதேச வாரியாக காண்போம்........

 

ஜம்மு & காஷ்மீர் = 6
இமாச்சல பிரதேசம் = 4
உத்திரகண்ட் = 5
ஹரியானா = 10
சண்டிகர் = 1
பஞ்சாப் = 13
டாமன் & டையூ = 1
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி = 1
குஜராத் = 26
ராஜஸ்தான் = 25
மத்திய பிரதேசம் = 29
பீகார் = 40
உத்திரப்பிரதேசம் = 80
டெல்லி = 7
மகாராஷ்டிரா = 48
கோவா = 2
ஜார்கண்ட் = 14
மேற்கு வங்கம் = 44
ஒரிசா = 21
சிக்கிம் = 1
அஸ்ஸாம் = 14
அருணாச்சலப்பிரதேசம் = 2
மேகாலயா = 2
திரிபுரா = 1
மணிப்பூர் = 2
நாகாலாந்து = 1
மிசோரம் = 1
சத்தீஸ்கர் = 11
ஆந்திர பிரதேசம் = 42
கர்நாடகா = 28
கேரளா = 20
இலட்சத்தீவுகள் = 1
அந்தமான் நிக்கோபார் தீவுகள் = 1
புதுச்சேரி = 1
தமிழ்நாடு = 39

 

அதிக மக்களைவை தொகுதிகளை கொண்டும் மத்தியின் ஆட்சி பீடத்திலும், ஆட்சி அமைக்கப்போவதனை தீர்மானிக்கும் மாநிலங்கள் உத்திரப்பிரதேசம்,பீகார்,மேற்கு வங்கம்,ஆந்திர பிரதேசம்,மகாராஷ்டிரா,தமிழ் நாடு ஆகியனவாகும்.