Home இஸ்லாம் கேள்வி பதில் பெண்களின் கால் பாதங்கள் கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டிய பகுதியா?
பெண்களின் கால் பாதங்கள் கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டிய பகுதியா? PDF Print E-mail
Sunday, 04 May 2014 07:18
Share

பெண்களின் கால் பாதங்கள் கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டிய பகுதியா?

பெண்கள் கண்டிப்பாக மறைக்க வேண்டிய பகுதிகளில் அவர்களின் கால்பாதங்களும் உள்ளடங்கும் என அறிஞர்களில் சிலர் கருதுகின்றனர். ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸ்களை நாம் ஆய்வு செய்து பார்க்கும்போது பெண்களின் கால்பாதங்கள் கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டிய பகுதிகளில் அடங்காது என்பதே சரியான கருத்து என்பதை அறிந்து கொள்ள முடியும்.

فَاطِمَةَ بِنْتَ قَيْسٍ أُخْتَ الضَّحَّاكِ بْنِ قَيْسٍ ஞ்وَخَطَبَنِى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- عَلَى مَوْلاَهُ أُسَامَةَ بْنِ زَيْدٍ وَكُنْتُ قَدْ حُدِّثْتُ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ அ مَنْ أَحَبَّنِى فَلْيُحِبَّ أُسَامَةَ யு. فَلَمَّا كَلَّمَنِى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- قُلْتُ أَمْرِى بِيَدِكَ فَأَنْكِحْنِى مَنْ شِئْتَ فَقَالَ அ انْتَقِلِى إِلَى أُمِّ شَرِيكٍ யு. وَأُمُّ شَرِيكٍ امْرَأَةٌ غَنِيَّةٌ مِنَ الأَنْصَارِ عَظِيمَةُ النَّفَقَةِ فِى سَبِيلِ اللَّهِ يَنْزِلُ عَلَيْهَا الضِّيفَانُ فَقُلْتُ سَأَفْعَلُ فَقَالَ அ لاَ تَفْعَلِى إِنَّ أُمَّ شَرِيكٍ امْرَأَةٌ كَثِيرَةُ الضِّيفَانِ فَإِنِّى أَكْرَهُ أَنْ يَسْقُطَ عَنْكِ خِمَارُكِ أَوْ يَنْكَشِفَ الثَّوْبُ عَنْ سَاقَيْكِ فَيَرَى الْقَوْمُ مِنْكِ بَعْضَ مَا تَكْرَهِينَ وَلَكِنِ انْتَقِلِى إِلَى ابْنِ عَمِّكِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ابْنِ أُمِّ مَكْتُومٍ யு. - وَهُوَ رَجُلٌ مِنْ بَنِى فِهْرٍ فِهْرِ قُرَيْشٍ وَهُوَ مِنَ الْبَطْنِ الَّذِى هِىَ مِنْهُ - فَانْتَقَلْتُ إِلَيْهِ ஞ்ஞ்(مسلم)

ஃபாத்திமா பின்த் கைஸ் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தம்மால் விடுதலை செய்யப்பட்ட அடிமையின் புதல்வரான உசாமா பின் ஸைத் அவர்களுக்காக என்னைப் பெண் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “என்னை நேசிப்பவர், உசாமாவையும் நேசிக்கட்டும்‘’ என்று கூறிய செய்தியை நான் அறிந்திருந்தேன். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் பேசியபோது, “என் காரியம் உங்கள் கையில் உள்ளது. நீங்கள் நாடியவருக்கு என்னை மணமுடித்து வையுங்கள்’’ என்று கூறினேன்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “நீ உம்மு ஷரீக்கின் இல்லத்துக்குச் சென்று தங்கி இரு’’ என்று சொன்னார்கள் உம்மு ஷரீக் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அன்சாரிகளில் வசதி படைத்த பெண்மணியாகவும் அல்லாஹ்வின் பாதையில் பெருமளவில் செலவு செய்யக்கூடியவராகவும் இருந்தார். அவரது இல்லத்தில் விருந்தாளிகள் தங்குவார்கள். “அவ்வாறே செய்கிறேன்’’ என்று நான் கூறினேன்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “(வேண்டாம்;) அப்படிச் செய்யாதே! உம்மு ஷரீக் ஏராளமான விருந்தாளிகளை உபசரிக்கும் ஒரு பெண்மணி ஆவார். உன் தலை முக்காடோ அல்லது உன் கணுக்காலிலிருந்து ஆடையோ விலகியிருக்க, நீ விரும்பாத சிலவற்றை மக்கள் பார்க்கும் நிலை ஏற்படுவதை நான் வெறுக்கிறேன். எனவே, நீ உன் தந்தையின் சகோதரரான (அம்ர் உம்மு மக்தூம் தம்பதியரின் புதல்வரான) அப்துல்லாஹ் பின் அம்ர் பின் உம்மி மக்தூம் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் இல்லத்துக்குச் சென்று தங்கியிரு’’ என்று கூறினார்கள். அவ்வாறே நான் அவரது இல்லத்திற்குச் சென்று தங்கினேன். (நூல் : முஸ்லிம் 5638)

மேற்கண்ட ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஃபாத்திமா பின்த் கைஸ் ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு அறிவுரை கூறும்போது ”உன் கணுக்காலிலிருந்து ஆடையோ விலகியிருக்க, நீ விரும்பாத சிலவற்றை மக்கள் பார்க்கும் நிலை ஏற்படுவதை நான் வெறுக்கிறேன்.” என்று குறிப்பிடுகிறார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கணுக்காலிலிருந்து ஆடை விலகுவதைத்தான் வெறுக்கின்றார்கள். இதிலிருந்தே பெண்கள் கால்களில் கணுக்கால் வரைதான் கண்டிப்பாக மறைத்தாக வேண்டும். கால்பாதங்கள் மறைக்க வேண்டிய பகுதிகளில் அடங்காது என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

கால்பாதங்கள் கண்டிப்பாக மறைக்க வேண்டிய பகுதிகளில் அடங்கும் என்று சொன்னால் நபியவர்கள் கால்பாதத்திலிருந்து ஆடை விலகுவதைப் பற்றித்தான் குறிப்பிட்டிருப்பார்கள். கால்பாதத்தைக் குறிப்பிடாமல் கணுக்கால்களை குறிப்பிட்டிருப்பதும் கணுக்கால்களுக்கு கீழ் உள்ள பாதங்கள் வெளிப்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட்ட பகுதி என்பது தெளிவாகிறது.

இதனை பின்வரும் ஹதீசும் தெளிவாக விளக்குகிறது.

سنن البيهقى (2/ 24)

3377- أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللَّهِ الْحَافِظُ أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللَّهِ : مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الصَّفَّارُ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِسْحَاقَ الْقَاضِى حَدَّثَنَا سُلَيْمَانُ ح وَأَخْبَرَنَا أَبُو الْحَسَنِ الْمُقْرِئُ أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ حَدَّثَنَا يُوسُفُ بْنُ يَعْقُوبَ الْقَاضِى حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَيُّوبَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ رَضِىَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- :அ إِنَّ الَّذِى يَجُرُّ ثَوْبَهُ مِنَ الْخُيَلاَءِ لاَ يَنْظُرُ اللَّهُ إِلَيْهِ يَوْمَ الْقِيَامَةِ யு. فَقَالَتْ أُمُّ سَلَمَةَ : يَا رَسُولَ اللَّهِ فَكَيْفَ بِالنِّسَاءِ؟ قَالَ :அ شِبْرٌ யு. قَالَتْ : إِذًا تَخْرُجَ سُوقُهُنَّ ، أَوْ قَالَتْ أَقْدَامُهُنَّ. قَالَ :அ فَذِرَاعٌ وَلاَ يَزِدْنَ عَلَيْهِ ..

”யார் பெருமையுடன் தன்னுடைய ஆடையை இழுத்துச் செல்கிறானோ அவனை அல்லாஹ் மறுமை நாளில் (கருணைக் கண்கொண்டு) பார்க்க மாட்டான்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அப்போது உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ”அல்லாஹ்வின் தூதரே ! பெண்களுக்கு எப்படி?” என்று கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ” ஒரு ஜான் (இறக்கிக் கொள்ளட்டும்)” என்று கூறினார்கள். அதற்கு உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ” அப்படியென்னால் அவர்களின் கெண்டைக் கால் அல்லது கால்கள் வெளிப்படுமே” என்று கூறினார்கள். அதற்கு நபியவர்கள் ”ஒரு முழம் இறக்கிக் கொள்ளட்டும் அதைவிட அதிகப்படுத்திவிட வேண்டாம்” என்று கூறினார்கள். (நூல் : பைஹகி.3377)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முதலில் ”ஒரு ஜான்” இறக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். எங்கிருந்து ஒரு ஜான் இறக்க வேண்டும் என்று ஹதீஸ்களில் கூறப்படவில்லை.

ஒரு ஜான் அல்லது ஒருமுழம் இறக்க வேண்டும் என்றால் எந்தப் பகுதியில் இருந்து ஒரு ஜான் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

மேற்கண்ட ஹதீஸை சிந்தித்துப் பார்த்தால் ”ஒரு ஜான்” இறக்க வேண்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிடுவது முட்டுக்காலிலிருந்துதான் என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். கெண்டைக்காலில் இருந்து ஒரு ஜான் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”ஒரு ஜான் இறக்க வேண்டும்” என்று குறிப்பிடும் போது உம்மு ஸலமா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்படியென்றால் பெண்களின் கெண்டைக் கால் வெளிப்படுமே” எனக் குறிப்பிடுகிறார்கள். ஒரு ஜான் இறக்கும் போது கெண்டைக்கால் வெளிப்படும் என்றால் அதன் ஆரம்பம் முட்டுக்கால்கள் என்பதுதான் மிகச் சரியானதாகும்.

கெண்டைக் கால் என்பது பெண்கள் கண்டிப்பாக மறைக்க வேண்டிய பகுதியாகும். இதன் காரணமாகத்தான் உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கெண்டைக் கால்கள் தெரியுமே என்று குறிப்பிடுகிறார்கள்.

இதன் காரணமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முட்டுக் காலிலிருந்து ஒரு முழம் இறக்கிக் கொள்ள வேண்டும் எனவும் அதை விட அதிகப்படுத்தக் கூடாது எனவும் கட்டளையிடுகிறார்கள்.

முட்டுக் காலிலிருந்து ஒரு முழம் இறக்கும்போது கணுக்கால்கள் வரை மறையும். பாதங்கள் மறையாது. இதிலிருந்து பெண்கள் கால்பாதங்களை மறைக்க வேண்டியதில்லை. ஒரு முழத்தைவிட அதிகப்படுத்தக் கூடாது என்ற கட்டளையின் மூலம் அவ்வாறு மறைப்பது குற்றம் என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

மேற்கண்ட ஹதீஸில் உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ” அப்படியென்றால் அவர்களின் கெண்டைக் கால் அல்லது கால்கள் வெளிப்படுமே” என்று கூறியதாக வந்துள்ளது.

நாம் கால்கள் என்று மொழிபெயர்த்துள்ள வார்த்தைக்கு அரபி மூலத்தில் ”அக்தாம்” என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இதன் ஒருமைச் சொல் ”கதம்” என்பதாகும்.

இந்த ”அக்தாம்” என்று சொல்லிற்கு ”கால்பாதங்கள்” என்றும் ”கால்கள்” என்றும் பொருள் உண்டு. ஆனால் இங்கு ”கால்கள்” என்று பொருள் செய்வதே அறிவுக்குப் பொருத்தமானதும், நடைமுறைச் சாத்தியமானதும், சரியானதும் ஆகும்.

”கதம்” என்ற அரபிச் சொல்லிற்கு ”கால்” என்ற பொருள் அரபி அகராதி நூற்களில் கூறப்பட்டுள்ளது.

والقدم : الرجل ، أنثى ، والجمع : أقدام )المحكم والمحيط الأعظم 6 /324)

”கதம்” என்றால் ”கால்” என்று பொருளாகும். இதன் பன்மைச் சொல் ”அக்தாம்” என்பதாகும். (நூல் : அல்முஹ்கம் வல் முஹீத்துல் அஃளம், பாகம் : 6 பக்கம் : 324)

எனவே மேற்கண்ட ஆதாரங்களின் அடிப்படையில் பெண்கள் கால்பாதங்களை மறைக்க வேண்டும் என்று கூறுவதும், ஆடை கணுக்கால்களுக்கு கீழே இழுபடும் வகையில் இழுத்துக் கொண்டு செல்லலாம் என மார்கத்தீர்ப்பு வழங்குவதும் மாபெரும் வழிகேடு என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

source: http://www.onlinepj.com/deen_kula_penmani/2014-dkp/may-dkp-2014/