Home இஸ்லாம் தொழுகை துயரத்தை அழித்தொழிக்கும் தொழுகை
துயரத்தை அழித்தொழிக்கும் தொழுகை PDF Print E-mail
Friday, 28 March 2014 06:13
Share

துயரத்தை அழித்தொழிக்கும் தொழுகை

மனதில் கவலை ஏற்படும் போது

நண்பணிடம் புலம்புவதை விட

பேஸ்புக்கில் ஸ்டேடஸ் போட்டு

புலம்புவதை விட

தனிமையில் புழுங்குவதை விட

ஒளு செய்து இரண்டு ரக்அத் தொழுது

இறைவனிடம் கையேந்தி குறைகளை சொல்லி

நிறைகளை தரச் சொல்லிக் கேட்டு

துஆ செய்ய்யும் போது மனது இலேசாகி விடுமே!

உண்மையிலேயே குறைகளை களைபவனும்

நிறைகளை தருபவனும் அவன் தான்


தொழுகை! தொழுகை!

அச்சம் உன்னைச் சூழ்ந்தால்.

கவலை உன்னை வாட்டினால்.

துன்பம் உன்னை துரத்தினால்.

விரைந்து இறைவனை தொழு.

உனது ஆன்மா புத்துணர்வு பெறும்.

மனம் அமைதி பெறும்

உனது துக்கத்தை

துயரத்தை அழித்தொழிக்கும்

கவலையை வடு தெரியாமல் விரட்டும்.

- வலையுகம் ஹைதர் அலி