Home கட்டுரைகள் பொருளாதாரம் கேஜ்ரிவால் அம்பலப்படுத்திய முகேஷ் அம்பானியின் பகல் கொள்ளை!
கேஜ்ரிவால் அம்பலப்படுத்திய முகேஷ் அம்பானியின் பகல் கொள்ளை! PDF Print E-mail
Thursday, 27 February 2014 06:26
Share

கேஜ்ரிவால் அம்பலப்படுத்திய முகேஷ் அம்பானியின் பகல் கொள்ளை!

[ "நாட்டின் இயற்கை வளங்கள் அனைத்தும் இந்திய மக்களுக்குச் சொந்தம். இந்திய அரசு அவற்றின் காப்பாளராக மட்டுமே செயல்படலாம். ஆனால், அவற்றை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது" -அரசியல் சாசனம்

பணம் முதலைகளுக்கு வாரி வாரிக் கொடுக்கும் அரசு, நாட்டைக்காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஜவான்களுக்கு சம்பள பாக்கி வைத்துள்ளது. இன்னும் அவர்களுக்கு சரிவர சம்பளம் கொடுக்கப்படவில்லை. இந்த அழகில் நாட்டின் பிரதமர் பொருளாதார மேதையென்று வர்ணிக்கப்படுகிறார்.... ]

ஆந்திராவின் நதிப்படுகைகளில் 50,000 சதுர கிலோ மீட்டர் பரப்பில் எரிவாயு இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதில் ஒரு பகுதியில் கிணறு தோண்டி வாயு இருந்தால் எடுத்து விற்க ரிலையன்ஸ் நிறுவனம் 1999-ல் உரிமம் பெற்றது. அந்தப் பகுதி 7,645 சதுர கி.மீ. பரப்பளவுள்ளது. திருப்பாய் அம்பானி (முகேஷ் அம்பானியின் தந்தையார்) நினைவாக டி6 என பெயரிடப்பட்டது

அரசுக்கும் ரிலையன்ஸுக்கும் ஒப்பந்தாம் போடப்பட்டது. உற்பத்தி-பங்கீடு-உடன்பாடு பி.எஸ்.சி. என பெயர். வாயு எடுப்பது, செலவுக்கும் முதலீடு மீதான லாபத்துக்கும் பொருத்தமாக என்ன வில நிர்ணயிப்பது, விற்பனையில் யாருக்கு முன்னிரிமை என்பதெல்லாம் ஒப்பந்தத்தில் அடங்கும்.

மின் நிலையங்களுக்கு அப்போது அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி. எரிவாயு சப்ளை செய்து கொண்டிருந்தது. ரிலையன்ஸும் தர முன் வந்தது. ஆனால், ஓ.என்.ஜி.சி. விலையை விட 2 மடங்கு கேட்டது. ஒரு மில்லியன் யூனிட் 2 டாலர் 34 சென்ட் விலை நிர்ணயித்தது. அரசு சம்மதித்தது.

17 ஆண்டுகளுக்கு (2022 வரை) அதே விலையில் தர ரிலையன்ஸ் உறுதி அளித்தது. ஆனாலும் உற்பத்தி தொடங்கவில்லை. ஒப்பந்தப்படி ரிலையன்ஸ் நடக்கவில்லை என்று தேசிய அனல் மின் கழகம் வழக்கு தொடுத்தது. அது மும்பை ஹைகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில், செலவு அதீகமாவதால் விலையை உயர்த்த வேண்டும் என ரிலையன்ஸ் கேட்டது. நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி (தற்போதைய ஜனாதிபதி) தலைமையில் அமைச்சர்கள் குழு அமைத்தார் பிரதமர் மன்மோகன்சிங்.

4 டாலர் 20 சென்ட் கொடுக்க சிபாரிசு செய்தது குழு. சரக்கே சந்தைக்கு வராமல் விலை எப்படி நிர்ணயம் செய்யப்பட்டது என்கிறீர்களா? "உங்களால் என்ன விலை கொடுக்க முடியும்?" என்று அனல் மின் நிலையங்களிடம் கேட்டது ரிலையன்ஸ். 4.54 முதல் 4.75 வரை நிலையங்கள் குறிப்பிட்டன.

சரி, 4.30 கொடுக்கச்சொல்லுங்கள் என அரசிடம் ரிலையன்ஸ் சொன்னது. முடியாது, 4.20 தான் கொடுக்க முடியும் என்றது அமைச்சர் குழு. இதற்கே சில உயர் அதிகாரிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். உற்பத்தி செலவு 1.43 டாலரையே தாண்டாது எனும்பொழுது, 4.20 டாலர் விலை கொடுப்பது அநியாயம் என்றனர். அரசு கணுகொள்ளவில்லை.

ஆனால், தற்போது அதை டபுளாக்கி 8.40 டாலர் கொடுக்கலாம் என முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரங்கராஜன் தலைமையில் அமைந்த குழு பரிந்துரை செய்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் எரிவாயு விலையை கவந்தில் கொண்டு ரிலையன்ஸுக்கு இந்த விலை கொடுக்கலாம் என்று அவர் கூறுகிறார். அதைவிட இறக்குமதியே மேலென்று தோன்றவில்லை இந்த அதிமேதாவி(!!!)க்கு! இப்படி அள்ளிக் கொடுத்தால் மின்சாரக் கட்டணம், உரம் விலை தாறுமாறாக எகிறும். (அதைப்பற்றியெல்லாம் இந்த பகள் கொள்ளையின் பங்குதாரர்களுக்கு கவலையா என்ன?)

ஆம் ஆத்மி பார்ட்டியின் டெல்லி முன்னால் முதல்வர் கேஜ்ரிவாலின் கோபத்துக்கு காரணம் அதுதான். இதில் அடியோடு மறக்கப்பட்ட விஷயம் அரசியல் சாசனம். (அதைப்பற்றியெல்லாம் இவர்களுக்கென்ன கவலை!) "நாட்டின் இயற்கை வளங்கள் அனைத்தும் இந்திய மக்களுக்குச் சொந்தம். இந்திய அரசு அவற்றின் காப்பாளராக மட்டுமே செயல்படலாம். ஆனால், அவற்றை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது" என்கிறது சட்டம். பொருளாதார மேதை பிரதமராக இருக்கும்போதே சட்டம் காற்றில் பறக்கிறது.

பணமுதலைகளுக்கு வாரி வாரிக் கொடுக்கும் அரசுகக்கு நாட்டைக்காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஜவான்களுக்கு சம்பள பாக்கி வைத்துள்ளது. இன்னும் அவர்களுக்கு சரிவர சம்பளம் கொடுக்கப்படவில்லை. இந்த அழகில் நாட்டின் பிரதமர் பொருளாதார மேதையென்று வர்ணிக்கப்படுகிறார்....)