Home கட்டுரைகள் சமூக அக்கரை பேய் இருப்பது உண்மையா?
பேய் இருப்பது உண்மையா? PDF Print E-mail
Saturday, 25 January 2014 07:34
Share

பேய்களைப்பற்றிய சுவாரஸ்யமான கட்டுக்கதைகள்

பேய் இருப்பது உண்மையா?

வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு
வெளையாடப் போகும்போது சொல்லி வப்பாங்க;
உன் வீரத்தைக் குழுந்திலேயே கிள்ளி வப்பாங்க.
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே -நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே!

- இந்தப் பாடல் தமிழகத்தில் பட்டி தொட்டியெல்லாம் ஒலிக்கும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்.

பேய், பூதம், பிசாசு, ஆவி மூடநம்பிக்கைகள். நம் நாட்டில் மட்டுமல்ல, பல நாடுகளிலும் இந்த மூடநம்பிக்கை உண்டு. தொலைக்காட்சித் தொழில்நுட்பம் வளர்ந்த நிலையில் ஊடக வியாபாரிகள் கிராபிக்ஸைப் பயன்படுத்தி பேய் அச்சத்தை இன்னும் பரப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

பகுத்தறிவுப்பூர்வமாகவும், தர்க்கரீதியாகவும் நாம் கேள்விகளை எழுப்பி வருகிறோம். இதுவரை யாரும் பதில் சொன்னதில்லை. மாறாக அவர் சொன்னார் என்றோ, நான் பார்த்தேன் என்றோ சொல்லித் தப்பிவிடுவார்கள்.

எங்களுக்குக் காட்டு என்றால் அதற்கு உடன்பட மாட்டார்கள். மூடநம்பிக்கை வணிகர்களின் பித்தலாட்டங்கள் இப்படித் தொடர்ந்து கொண்டிருக்க அமெரிக்காவிலிருந்து வெளிவரும் skeptical inquirer மாதமிருமுறை இதழின் மேலாண்மை ஆசிரியர் பெஞ்சமின் ரட்ஃபோர்ட் (Benjamin Radford) எழுதியுள்ள இந்தக் கட்டுரை அறிவியல் பூர்வமாக பேய்-பிசாசு பற்றி ஆராய்கிறது.

பேய் பிசாசுகளை நம்புகிறீர்களா? நீங்கள் மட்டும் தனி ஆளல்ல. 2005ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி, 37 விழுக்காடு, பேய் வீடுகளையும் மூன்றில் ஒரு பங்கு பேய் பிசாசுகளையும் நம்புகின்றனர். உலக முழுவதிலும், ஆயிரக்கணக்கான மக்கள், ஒரு பொழுதுபோக்காக, ஆனால், மும்முரமாக, பேயைத் தேடி வருகின்றனர்! அய்யத்திற்கிடமான செய்திக் கோப்பைச் சேர்ந்த ஷாரன் ஹில் என்ற ஆய்வாளர் அமெரிக்காவில் 2000 தீவிர தொழில் முறையில்லாத பேய் வேட்டைக் குழுக்கள் இருக்கலாம் என்று கூறுகிறார்..

கோடிக்கணக்கான ஆண்டுகளாக பேய்கள் மாக் பெத்திலிருந்து விவிலியம் வரை, மற்றும் எண்ணமுடியாத கதைகளிலும், நாட்டுப்புறக் கதைகளிலும் ஒரு மிகுந்த ஜனரஞ்சகமான பொருளாகவே இருந்து வந்துள்ளன. உலகம் முழுவதும், பேய் பிசாசு பற்றிய இயற்கைக்கு மாறான நம்பிக்கைகள் பரவிக் கிடக்கின்றன.

சாவின் விளிம்பில் ஏற்படும் அனுபவங்கள், மரணத்திற்குப் பின் வாழ்வு, ஆவி உலகத் தொடர்பு உட்பட பல காரணங்கள் இயற்கைக்கு மாறான நம்பிக்கைகளாக அமைகின்றன.

இறந்தவர்கள் ஆவியாக நம்முடன் இருக்கிறார்கள் என்பது ஒரு பழைய நம்பிக்கை. அது பலருக்கு அமைதியைக் கொடுக்கிறது. நமது அன்புக்குரிய, ஆனால் இறந்துபட்ட ஒரு குடும்ப உறுப்பினர் நம்மைத் தேடவில்லை; ஆனால் தேவைப்படும் நேரங்களில் நம்முடன் இருக்கிறார்களா? என்றெல்லாம் அவர்கள் நம்ப விரும்பவில்லை. பலர் பேய் பிசாசுகளில், சொந்த அனுபவத்தின் காரணமாகவே நம்பிக்கை கொண்டுள்ளனர்; சிலர் பார்த்துள்ளதாகக் கூறுகின்றனர். அல்லது, விளங்கிக் கொள்ள முடியாத சில தோற்றங்களை உணர்ந்து இருக்கின்றனர்.

பிசாசுகளைப் பற்றிய வாக்குவாதமும் அறிவியலும்

சொந்த அனுபவங்கள் என்பது ஒன்று ; ஆனால், அறிவியல் ஆதாரம் என்பது வேறு. பிசாசுகளைப் பற்றி ஆராய்வதில் உள்ள தொல்லை என்னவென்றால், பேய், பிசாசு என்பது பற்றி, உலக முழுதும் ஒத்துக் கொள்ளக்கூடிய ஒரு விளக்கம் இல்லாததுதான். சிலர் அவை இறந்தவர்களின் ஆவி என்றும் ஏதோ சில காரணங்களுக்காக தாங்கள் போகவேண்டிய இடத்தைத் தவறவிட்டதாகச் சொல்லுகிறார்கள். வேறு சிலர், பேய் பிசாசுகள், தொலை உணர்வு உள்ள பிம்பங்கள் என்றும், உலகத்திற்கு நமது மனங்களிலிருந்து காட்டப்படுவதாகும் என்று கூறுகின்றனர்.

சிலர் வேறுவிதமான பிசாசுகளை உண்டாக்குகிறார்கள். மிச்சமான அச்சங்கள், புத்திசாலி பூதங்கள், நிழல் மனிதர்கள் போன்றவை அவை. பல இனமக்களின் தேவதைக் கதைகள் போலவும் டிராகன் கதைகள் போலவும், எத்தனை விதமான பேய் பிசாசுகளை நீங்கள் விரும்புகிறீர்களோ, அத்தனையும் உள்ளன. பேய்கள் பற்றிய கருத்துகளில், பல முரண்பட்டும், உள்ளடங்கியதாகவும் உள்ளன.

உதாரணமாக, பேய்கள் என்பது பொருளா? அல்லது பொருளாக இல்லையா? அவை திடப் பொருள்களுக்கு ஊறு செய்யாமல், ஊடுருவிச் செல்ல முடியுமா? அல்லது அவை தானே அறைக் கதவைச் சாத்திக் கொள்ளவோ, பொருள்களை விட்டெறியவோ முடியுமா? தர்க்க நியாயத்தின்படியும், உருத்தோற்றத்தின் படியும் அவை இருக்க வேண்டும்; அல்லது இல்லாது இருக்க வேண்டும். பேய்கள் மனித ஆன்மாக்களாக இருந்தால் அவை ஏன், ஆடை அணிந்து தோன்ற வேண்டும்? மேலும், இயங்காத பொருள்களான தொப்பி, பிரம்பு, ஆடைகளுடன் காணப்பட வேண்டும்? ரயில்கள், கார்கள், வண்டிகளிலும் கூட பேய் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பழி வாங்கப்படாது இறந்தவர்களின் ஆவிதான் பேயென்றால், அவை ஒரு ஆவியுலகு சார்ந்த(?) இடைமனிதன் வாயிலாகப் பேசுவதாகச் சொல்லப்படுவதால், அவை கண்டுபிடிக்க முடியாத கொலைகளைப்பற்றி ஏன் சொல்லுவதில்லை? அவை தங்களது கொலைகாரர்களைப் பற்றி அடையாளம் காணமுடியும். அதைப்போல, பேய் பிசாசுகளைப் பற்றி எந்த ஒரு செய்தியும், தர்க்க ரீதியான காரணங்களுக்கு உட்பட்டுத்தானே இருக்க வேண்டும்?

பேய் வேட்டையாடுவோர் பலரும் பேய்களின் தோற்றத்தைக் கண்டுபிடிக்க பல ஆக்கப்பூர்வமான முறைகளையும் ஏமாற்று வழிகளையும் கையாளுகின்றனர். உண்மையில் எல்லா பேய் தேடுவோர்களுமே, தாம் அறிவியல் முறையில் செயல்படுவதாகவே கூறுகின்றனர். அப்படியே தங்களைத் தோற்றப்படுத்திக் கொள்ளவும் செய்கின்றனர். ஏனென்றால், அவர்கள் உயர்ந்த அறிவியல் கருவிகளையும், கதிர் இயக்கத்தைக் கண்டுபிடிப்பதற்கான கருவி(Geiger counter), மின்காந்த நில கண்டுபிடிப்பான்கள், அயன் (Ion) கண்டுபிடிப்பான், இன்ஃப்ராரெட் (Infrared) காமிராக்கள், மிக நுண்ணிய மைக்ரோபோன் போன்றவற்றைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இதுவரை எந்தவொரு கருவியும் உண்மையில் பேய்களைக் கண்டுபிடிக்க உதவியதாகத் தெரியவில்லை.

சிலர் இதற்கு மாறான கருத்துகளைக் கொண்டுள்ளனர். பேய்கள் இருப்பதை நிரூபிக்க முடியாததற்குக் காரணம், ஆவி உலகத்தைப் பற்றி அறிய நாம் தகுந்த தொழில்நுட்பம் கொண்டு இருக்கவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.. ஆனால், இதுவும் சரியாக இருக்க முடியாது. பேய்கள் நாம் வாழும் சாதாரண உலகத்தில் இருந்தால், அவை கண்டுபிடிக்கப்பட்டு, வீடியோ, ஆடியோ, ஃபிலிம் நிழற்படங்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கும். அவ்வாறு இல்லாததால், அவை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

பேய்கள் இருந்து அவை அறிவியல்பூர்வமாக காணப்பட்டுப் பதிவு செய்யப்பட்டிருந்தால், அதற்கான சான்றுகள் நம்மிடம் இருப்பதாகக் கூற முடியும். நாம் அவ்விதம் சான்றுகள் கொண்டிருக்கவில்லை. பேய்கள் இருந்து, அவைகள், அறிவியல்பூர்வமாகக் கண்டுபிடிக்கப்பட்டு, பதிவு செய்யப்படாமலிருந்தால், பின் எல்லா நிழற்படங்களும், வீடியோ, மற்றும் பேய்தான் என்று சொல்லப்படும் எல்லா பதிவுகளும், பேய்களினுடையதாக இருக்க முடியாது.

பேய்களைப் பற்றிய பல்வேறு கருத்துகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கின்றன. பல பத்தாண்டுகளாக, தொலைக்காட்சி உட்பட பல பேய் வேட்டைக்காரர்களும் ஒரு சிறிய சாட்சியத்தைக் கொண்டு கூட பேய் இருப்பது நிரூபிக்கப்படவில்லை என்பது ஆச்சரியமூட்டவில்லை.

 

பேய்களைப்பற்றிய சுவாரஸ்யமான கட்டுக்கதைகள்

மனிதனாகப் பிறந்தால் எல்லாருக்குமே பொதுவாக பேய்களை பற்றி ஒரு திகில் இருக்கும். பேய்களை பற்றி பேசினாலே கண்களை மூடிக் கொள்பவர்கள் நிறையப் பேர். பயமில்லாதது போல் காட்டிக் கொண்டு, பயந்தாங்கொள்ளியாக வீரவேஷம் போடுபவர்கள் பலபேர். எனவே பயப்படாமல், ஜாலியாக பேய்களை பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள் தெரிஞ்சிக்கலாமா?

* பேய்கள் உறங்குவதில்லை. தங்கள் சாவுக்கான நீதி கிடைக்கும் வரை அலைந்தபடியே இருக்குமாம்.

* பேய்கள் அல்லது ஆவிகள் தங்களை வெளிக்காட்டிக்கொள்ளவே விரும்பும். எனவே தான் அறைகளில் நறுமணம் அல்லது வெளிர் நிற புகைகளை பனிமூட்டங்களை பரப்புகின்றன.

* பூனைகளால் தெளிவாக பேய்கள் அல்லது ஆவிகளை காணமுடியும். உங்கள் வீட்டு பூனை வானத்தையே அசையாமல் பார்த்துக் கொண்டு இருந்தால் ஏதோ ஒரு ஆவியை காண்கிறது என்று அர்த்தம்.

* பேய்கள் அல்லது ஆவிகள் கூடுமானவரை ஆபத்தானவை அல்ல. விபத்து அல்லது கொலைகளினால் உண்டான பேய்கள் அல்லது ஆவிகளின் தோற்றம் மட்டும் தான் பயங்கரமானதாக இருக்கும்.

* பூமியை விட்டு உறவுகளை விட்டு செல்ல விரும்பாதவ்ரகள் தான் கூடுமானவரை பேய்கள் அல்லது ஆவிகளாக சுற்றுவார்களாம்.

* பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உங்கள் எதிர்காலம் நன்றாகவே தெரியும். சில நேரங்களில் அவை கனவுகளின் மூலம் வெளிப்படுத்த முயற்சி செய்யும்.

* பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோன உடல்களை சுற்றியோ அல்லது சுடுகாட்டிலோ இருக்காது. எப்பவுமே கோவில்கள், ஆலயங்கள் என வழிபாட்டுத் தலங்களை அண்டியே சுற்றிய படி இருக்குமாம். சிலநேரம் பாழடைந்த கட்டடங்களை அண்டியும் இருக்கும்.

* பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உணர்ச்சிகள் (fஏலிங்ச்) உண்டு. ஆனால் உணர (சென்செ) முடியாது.

* பேய்கள் அல்லது ஆவிகள் தனக்கு நெருக்கமானவர்களுக்கு அல்லது தன் சாவுக்கு காரணமானவர்களுக்கு மட்டுமே தன்னை வெளிக்காட்டிக் கொள்ள முயற்சிக்கும்.

* பேய்கள் அல்லது ஆவிகளால் கொலை செய்ய முடியாது. ஆனால் ஒருவன் தன்னைத்தானே கொலை செய்யும் அளவுக்கு தூண்டி விடும் சக்தி உண்டு.

* பேய்கள் அல்லது ஆவிகளால் தரையை கால்களால் தொட முடியும். கைகளாலோ அல்லது உடலின் வேறு பகுதிகளாலோ அல்ல. எனவே தான் உங்களால் அவைகளின் காலடி ஓசையை கேட்க முடியும்.

* பேய்கள் அல்லது ஆவிகளால் ஒரு மனித உடலில் புகுந்து மற்றொருவருடன் தகவல் தொடர்பு கொள்ள முடியும்.

* பேய்கள் அல்லது ஆவிகளால் 12 நாட்கள் மட்டுமே [இறந்த நாள்முதல்] அவர்கள் வீட்டில் அருகில் இருக்க முடியும்.

* பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோனவரின் உடலை அடக்கம் செய்யும் வரை அவர்களை பற்றி யார் பேசிக்கொண்டு இருந்தாலும் அருகில் நின்று கேட்கும் குணம் உண்டு.

* பேய்கள் அல்லது ஆவிகளை சாதாரணமாக் காணக்கூடியவர்களின் இரத்த பிரிவு (Bலோட் Gரொஉப்) ‘ஓ’ (+) அல்லது ஓ’ (–) ஆக இருக்கும். மற்றவகை இரத்த பிரிவு உள்ளவர்களின் கண்களுக்கு தெரிவது அபூர்வம்.

* குழந்தைகளாக இறந்து போயிருந்தால் பேய்கள் அல்லது ஆவிகள் தேவதைகள் என அழைக்கப்படுவார்கள்.

* பேய்களால் சும்ம இருக்க முடியாது. எப்பொழுதும் தங்கள் மேல் கவனம் இருக்க வேண்டும் என்பதற்காக மற்றவர்களை தொந்தரவு செய்த படியே இருக்குமாம்.

* பேய்கள் எப்போதுமே தாங்கள் இறந்துவிட்டதாக நினைப்பது இல்லை. எதாவது ஒன்றை செய்து தான் இறக்கவில்லை என்பதை நிரூபிக்க முயற்சிக்கும்.

* பேய்கள் பல்வேறு விதங்களில் மனிதர்களுடன் தொடர்புகொள்ளுகின்றன.. கனவுகள், மர்ம குறியீடுகள், தானாக எழுதுவது, சத்தம், புகை, போன்ற பல்வேறுவகையான தந்திரங்களை பயன்படுத்துகின்றன.

* பேய்களுக்கு வாசனை மோப்பசக்தி அதிகம். சில வாசனைகளை அவைகள் நுகர்ந்த்து அது பிடித்துவிட்டால் அங்கே தன்னை இருக்க வைக்க முயற்சிக்கும். சில வகை பெர்ஃபியூம் வாசனைகளும் ரொம்ப பிடிக்குமாம்.

* பேய்களுக்கு நேரம் காலம் தெரியாது என்றாலும், நள்ளிரவு நேரங்களில் பகலை விட கூடுதலாக அலையும். எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், சத்தங்கள் இருந்தால் பேய்கள் வராது என்று நினைப்பவர்களும் உண்டு. ஆனால், பேய்களால் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் வேகத்தையும், அதன் இயக்கத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் சக்தி நிச்சயமாக உண்டு.

* அமைதியான இடம், நிசப்த்தமான இடங்கள், நேரங்களில் திடீரென சத்தத்தை உண்டாக்கி திகிலூட்டுவது பேய்களுக்கு பிடித்த விடயம்.

* பேய்கள் ஒளிக்கீற்று, அமானுஷ்யக் கோடுகள், மூடுபனி, புகார், கருநிழல், நிழலுக்குள் நிழல், மங்கலான தெரிவது, கரு உருவம், காற்றுத் தூசிகள், காற்று போன்றவைகள் மூலம் தங்களை வெளிப்படுத்துகின்றன. முழு உருவத்தையும் எப்பொழுதும் வெளிப்படுத்துவது இல்லை. ஆனால் சாத்தியம் உண்டு. சலங்கை சத்தம், பெண்குரல் சிரிப்பு போன்ற சினிமாவில் காண்பிக்க படுபவை கூடுமானவரை கற்பனையே.

* கூட்டமாக வருபவர்களுக்கு பேய்கள் தன்னை வெளிப்படுத்த விரும்புவதில்லை. அதில் ஒரு ஆளை தேர்ந்தெடுத்து அவரை மட்டுமே பின்தொடர்ந்து செல்லும்.

* பேய்கள் குழந்தைகள், அல்லது பெண்கள், ஆண்கள் உடலுக்குள் நுழைய முடியும். பேய்களுக்கு நிறை அதிகம் என்பதால் அவைகளுக்கு நிறைய சக்தி தேவை என்பதால் பீடிக்கப்பட்டவர்கள் அதிகமாக சாப்பிடுவார்கள். நிறைய சக்தியை உறிஞசி விடுவதால் பீடிக்கப்பட்டவர்கள் நாளடைவில் மெலிந்து போவார்கள்.

* பேய்களுக்கு ஞபாக சக்தி அதிகம். வாழும் காலத்தில் நடந்த உணர்வுப் பூர்வமான விடயங்களை , சம்பவங்களை அடிக்கடி நினைத்து பார்க்குமாம். ஆனால், சாவுக்கு காரணமான சம்பவம் தான் அதிகம் நினைவில் நிற்கும். பழிவாங்கும் எண்ணம் ஏற்பட அதுவே காரணமாகும்.

* குழந்தைகள், மிருகங்களால் பேய்களை அடையாளம் காணமுடியும். மிருகங்களின் மீதும் பேய்கள் இறங்கி அவைகளை தாறுமாறாக செயல்பட வைக்க முடியும்.

* பேய்களுக்கு உதவிசெய்யும் குணம் உண்டு. பல சந்தர்ப்பங்களில், குழந்தைகள் முதல் பெரியவர்களை காப்பாற்றி இருப்பதை நீங்களே கேள்விப்பட்டிருப்பீர்கள். பேய் ப்பிடித்தவருக்கே பல சமயங்களில் உதவி செய்த சம்பவங்களும் உண்டு. அவர் குடும்பத்தினரை கூட ஆபத்துகளில் காப்பாற்றியிருக்கிறது. புதையல்கள், கொலைகளில் துப்புகளை கூட காட்டிக்கொடுத்தும் இருக்கின்றனவாம்.

* இருப்பிடத்தை விட்டு வெளியே வராத பேய்களும் உண்டு. ஆனால், அந்த வழியாக யார் வந்தாலும் அவர்களை மட்டும் பயமுறுத்தி வேடிக்கை காட்டும் பழக்கம் பேய்களுக்கு உண்டாம்.

* பேய்கள் இடம்பெயரும்பொழுது பயங்கர காற்று, காற்றுச்சுழல், நீர்நிலைகள் அதிருதல், சுழிகள் உண்டாகுதல், மரங்களை முறித்தல், கதவுகள் தானாக அடிபடுதல் போன்றவை ஏற்படுகின்றன 

மேற்குறிப்பிட்ட விடயங்கள் அனைத்தும் உண்மை என்றாலும் பயப்பட தேவையில்லை. இவை பேய்களை பற்றி மூட நம்பிக்கையை வளர்ப்பதற்காக எழுதவில்லை. பேய் ஒன்று இருந்தால் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவர்கள் பொழுதுபோக்காக படித்து தெரிந்து கொள்ளுங்களேன். 

source: https://www.facebook.com/nambinal.nambungal