Home இஸ்லாம் வரலாறு முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) எனும் முழு மனிதர்
முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) எனும் முழு மனிதர் PDF Print E-mail
Thursday, 09 January 2014 07:25
Share

முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) எனும் முழு மனிதர்

உலக சரித்திரத்தில் இவருடைய வரலாறே நுணுக்கமான பகுத்தாய்வுகளுடன் மிக அதிகமான நம்பகத்தன்மை வாய்ந்த ஆதாரங்களுடன் தொகுக்கப்பட்டதாகவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த வரலாறே ஹதீஸ் என்பதாக அழைக்கப்படுகிறது.

இவரைப்பற்றி பிரிட்டானிகா கலைகளஞ்சியம்   'மதத்தலைவர்களில் தலை சிறந்த வெற்றியாளர்' என்று கூறுகிறது.

Although his name is now invoked in reverence several billion times every day, Muhammad was the most reviled figure in the history of the West from the 7th century until quite recent times.

...Muhammad is one of the most influential figures in history, his life, deeds, and thoughts have been debated by followers and opponents over the centuries  (-taken from wikipidia &Britannica Concise Encyclopedia)

இன்றுவரையிலும் மனித சமுதாயத்தில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் "மா நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. அத்தைகைய தூயோரின் மொத்த வாழ்வும் திறந்த புத்தகமாகவே இன்றவும் உள்ளது.

இன்று தலைவர்கள் என போற்றப்படுபவர்கள் அவர்கள் கொண்ட மதம்,அரசியல் மற்றும் சமுக சார்ந்த எந்த ஒரு துறையில் மட்டுமே அவர்கள் பிரத்தியேக தன்மையுடன் விளங்குகிறார்கள்.

ஆனால் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ற ஒரு தலைவர் மட்டுமே மேற்குறியவைகளில் மட்டுமல்லாது குடும்பவியல்,பொருளியல்,என அனைத்துத் துறைகளிலும் அனைத்து மக்களும் பின்பற்ற தகுந்த ஒரு வாழ்வு நெறியே ஏற்படுத்தினார்கள்.

ஏன்... சுருங்கக்கூறினால் ஒருவர் காலையில் விழித்ததிலிருந்து இரவு உறங்க சொல்லும் வரை மேற்கொள்ளும் அன்றாட வாழ்வின் செயல்கள் அனைத்திலும் அவர்களின் வழிகாட்டுதல்களும், பின்பற்றுதல்களும் இருக்கிறது.

எனவே தான் வல்லோன் தன் வான் மறையில் வள்ளல் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பற்றி...

''அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.'' (அல்குர்ஆன் 33:21)

என கூறுகிறான்.எனவே இன்று உலகில் வாழும் 5 ல் ஒருவர் அண்ணல் அவர்களை தம் உயிரினும் மேலாக மதிக்கிறார்கள் என்றால் அவர்களின் வாழ்வு தூயது எனபதில் ஆச்சரியமில்லை!

ஆனால் இன்று இஸ்லாத்தை விமர்சிப்போரின் தலையாய பணி அன்னாரை கேவலப்படுத்துவதற்காக தங்களது வலை தேசங்களுக்கு வரையறையற்ற எல்லை விரிப்பை ஏற்படுத்தி முகமற்ற முகவரி தந்து வார்த்தை பயங்கரத்தை பயப்படாமல் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் தனது கைக்கு அருகிலிருக்கும் கணிணியின் சுவிட்சை ஆன் செய்வதற்கு முன்பு திறந்திருக்கும் தமது மன கணிணியில் வாழ்கைக்கு தேவையான downloadகள் 60 லிருந்து 70 ஆண்டுகள் வரை மட்டுமே பெற முடியும் எனபதை மறந்து விட வேண்டாம்.

அதுவும் மரணமென்னும் சுவீட்சு முன்னரே OFF செய்யபடாமல் இருந்தால் மட்டுமே சாத்தியம்! எனவே குறுகிய சிந்தனை கொண்டு நிரந்தர, நீண்ட வாழ்வை மறுக்க, இழக்க விளையாதீர்கள்.

முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறித்து பார்க்கும் முன்பு.,

இறைவனுக்கு மாறு செய்த யுத சமுகம் இறை தூதருக்கான வருகையே தங்கள் சமுதாயமல்லாது பிறிதொரு சமுகத்தில் வருவதற்கு கடும் எதிர்ப்பை கொண்டிருந்தது.அவர்கள் எதிர்பார்த்தது போலலல்லாது அரேபிய சமுகத்தில் இறுதித்தூதர் வெளிப்பட்டதால் அன்னாருக்கேதிராக காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் தங்களது எதிர்ப்பை நேரடியாகவும், மறைமுகமாகவும் காட்டத் தொடங்கினர்.

(அன்று தொடங்கிய எதிர்ப்பு இன்றுவரையிலும் தொடர்ந்து வருகிறது என்பதை வரலாறு அறிந்தோர் அனைவரும் உணரும் உண்மை)

சம காலத்திலேயே அன்னாருக்கும்,ஏனைய முஸ்லிம்களுக்கும், மக்கத்து காஃபிர்களுடன் சேர்ந்து தொல்லை விளைவித்தனர்.மேலும் முஸ்லிகள் மத்தியில் குழப்பதை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக வேத வெளிபாடன குர்-ஆனில் தமது கை சரக்கை சேர்க்க முடியாததென்பதை உணர்ந்து அது போக ஏனைய வழிகளில் குழப்பத்தை ஏற்படுத்த தலைப்பட்டனர்.

அதன் உச்சக்கட்டமே இஸ்லாத்தின் பின்பற்றுதலுக்குறிய இரண்டாம் அடிப்படையில் அமைந்த நபிகளாரின் வாழ்வு நெறியில் (ஹதிஸ்களில்) தம் சொந்த கருத்தை புகுத்த முயன்றனர்.அதில் சிறிது வெற்றியும் கண்டனர்.

எனினும் அஃது இரண்டற கலந்த அவ்வதிஸ்களை புஹாரி,முஸ்லிம் போன்ற பெரும் இமாம்கள் பெருமானார்-பெருமானாரிமிருந்து வழிவழியாக அறிவித்தவர் யாரென்றும்,அவரது நம்பக தன்மையை அளவு கோலாக கொண்டும் தரம் பிரித்து ஹதிஸ்களை ஸயி (உண்மையானது) ஹசன் (நல்லது), லைஃப் (பலகீனமானது) மற்றும் மப்ஃளூஆத் (இட்டுக் கட்டப்பட்டது) என வகைபடுத்தியுள்ளனர்.

இன்று இஸ்லாத்திற்கேதிராக நபிகளாரின் வாழ்வை குறை காணும் (அ)சத்தியவான்கள் பெரும்பாலும் இவ்வாறு இனம் பிரித்து இட்டுக் கட்டபட்ட ஹதிஸ்களையே மேற்கொள் காட்டுகின்றனர். எனினும் நியாயமான பார்வைக்கு இஸ்லாத்திலும்,நபிகளாரின் வாழ்விலும் நடு நிலையான பதிவுகள் உள்ளன.

நபிகளாரின் நம்பகதன்மை

இறைத்தூதராக தம்மை பிரகடனப்படுத்திக்கொள்வதற்கு முன்பே அவர்கள் அச்சமுக மக்களின் நற்பெயரை பெற்றிருந்தார்கள்.அம்மக்களின் அடைக்கலப் (அமானித) பொருட்களை பாதுகாக்கும் பொறுப்பு அன்னாரிடமே இருந்தது. அவர்களின் குணநலன்கள் அடிப்படையில் நாணயமற்றவர் என்றோ, அடுத்தவர் பொருளை அபகரிப்பவர் என்றோ, ஒருகுற்றச்சாட்டு அவர்கள் வாழ்வு முழுவதும் எந்த ஒரு சூழ்நிலையிலும் எழெவே இல்லை.

மாறாக அவர்கள் கொணர்ந்த ஓரிறையின் அடிப்படை நாதமான "அல்லாஹ்விற்கு" இணை கற்பிக்காதீர்கள் என்ற ஒற்றை சொல்லில் அதிருப்தியுற்றவர்களாக தாம் கொண்ட கொள்கைக்கு மாற்றமாக ஒரு கொள்கையே கண்டதால் சமரசம் பேச "ஒரு கையில் சூரியனையும், மறு கையில் சந்திரனையும் தந்து கேட்டாலும் ஏகத்துவப் பிரச்சாரத்தைக் கைவிட மாட்டேன் என்று அண்ணல் இயம்ப" அவர்களை பொய்யர் என்றும்,பைத்திய காரர் என்றும் சொல்ல தொடங்கினர்.

எனினும் அவர்களின் நீத தன்மையே எந்த ஒரு நிகழ்விலும் அம்மக்கள் குறை கூறவில்லை என்பதை ஒருசில காட்சிகள் நமக்கு சாட்சியாக உள்ளன *பகிரங்கமாக பிரச்சார புரியக்கூறி இறைவசனம் இறங்கிய போது தன் சமுக மக்களை 'ஸபா' மலைக்குன்றின் அருகே முதல் முறையாக ஒன்று திரட்டினார்கள். ஸபா மலை மீது ஏறி நின்ற அவர்கள் தனக்கு முன்னால் நிற்கும் மக்களைப் பார்த்துக் கேட்டார்கள்:

“இந்த மலையின் பின்னால் உங்களைத் தாக்க ஒரு படை நிற்கிறது என்று நான் சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?

மக்கள்: ‘ஆம், நம்புவோம்’

முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்: ‘ஏன் நம்புவீர்கள்’

மக்கள்: ‘ஏனெனில் நீர் பொய் சொன்னதில்லை’

முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்: ‘அவ்வாறாயின் இவ்வுலகுக்குப் பின்னால் வரும் இன்னொரு வாழ்வு பற்றியும் அங்கு காத்திருக்கும் தண்டனைப் பற்றியும் நான் உங்களுக்கு எச்சரிக்கிறேன்.’

"உங்களால் மலைக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்க முடியாது. எனவே மலையின் மீது நிற்கும் என்னால் பார்க்க முடியும் என்பதாலும், என் மீதிருக்கும் நம்பிக்கையாலும் என்னை நம்புகிறீர்கள். அது போலவே மறைவான உலகுக்கும் உங்களுக்கும் இடையே நான் நிற்கிறேன். அவ்வுலகோடு நான் நேரடித் தொடர்பு வைத்திருக்கிறேன். இப்போது நீங்கள் என்னை நம்புவீர்களாயின் நான் சொல்லும் அவ்வுலகையும் நம்புங்கள்"

*முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிரச்சாரத்தை உக்கிரமாக எதிர்த்த அபூஜஹில் கூட,

''முஹம்மதே நீர் ஒரு பொய்யர் என்று நான் கூறவில்லை; நீர் பிரச்சாரம் செய்யும் இச்செய்தி உண்மையானதல்ல என்றே நான் கருதுகிறேன்.''

மற்றொரு கடும் எதிர்ப்பைக்காட்டிய குறைஷித் தலைவர் அபுஸுப்யான் ஒரு முறை இஸ்லாத்தை பின்பற்றுவோருக்கு எதிரான தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கி உரோமப் பேரரசன் ஹிராக்ளியசின் (Heraclius) அவைக்கு சென்ற போது அரசருக்கும் அவருக்கும் மத்தியில் நடந்த உரையாடலில்

''முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) எப்போதும் பொய் பேசியதில்லை, தாம் கொடுத்த வாக்கை நிறைவேற்றிட ஒரு போதும் தவறியதுமில்லை" என்று கூறியவுடன், இதனைக்கேட்ட ஹிராக்ளியஸ்

“மனிதர்களுக்கிடையிலான விவகாரங்களிலேயே பொய் பேசியதில்லை என அனுபவபூர்வமாக தெரிந்து விட்ட பிறகு இவ்வளவு பொய்யை புனைந்திருப்பார் என்று எப்படிச் சொல்ல முடியும்?

மனிதர்கள் பெயரால் பொய் சொல்ல விரும்பாதவர் கடவுளின் பெயரால் எவ்வாறு பொய் பேச எத்தனிப்பார்..?

என்பதை அறியும் போதே முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நேர்மை, வாய்மை மிக்கவர்கள் என்பது வரலாற்று வெளிச்சத்தில் அவர்களின் வாழ்வை உற்று நோக்குபவர்கள் எவரும் அறிந்துக் கொள்ளும் அழகான உண்மை.இங்கு மன்னர் ஹிராக்ளியஸ் கூறிய வாசகங்கள் மாற்று எண்ணங்கொண்ட நண்பர்கள் எண்ணிப் பார்க்க வேண்டிய மற்றுமொரு செய்தி!

மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமணங்கள்

அன்னார் அவர்கள் 8 க்கும் மேற்பட்ட திருமணங்கள் செய்துக் கொண்டதை விமர்சிக்கும் எவரும் அவர்களின் முதல் திருமணம் பற்றி வாய் திறப்பதில்லை.

விதவையான அன்னை கதிஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை அவர்களின் விருப்பத்தின் பேரிலே திருமணம் செய்து கொள்கிறார்கள்.அதுவும் அவர்களை விட ஏறத்தாழ 15 அகவை அதிக வித்தியாசத்தில்.,

அவர்களின் மறைவுக்கு பின்னரே ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா உட்பட ஏனைய திருமணங்கள் நபிகளாரின் 50 வயதிற்கு மேலாக தான் நடைப்பெற்றன. இந்நிலையே ஒப்பிடும் யாராக இருந்தாலும் 50 வயதிற்கு மேலாக தான் ஏனைய திருமணங்கள் நடைப்பெற்றது.

இதை அறியும் யாராகிலும் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உடற் தேவையே விட மற்றுமொரு முக்கிய தேவைக்காகவே அத்தகைய திருமணங்கள் மேற்கொள்ளப்பட்டன என்பதை யோசிக்க முற்படுங்கள் முடியாவிட்டால் முயற்சியுங்கள்,அதுதான் உண்மையும் கூட.,

முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தூதுத்துவ பணியின் அடிப்படை இறைவனின் வழிக்காட்டுதலுகிணங்க அனைத்து சமுதாய மக்களுக்கும் முன்மாதிரியாக அவர்களின் வாழ்வு விளக்கப்பட வேண்டும்.

ஏற்று செய்வாதயினும், விட்டு விலகுவாதயினும் அன்னார் அவர்களின் முழு அங்கிகாரம் வேத வெளிப்பாட்டின் அடிப்படையில் அச்செயலுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.வெளிப்புற நடவடிக்கை தொடர்பான செயல்பாடுகளை விளக்க ஏனைய நபர் சார்ந்த தலையீடு தேவையில்லை.

ஆனால் இல்லறம்,குடும்பம் சார்ந்த செயல் பாடுகளில் அதுவும் பெண்கள் சம்பந்தமாக விளக்கப்பட வேண்டிய செய்திகளுக்கு கண்டிப்பாக மூன்றாம் நபர் அங்கு தேவை.அதுவும் இல்லறத் தொடர்பான செய்திகளுக்கு தன் மனைவியாலே மற்ற எல்லா பெண்களையும் விட கூச்சப்படாமல் அவைகள் தொடர்பான கேள்விகளை கேட்டு, தெளிவாக, விளக்கமான பதில்களை பெறமுடியும்.

அதற்காகவே நபிகளாருக்கு திருமணங்கள் என்பதை அறியலாம். (ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா மற்றும் ஏனைய மனைவிகள் அறிவித்த இல்லற மற்றும் அது தொடர்பான செய்திகள் ஹதிதுகளில் நிறைந்து காணக்கிடப்பதே மேற்கூறிய செயலுக்கு சான்றாகவுள்ளது)

மேலும், அத்திருமணங்கள் யாவும் காரண,காரியங்களின் அடிப்படையில் அமைந்த சூழ்நிலையிலேயே மேற்கொள்ளப்பட்டது.

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் 6 வயது நிரம்பிய சிறுமியாக இருக்கும்போது நபிகளார் மணமுடித்ததை பெரிய கொடுமையாக சித்தரிக்க முயலும் சமுக பெண் நல(?) விரும்பிகள் அதற்கான சமுக சூழல் நிலையே ஒப்பிட்டு பார்க்க மறுப்பது ஏன் என்று தான் தெரியவில்லை.

இத்திருமண சம்பவம் நடந்தது கி.பி.7ம் நூற்றாண்டில் என்பது கவனிக்கத்தக்கது. அன்றைய அரபுகள் தங்களுக்கிடையில் உறவை வலுப்படுத்துவதற்காக திருமண ஒப்பந்தங்களை அதிகமாக ஏற்படுத்துவதை அவர்களின் வழக்கமாக கொண்டிருந்தனர்.

அதன் அடிப்படையில் அபு பக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இறைத்தூதரும் தமது ஆருயிர் நண்பருமான அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் தமது உறவை வலுப்படுத்திக் கொள்ள தமது மகளான ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை திருமணம் செய்து வைக்கிறார்கள்.எதில் எங்கே தவறு? ஓ அந்த 6 வயது...தான் பிரச்சனையோ...அதற்கு நிகழ்கால ஒப்பீடை அளவுகோலாக கொள்ளலாம்.

நமது நாட்டில் தற்போதைய "பெண்களின் திருமண வயது 21 என அரசு அறிவிப்பு செய்கிறது.இன்னும் பத்து,பதினைந்து ஆண்டுகளுக்கு முன் சென்றால் பெண்களின் திருமண வயது 18 ஆக இருந்தது.இன்னும் சற்று முன்னோக்கி(யா? பின்னோக்கியா ?) சென்று நமது பாட்டி,தாத்தா கால திருமண வயதை அறிந்துக்கொண்டால் இங்கு 6 வயது கேள்வியே எழாது.

மேலும் அண்ணலின் அத்தைய திருமணம் சமுக,கால சூழ் நிலை சார்ந்தே மேற்கொள்ளப்பட்டது. எனவே தான் சம காலத்திய எதிரிகள் கூட இத்திருமணக் குறித்து விமர்சனம் எழுப்பவில்லை.

ஏனெனில் இது தவறென்றால் நபிகளரை எதிப்பதற்கு இந்த பால்ய விவாகம் போதுமான ஒரு ஆயுதமாக இருந்திருக்கும்.ஆனால் வரலாற்று சுவடுகளில் இத்திருமணம் குறித்து எதிர்ப்பதிவுகள் எங்கேணும் எதிரிகளால் பதியப்படவில்லை. .

மேற்குறிய ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா திருமண நிகழ்வுக்கான எடுத்து கூறப்பட்ட விளக்கம் இரண்டாம் நிலை காரணங்கள் தான்.ஏனெனில் பால்ய திருமணம் இஸ்லாமிய திருமண சட்டத்தில் பொது விதியாக ஆக்கப்பட வில்லை.இறைத்தூதருக்கு இறைப்புறத்திலிருந்து வழங்கப்பட்ட ஒரு சிறப்பு அனுமதி என்பதையும் விமர்சன விரும்பிகள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்,.

அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா நபிகள் திருமணத்திற்கு இதுவே முதற்காரணம்.

அதுபோலவே, அன்னை ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அனனை ஸப்பிஃயா ரளியல்லாஹு அன்ஹா திருமணங்கள் எந்த சூழ்நிலையில் நடைபெற்றன எனபதையும் அறிந்துக் கொள்ள வேண்டும்.அவ்வாறு கட்டாயப்படுத்தி தான் அப்பெண்களை அண்ணல் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மணமுடித்தார்கள் என்றால் அன்னாரின் மரணத்திற்கு பிறகே அனைத்து மனைவிமார்களும் மரணிக்கிறார்கள்.

மாநபியின் மரணத்திற்கு பிறகு தெளிவாக,பயப்படாமல் தம் கருத்தை சமுக முன்னிலையில் எடுத்து சொல்லலாம். எனவே நபிகளார் செய்தது தவறென்றால் இச்சமயத்தில் அவர்கள் குறித்து பகிரங்கப்படுத்தலாம். எந்த மனைவியாரின் ஓலக்குரல் வரலாற்றின் எந்த ஓரத்திலாவது ஒலித்திருக்கிறதா?

போர்களும் சில பொய்களும்

இஸ்லாம் வாள்முனையால் பரப்பபட்ட மார்க்கம்,முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது அரசியல் இஸ்லாம் வளர்க்க வன்முறையே கையாண்டார் -என உலகமே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறப்புக்குப் பிறகு தான் வாளையோ, போர்களையோ பார்த்தது போல் பிம்பத்தை ஏற்படுத்த விரும்புவோர் அண்ணல் அவர்கள் போரில் கொண்டவை,கொன்றவை குறித்து பட்டியல் தருவார்களா?

அவர்கள் மேற்கொண்ட போர்கள் அனைத்தும் தற்காப்பின் அடிப்படையிலோ, நிர்பந்தத்தின் அடிப்படையிலோ நடைப்பெற்றதே ஆகும். நடைப்பெற்ற அப்போர்களில் எதிர்த்து போரிட்ட ஏனைய படைபலத்துடன் முஸ்லிம் படை வீரர்களின் எண்ணிக்கையே வரலாற்று வெளியில் ஒப்பிட்டு பார்த்தாலே அது புரிந்துப்போகும்.

மேலும் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாளைவிட கூர்மையான வன்முறையே கையிளேந்தினார்கள் என அப(பா)ய குரலேப்புவோர் நபிகளார் போர் குறித்த செயல் பாடுகள் வன்முறை அடிப்படையிலமைந்ததாக கூறும் வரலாற்று ஆவண பதிவுகள் நபிகளாரின் சம காலத்தில் வாழ்ந்த எந்த அரசர் குறிப்பில் இருக்கிறது?

நபிகளாரின் படையெடுப்பால் வறுமை கோட்டை விட தம் வாழ்வியல் கோடு வலுவிழந்த அத்தகைய நாடு எது? அகிம்சை வியாதிகள் ஆதாரம் தருவார்களா? இன்று நம் கண்ணெதிரே அமெரிக்க,அரோப்பிய மற்றும் ஏனைய நாடுகளில் இஸ்லாத்தை தழுவியோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கதே.அங்கு சென்று வாளேந்தி வன்முறையால் இஸ்லாமிய வருகையே அதிகரித்தவர்கள் யார்?,

இறுதித்தூதின் இறுதி நாட்கள்

இறுதி மூச்சு உள்ளவரை அந்த மாமனிதர் தங்களின் சமுதாய மக்களின் நலனிலேயே அக்கறை செலுத்தலானார்கள்.இறைபோதனைகளை ஏற்று செயல் பட சொல்லிய அந்த தூயோனின் தூதர் மக்களுக்கு போதித்த தொழுகையாகட்டும், நோன்பாகட்டும் ஏனைய வழிப்படும் முறையாகட்டும். மக்களுக்கு சொல்லி தந்தவைகளை விட செய்து காட்டியது அதிகம்.

அவர்களின் மக்கா முழுவதுமான ஆட்சி,அதிகாரம் வந்த பின்னும் கூட அரசு கட்டிலில் ஏறி ஒய்யாரமாய் அமர்ந்திடவில்லை, தங்கமும், வெள்ளியும் தனது காலடியில் கொட்டப்பட்ட பிறகும் கூட அவர்களின் மாளிகை மண் குடிலாகவே இருந்தது.சொடுக்கினால் ஏவல் புரிய காத்திருந்த மக்கள் கூட்ட மத்தியில் தனக்கும்,தன் குடுமப தேவைக்கு தானே கைகளால் உழைத்து சம்பாதித்து உண்ணலானார்கள்.

இறைத்தூதெனும் இமாலயப்பணியே முழு உலகம் நன்மை பெற வெற்றிகரமாக செயல்படுத்திய போதிலும்., ஆறோடு ஏழாய் அண்ணல் அமர்ந்திருக்க.,"உங்களில் யார் முஹம்மது?" என கேட்பதே அவர் அவை நோக்கி வருவோரின் ஆரம்ப கேள்வியாய் இருந்தது.

இன்றும் தலைவர் வர காத்திருக்கும் கூட்டம்,அமர கையசைக்கும் வரை அயராது நிற்கும்; ஆனால் அண்ணலோ தான் வரும்பொழுது தமக்காக எவரும் எழக்கூடாது என அன்றே உரக்கக் சொல்லிய உண்மை தலைவர், உலக தலைவர்.

பள்ளியில் பாடம் பயிலா அந்த உம்மி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உலகமெங்கேணும் ஒரு உருவ படத்தை கூட வடித்திட வாய்ப்பளிக்காத வாய்மையாளர்.கல்லில் கடவுளை காண்பவன் முட்டாள் என கூறியோர்களையே மறைவுக்கு பின் கல்லாய் சமைத்து, அவர்களுக்கு மாலைகளும்,அணிகலங்களும் வித்திடும் இன்றைய உலகம் கடவுள் ஒருவனே என ஒரிறைக் கொள்கையே ஓங்கி எழ செய்த அந்த முழு மனிதருக்கு இன்றவும் எங்கும் சிலையில்லா நிலை பார்த்து உலகமே வியக்கிறது.

source: http://www.naanmuslim.com/2010/07/blog-post_19.html