Home கட்டுரைகள் Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd) 21 ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் ஒரு கண்ணோட்டம்
21 ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் ஒரு கண்ணோட்டம் PDF Print E-mail
Wednesday, 01 April 2009 07:37
Share

21-ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் ஒரு கண்ணோட்டம்

  டாக்டர் A.P. முஹம்மது அலீ Ph.D. IPS(Retd)  

வானத்தையும் பூமியையும் கடலையும் படைத்தது அதன் அதிசயங்களை நமக்கு குர் ஆனில் அல்லாஹ் காட்டியுள்ளான்.வானத்தின் கோளங்கள், அதன் செயல்பாடுகள், கடலுக்குள் புதைந்து கிடக்கும் அற்புதங்கள் பிரம்மிக்கவைப்பவையாகும்.

பூமி உருண்டை என்று உலக மக்களுக்கு எடுத்து இயம்பி,மனிதன்,மிருகம்,பறவை, பூச்சி போன்றவைகளுக்கு உணவினைக் கொடுத்து, மனிதனின் செயல்கள் அத்துமீறினால் அந்த பூமியினை பூகம்பத்தால் புரட்டிப்போடும் செயல்கள், சூறாவளியால்,கடல் சீற்றத்தால் அழிக்கும் பாடம்

குர் ஆன் கற்பிக்கிறது. மனித உடல் செயல்பாடுகள், மனதின் மாற்றங்கள், மனிதனுக்கு ஏற்படும் நோய்கள் போன்ற தகவலும் குர்ஆனில் இல்லாமலில்லை. அவை உண்மை இல்லை எனில் எப்படி சந்திரனில் முதல் காலடி வைத்த நீள் ஆம்ஸ்ட்ராங்கும், உலக குத்துச் சண்டை கொடிகட்டிப் பறந்த கிளேசியஸ் கிளே என்ற முஹம்மது அலியும் மற்றும் பல அறிஞர் இஸ்லாத்தை தழுவ முடியும். ஆகவே உலக மக்கள் இஸ்லாத்தை அனைத்துக் கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லையென்றால் மிகையாகாது.

இஸ்லாமிய சமுதாயம் முன்னேற வேண்டுமென்றால் பல நடவடிக்கைகளை கையாள வேண்டும்

1) கல்வி

உம்மி நபியாக இருந்த பெருமானார் அவர்களுக்கு ஓதுக என்ற தாரக மந்திர பெட்டகமான குர் ஆணை இறக்கி அல்லாஹு அக்பர் என்ற அதிகாலை பாங்கை கீழை நாட்டில் ஆரம்பித்து மறுநாள் காலை பாங்கு மேலை நாட்டில் முடிய செய்துள்ளான் என்றால் ஏக இறை தத்துவ கல்வியினையின் மகிமையே என்றால் சாலபொருந்தும் சீனம் சென்றும் சேர்க்க நல்லறிவை என்றது இஸ்லாம், வெளிநாடுகளுக்கு சென்று தான் பொருளீட்ட வேண்டும் என்பதில்லை, இருந்த இடத்திலிருந்தே பொருள் சேர்க்கும் E-பிசினஸ் என்ற வியாபார உக்தி உள்ளது, கம்ப்யூட்டர் இஸ்லாமியருக்கு புதிது அல்ல.

விப்ரோ சேர்மன் அசிம் பிரேம்ஜி தன் தந்தை கவனித்து வந்த எண்ணை தொழிலை விட்டு அமெரிக்கா நிறுவனமான IBM இந்தியாவை விட்டு வெளியேறிய போது அதன் இடத்தை நிறைவு செய்து பெருமை சேர்த்துள்ளார் என்றால் ஏன் நம்மால் முடியாது. ஒவ்வொரு குடும்பமும் ஒரு நல்ல பல்கலை கழகமனால் நிச்சயம் முடியும், முதலில் பெண் கல்விக்கு வித்திட வேண்டும்.

ஒரு பிராமின் குடும்பத்தில் தன் மகன் IIT யிலோ IIA  மிலோ சேருவதர்கோ பயிற்சியினை எட்டாவது அல்லது ஒன்பதாவதிலோ ஆரம்பித்து விடுகின்றனர். ஏன் நாமும் நம் பிள்ளைகளுக்கு TOFEL, GRE, IELTS, CAT , போன்ற பயிற்சிகளை கொடுக்க கூடாது?

பெண் கல்விக்கு நாம் எப்போது முக்கியத்துவம் கொடுகிறோமோ அப்போது தான் நம் சமுதாயம் முன்னேற முடியும், கொஞ்சம் படித்தால் போதும் வளைகுடா நாடுகளில் சென்று தன் பிள்ளை நாலு காசு சம்பாதித்தால் போதும் என்று இருக்கக்கூடாது, அங்கு நம்மவர் படும் துன்பங்களை பெற்றோர் சென்று பார்த்தால் நிச்சயமாக தம் பிள்ளைகளை அனுப்ப மாட்டார்கள். இந்தியாவிலே ஒரு கம்ப்யூட்டர் இன்ஜினியர் வருடத்திற்கு ஒரு கோடியே 18 லட்சம் என்பது எத்தனை முஸ்லிம்களுக்கு தெரியும்.

2) பள்ளி வாசல் ஒரு நூலகமாக வேண்டும்

ஒவ்வொரு பள்ளி வாசலிலும் மார்க்க சம்பந்தமான நூல்கள் இருப்பதினை காணலாம் ஆனால் அதனை படிப்பவர்கள் குறைவு தான். பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வீட்டுக்கு அல்லது வியாபாரஸ்தாபனங்களுக்கு செல்லாது பள்ளிவாசல் தின்னயே கத்தி என்றும் வெட்டி பேச்சில் ஆர்வமும் காட்டுவதை நிறுத்த வேண்டும், இமாம்கள் வருங்கால இளைஞர் மனதில் எழும் சந்தேகங்களை நீக்கும் ஆசானாக வேண்டும், அதற்கு இமாம்கள் நிறைய பொது அறிவு சம்பந்தமான விசயங்களை அறிந்து வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் இளைஞர்கள் நஜ்ஜாஜ் கூட்டத்திற்கு பலியாவதை தடுக்க முடியாமல் போய் விடும். என்னுடைய கல்லூரி தோழன் அப்துர் ரஹ்மான் ஹாபிஸ் பட்டம் பெற்று, இமாமாக இருந்து கொண்டு பின்பு புது கல்லூரி உதவி முதல்வராகவும் பணிபுரிந்தார். எல்லா இம்மாம்களும் பள்ளி இறுதி ஆண்டு வரையிலாவது பொது அறிவு பெற்றிருக்க வேண்டும்.

3) அரசு வேலைகளில் ஆர்வம் காட்ட வேண்டும்

பெரும்பாலான முஸ்லீம் இளைஞர்கள் அரசு வேலைகளில் ஆர்வம் காட்டுவதில்லை, அரசு வேலைகளில் நமக்கு இட ஒதுக்கிடு கட்டாயம் என்ற நிலை வரும் போது அந்த சந்தர்பத்தை நழுவ விட கூடாது, ஏனென்றால் அரசு வேலைகளில் கீழ்க்கண்ட பலன்கள் பெறலாம்.

1  வேலை உத்திரவாதம்

2  பல்வேறு சலுகைகள், நிலம், வீடு, வாகன லோன்கள், பெற்று அதன் சொந்தகாரர் ஆகலாம்.

3  மருத்துவ சலுகைகள், குடும்ப பென்சன், வாரிசுக்கு வேலை, போன்றவைகள் பெறலாம்.

4  அரசாங்கத்தால் வழங்கப்படும் சலுகைகளான முதியோர் பென்சன், வேலை இல்லாதவர்களுக்கு வழங்கப்படும் உதவி தொகை, ஏழை பெண்களுக்கு திருமண உதவி, கர்ப்பிணி பெண்களுக்கு உதவி தொகை, வீடு இல்லாதவர்களுக்கு வீட்டு மனை பட்டா கிடைக்க செய்தல் போன்ற உதவிகளை செய்யலாம்.

5  இராணுவம், காவல் துறையினில் பணியாற்றினால் அப்பாவி முஸ்லீம் மக்கள் கொல்ல படுவதை, கோவையில் வீடுகள், வியாபார ஸ்தலங்கள் தீக்கிரையாகபடுவதை தவிர்கலாம்.

4) தற்காப்பு கலைகளை தெரிந்து வைத்தால்

ஜாதி வெறி நிறைந்த இந்நாளில், ஒவ்வொரு இஸ்லாமிய ஆண், பெண் என்ற வித்தியாசம் பாராது, சிலம்பம் , மல்யுத்தம், குத்துசண்டை, கராத்தே, குங்பூ போன்ற தற்காப்பு கலைகளில் பயிற்சி எடுத்தால் தான் குஜராத் போன்ற கொலை வெறியர்களிடமிருந்து நம்மை காக்க முடியும். முன்னாள் மலேசியா பிரதமர் மஹாதிர் முஹம்மத் இஸ்லாமிய நாடுகள் வல்லரசாக அணு ஆயுதம் வைத்துக்கொள்ள வேண்டும் என்றது இக்காலத்தில் எவ்வளவு பொருத்தமானது.

5) அரசியலில் பங்கு

ஒவ்வொரு தேர்தலிலும் பல அரசியல் கட்சிகளுக்கு முதுகை கொடுக்கும் ஏணியாக இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறோம். நம்மவர் வழிய சென்று ஆதரவு கொடுக்கும் நிலை மாற வேண்டும். பா.ம.க கட்சி நிறுவனர் போராட்டம் நடத்தி 20 சதவிகித ஒதுக்கீடு பெற முடிகிறது. ஏன் நம்மால் முடியவில்லை. ஏன்என்றால் கேரளா போன்ற ஒற்றுமையான சமுதாயத்தினை நாம் தமிழகத்தில் உருவாக்கவில்லை. வருங்கால இளைஞர்கள்கள் அவ்வாறான சூழ்நிலையினை உருவாக வேண்டும். அப்போது தான் இஸ்லாமியர்களுக்கு விடிவு காலம் பிறக்கும்.

-A.P.Mohamed Ali