Home கட்டுரைகள் அரசியல் மோடி வந்த பின் இந்திய அரசியல் மிக கேவலமான நிலைக்கு சென்று விட்டது
மோடி வந்த பின் இந்திய அரசியல் மிக கேவலமான நிலைக்கு சென்று விட்டது PDF Print E-mail
Sunday, 24 November 2013 07:48
Share

மோடி வந்த பின் இந்திய அரசியல் மிக கேவலமான நிலைக்கு சென்று விட்டது

மோடி அலைகள் ஓய்கிறது - அவசரப்பட்டு விட்டோமோ என்று திணறுகிறது பிஜேபி

டி.ஜி.பி.க்கு கூட தெரியாமல் ஒரு லட்சம் தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்பு!

புதுடெல்லி: பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடியின் குஜராத் போலீசின் உளவுப் பார்வை குஜராத் முழுவதும் பரந்து விரிந்துள்ளது. மோடிக்கு எதிர் கருத்துடையோரும், எதிர்ப்பவர்களும் முழு நேரமும் கண்காணிக்கப்படுகின்றார்கள்.

அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் என யாரையும் விட்டு வைக்காமல் மோடியின் போலீஸ் அவர்களுடைய தகவல்களை ரகசியாமாக வேவு பார்த்து வருகிறது.

மோடியுடன் தொடர்புடைய பெங்களூரைச் சார்ந்த இளம் பெண் ஒருவரையும், இவர்களிடையேயான தொடர்பை அறிந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் தொலைபேசி அழைப்புகளையும் வேவு பார்க்க 24 மணி நேரமும் போலீஸை உபயோகித்த மோடியின் செயல் தற்போது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

ஆனால், கடந்த டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை குஜராத் மாநில போலீஸ் டி.ஜி.பி.க்குக் கூட தெரியாமல் மோடியின் ஒற்றர்கள் ஒட்டுக் கேட்டுள்ளனர். பணியில் இருக்கும்போது கடந்த ஆகஸ்ட் மாதம் மரணமடைந்த முன்னாள் டி.ஜி.பி. அமிதாப் பதக் இந்த உண்மையை வெளிப்படுத்தியிருந்தார்.

வழக்கு தொடர்பான காரியங்களுக்கு தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்க சில அளவுகோல்களை பேண வேண்டும். ஆனால், எவ்வித எழுத்து மூலமான உத்தரவும் இல்லாமலேயே குஜராத்தில் குடிமக்களின் அந்தரங்க விஷயங்களை மோடி கண்காணித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அமிதாப் பதக், எஸ்.பி. ரேங்கிற்கு குறையாத அதிகாரிகள் எழுத்து மூலம் நடவடிக்கை முறைகளை கடைப்பிடித்து தேவைப்பட்டால் மட்டுமே மொபைல் ஃபோன் விபரங்களை நிறுவனங்கள் அளிக்க வேண்டும் என்று சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.

முறையான நடைமுறைகளை கடைப்பிடிக்காமல் பயனாளர்களின் மொபைல் ஃபோன் டேட்டாக்களை அளிக்க முடியாது என்று முடிவு எடுத்த பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மோடி அரசு குஜராத்தில் புறக்கணித்துள்ளது. அதிகாரிகள், உயர் அதிகாரிகளுக்கு எல்லாம் இதர நிறுவனங்களின் மொபைல் கனெக்ஷன் அதிகமாக அளிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். சட்டத்தை கடைப்பிடிப்போம் என்று பி.எஸ்.என்.எல். கூறும்போது, இதர நிறுவனங்கள் மோடியின் போலீஸ் கேட்டவுடன் தகவல்களை கசிய விட்டுள்ளன.

மோடி தனக்கு பிடிக்காத அதிகாரிகளை ஒடுக்க நினைத்தால் நேரடியாக அதிகாரிகளுடன் தொடர்பு கொண்ட சம்பவமும் நிகழ்ந்துள்ளது. குஜராத் முன்னாள் டி.ஜி.பி. ஆர்.பி. ஸ்ரீகுமார், காங்கிரஸ் தலைவர் சங்கர் சிங் வகேலா, மோடியின் எதிராளியான ஹரேன் பாண்டியா ஆகியோரின் மொபைல் ஃபோன் விபரங்களை கசியச் செய்ய மோடியே நேரடியாக உத்தரவிட்டுள்ளார்.

இதனை ஸ்ரீகுமார் குஜராத் இனப்படுகொலை குறித்து விசாரணை நடத்தி வரும் நானாவதி கமிஷன் முன்பாக தெரிவித்துள்ளார்.

ஹரேன் பாண்டியா 2003-ஆம் ஆண்டு அஹமதாபாத்தில் மக்கள் நெரிசல் மிக்க பூங்காவில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். பாண்டியாவின் தொலைபேசி அழைப்புகளை மோடி போலீஸ் ஒட்டுக் கேட்டதாகவும், அவருடைய நடவடிக்கைகளை துல்லியமாக கண்காணித்ததாகவும் குஜராத் இனப்படுகொலை வழக்குகளை குறித்து விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

அதே வேளையில், குஜராத்தில் பெரும்பாலான உயர் அதிகாரிகள் அச்சத்தில் உள்ளனர். மொபைல் ஃபோன் வழியாக முக்கிய தகவல்களை பரிமாறுவதை பெரும்பாலும் தவிர்த்து வருகின்றனர். மோடி மீதான அச்சத்தால் தொழிலதிபர்களும் பீதியில் உள்ளனர்.

பலரும் பி.எஸ்.என்.எல்.லின் லேண்ட் ஃபோனை தற்போது சார்ந்திருக்கின்றனர். ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கும் போதே இவ்வளவு கீழ்த்தரமான வேளைகளில் ஈடுபடும் ஒரு மனிதர் நாளை ஒட்டுமொத்த இந்தியாவின் பிரதமரானால் சர்வாதிகார நடவடிக்கைகள் மட்டும் தான மிஞ்சும


மோடி வந்த பின் இந்திய அரசியல் மிக கேவலமான நிலைக்கு சென்று விட்டது

இந்த மோடி வந்த பின் இந்திய அரசியல் மிக கேவலமான நிலைக்கு சென்று விட்டது... இன்னும் கொஞ்சம் லோக்கல்லா சொல்லுனுமுனா இவர்கள் எவ தாலியை அறுத்தாவது ஆட்சியை பிடிக்க பார்க்கிறார்கள்.. மோடியும் அவரது ஆட்களும் டிவியில், பொது மேடையில் பேசும் பேச்சு ஒரு முன்றாம் தர அரசியல்வதியை விட கேவலமா இருக்கு.. எதற்கு எடுத்தாலும் பொய் பேசுவது.. கத்தி கத்தி பேசுவது.... மிரட்டும் தோரணையில் எதிர் அணியில் இருப்போரிடம் பேசுவது... எதையாவது கேள்வி கேட்டா அவர்கள் செய்யவில்லையா இவர்கள் செய்யவில்லையா என்று பழியை திசை திருப்புவது.. எல்லாமே நாலாந்தரதுக்கும் கீழாந்தரம்.

தங்கள் சித்தாந்தங்களை கூறி வாக்கு சேகரிக்கும் மனவலிமை பாஜகவிற்கும் மோடிக்கும் இல்லை என்பதையே மோடியின் சமீபத்திய தனிமனித தாக்குதல்கள் காட்டுகின்றன. இதை மோடி இப்போது ஆரம்பிக்கவில்லை. குடியரசு தின மற்றும் சுதந்திர தின பேச்சிலேயே ஆரம்பித்து விட்டார். எதிரி (காங்கிரஸ்) என்ன ஆயுதம் எடுக்க வேண்டுமென்பதை மோடி தான் தீர்மானித்தார். எனவே இன்னும் பல கூத்துக்களை தேர்தல் களத்தில் நாம் காணத்தான் போகின்றோம்.

ஒருசிலருக்கு ஆரம்பத்தில் மோடியைப் பற்றி இருந்த நல்ல அபிப்பிராயத்தை அவரது பேச்சே குழித் தோண்டி புதைத்து விட்டது. இன்னும் பாராளுமன்றத் தேர்தலுக்கு நிறைய நாள்கள் இருப்பதால் இன்னும் மோடியைப் பற்றிய எண்ணத்தை அடியோடு அழிக்க அவரது பேச்சு ஒன்றே போதும். காங்கிரஸ் கட்சி வேறு எதுவும் செய்ய வேண்டாம். பேசாமல் வேடிக்கை மட்டும் பார்த்தால் அவரே அவரை அழித்துக் கொள்வார்.

நரேந்திர மோடி இந்தியாவை வழிநடத்தும் திறனற்றவர்

'மக்களிடையே வெறுப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வந்தால், நரேந்திர மோடியால் இந்தியாவை சிறப்பாக வழிநடத்த முடியாது" - நியூயார்க் டைம்ஸ்.

சில தினக்களுக்கு முன் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் தலையங்கத்தில் முக்கிய அம்சம் இதுதான்.

நரேந்திர மோடி குறித்து வெளியான அந்தத் தலையங்கத்தின் சில துளிகள் இதோ...

* மோடி எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவது தொடர்பான தனது திறைமையை வெளிப்படுத்தவில்லை. மாற்றுக் கருத்துகளை சகித்துக் கொள்பவராகத் தன்னை அவர் காட்டிக் கொள்ளவில்லை. மோடியை ஏற்றுக் கொள்ளாததால் 17 ஆண்டுகளாக கூட்டணியில் இருந்த ஐக்கிய ஜனதா தளம் போன்ற கட்சிகள் விலகிச் சென்றுவிட்டன.

* 2002-ம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த கலவரத்தில் ஆயிரம் பேர் உயிரிழந்தனர். மக்களிடையே அச்சத்தையும், வெறுப்பையும் மோடி ஏற்படுத்தி வந்தால், இந்தியாவை சிறப்பாக வழிநடத்த அவரால் முடியாது.

* குஜராத் மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சி தொடர்பாக கூறப்படும் சாதனைகளை முழுவதுமாக ஏற்க முடியாது. நாட்டிலேயே குஜராத்தில்தான் வறுமைக் கோட்டுக்கு கீழ வாழ்வோர் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. ஆனால், மற்ற பகுதிகளில் வாழும் முஸ்லிம்களுடன் ஒப்பிடும்போது, குஜராத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் மிகவும் ஏழ்மையான நிலையில் இருக்கின்றனர்.

* அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பான நரேந்திர மோடியின் எழுச்சி, இந்தியர்கள் பலருக்கு ஏற்புடையதாக இல்லை. குறிப்பாக 14 கோடி முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மையினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மோடியின் பொய்யும் பித்தலாட்டமும்...

நான் முதல் மந்திரி ஆவதற்கு முன்பு சாலைகள் மிகவும் மோசமாக போர்க் காலத்தில் குண்டு போட்ட சாலை போல் குண்டும் குழியுமாக இருந்தன. நான் மாநிலம் முழுவது பயணம் செய்தபோது இந்த அவலத்தைப் பார்த்தேன். என்னுடைய வாகனம் செல்வதுகூட பெரும் சிரமமாக இருந்தது. இவற்றையெல்லாம் சரி செய்வதென்பது எனக்கு மிகவும் பெரிய சோதனையான ஒன்றாக இருந்தது. இந்த பாழடைந்த சாலைகளை சீர் செய்ய மிகப் பெரிய யாகம் செய்வதைப் போன்று பெரிய காரியமாக இருந்தது. இப்போது நான் செய்த காரியத்தின் பலனை நீங்களே பாருங்கள்...

இந்த சாலையைப் பார்த்த பிறகு இந்தியாவே கூறும் பாதுகாப்பான மற்றும் நவீன வசதியுடைய சாலைகள் மத்திய பிரதேச சாலைகள் என்று...

இவ்வாறு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது மத்திய பிரதேச பி.ஜே.பி. ஆட்சியால்.

உண்மை என்னவென்றால் இது மேற்கு வங்காளத்தில் உள்ள துர்காபூர் சாலையாகும்; பித்தலாட்டமே உன் பெயர்தான் பிஜேபியா?

நரேந்திர மோடியின் டிவிட்டர் கூத்து! : 

மத்திய பிரதேச மக்களுக்கு நரேந்திர மோடி டிவிட்டரில் ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.

''மக்கள் காலையிலேயே எழுந்து சென்று 'ஒரு மோசமான முட்டாளுக்கு'' வாக்களித்து பிஜேபியை தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

அதாவது அவரது கட்சியின் சின்னமான தாமரை LOTUS என்று எழுதுவதற்கு பதிலாக LOUTS என்று டைப் பண்ணி விட்டார்.

மத்திய பிரதேச முதல்வர் சவுகான் மேல் என்ன கடுப்போ மோடிக்கு தெரியவில்லை. நிதிஷ் குமார் எவ்வாறு மோடியை நிராகரிக்கிறாரோ அதே போல் சவுகானும் மோடியை பக்கத்தில் அண்ட விடுவதில்லை. ஒருக்கால் அந்த விரக்தியில் மோடியின் மனதில் இருந்து விழுந்த வார்த்தைகளாகவும் இருக்கலாம். அல்லது 'மோசமான முட்டாள்' என்று தன்னையே சொல்லிக் கொள்கிறாரோ?  

மனதில் தெளிவும், உண்மையான இறை பக்தியும் உடைய ஒரு மனிதனுக்கு சிந்தனையும் ஞாபக சக்தியும் தெளிவாகவே இருக்கும். எந்த நேரமும் பொய்: தான் முன்னுக்கு வர தனது கட்சிக் காரர்களையே பலி கொடுக்கும் தந்திரம்: நாட்டு மக்களை பிளவுபடுத்தி அதன் மூலம் ஆட்சியை பிடிக்க நினைக்கும் குள்ளநரித் தனம்: தேசபக்தி வேடமிட்டு நாட்டு மக்களை என்கவுண்டரில் போட்டுத் தள்ளுவது என்று தனது வாழ்நாளில் பெரும்பாலும் ரத்த கறையோடு வாழ்ந்து வரும் ஒரு இந்துத்வவாதியிடம் இது போன்ற உளறல்களை இன்னும் எதிர்பார்க்கலாம். 

இந்துத்வாவாதிகள் பலரும் நடந்த தவறை சுட்டிக் காட்டவே உடன் டுவிட்டரில் திருத்தப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே பலர் ஸ்கிரீன் ஷாட் எடுத்து இணையத்தில் உலவ விட்டுள்ளனர். இந்த கோமாளி தேர்தல் நெருக்கத்தில் இன்னும் எதை எல்லாம் சொல்லப் போகிறாரோ. பொறுத்திருந்து பார்ப்போம்.

 

 

mja mayuram wrote:- மோடி அலைகள் ஓய்கிறது -

அத்வானிக்கு அல்வா கொடுத்து அல்லக்கைகளால் ஏற்படுத்திய செயற்கை அலைகள் ஓய்கிறது, அவசரப்பட்டு விட்டோமோ என்று வடிவேல் மாதிரி திணறுகிறது பிஜேபி தத்த்தளிக்கிறது

தாமரை , கோபாலபுரத்தில் கோரிக்கை மனுவை பத்திரிக்கையாக வைத்து கொல்லைப்புறமாக வையகத்து கோமாளியிடம் பேசுகிறது காவி.... மோடியின் அலை தள்ளிவிட்டாலும் ஆடாது என்கின்ற நிலையில் உட்கட்சியிலேயே உயரமாக எழுந்து நிற்கிறது அதிருப்தி அலை, சுனாமிபோல் சித்தரித்த அலை பினாமி போல் ஓயாத்துவங்கியுள்ளது.

உளறுவாயனை வைத்து ஊர்கூடி தேர் இழுக்கலாம் என்ற நினைப்பில் அலறுவாயனாக் அலறுகிறது பிஜேபி, தன்னை முன்னிறுத்தாமல் தாடியை முன்னிறுத்திய காரணத்தால் எங்கே தன்னை ''கஞ்சா'' கேசில் கைது செய்துவிடுமோ கோமளவல்லி என்றெண்ணி சோ'மாறி மாமா தடம் மாறி ஓடி தடுமாறி அடைக்கலாம்தேடிய இடமாக கோபாலபுரம் காட்சியளிக்கிறது...

பகைவரையும் காக்கும் பகலவனின் புன்சிரிப்பு சோ'கத்தை போக்கியது சொர்க்கத்தை காட்டியது, காங்கிரசை வெற்றிபெறவைப்பதர்க்காவே களம் இறக்கப்பட்ட்டாரா இந்த மோடி வேட்பாளர் என்று பலரும் அலறும் நிலை வந்துள்ளது. தலைவர்கள் உருவாகிறார்கள் செயற்கையாக உருவாக்கபடுவதில்லை என்ற பொன்மொழி வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கிறது....

மத வெறியர்களின் கையில் இந்த நாடு எந்நாளும் போகாது என்பதற்கு சான்றாக இன்றைய நிலை தெளிவாகிகொண்டுவருகிறது... பெய்ட் எஜென்சிக்களால் (Paid Agency) பெரிதாக எதுவும் சாதிக்க முடியாது.

விளம்பரத்தை வைத்து நாட்டை விலைபேசமுடியாது இது வெறும் மண் அல்ல அனைத்து மக்களாலும் கொண்ட்டாடப்படும் புண்ணிய பூமி. இனி இதில் சாதி மத சண்டைகள் ஓய்ந்து வல்லரசாக சரித்திரம் படைக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் இந்த மதவெறியரின் செயற்கை அலைகள் ஓய்ந்துகொண்டிருபதை காட்டுகிறது ..வாழ்க பாரதம்

கீழ்த்தரமான வேலைகளில் ஈடுபடும் ஒரு மனிதரை பிரதமராக தேர்ந்தெடுக்கும் அளவுக்கு இந்தியர்கள் அறிவீனர்களல்ல!