கண்ணே கனியமுதே! PDF Print E-mail
Sunday, 29 March 2009 18:16
Share

கண்ணே கனியமுதே!

     Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)     

சமீபத்திய மணமுறிவுகள் நவீன முறையினை கையாண்டு எஸ்.எம்.எஸ்-தொலைபேசி-கடிதங்கள் ழூலம் மிக எளியமுறையில் சொல்லி கட்டுக்கோப்பான குடும்ப வாழ்வினை சீர்குழைக்கப்படுகிறது. திருமணத்தில் கை நிறைய கைக்கூலி-சீர்-சீராட்டு பெற்றுக்கொண்டாலும் நிக்காஹ் புத்தகத்தில் அதெல்லாம் எழுதப்படுகிறதா என்றால் இல்லை.

ஆனால் டைவர்ஸ் செய்யும் போது வெறும் மஹரினை குறைந்த அளவு தொகையியாகத்திருப்பி மணமகளுக்கு அனுப்புவதும் வாடிக்கையாகி விட்டது. அதன் முடிவு மணமக்கள் மகிழ்வோடு வாழ்வினைத் தொடங்குவதை விட்டு விட்டு கோர்ட்-வக்கீல்-காவல் நிலையம் ஆகியோரின் வாசல்படியினை மிதிக்கும் அவல நிலை ஏற்படுகிறது.

இது போன்ற மணமுறிவுகள் ஏற்படுவதிற்கு காரணங்கள்-அவைகளை போக்கும் வழிகள் பற்றி சிந்தனை ஓட்டத்தில் உதிர்த்த கருத்தோவியம்-கவிதைத் தொகுப்பினை உங்கள் பார்வைக்கு வைக்க விழைகிறேன்.

காரணங்கள் பல விதம்:

மணப்பெண் பெற்றோர் அரவணைப்பிலிருந்து புகுந்த வீட்டுக்கு எண்ணிலா கனவுக் கோட்டைகளுடன் காலடி வைக்கிறாள். ஆனால் கணவன் வீட்டில் இருப்பவர்கள் தனக்கு ஆதரவாக இருக்கவில்லை என்று எண்ணும்போது அதிர்ச்சி அடைகிறாள்.

விதவை மாமியார்-வாழாவெட்டியாக இருக்கும் நாத்தனார் தங்களுடைய விரக்தியினை புதுப்பெண்ணிடம் பொறிந்து தள்ளும் போதும்-அதனை தட்டிக்கேட்பதிற்கு தனது கணவனிடம் திரானி இல்லாத போது புகுந்த வீட்டில் அவள் அனாதையாகிறாள். மணகளை விட்டு மணமகன் பிரிந்து வெளி நாட்டுக்கு வேலைத் தேடி செல்லும் போது மணமகளைப் பற்றி அபாண்டமான தூபம் போடும் போது

மணமகனோ- மணமகளோ திருமணத்திற்கு முன்பு நடத்திக் கொண்டிருந்த காதல் நாடகங்களை அவையெல்லாம் கானல்நீர் என்று மறக்காமல்-நிக்கா புத்தகத்தில் மனவொப்ப கையெழுத்துப் போட்ட பின்னும் முந்தைய காதல் உலகில் சன்சரிக்கும் போது

மகன்; எங்கே மருமகள் முந்தானையில் ஒளிந்து கொள்வானோ என்ற பய உணர்வு மாமியாரை தொற்றிக்கொள்ளும் போது

மருமகள் படித்தவளாக இருந்தால் தங்களை மதிக்கமாட்டாளோ என்று படிக்காத மாமியாரோ-நாத்தனாரோ தாழ்வு மனப்பான்மையில் உழழும் போது

மருமகள் சற்று பொருளாதாரத்தில் தாழ்ந்து இருந்தால் அவளை அடிமைபோல் நடத்த முயலும் போது

மருமகள் பணக்காரியாக இருந்தால் அகங்காரி அவள் என்று அவப் பெயர் சூட்டும் போது

மருமகளுக்கு சிறு நோய் இருந்தாலும் அதை ஊதிப் பெரிதாக்கி அவளை தீண்டத்தகாதவள் ஆக்க முயலும் போது. ஆனால் தன் மகனுக்கு என்ன நோய் இருந்தாலும் அதை மூடி மறைப்பது. ஊதாரணத்திற்கு குணமாக்கக் கூடிய இனிப்பு நீர் மணமகளுக்கு இருக்கிறது என்று ஆட்டை வீட்டுக்கு அனுப்பியது போல் ஈனச்செயலும் நடந்துள்ளது. இந்தக் குறை போக்கத்தான் சீனாவின் சிற்பி மாசே துங் திருமணத்திற்கு முன்பு மணமக்கள் டாக்டரிடம் தனிக்கை செய்து நோய் குணமாதும் திருமண செய்யும் சம்பிராயத்தினை கொண்டு வந்தார்.

புகுந்த வீட்டில் தான் படும் வேதனையின் அதிர்ச்சியில் மூழ்கியிருக்கும் போது அவளைப் பார்த்து மணகளுக்கு பைத்தியம் என்ற பட்டத்தினை சூட்டும் பல்கலைக்கலகங்களாக மாமியார்களோ-நாத்தனார்களோ மாறும் போது-ஆனால் மணமகன் மன நிலை பாதித்தவன் என்ற உண்மையினை மறைக்க முயலும் போது

டி.வி. காட்சிகளில் வரும் மாமியார்-மருமகள் சண்டைகளை தங்கள் வீட்டிலும் அரங்கேற்ற முயலும் போது

பலர் மெச்ச ஆடம்பர திருமணம் கடன் வாங்கி நிறைவேற்றி விட்டு கடன்காரர்கள் துரத்தும் போது ஏற்படும் விரக்தி தங்களை கவ்வும் போது

இல்லாதவர் வீட்டில் அழகான பெண்ணை மகருக்காக திருமணம் என்று ஊரில் பறை சாட்டி விட்டு சீர்-சீராட்டு என்ற பெரிய லிஸ்ட்டை பெண் வீட்டாரிடம் கொடுத்து அவர்களும் தங்கள் மான மரியாதையை விட்டு நோட் புத்தகத்தினை கையிலேந்தி வீதி வீதியாக அலைய விட்டு திருமணம் செய்து கொடுத்தாலும் போதும் என்ற மன பக்குவம் அடையாது மணமகளை சீர்-சீராட்டுக் குறை சொல்லி நோகடிக்கும் போது

மேற்கூறிய குறைகளைக் களைய கீழ்கண்ட வழிமுறைகளைக் கையாளாம்:

திருமணத்திற்கு முன்பு மணமக்கள்-அவர்கள் பெற்றோர்கள் குடும்ப வாழ்வு சமூக சிந்தனை அடங்கிய புத்தகங்களை படிக்கச் செய்யலாம். மலேசியாவில் மணமக்களுக்கு ~கவின் குரிசு| என்று இன்பமான வழியில் வாழ்க்;கை அமைய மார்க்க போதனை நடைபெறும். அதே போன்று அமைப்பை ஏற்படுத்தி வழிகாட்டுதலில் ஈடுபடலாம்.

திருமணத்திற்கு பின்பு ஏற்படுகின்ற கருத்து வேற்றுமை காவல் நிலையம்-கோர்ட் வரை சென்று மானம் கப்பல் ஏறாமல் இருக்க கற்ற பெரியோர்கள் அடங்கிய கவுன்சிலிங் குழுவினை அமைக்கலாம்

ஏழை-எழியோர் திருமணம் செய்ய ஊர்க்காரர்களே பொறுப்பினை எடுத்துக் கொண்டு ஒரு கூட்டுத் தொகையினை(கார்ப்பஸ் பண்ட்) ஏற்படுத்தி எளிய முறையில் திருமணம் அமைய வழி வகுக்கலாம்

திருமணம் முடிந்து-விருந்தில் கலந்து கொண்டு வீட்டுச் செல்வதோடு தங்கள் காரியம் முடிந்தது என்றில்லாமல்-மணமக்களிடையே கருத்து வேற்றுமை ஏற்படும் போது அதனை தீர்த்து வைப்பதிற்கு ஒவ்வோர் ஊரிலும் பெரியோர் ஓர் அமைப்பை ஏற்படுத்த வேண்டும. இறை நம்பிக்கையாளர்கள் மனைவியின் ஒரு நடத்தை பிடிக்கவில்லை என்றாலும் அவளுடைய வேறு நல்ல குணங்களுக்காவது மணகனுக்கு மனநிறைவினைத் தரலாம்.

குத்பாவில் ஓதப்படும் ~தஷஹ்ஹ_து| துவாவின் நோக்கம் ~ திருமணம் வெறும் மகிழ்ச்சி குதுகூலமட்டுமல்ல-அது மணமக்களிடையே நாங்கள் இருவரும் வாழ்க்கை முழுவதும் தோழர்களாக-உற்ற துனைவர்களாக வாழ் நாள் முழுவதும் ஒற்றுமையாக வாழ்வோம் என்ற ஒப்பந்த பத்திரமாகும் என்று மணமக்களுக்கு அறிவு சான்ற பெரியோர் நினை ஊட்ட வேண்டும்.