Home செய்திகள் முக்கிய நிகழ்வுகள் ஐரோப்பாவில் முதல் இஸ்லாமிய அரசியல் கட்சி உதயம்!
ஐரோப்பாவில் முதல் இஸ்லாமிய அரசியல் கட்சி உதயம்! PDF Print E-mail
Saturday, 23 November 2013 07:21
Share

ஐரோப்பாவில் முதல் இஸ்லாமிய அரசியல் கட்சி உதயம்!

Former enemy of Islam to establish 1st Islamic political party in Europe

நவீன ஐரோப்பாவின் வரலாற்றிலேயே முதலாவது இஸ்லாமிய அரசியல் கட்சி உருவாகிறது.

கட்சியை ஆரம்பிப்பவர் யார் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் இஸ்லாத்தையும் கடுமையாகக் கொச்சைப்படுத்தி சினிமாப் படம் எடுக்க மூளையாகச் செயல்பட்ட அதே Arnaud Van Doom தான்.

ஹாலந்து நாட்டைச் சேர்ந்த இவர் ஐரோப்பாவில் இஸ்லாமிய அரசியல் கட்சியொன்றைத் தொடங்கும் முதல்கட்டப் பணிகளை முடித்துவிட்டார். இதுதான், இஸ்லாமிய அடிப்படையில் ஐரோப்பாவில் தொடங்கப்படும் முதலாவது அரசியல் கட்சியாகும்.

இக்கட்சி ஐரோப்பிய குடிமகனுக்கு இஸ்லாத்தின் மகிமையை எடுத்துச்சொல்லும் என்கிறார் Arnaud. இஸ்லாத்தின் மீது தீவிர எதிர்ப்பு சிந்தனை கொண்ட ஹாலந்து சுதந்திரக் கட்சியின் (PW) முன்னாள் பிரதிநிதி ஆவார் இவர். இக்கட்சிதான், இஸ்லாத்திற்கெதிரான திரைப்படம் தயாரிக்கப் பின்னணியில் இருந்து எல்லா உதவிகளையும் செய்தது. இவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உண்மையான வாழ்க்கை வரலாற்றைப் படித்து மனம் மாறினார்; மதமும் மாறினார்.

முஸ்லிமானபின், ஹாலந்தில் மட்டுமன்றி, முழு ஐரோப்பாவிலும் நபியவர்களின் மேன்மை குறித்த பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். இப்போது முஸ்லிம் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

ஐரோப்பா எங்கும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் தமது கட்சி சேவை செய்யும் என்று கூறுகின்ற Arnaud. முஸ்லிம்களைக் கணிசமான எண்ணிக்கையில் தம் கட்சியில் சேர்க்கப்போவதாக அறிவித்துள்ளார்.

முஸ்லிம்களுடன் நல்லுறவு பாராட்டிவரும் நண்பர்களையும் உறுப்பினர்களாக்க முயல்வேன் என்கிறார்.

வரும் நாட்கள், இஸ்லாத்தைப் பற்றிய புரிதலைச் செய்யும் பணியில் அதிகப் பங்களிப்பைக் காணும். அதற்காக ‘மனிதகுலத் தலைவர் முஹம்மத்’ எனும் ஒரு படம் தயாரிக்கப்போகிறேன். ஐந்து மொழிகளில் இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளேன். இதற்கு கனடாவில் உள்ள தாவா சென்டர் உதவ முன்வந்துள்ளது.

அத்துடன் நபிகளாரின் வரலாற்று நிகழ்வுகளைக் கூறும் தொகுப்பு ஒன்றை உருவாக்கி, ஐந்து மொழிகளில் மொழிபெயர்த்து, ஐரோப்பிய நாடுகளில் அதிகமானோர் கையில் சேர்க்க எண்ணியுள்ளேன் –என்றார் அவர்.

‘எதிர்ப்பில் வளர்ந்த மார்க்கம் இஸ்லாம்’ என்பது எவ்வளவு உண்மை பார்த்தீர்களா?

சத்தியம் அப்படித்தான்! இது நபிகளார் காலத்திலிருந்தே தொடரும் உண்மை!


Former enemy of Islam to establish 1st Islamic political party in Europe

MADINAH – A Dutchman who was involved in a derogatory film about Prophet Muhammad (peace be upon him) is aiming to establish the first Islamic political party in Europe.

The party will focus on serving Islam and Muslims not only in the Netherlands but Europe as whole, said Arnoud van Doorn, who was involved in the production of the controversial “Fitna”.

Van Doorn had reverted to Islam about a year ago and performed Haj this year.

He also performed Umrah in February.

 

“The party will comprise a large number of Muslim members as well as non-Muslim members who sympathize with Islam and Muslims,” he said.

Van Doorn regretted taking part in the film, which he said contained a lot of misleading and incorrect information about the Prophet (pbuh).

However, he also denied producing or directing “Fitna”.

“I only publicized and marketed the film while I was responsible for information and public relations in Geert Wilders’ political party (Dutch Party for Freedom), which produced the film,” he said.

Van Doorn said his new political party would project the virtues of Islam in Europe and elsewhere.

 

He said: “I have taken a solemn pledge to work day and night in the service of Islam to atone for my previous sins. I hope that Allah will accept my repentance and forgive me.”

Van Doorn said he will produce a film called “Muhammad: Master of Human Beings” in collaboration with the Canadian Dawa Society, which had invited him to perform Haj.

“We will also produce a series of short stories based on the Prophet’s (pbuh) life story in five languages for distribution all over Europe,” he said.

Van Doorn said he would also produce a film about Madinah’s history called “Madinah: The Light of Islam.”

Doorn said he is compiling a book about the things he had seen during Haj.

 

“I will never forget the sight of a security man carrying an old woman pilgrim on his back and running with her all the way to the Jamarat bridge to stone the Satan,” he said.

He said Haj provided him with an excellent opportunity to find out more about Islam and Muslims and that he intends to write a book about his experiences.

“I have regretted my previous sins.

“My entire life before Islam is a complete emptiness and void.”

Van Doorn said he has been explaining Islam to his mother, wife and three children and they have started to understand this religion.

 

-Majed Al-Sugairi
Okaz/Saudi Gazette