Home செய்திகள் உலகம் UNESCO அமைப்பின் ஒட்டுரிமையில் இருந்து நீக்கப்பட்ட அமேரிக்கா மற்றும் இஸ்ரேல்!
UNESCO அமைப்பின் ஒட்டுரிமையில் இருந்து நீக்கப்பட்ட அமேரிக்கா மற்றும் இஸ்ரேல்! PDF Print E-mail
Monday, 11 November 2013 06:08
Share

UNESCO அமைப்பின் ஒட்டுரிமையில் இருந்து நீக்கப்பட்ட அமேரிக்கா மற்றும் இஸ்ரேல்!

உலக கல்வி, அறிவியல , புராதன சின்னங்களை பாதுகாக்கும் அமைப்பான UNESCO அமேரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளின் ஒட்டு போடும் உரிமையை தடை செய்யப்படவுள்ளது.

எதற்காக இந்த தடை என்று தெரியுமா?

கடந்த 2011 ஆம் ஆண்டு UNESCO வில் அமெரிக்காவின் பலத்த எதிர்ப்பையும் மீறி இந்த அமைப்பில் உள்ள 194 நாடுகளில் 114 நாடுகளின் ஆதரவு மற்றும் அமேரிக்கா மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட வெறும் 14 நாடுகளின் எதிர்ப்பு நிலையில் UNESCO வின் முழு அங்கத்தினராக பாலஸ்தீனம் 195 வது நாடாக தேர்ந்தெடுக்கப்பட்டது..

இந்த ஓட்டெடுப்பில் எப்படியும் தோற்கடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி செயல்பட்ட அமெரிக்காவின் செயல்பாடுகள் முற்றிலும் தோல்வியிலேயே முடிந்தது.

பாலஸ்தீனத்தை சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் UNESCO அமைப்புக்கு கொடுத்து வந்த நிதி உதவியை நிறுத்தியது..காரணம் இந்த அமைப்பு ஐநாவின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்பு.

இதில் ஒரு நாடு தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் நிட்சயம் நாளை ஐநாவிலும் பாலஸ்தீனுக்கு முழு அங்கீகாரம் எளிதாக கிடைக்கும் என்ற அச்சம் மட்டுமே.

எதற்காக இந்த அச்சம் என்றால் இன்றுவரை இஸ்ரேல் பலஸ்தீனை ஆக்கிரமித்தலோ அல்லது பலஸ்தீனர்களை கொன்றாலும் கூட நேரடியான விவாதத்துக்கு ஐநா பலஸ்தீனம் அழைப்பு விடுக்க முடியாது.

பாலஸ்தீன் இன்றுவரை ஐநா சபையில் எந்த வித உரிமையும் இல்லாத வெறும் பார்வையாளர் மட்டுமே...மேலும் சொந்தமாக ராணுவம் வெளிநாடுகளில் தூதரகம் உள்ளிட்ட எதையும் பலஸ்தீனம் பரவலாக வைத்துக்கொள்ள முடியாது.

சில நாடுகளில் தூதரகம் செயல்பட்டாலும் கூட பெரும்பாலான நாடுகளில் இல்லை. காரணம் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சதியின் காரணமாக 1948 க்கு முன்பு வரை பாலஸ்தீனம் என்று இருந்த நாட்டை திருட்டு தனமாக இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கி இஸ்ரேல் என்ற ஆக்கிரமிப்பு நாட்டிற்கு மட்டும் ஒரு நாட்டிற்கான அங்கீகாரம் கொடுத்து பாலஸ்தீனம் என்ற நாட்டின் பேரை கூட உலக வரைபடத்தில் இருந்து நீக்கி, இதை வைத்தே பலஸ்தீனர்களின் நிலங்கள் தொடர்சியாக இஸ்ரேல் என்ற ஆக்கிரமிப்பு தேசத்தால் ஆக்கிரமிக்க உதவவே இப்படியான நடவடிக்கைகளை அமேரிக்கா தொடர்ந்து அரங்கேற்றி வந்தது.

இந்த திருட்டு திட்டத்திற்கு தடை போடும் முயற்சி தான் ஐநா சபை மற்றும் யுனஸ்கோவின் மெஹ்மூத் அப்பாஸால் கொண்டுவரப்பட்ட தனி நாடு கோரிக்கை.யுனஸ்கோ என்பது முதல் படி .இதில் கூட முழுமையான பலஸ்தீன நாடு என்ற கோரிக்கை இல்லை.அதாவது பலஸ்தீனம் இழந்த முழுமையான நிலப்பரப்பும் இல்லை. மாறாக 1967 லுக்கு பிறகுள்ள பலஸ்தீன நிலங்களை மட்டும் தான் உரிமை கொண்டாடுகிறது என்பது வேறு கதை. இருப்பினும் இதையும் கூட அமெரிக்க மற்றும் இஸ்ரேலால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை.

இதன் விளைவு UNESCO விற்கு 2011 ஆம் ஆண்டுவரை அமெரிக்கா கொடுத்து வந்த நிதி என்பது கிட்டத்தட்ட 22% சதவிதத்தை நிறுத்தி விட்டது .இந்த நிதிப்பற்றாக்குறையின் காரணமாக UNESCO அமைப்பின் நிதி நிலை என்பது 653 மில்லியன் டாலர் என்ற அளவில் இருந்து 507 மில்லியன் டாலராக குறைந்துவிட்டது.

இந்த நிதி பற்றாக்குறையின் காரணமாக உலகம் முழுவதிலும் UNESCO அமைப்பில் வேலை செய்யும் ஊழியர்களில் 300 பேர் வரை நீக்கப்படும் அபாயம் இருப்பதாக தெரிகிறது.மேலும் பல பணிகளும் முடக்கப்பட்டுள்ளது.

UNESCO அமைப்பில் பனி புரியும் ஊழியர்களில் சுமார் 1200 பேர் பிரான்சில் அமைந்துள்ள UNESCO தலைமையகத்தில் வேலை செய்கின்றனர்.

மேலும் உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மேலும் 900 பேர் செய்கின்றனர் எனபது குறிப்பிடத்தக்கது .நிதி உதவியை தர மறுப்பதால் அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் நீக்கம் குறித்து நேற்று வெள்ளிகிழமை யுனஸ்கோ அமைப்பின் தலைவர் எரினா போகொவா அறிவித்து விட்டதால் இன்று முறைப்படி ஓட்டுப் போடும் தகுதியில் இருந்து நீக்கம் செய்யும் தீர்மானம் UNESCO அமைப்பில் தாக்கல் செய்யப்படுகிறது.